புதன், 3 ஆகஸ்ட், 2016

அத்தனைக்கும் ஆசைப்படு, அடுத்தவனுக்கு மொட்டையடி



2 பெண்  குழந்தைகள் , எத்தனை ஆசையாய் பெற்று , வளர்த்து , எத்தனை  கனவுகளோடு  இருந்து  இருப்பார்கள்  பெற்றோர்கள் ,  என்னதான்  சுய  விருப்பம்  என்று கூறினாலும் ,மொட்டையடித்து  சன்னியாசம்  பெற்று  விட்டதாய்  நிற்கும் பிள்ளைகளை பார்த்து   பெற்றவர்கள்  எத்தகைய  ஒரு  வலியை   அடைவார்கள் .

 இந்த  சாமியார்கள்  மிகவும் வறுமையில் வாடும்  சோற்றுக்கு  வழியில்லாத  வீட்டு   பிள்ளைகளையோ , மிக பெரும்  கோடீஸ்வர  வீட்டு   பிள்ளைகளையோ  சாமியாராக்காமல்  பெரும்பாலும்   உயர் நடுத்தர  வீட்டு பிள்ளைகளையே  கவர்கின்றனர் . ஏழைன்னா  பைசா  போறாது , பெரும்  பணக்காரர்கள் என்றால்  எதிர்ப்பு  பலமாக  இருக்கும்  என்பதால்  தானோ ?.

மிக  பிரபலங்கள் தொலைக்காட்சியில்   சாமியாரிடம்  கேள்வி  கேட்கும்  போதும், சில  பிரபலங்கள் like  நடிகைகள் , ஆசிரமத்தில்  தியானம்  செய்து புத்துணர்வு பெற்றதாக கூறும்  போது ஆச்சரியமாக இருந்தது . அப்புறம்  தான்  தெரிந்தது  இதுவும்  காசுக்காக  செய்யும்  ஒரு  நடிப்பு  என்று. அத்தகைய  பிரபலங்கள்  யாரும்  மொட்டையடித்  தாக வோ  அவர்களது  பிள்ளைகளை  ஆசிரமத்தில்  சேர்த்ததாகவோ  தெரியவில்லை.

பெரும்பாலும்  எல்லா  சாமியார்களிடமும்  ஒரு  சிறிய  சித்து வேலை /சக்தி     இருக்கும் , எங்கேயாவது  ஒரு  சாமியாரிடம்  இருந்து  கற்று  இருப்பார்கள் . அதை  வைத்து  பெரிய அளவில்  பணம்  சம்பாதித்து  விடுகின்றனர் .

கதவை  சாத்தாமல்  விட்ட  சாமியாரிலிருந்து , இவர்   வரை  எல்லாத்தையும் பிரபல  படுத்திய  மீடியா கள்  ,பொறுப்போடு  நடந்து  கொள்ளாமல் ,  சர்ச்சை  வரும்  பொழுது சிகரெட்  பெட்டியில்  உள்ள warning  போல் , எங்களுக்கு தெரியாது அது  அவர் கருத்து என்று  கூறி வெளியேறி  விடுகிறது.

சாமி , நீங்கள்  அத்தனைக்கும்  ஆசைப்படுங்கள் , ஆனால்  பாவம்  நடுத்தர  குடும்பத்து   மக்கள் அவர்கள் கனவுகளை  பலி யக்காதீர்கள்


செவ்வாய், 26 ஜூலை, 2016

மானை கொல்லலாம்? மாட்டை திண்ண கூடாது

நாய், பூனைக்கு எதாவது அநீதி நடந்தால், ஐல்லி கட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த சினிமா பிரபலங்கள், PETA , இன்று ஒரு மானை கொன்றவரை விடுதலை செய்த பொழுது என் பொங்கவில்லை என்று தெரியவில்லை.
மானை கொன்றது இன்னொரு "மான் "தானே என்று பேசாமல் இருந்து விட்டா'ர்கள் போல.. சினிமாக்காரன் தப்பு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று எந்த கருத்தும் சொல்ல மாட்டார்கள் போல...

