வியாழன், 10 மார்ச், 2016

சில சிந்தனைகள்

நாம் நமது தேவைக்கு சம்பாதிக்கிறோமா அல்லது அடுத்தவனுடன் கம்பேர் செய்றதுக்கு சம்பாதிக்கிறோமோ என்ற குழப்பம் வந்து விடுகிறது

எல்லா காதலியும் தேவதை தான்,என்ன ஜெயிக்கின்ற காதலில் மனைவியாகி விடுகிறாள்.. தோற்பவனுக்கு தேவதையாகவே தொடர்கிறாள்.

புதன், 9 மார்ச், 2016

விஜய்காந்த் கூட்டணி பேச்சு வார்த்தையா, ஓசி சாப்பாட்டு பிளானா

விஜய்காந்த்  கூட்டணி பேச்சு வார்த்தை..ஒரு நகைச்சுவை கற்பனை...............மனதை புண்படுத்துதற்கு அல்ல ...........
ஒரு நாள் காலையில்
சுதீஷ்:- அக்கா , இன்னிக்கு நம்ம வீடல என்ன சமையல் ...
அண்ணியார் :- டேய் , இன்னைக்கு வீட்ல cylinder தீந்து போச்சு, அடுத்த வாரம் தான் தருவானாம் ...
சுதீஷ் :- அதுவரைக்கும் .......
அண்ணியார் :-   நீ ஏன்டா கவலைபடற ....காலைல breakfast ட்டுக்கு மக்கள் நல கூட்டணி யினரை  சரவண பவன் வர  சொல்லிட்டேன் .... காலையில் அவங்க வாக்கிங் முடிஞ்சு   நேர வந்து கூட்டணி  பேசிட்டு பில்ல குடுத்துடுவாங்க ...

மதியானம் பிரகாஷ் ஜவடேகர்  flight புடிச்சு சென்னை வரார் , அவரோட ITC hotels  LUNCH சாப்பிட்டு கிட்டே கூட்டணி பேசறோம் ......

சாயங்காலம் சபரிசனும் , துரை முருகனும்  கிரீன் பார்க் பார்ல   மாமாவோட  கூட்டணி பேசலாம் நு  சொல்லி இருக்காங்க ...
நாளைக்கு order  மாத்தி , பிரேக் பாஸ்ட் அமித் ஷா கூட , லஞ்ச் திமுக கூட , நைட் மக்கள் நல கூட்டணி  கூட ...

இன்னும்  அரவிந்த் கெஜ்ரிவல் , தேசியவாத congress நு  பல கட்சி இருக்கு ..நீ என் கவலை படற ...
சுதீஷ் :- அக்கா , நீ ராஜ தந்திரத்தில் அத்தானை மிஞ்சி விட்டாய் .. கூட்டணி  அமையுதோ இல்லையோ..Election வரைக்கும் வீட்ல சமையல் இல்லை.

கரகாட்டக்காரன் காமெடியும், வாழும் கலை மாநாடும்

கரகாட்டகாரன் திரைபடத்தில் அண்ணன்  கவுண்டமணி  செந்திலை பார்த்து ஒரு dialogue கூறுவார் ...
அந்த  சினிமா நடிகர்கள் தான் பிறந்த நாள் கொண்டாடு கிறேன் னு தனக்கு தானே போஸ்டர் அடிச்சுகிறான் ,உனக்கு என் இந்த விளம்பரம்

அது போல கட்சிகாரன் தான் மாநாடு  நடத்துறேன் , கூட்டம் நடத்துறேன் ன்னு  இருக்குற ஏரி , குளத்தை துத்து, இலட்ச்ச கணக்குல ஆளுங்கள ,பிரியாணியும் ,quaterum குடுத்து கூட்டி வந்து கூத்தடிகிறான் ...

நீ சாமியார், ஏழை,பாழைக்கு உதவி ஏதாவது செய்யாம , 35 இலட்சம் பேர கூப்புடுற, ஆத்து கரைய துக்குர .... பத்தாதுக்கு எல்லைல வேலை செய்ய வேண்டிய ராணுவத்த  மைக் ,செட் பந்தல் போட சொல்ற ..

ஒண்ணும் நல்லா இல்ல  சாமி 

கரகாட்டக்காரன் காமெடியும், வாழும் கலை மாநாடும்  ,
 ART OF PARTYING..........

  

செவ்வாய், 8 மார்ச், 2016

பொதி கழுதையும் , EPF வரி ரத்தும்

EPF வரி  ரத்து ..

ஒரு வியாபாரி தனது பொருளை சுமக்க கழுதை ஒன்றை வளர்த்து வந்தார். தினமும் கழுதை பொதி வைக்கும் முன் அதிகமான எடையை ஏற்றுவார் .பிறகு கழுதை முரண்டு பிடிக்கும். கழுதையை சந்தோஷ படுதுவதர்காக சிறிது சுமையை குறை ப்பார். கழுதையும் தனது எஜமானர் தனது மேல் கொண்ட பிரியத்தின் காரணமாக சுமையை குறைதததாக சந்தோசம் அடையும்.

