வெள்ளி, 24 ஜூன், 2016

கந்தசாமியும் , ஐரோப்பிய ஒன்றிய பிரிட்டன் பிரிவும்- நிகழ்வுகள்


இன்று  கிராமத்தில் இருந்து மகள்  திருமணத்திற்கு  நகை வாங்க டவுனுக்கு வந்த கந்தசாமிக்கு , ஐரோப்பிய  ஒன்றியத்தில்  இருந்து  பிரிட்டன்  விலகினால் பவுனுக்கு  1000 ரூ.பாய்  அதிகமாகும் என்று தெரிந்திருக்குமா என்று  தெரிய வில்லை ?

இப்பொது  எல்லாம்  உள்ளூர்  பஞ்சாயத்தில்  என்ன  நடக்குது ன்னு  தெரிஞ்சிக்கணுமோ இல்லையோ , உலகத்துல  என்ன  நடக்குதுன்னு  தெரிஞ்சுக்கணும்  போல ...

தனி ஒருவன் ஜெயம்  ரவி சொல்வது  போல , 2 பக்க பொருளாதார செய்திகள் தான் , பேப்பரில்  உள்ள  மற்ற 14 பக்க  செய்திகளையும் தீர்மானிக்கின்றது போல ..

புது யுக  ந(டி)ட்பு 

சில  அலுவலக நண்பர்களுக்கு எனது போனில் எத்தனை GB RAM இருக்கிறது என்று  தெரியும் , ஆனால் எனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறது என்று  தெரியாது 


அணில் கும்ப்ளே :-
 புதிய  பயிற்சியாளராக  அணில் கும்ப்ளே  நியமனம் :-  மீடியா  மகிழ்ச்சி , இருக்காதா  இன்னும் ஒரு வருசத்துக்கு விராட் கோஹ்லி ,கும்ப்ளே  மோதல் ,மனக்கசப்பு ன்னு போட்டு பொழுதை ஓட்டலாம் இல்ல,.

புதன், 22 ஜூன், 2016

பிரதமரை பார்த்து உலகம் வியக்கிறதா ?

எத்தகைய நாடு இது என்று
 ..
 20 செயற்கை கோள்களுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தி  வெற்றி  அடைகிறது , மறுபக்கம் இந்தியாவின் பொருளாதார  தலைநகரமான மும்பையில்   2 சென்டி மீட்டர் மழை  பெய்ததால் 300 ரயில்கள் ரத்து  செயப்பட்டு , அன்றாட வாழ்க்கை  ஸ்தம்பிகிறது.
இவ்ளோ  திறைமைசாலிகள் இருந்தும் அடிப்படை வசதிகள்  பெரு நகரங்களிலும் இன்றும் பூர்த்தி  அடைய  வில்லை.

உலக  அரங்கில் இந்தியாவை தலை நிமிர  செய்வேன் என்ற மனிதர் எதாவுது செய்வார் பார்த்தால்  2000 கோடி க்கு அமெரிக்க அதிபரை போல் விமானம் வாங்குகிறார் .10 லட்சம்  ரூபாய்க்கு  சட்டை  போடுகிறார் ..இனிமேல்  இந்தியாவை பார்த்து  உலக  நாடுகள்  வியக்கும்  என்கிறார் .
 நீங்கள் அமெரிக்க  அதிபரை போல் வசதிகளை அனுபவியுங்கள்  ஆனால்  நீங்கள்  இந்திய குடிமகன்களுக்கு அமெரிக்க  குடிமகன் கள் போல் அல்ல  சாதாரண  அடிப்படை  வசதிகளை  பூர்த்தி  செய்து  விட்டு  அனுபவியுங்கள்.

கோடிக்கணக்கில்  செலவு  செய்து  யோகா  தினம்  கொண்டாடுகிறார். யோகா  நல்லது  தான் அதை சொல்ல எல்லா  அரசாங்க  நிகழ்ச்சி  தேவையா ?  பத்தாததுக்கு  சாமியார்க்கு  எல்லாம்  free  புபிளிசிட்டி  வேற ?

முன்னேறிய  நாடுகளின்  பிரதமர்கள்இன்றும்   சைக்கிளில் கூட  அலுவலகம்  செல்கிறார்கள் .  இந்திய  பிரதமரை பார்த்து  உலகம்   30 கோடி  மக்கள்  வறுமை  கோட்டில்  வாழும்  தேசத்தின்  தலைவர் இப்படி  எப்படி வீண்  செலவு  செய்கிறார்  என்றுதான்  வியக்கிறது  .

பிரதமரை  பார்த்து  உலகம்  வியக்கிறதா ?

செவ்வாய், 7 ஜூன், 2016

நாமும் தோனியல்ல .. வாழ்க்கையும் கிரிக்கட் போட்டியுமல்ல.