இன்று ஐல்லி கட்டை காட்டுமிராண்டிதனம் என்று விமர்சித்த  நீதிமன்றம் தான் நேற்று மானை சுட்டுக் கொன்ற வழக்கில் சல்மான்கானை விடுவித்தது.
இந்த நாட்டில் மானை கொன்றால் தப்பில்லை. ஆனால் மாட்டை தின்றால் ஆளை கொன்று விடுகிறார்கள்... 

வெள்ளி, 22 ஜூலை, 2016

கபாலி.. ஒரு ரஜினி படமா?

பெரும்பாலான நண்பர்கள் கூறினார்கள் பெரிய எதிர்பார்ப்புகளோடு கபாலி படத்துக்கு போகாதிர்கள் என்று,, ரஜினி படம் என்பது எப்பொழதாவது குடும்பத்துடன் சென்று 5 நட்சத்திர ஒட்டலில் விருந்து சாப்பிடுவது போன்றது, எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்யும்... ஆனால் தாஜ் ஒட்டல் சென்று தயிர் சாதம் சாப்பிட்ட வைத்த மாதிரி இருந்தது நண்பர்கள் பலருக்கு..
எனக்கு படம் ரஜினிக்காக கண்டிப்பாக பார்க்கலாம்... முதல் 15 நிமிடம் எனக்கு போதும், வெகு சில கைத்தட்ட வைக்கும் வசனங்கள், சில திணிக்க பட்ட வசனங்களை தவிர்த்து இருக்கலாம்.. ARR இல்லாத குறை தெரிகிறது.. மெட்ராஸ்ல நடிச்ச எல்லாருக்கும் ஒரு Scene ன்னு வாக்கு குடுத்து இருப்பாரு போல.,..
மனைவியை தேடும் காட்சி நீளும் போது குடும்ப படம் நடிக்க ஆயிரம் நடிகர் இருக்க ரஜினிய போட்டு தாக்கனுமா என்று தோன்றியது
வில்லன்... We still miss Basha Antony Kind
இறுதி காட்சி ..லிங்கா போல் திருஷ்டி... ரஜினிக்காக கொஞ்சம் உழைத்து இருக்கலாம்

ஷங்கராவது " ரஜினி " படம்  எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்

புதன், 20 ஜூலை, 2016

கபாலி - பொன் முட்டை யிடும் வாத்து

ஆற அமர விமர்சனம் படிச்சுட்டு சவுகரியமா வார இறுதியில ரிசர்வ் பண்ணி, குடும்பத்தோட பாப்கார்ன் சாப்பிடுகிட்டு பாக்க இது மத்த தமிழ் படம் இல்லடா.... #கபாலிடா... FDFS

ஆயிரம் விமர்சனம் செய்தாலும்,ரஜினியின் திரை ஆளுமையும், தலைமுறைகளை கடந்த வீச்சும் ... பிரமிப்பு

If cinema is for entertainment,, then Rajini is ultimate entertainer for generations

கடவுளே..... படத்த புரமோட் பண்றவங்களட்ட இருந்து ரஜினிய காபாற்று...
விமர்சிக்கிறவர்களை கூட அவரே பார்த்துப் பார்..
கபாலி பொன் முட்டை யிடும் வாத்து , ஒவர் பில்டப் விட்டு பாபா பிரியாணி செய்து விடாதிர்கள்..

இப்போது  தமிழ்நாட்டில்  மக்கள்  இரண்டு  வகை  1, கபாலியை  வைத்து  விளம்பரம்  மற்றும்  வியாபாரம்  செய்ப்பவர்கள்                            2. கபாலி  வியாபார தந்திரத்தால்  பணத்தை இழப்பவர்கள்

காபாலிக்கு ஒரு போஸ்ட் போட்டு  viewers  சேர்ப்பதால் நானும்  முதல்  வகையில்  சேர்ந்து  விட்டேன்





செவ்வாய், 19 ஜூலை, 2016

நாம் சிறப்பாக வளர்கிறோமா நமது குழந்தைகளை ?

