வெள்ளி, 22 ஜனவரி, 2016

ரஜினி முருக னும் ,மக்கள் ரசனையும்

.ரஜனி முருகன் திரைப்படம் வெற்றி .இப்பொழுது பெரும்பாலும் நகைச்சுவை திரைப்படங்களே வெற்றியடைகின்றன. இது தற்போதைய தலைமுறை நிஜ வாழ்வின்  மனஅழத்தங்களையும், சோர்வையும் திரையிலே தொலைக்க விரும்புவதையே காட்டுகிறது. 
முந்தைய தலைமுறை நிஜ வாழவில் மகிழ்ச்சியில் இருந்ததால் தான் திரையிலே சோக காவியங்களை ரசிக்க முடிந்தது என நினைக்கிறேன்.
நாம் நமது தந்தையின் தலைமுறையை விட வசதி அதிகம் உடையவராக இருக்கலாம் ஆனால் அவர்கள் தான்  நம்மை விட மகிழ்ச்சியான வாழ்கையை வாழ்ந்து உள்ளனர்..
நம்மிடம் இல்லாத மிகப் பெரிய செல்வம் அவர்களிடம் இருந்தது அவை பொறுமை, போதும் என்ற மனம்..

பிட்ஸா

டேய் பிட்ஸால கூட toppings ஜாஸ்தியா தர்ரான்டா , ஆனியன் ஊத்தப்பத்துல ஆனியனே காணம் டா  - ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டு அழுதவர்கள் சங்கம்

நம்ம நாட்டோட பிரச்சனையே நல்ல கருத்து சொல்ல நிறைய பேர் இருக்கான்ங்க,  ஆனா அத follow பண்னதான் ஆளே இல்லை, (என்னையும் சேர்த்து தான் )

ஜல்லி கட்டும் , அதிகாரமும்

தனது அதிகாரத்தை பயன் படுத்தி காவிரி நடுவர்  நீதிமன்றகுழுவின் பரிந்துரை படி கர்நாடகத்திடம் இருந்து நீர் பெற்று தர வக்கில்லாத உச்ச நீதிமன்றம் ,
ஐல்லி கட்டு தடை, சென்னை உயர் நீதிமன்றதிற்கு மத்திய தொழில் படை பாதுகாப்பு, மதுரை வழக்கறிgர்கள் மீது நடவடிக்கை போன்றவற்றில் தனது அதிகாரத்தை  உறுதி செய்து கொள்கிறது

ராஜாவும் விகடனும்

இன்று விகடன் தாரை தப்பட்டை. திரைப்பட விமர்சனத்தில் இளையராஜாவின் இசையைபற்றி ஒரு வரி கூட எழத வில்லை,  விமர்சகர் வரலட்சமியை பார்த்து மறந்து விட்டாரா, அல்லது ராஜாவை புறக்கனிக்க வேண்டும் என்ற நிலைப்பாடா?   ஒரு மகா கலைஞனின் 1000 மவது படம்..

இதற்கு முன்பு விகடன்  80 & 90களில் பல முறை இது போன்று ராஜாவை புறக்கணித்ததாக நினைவு....