கருணாநிதி பேருந்து கட்டணத்தை உயர்த்தும் பொது , இரண்டு ரூபாய் உயர்த்தி, ஒரு ரூபாய் குரைப்பார்  அவரிடம் அருண் ஜெட்லி பயற்சி எடுத்து  உள்ளார் போல .

இபொழுது ஒருவரும் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யாத அரசை குறை கூ ற மாட்டார்கள், மாறாக EPF  வரியை  ரத்து செய்ததற்க்காக பாராட்டுவும் செய்வார்கள்.


திங்கள், 7 மார்ச், 2016

நாம் கற்க வேண்டியது குழந்தைகளிடம்

பெரும்பாலும் வார நாட்களில் எழுந்திருப்பது எனக்கு வேப்பங்காய் தான்.அதுவும் திங்கள் கிழமை கொடுமை யாக இருக்கும் ... பெரும்பாலும் சோர்வு , அயற்சி ....
ஆனால்   குழந்தைகளின் உலகம் மிக சிறியது , அவர்கள் வீடு,அப்பா,அம்மா , பள்ளி, மிக சில மனிதர்கள்,தொலைகாட்சி,அவளவுதான் ..ஆனாலும்  ஓவ்வரு  நாளும், உற்சாகமாக எழுகிறார்கள், ஒவ்வரு நாளையும் மிக உற்சாகமாய் எதிர் கொள்கிறார்கள், ஒவ்வரு நாளும் எதோ ஒரு பரிசை தர போவது போலவும் , புதிய அனுபவத்தை தர தயராக இருப்பது போலவும் உணர்கிறார்கள் .. அது உண்மையும் கூட 
குழந்தைகளிடம் நம்மிடம் கற்பதை விட நாம்  அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம் உள்ளது போல
 

ஞாயிறு, 6 மார்ச், 2016

கலாபவன் மணி,ஆசியா கோப்பை - இன்றைய நிகழ்வுகள்

இன்றைய  நிகழ்வுகள்

கலாபவன் மணி.. ஒரு திறமையான கலைஞனின் மரணம் ஒரு இழப்பு.. ஆனால் ஒரு கலைஞனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதில் மலையாளிகள் நம்மை விட ஒரு படி மேல்..
ஆசியா  கோப்பை

Why  Pakistan  want  to continue  with  sahid afridi as  a captain in worldt20 even  after  asia cup debacle?
No Pakistan  player  want  to take the  pain of talking in English during  presentation and  explain the  reasons  for the  loss..

நேற்றைய போட்டியில் இந்தியா தோற்று விடுமோ என்ற பயத்தை விட ஜெயித்தால் பங்களாதேஷ் பசங்க பன்ற அலும்ப பார்க்கனுமே ங்கற பயம்தான் ஜாஸ்தியா இருந்தது

வெள்ளி, 4 மார்ச், 2016

வரா கடன் -இந்திய வங்கிகளின் தற்போதைய நிலை

இந்திய வங்கிகளின் தற்போதைய நிலை
தனிமனிதன் வங்கிகளில் நகை கடனோ, வீட்டு கடனோ, வாகன கடனோ வாங்கி திரும்ப செலுத்த முடியாவிட்டால் கடன் மதிப்பை விட சொத்து மதிப்பு கூடுதலாக இருந்தாலும்...கடனை வசூலிப்பதற்காக முதலில் அவனது தன்மானம் குறி வைக்கப்படும் அவனது பெயர் புகைப்படம் வங்கி வாசலில் ஒடடபடும்.அவனது வீட்டில் notice ஓட்டபடும்..பிறகு தண்டொரா நாளிதழ் விளம்பரம்...மற்றும் வங்கியில் கூப்பிட்டு வைத்து மிரட்டல், ஆள் வைத்து மிரட்டல் அனைத்து ம் உண்டு... அதுவே ;500 கோடிக்கு அதிகமாக நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்கி நல்ல auditors மற்றும் advocAtes களுக்கு லட்சங்களை சம்பளமாக அளித்து அவர்களின் முதலிடுகளை திசை திருப்பி நிறுவனத்தை நஷ்டமடய வைத்து விட்டால் ;வங்கிகள் முதலில் அவர்களிடமம வங்கி கெஞ்சும்...பிறகு வட்டி அனைத்தையும் தள்ளுபடி செய்யும்...பிறகு திரும்பி தரும் காலத்தை அதிகப்படுத்தும்...பிறகு மேலும் கடன் வழங்கி பார்க்கும்..கடைசியில் எல்லாத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்ட பின ...வராக்கடன் என்று அறிவித்து மிச்சம் மீதி உள்ள நிறுவனத்தின் பொருட்களை பேரிச்சம் பழத்திற்கு விற்று சில கோடிகள் பெறும்..