புதன், 30 நவம்பர், 2016

மகளதிகாரம் & எதிர்பார்ப்பு இல்லாத நட்பு

பார்த்து பார்த்து என்ன தான் மனைவி செய்தாலும் அம்மாவுக்கு மாற்றாக  முடிவதில்லை.... நமக்கு சிறிது உடல் நிலை சரி இல்லை என்றால் சிறிது புருவம் சுருக்கி கவலையுடன்  என்னாச்சுப்பா உஙகளுக்கு?ன்னு கேட்கும் சில நொடிகள் மகள் அம்மாவுக்கு மாற்றாகிறாள்- மகளதிகாரம் - 1

 மனைவி சிறிது  தாமதமானாலும் கோபப்படுவார்கள், அவசரமாக விமானத்தை பிடிக்க கிளம்பினாலும் எனக்கு இந்த பொட்டு, இந்த செருப்பு தான் வேணும் என்று அடம் பிடிக்கும் மகளிடம் செல்லுப்படியாகாது கோபம்-  மகளதிகாரம் -2

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த வீட்டுக்கு வரும் பொழுது கூட, அப்பா பேத்தியை கொஞ்சும் போது மகளுக்கு வரும் ஒரு சின்ன பொறாமை- மகளதிகாரம் - 3

 இந்த உலகத்தில் கிடைப்பதற்கு அரியது எது?

 எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத நட்பும், உறவுகளும்...
உங்களுக்கு அத்தகைய நட்பும் , உறவுகளும் உங்களுக்கு  இருந்தால் எப்பொழுதும்  இழந்து விடாதிர்கள்....
நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்தும் நபராக நீங்கள் இருந்தால்  எப்பொழதும் மாறி விடாதிர்கள்.உங்களை போன்ற சிலரால் தான் கொஞ்ச மழையும் பெய்கிறது.

வியாழன், 24 நவம்பர், 2016

பொருளாதார நெருக்கடி நிலை, முடங்கிய தேசம் - 2

கதை - 1
ஊரில் ஒரு கொலை நடந்து  விடுகிறது...  குற்றவாளியை புலனாய்வு செய்து கண்டு பிடிக்காமல் ஒரு போலிஸ் அதிகாரி ஊரில் உள்ள அனைவரையும் கட்டி வைத்து உதைத்து உண்மையை வரை வைக்க முடிவு செய்கிறார்.. அவரை  நாம் திறமையான அதிகாரி என்று பாராட்டுவோமா?
கதை-2
         நகரில் உள்ள வங்கியில்10 ரூபாய் கட்டாக ஆயிரம் ருபாய் திருட்டு போய் விட்டது. . திருடியவன் வெளியூர் சென்று அந்த ஆயிரம் ருபாயை நூறு ருபாயாக மாற்றி  விட்டான். காவல்துறை வந்தது திருட்டு  போனது 10 ரூபாய் நோட்டுகள் ,,அந்த நகரத்தில் உள்ள 1 லட்சம் பேரும் தங்களிடம் உள்ள 10 ருபாய் நோட்டை கொண்டு வந்து வங்கியில் காண்பித்து தாங்கள் திருடவில்லை என்று நிருபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... இவரை நாம் பாராட்ட வேண்டுமா?      
இரண்டு  கதைக்கும் நீங்கள் வங்கி வரிசையில் நிற்பதற்குமோ, இரன்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லரை இல்லாமல் அலைவதற்கும்  சம்பந்தம் இருப்பதாக தோன்றினால் நான் பொறுப்பல்ல...

வியாழன், 17 நவம்பர், 2016

தஞ்சாவூர் வாக்காளர்கள் கவனத்திற்கு


தஞ்சாவூர் வாக்காளர்கள்  கவனத்திற்கு

 புரட்சி  தலைவர் MGR  அவர்கள் காலத்தில்தான்  தமிழ்  பல்கலைக்கழகம்  ஆரம்பிக்கப்பட்டது . நகரத்தின்  வளர்ச்சி புற  நகருக்கு தொடங்கியது  அப்பொழுது தான் ,

பிறகு, 1991-1996 ல்  அதிமுக  ஆட்சி  காலத்தில் , மறைந்த முன்னாள்  அமைச்சர்   SDS  அவர்கள்  சட்ட  மன்ற  உறுப்பினராக  இருந்த  காலத்தில் , மாண்புமிகு புரட்சி தலைவி  அம்மா அவர்கள்  முதல்வராக  இருந்த உலக  தமிழ்  மாநாட்டின் பொழுது புதிய பேருந்து நிலையம், புற நகர்  சாலை போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வந்தது .