Big indian family on bike



முந்தைய தலைமுறையை  விட  நாம்  நமது  குழந்தைகளை  சிறப்பாக  வளர்ப்பதாக   நினைக்கிறோம்

முன்பு எல்லாம்  பெரும்பாலும் குடும்பத்தில்  யாராவுது ஒருவர் மட்டும்தான் தான்   படித்து நகரத்தில்  வேலை  செய்து  கொண்டு  இருந்தார்கள் ,  குழந்தைகளும்  அதிகம் . அதனால் நகரம் , மற்றும்  சிறு  நகரங்களில்  வசிக்கும்  பெரியப்பா ,சித்தப்பா , மாமா  குடும்பத்தில்  உறவினர்கள்  வீட்டில்  தங்க வைத்து     பிள்ளைகளை  படிக்க  வைக்கும்  வழக்கம் இருந்தது. இது  கூட்டு குடும்பத்தை  விட  மிகவும்  சிக்கலானது ஆனாலும்  பெரியவர்கள் மிக  திறம்பட நிர்வாகம்  செய்தனர் .
பெரியவர்கள்பெரும்பாலும்  தங்களது குழந்தைகளுக்கும்  உடன்  பிறந்தவர்களது  குழந்தைக்கும்    வேறுபாடு காட்ட  மாட்டார்கள் . அனைவரும்  ஒன்றுதான் . 
குழந்தைகள்  இடையே  விட்டு  கொடுக்கும்  வழக்கமும் , எந்த  பிரச்சனையையும்  தங்களுக்குள்  தீர்த்து  கொள்ளும்   மனப்பான்மையும்  இருந்தது. இன்று  கார்பொரேட்  நிறுவனங்கள்  நடத்தும்  குழு கட்டமைப்பு மற்றும்  மேம்பாடு  (team  Building )  போன்றவற்றை இயற்கையாகாவே  கற்று  கொண்டனர்.

மற்ற குழுந்தைகள் பெரியப்பா /சித்தப்பா  என்று  கூப்பிடுவதை  பார்த்து  சொந்த  குழந்தையும் அப்படியே  கூப்பிடுவதும்  நிகழும் .பெரும்பாலான  குழுந்தைகளுக்கு  சற்று விவரம்  தெரிந்த  பின் தான்  யார்  சொந்த சகோதரன்/ சகோதரி  , யார்  உடன் பிறவா சகோதரன் /சகோதரி  என்பதையே  தெரிந்து  கொள்வார்கள் .

அப்போது  இந்த அளவு  பொருளாதார  வசதி  இல்லாவிட்டாலும்  பகிர்ந்து  கொள்ளும்  பழக்கம் இருந்தது.  இவளவு அதிகமான  கல்வி கட்டணம் கிடையாது  என்பதும் உண்மை,

இப்போது அத்தகைய  பழக்கம்  முழுக்க  ஒழிந்து  விட்டது , பெரும்பாலும்  ஒன்று  அல்லது  இரண்டு குழந்தைகள் , யாரும்  யாரையும்  நம்பி தங்களது  குழந்தைகளை  விட தயாராக  இல்லை , அப்படியே  விட்டாலும்  யாருக்கும்  அடுத்தவர்  குழுந்தையை  பார்த்து  வளர்க்கும்  அளவுக்கு பொறுமை  இல்லை .
மிக  அதிகமான  கல்வி  கட்டணம் ஒரு காரணம்  கூட , 
குழுந்தைகளும் எந்த  ஒரு  பிரச்சினைக்கும்  பெற்றோர் களிடம் தான்  செல்கிறது . பகிர்ந்து  கொள்ளும்  பழக்கும்  அறவே  குறைந்து  உள்ளது, தோல்வியை  தாங்கும்  மனப்பாண்மை யும் குறைந்து விட்டது.