                               

    திரு கபில்தேவ் 2011 உலக கோப்பை   இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது தோனியை பற்றி கூறியது
தோனி பல தவறான முடிவுகளை போட்டியின் போது எடுக்கிறார். (யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக களமிறங்கியது, அஸ்வினை இறுதி போட்டியில் நீக்கியது போன்றவை) ஆனால் கடுமையாக போராடி தனது தவறான முடிவுகள் சரியானதுதான்  என நிருபித்து விடுகிறார்

நாமும்  வாழ்வில்  நாம் எடுத்த பெரும்பாலான தவறான முடிவுகளை சரி என நிருபிக்கும் போராட்டத்திலேயே  விணடித்துவிடுகிறோம்...
 நாமும் தோனியல்ல .. வாழ்க்கையும் கிரிக்கட் போட்டியுமல்ல.

..
தவறை ஒப்பு கொண்டு , ஒவ்வொரு தருணங்களையும் ரசிப்பதே  வாழ்க்கை

சனி, 4 ஜூன், 2016

மலையாள படம் பார்த்த அனுபவங்கள்



 எனது மலையாள பட அனுபவங்கள்' என்றவுடன்  ஷகிலா படங்கள் என நினைத்து படிக்க வந்தால் நான் பொறுப்பல்ல.  கல்லூரி காலங்களில் தேவைக்கு அதிகமாக அந்த படங்களை பார்த்து விட்டதால்   பதிவு அதை  பற்றியதல்ல.
எனக்கு மலையாளம் ஒரளவு புரியும் என்றாலும் மலையாள திரைப்படங்கள் அதிகம் பார்பதில்லை... இணையத்தில் மலையாள படங்கள் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது முதல் 15 நிமிடங்கள் மிகவும் கடினமாக இருக்கும், மொழியும், அவர்களது மெதுவான கதை சொல்லும் பாணியும் சிறிது அயர்ச்சியை தந்து நிறுத்த தோன்றும்... பெரும்பாலும் நிறுத்தியும் விடுவேன்
 15 நிமிடங்களை தாண்டி விட்டால் கதையோடு ஒன்றி, மொழியும், கதை சொல்லும் பாணியும் பிடிபடும் பிறகு அது ஒரு சுவையான அனுபவமாக தோன்றும்... மிகவும் தாமதமாக நான் பார்த்தாலும் சார்லி படம் ஒரு அனுபவமாகவே இருந்தது.. வண்ணமயமான ஒளிப்பதிவு,   பின்னணி பாடல்கள்,அழகான பார்வதி, எப்பொழதும்  துடிப்பான துல்கர்.. சில பல மேஜிக்கல் மொமன்ட்ஸ்...try to watch it..
 தமிழில் ஆர்யாவோ, Sri திவ்யாவோ நடித்து ( கெடுத்து) வெளிவரும் முன் மலையாளத்தில் பார்த்து விடுங்கள்

செவ்வாய், 31 மே, 2016

எங்கே விழ்ந்தது முன்றாவது அணி ?

எங்கே விழ்ந்தது  முன்றாவது அணி ?



மிகவும் எதிர் பார்க்க பட்ட  மக்கள் நல  கூட்டணி +தேமுதிக +தாமா கா  அணி  6 % வாக்குகளை மட்டும் பெற்று ஒரு இடங்களை கூட வெல்ல முடியவில்லை ..
வெற்றி  பெற  மாட்டார்கள்  என்றாலும் , சில  தொகுதிகளும் , 10% மேற்பட்ட  வாக்கும்  பெறுவார்கள்  என்ற  நிலையில் , ஏன்  இப்படி  ஒரு  அவமானகரமான  தோல்வி  அடைய  நேர்ந்தது . 

காசு கொடுக்காததினால் தோல்வி அடைந்தோம்  என்று தங்களை  தாங்களே  தேற்றி  கொண்டாலும் ,  உண்மையான  காரணங்களை  ஆராய  வேண்டும் . 

காரணம் -1,

படித்த  வாக்களர்களை  இவர்களால்  தி மு கா  மற்றும்  அதிமுக வுக்கு மாற்று  என்று  நம்ப வைக்க  முடியவில்லை . தி மு கா தனது  ஊடக  பலத்தை  வைத்து  ஏறக்குறைய  அதிமுக  B  டீம்  என்ற  பிரச்சாரத்தை  நம்ப வைத்து  விட்டது 

காரணம்  2
விஜயகாந்த  மற்றும்  வாசன்  போன்றவர்களின்   சந்தர்பவாத  அரசியல் .கடைசி  நேரம்  வரை  அணைவரிடமும்  பேச்சு வார்த்தை  நடத்தி  விட்டு கடைசியில்  மக்கள்  நல கூட்டணி யில்  இணைந்தது  மக்களிடம்  எடுபட வில்லை .. தெரியாத  பிசாசை  விட  தெரிந்த  பேயே மேல்  என்று  மீண்டும் மக்கள்  தி மு கா  மற்றும்  ஆ தி மு  க விற்கே    வாக்களி தனர்.