1992 உலக  தமிழ்  மாநாடு , திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக  உலக தமிழாய்வு நிறுவன அனுமதி  இல்லாமல் நடத்திய குடும்ப மாநாடாக இல்லாமல் கற்றறிந்த தமிழறிஞர் நெபுரு கோரோஷிமா தலைமையில் தமிழ் வளர்ச்சி  மாநாடாக இருந்தது . தமிழுடன் சேர்ந்து தஞ்சையும் வளர்ந்தது.

1996 க்கு  பிறகு , வெற்றி பெற்ற  திமுக  தஞ்சாவூர் எங்கள்  கோட்டை
என்று  பெருமை  பட்டு கொண்டது , கோட்டை என்று  சொன்னவர்கள்  கோட்டையையை  வளபடுத்தினார்களா இல்லை ,
மத்திய , மற்றும் மாநில  அமைச்சர்கள் ஆக  இருந்தவர்கள் தங்களை சிற்றசர்களாகவும் , பேரரசர்கள் ஆகவும் எண்ணி கொண்டு  தங்களை வளபடுத்தி  கொண்டார்களே தவிர தஞ்சை நகரம் புறக்கணிக்கபட்டது   .

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு  பிறகு , புரட்சி  தலைவியின் ஆசியிடன் தஞ்சை  சட்டமன்ற தொகுதியை கைபற்றிய அதிமுக , பிறகு  தஞ்சை நாடளுமன்ற தொகுதி , நகர சபை அனைத்தையும் கைப்பற்றியது.  பிறகு மீண்டும்  வளர்ச்சி  பாதையில் தஞ்சை நகரம் திரும்பியது .  புரட்சி  தலைவி  அம்மாவின் ஆசியுடன் , சட்ட மன்ற உறுப்பினர்  திரு ரெங்கசாமி  உழைப்பினால் எண்ணற்ற  திட்டங்கள்  தஞ்சை  தொகுதிக்கு வர தொடங்கியது.

 1. தஞ்சை  நகரம் மாநகராட்சி  ஆகியது .
 2. பல் வேறு மேம்பாலங்கள்  கட்ட பட்டன .
  3. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , புதிய காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் , ஒன்றுபட்ட நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டன .
 4.(RING ROAD ) சுற்று  சாலை திட்டம்
 5. அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பிரிவு
 6. உயர் தர  மருத்துவமனை  (AIMS  )தஞ்சைக்கு அருகில் அனுமதி
 7. தரமான சாலைகள்
 8. பல்வேறு  கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்

இன்னும் பல நல்ல திட்டங்கள் ...

திமுக :-
முன்னாள் மத்திய மாநில அமைச்சர்கள் போன்ற பழைய முகங்களை கட்டினால் தஞ்சை மக்கள் வெறுப்படைந்து புறக்கணிப்பார்கள் என்று தெரிந்த திமுக விற்கு  கிடைத்த முகமூடிதான் இப்போதைய திமுக வேட்பாளர் .. வெற்றி பெற்றால்  இந்த வேட்பாளர்  திமுக மாவட்ட செயலாளர் , முன்னாள் மத்திய  அமைச்சர் , முன்னாள் மாநில அமைச்சர் போன்ற  திமுக  அதிகார மையங்களுக்கு  எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பாரே ஒழிய தஞ்சை மக்களுக்கு நல்ல சட்ட மன்ற  உறுப்பினராக இருக்க முடியாது.

தஞ்சை மக்களின்  வாழ்வாதாரம் காவிரி நதி .. 1970களில் சர்காரியா கமிஷன் க்கு  பயந்து காவிரியின் தமிழக  உரிமையை கை விட்டார். மீத்தேன்  திட்டத்திற்கு அனுமதி  அளித்து  டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக முயற்சித்தார் . அதிகாரம்  கையில் இருந்த  பொழுது , மகன் ,மருமகனுக்கு பதவி வாங்கினார்களே ஒழிய காவிரி  நடுவர் மன்ற  தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி செய்ய வில்லை.

திமுக  வேட்பாளருக்கு  வாக்களித்தால்  தஞ்சை மக்களுக்கு பாம்பே ஸ்வீட்ஸ்  மைசூர் பாக்கு வேண்டுமானால் கிடைக்கும் , மைசூரில்  இருந்து காவிரி  தண்ணீர்  கிடைக்காது.