இத்தகைய  சூழலில்  படித்து    வளர்ந்தவர் கள்  தங்களது  அனுபவங்களை  சொல்லுங்கள் .. அது சிறந்ததா  , இது  சிறந்ததா என்று..




வெள்ளி, 8 ஜூலை, 2016

கடுமையாக உழைக்கிறாரா இந்திய பிரதமர் ?

புது டெல்லியில் ஒரு  பிரெஞ்சு பெண்மணியிடம் ஒரு  பிஜேபி  உறுப்பினர் எங்களது  பாரத பிரதமர் கடுமையாக உழைக்கிறார் ,சிறிது  நேரம்  மட்டுமே  உறங்குகிறார் . உதாரணமாக  நேற்று  கூட பாஸ்ப்போர்ட்டை இழந்து  வெளிநாட்டில் தவித்த ஒருவருக்கு உடனடியாக பாஸ்ப்போர்ட் கிடைக்க உறுதி செய்தார் . தனது ஓய்வூதியம் கிடைக்காமல்  அவதி பட்ட ஒரு ஆசிரியருக்கு உதவி  செய்து உடனடியாக கிடைக்க செய்தார் என்று  விளக்கி கொண்டு இருந்தார் .
இதை  கேட்டு  ஆச்சரியம்  அடைந்த அந்த பெண்மணி " ஏன்  உங்கள்  நாட்டில் கடுமையான ஆட் பற்றாகுறை நிலவும்  போல , பிரதமர் பாஸ்ப்போர்ட் அலுவலக மற்றும்  ஓய்வு ஊதிய  துறை  வேலை  எல்லாம்  செய்தால்  எப்படி  தூங்க  நேரம் கிடைக்கும் , அவர் பிரதமர்  வேலையை  கூட பார்க்க வேண்டுமே  " என்றார் .

அதை  கேட்டு  அதிர்ச்சி  அடைந்த பிரமுகர் " இல்லை  பிரதமர்  அலுவலகத்தில்  பலர்  இந்த வேலைகளையும்  செய்கின்றனர் , பிரதமர் அவர்களை  மேற்பார்வை இடுகிறார் " என்றார் .

இந்த முறை  சிறப்பாக  செயல் படும் என்றால் பாஸ்ப்போர்ட் அலுவலகம்  மற்றும்  ஓய்வு  ஊதிய  துறைகளை  பிரதம  மந்திரி  அலுவலகமே பார்த்து கொள்ளலாமே என்று   அந்த  பெண்மணி கூறினார்.
இதை  கேட்ட  பிஜேபி  பிரமுகர் கோபமாக  வெளியேறினார் .

அந்த பெண்மணி சிறிது குழப்பத்துடன் என்னிடம் நானே எதுவும் தவறாக கேட்டு விட்டேனா என்று  கேட்டார் .. நான் அவரிடம்  நீங்கள்  இந்திய திரை படங்களை  பார்த்தது  உண்டா  என்று கேட்டேன் .அவர் இல்லை  என்றார்  அதுதான் உங்கள் பிரச்சினை என்று கூறினேன் .

பெரும்பாலும்  இந்திய  படங்களில்  எல்லா  பிரச்சினைகளையும் ஒரு சூப்பர்  ஹீரோ  தீர்த்து  வைப்பார் . அதையே  பிடித்து  கொண்ட அரசியல் வாதிகளும் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் ஒரு  மனிதர்  தீர்த்து  வைப்பார் என்னும் பிம்பத்தை கட்டமைக்கின்றனர் .அதில்  ஒரு பகுதிதான்  இது என்று  விளக்கினேன் .

ஒரு  நாடு  நன்றாக  இருக்க வேண்டுமானால்  ஒரு  தனி மனிதரால் மாற்றத்தை தர  முடியாது மக்கள் மனது  வைத்தால் தான் முடியும் .