 காரணம் -3
விஜயகாந்தின்  செயல் பாடுகள் .எதிர் கட்சி  தலைவராக கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டு  கடைசி நேரத்தில் மக்கள் மத்தியில் தோன்றி வாக்கு  கேட்டாலும் மக்கள்  பொருட்படுத்தவில்லை .

அரசியலில்  நீங்கள் வில்லனாக  இருக்கலாம் , ஹீரோ வாக இருக்கலாம்  ஆனால்  காமெடி யனாக  இருந்தால் மக்கள்  எளிதில்  புறக்கணிப்பார்கள் .

காரணம் -4 

வாக்கு சதவிதம்  குறைவு .நகர்ப்புறங்களில் இரண்டு  திராவிட கட்சிகளிடமும்  பிடிப்பு இல்லாத வாக்காளர்களை இவர்களும் ஈர்க்க தவறினர். 

காரணம் -5
மக்கள்  நல  கூட்டணி  என்ற  பெயரில்  இணைய மறுத்து அதில்  தேமுதிக , தா மா  கா  என்று  சேர்த்தவர்கள்  எப்படி  ஒற்றுமையாக ஆட்சி  செய்வார்கள் 

அடுத்த  முறை  மாற்று அரசியலை  முன்னெடுத்து  5 ஆண்டுகள் சென்றால் அடுத்த  முறை  ஓரளவு  அங்கிகாரம்  கிடைக்க  வாய்ப்பு உள்ளது ..







போன் மெமரியும், மனித மெமரியும்



இந்த நாட்டையே மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் இந்த நாட்டிலிருந்து மாறி வெளிநாட்டில் இருப்பவர்கள்  தான்

குழந்தைகளுடன் இருக்கும் பொழுது கார்டூன்    சேனல்களாய் பார்த்து பார்த்து பழகி, அவர்கள் வீட்டில் இல்லாத பொழுதும், நம்மையும் அறியாமல்  TV ரிமோட் கார்ட்டூன் சேனல்களுக்கே செல்கிறது

IPL முடிந்து விட்டது,, இனி சிக்கிரம் ஊர்லேந்து பொண்டாட்டி, பிள்ளைகளை அழைத்து வந்து விட வேன்டியது தான்... எனது நண்பர் ஒருவர்

சில வருடங்களுக்கு முன்பு 16 GB மெமரி லேப்டாப் எனக்கு போதுமானதாக இருந்தது.. இன்று 16GB மெமரி மொபைல் போதவில்லை.   போன் மெமரி அதிகமாக, அதிகமாக நமது மெமரி குறைந்து வருகிறது..
போன் Smart ஆயிடிச்சு, மனிதர்கள்  non sense   ஆகி வருகிறார்கள்

சனி, 21 மே, 2016

மருது _ தேவர் பெருமை பேசும் படமா?

தேவர் மகன் சிவாஜி சொல்லுவது போல நானும் அந்த கூட்டத்தில் ஒருவன் என்பதால் நியாயமாக கருத்து சொல்லலாம்
தேவர் பெருமையை கூறுவதாக நினைத்து கொண்டுள்ளனர் ..எனக்கு என்னவோ அவமானபடுத்துவது போல தான் தோன்றுகிறது
தேவர் சமுதாயதத்தில் கொலைகள் " நடந்தாலும் பெரும்பாலும் பங்காளிச் சண்டை, குடும்பப் பெருமை, ஊர்த் தகராறு போன்றவற்றிலே பெரும்பாலும் நிகழம்.. (இதையும் நான் ஆதரிக்கவில்லை ) தனி மனிதனின் அரசியல் வளர்ச்சிக்காக பெண்களை நடுரோட்டில் கொலை செயயும் கொடுரமான சமுகம் அல்ல.. அப்படி காட்டுவதால்  பெருமை கிடையாது அவமானம் மட்டுமே .. இப்படி  சிலர் இருந்தாலும் அது திரையில் காட்டுவதற்கான அவசியம் இல்லை
இந்த சமுதாயத்தில் லட்சகணக்கான பேர் தங்களது படிப்பினாலும், உழைப்பினாலும் நல்ல உயரங்களை அடைந்துள்ளனர் அந்த கதைகளை காட்சி படுத்தியிருக்கலாம்

பலம்
விஷால்  எத்தனை பேர் அடித்தாலும், நம்ப கூடிய அளவு  உடலை வைத்துள்ளார்,  Sriதிவ்யா, ஒரு சில நகைச்சுவை காட்சிகள்

பலவினம்
அருவருக்கதக்க கொலை காட்சிகள்,  எகனை மோகனை வசனங்கள்,   எரிச்சலூட்டும் விஷால் புகழ் பாடும் வசனங்கள்

படம்  முடிந்தவுடன்  என்னுடன் திரைப்பத்திற்கு வந்த  வேறு சமுதாயத்தை சேர்ந்த நண்பன் "மச்சான் நீயும் வீட்ல நீயும் அரிவாள்  வெச்சிருக் கியா " என்று கேட்டது தான் மிச்சம்