(Courtesy :Mumbai Mirror Article)

"Public/System can make change. super hero cant make the change"

Note:- 

நாங்கள் பெரும்பாலும்  அலுவலக பயணமாக BUSSINESS Class இல் வெளிநாடு  சென்றாலே விமானத்தில் 180Deg  படுக்கையில்  நன்றாக உறங்கி மறுநாள் விழித்தவுடன் வெளிநாட்டில் பணிகளை கவனிப்போம் .. இதில்  தனி  விமானத்தில்  செல்லும்  பிரதமர்  விமானத்தில் தூங்கி  அலுவலகம்  வருகிறார் ன்னு பெருமை வேறு . இதுவும் ஒரு  சூப்பர் ஹீரோ  நாடகங்களில் ஒன்று

சொந்த ஊரில் வாழறோமோ இல்லையோ சொந்த ஊர்லதான் சாவணும்

எங்களது  தஞ்சை மாவட்ட கிராமங்களில்  ஒரு  இறப்பு   என்றால் குறைந்தது 500 பேர் கலந்து கொள்வார்கள் சில சமயம்  பல ஆயிர கணக்கிலும்  இருக்கும்..பெரும்பாலும் ஊரே  கூடி விடும்  . பெரும்பாலும் ஓரமுறையார் (மாமா விடு) வீடுகளில் இருந்து  சமைத்து   துக்கம்  விசாரிக்க  வந்தவர்களுக்கு  சாப்பாடு தந்து  விடுவார்கள்.

எனது கிராமத்தில் பொது சுடுகாடு என்ற  பழக்கமே கிடையாது , அவரவர்கள் தங்களுக்கு சொந்தமான காவிரி கரையில் இருக்கும்கொல்லையில்  தான் எரித்து  விடுவார்கள். 

அதுவும்  மிக  வயதானவர்கள் இறப்பு ஒரு திருவிழாதான் . குறவன் ,குறத்தி டான்ஸ் , அருமையான பல்லாக்கு , ஆட்டம் ,பாட்டம் , தட புடல் சாப்பாடு  கூட... 16 நாள் கறி விருந்து , வேட்டி கட்டுதல்னு சும்மா தூள்  பறக்கும் ...பெருமபாலான வயதானவர்களை பேர பிள்ளைகள் இருக்கும் போதே தாத்தா  நீ செத்தா ஊரே அசந்து போற மாதிரி தூக்கி போடுவேன் என்று கிண்டல் செய்வதும்  உண்டு ..

இத்தகைய சாவு நிகழ்ச்சிகளை கண்டு  பழகிய  நான்  ,  வட  நாட்டில் பெரு  நகரில்  வேலை  காரணமாக வசிக்கும் எனக்கு  நேற்று  ஒரு  அலுவலக முத்த அதிகாரி  ஒருவரின்  மரணத்திற்கு செல்ல  நேரிட்டது.  அடுக்கு  மாடி  குடியிருப்பில் அவரது  வீட்டில்  விரல்  விட்டு  எண்ண    கூடிய  அளவு குடும்ப  உறுப்பினர்கள் , 20 முதல்  25 அலுவலக  நண்பர்கள்  அவ்வளவுதான் . அடுக்கு  மாடி  குடியிருப்பிற்கு  மாறி   சில ஆண்டுகள்  ஆணது  நாளோ  என்னோவோ  பெரும்பாலோனோர்  வந்து  எட்டி  பார்க்க கூட  இல்லை ..எப்படியோ  அலுவலக நண்பர்கள்  காரியத்தை  முடித்து  விட்டு வந்தோம் .

 சொந்த  ஊரில்  வாழறோமோ இல்லையோ  சொந்த ஊர்லதான்டா சாவணும் 
செத்ததுக்கு  அப்றம் எந்திரிச்சு பாக்க  போறிங்களா னு கேட்டாலும்.
மரணம்  கூட  நமக்காக  கண்ணீர் விடும் மனிதர்களிடேயே நிகழ்ந்தால் தான் சிறப்பு.