புரட்சி  தலைவி  அம்மாவின் சட்ட  போராட்டத்தினால் காவிரி  நடுவர்மன்ற  இறுதி  தீர்ப்பு   அரசிதழில் வெளியிட பட்டது.  மேலும் பூரண நலம் பெற்று  வரும் புரட்சி  தலைவியின்  அம்மாவின் முயற்சியினால் காவேரி மேலாண்மை வாரியம்  அமையும் .



சிந்திப்பீர் , வாக்களிப்பீர்





செவ்வாய், 15 நவம்பர், 2016

மூட்டை பூச்சிக்காக வீட்டை கொழுத்திய மத்திய அரசு



ஹிட்லர் அவர்கள்  எதை செய்தாலும் நாட்டுபற்று  என்ற பெயரால் மக்களிடம்  திணித்து  விடுவார் . அது தான்  இன்று  இந்த  நாட்டிலும்  நடந்து  கொண்டு இருக்கிறது .

பெரும்பாலோர்  நினைப்பது  போல்  பெரும்  கோடீஸ்வரர்கள்  யாரும்  கருப்பு பணத்தை  பணமாக  வைத்து  கொண்டு அலைவதில்லை  பெரும்பாலும்  ரியல்  எஸ்டேட் முதலீடுகளும், போலி நிறுவனங்கள் , பினாமி , தங்கம் ,வெளி நாட்டு  வங்கி , இது போக  10% பணமாக  வேண்டுமானால்  வைத்து  இருக்கலாம் . 

கோடி கணக்கில்  வராத கடனை   வைத்து  இருக்கும்  நிறுவனங்களிடம்  வசூலிக்க  வக்கில்லாத  அரசு , சிறு  வணிகர்கள் , அன்றாடம்  காய்ச்சிகள் , விவசாயிகள் , கூலி  தொழிலாளிகளை வேலையை  விட்டு  வாங்கி  வாசலில்  காத்து  இருக்க  வைத்துள்ளது.

 தண்ணீரில்  தத்தளிப்பவனை  பார்த்து  கரையில்  இருப்பவன்  எனக்கும்  தான்  நீச்சல்  தெரியாது  நான்  கவலை படுகிறேனா என்று  கேட்பதை  போல்  உள்ளது  பெரு  நகரங்களில் எலக்டீரானிக் பணத்தை உபோயோகிக்கும் மக்கள் சமூக  வலைத்தளங்களில்   தினசரி 1000,500 பண பரிமாற்றம் செய்வபர்கள் ,வங்கி  வாசலில் வரிசையில்  நிற்பதை பார்த்து  கேட்பது .
 நாட்களில்  சரியாகி  வீடும்  என்றார்கள் , இன்றும் வரிசைகள் அதிகரித்து கொண்டு தான்  உள்ளது, வரிசையில் நின்று கடைசியில் 2000 ரூபாய்  நோட்டை  தருவதை  போன்ற  முட்டாள் தனம்  எதுவும்  இருப்பதாக  தெரியவில்லை . 2000 நோட்டை வைத்து கொண்டு  100 200 கு பொருள்  வாங்க வழியில்லை . 500 ,1000 நோட்டுகள்  இல்லாத  நிலையில்  2000 நோட்டுகள் இருந்தும்  இல்லாதது  போன்றுதான்.

 வாரம்  20 ஆயிரம்  ரூபாய் மட்டுமே  எடுக்க  முடியும்  ,4 ஆயிரம்  வரை மட்டுமே மாற்ற  முடியும் என்கிற  போது திரும்ப திரும்ப கூட்டம்  இருந்து  கொண்டுதான் இருக்கிறது 

பெரும் பணக்காரர்கள்  யாரும் மாட்டியதாக தகவல் இல்லை , தாங்கள  5000 கோடி  சூரத் தில் சிக்கியது , 500 கோடி  மதுரையில்  சிக்கியது என்று தான் வதந்தி  கிளப்பி கொண்டு இருக்கிறார்கள் .


இதன்  மூலம்  சில  லட்சங்கள்முதல்  1 முதல் 2 கோடி கருப்பு பணம்   வைத்து  இருக்கும் சில சின்ன  மீன்கள்  அகப்படும் , பெரிய திமிங்கிலங்கள் எதுவும்  அகப்படாது.


முட்டை  பூச்சிக்காக  வீட்டை  கொழுத்தியதை போல் , ஒரு தேசத்தை வார கணக்கில் முடக்கி போட்டு , கோடி களில் உற்பத்தியை தடுத்து , சில  கோடி , கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் கைப்பற்றி பெருமை பட்டு கொள்ள வேண்டியது  தான்.

சிபிஐ ,ரா , போலீஸ் , இன்டெலிஜென்ஸ் என்று பல அரசாங்க நிறுவனங்களை வைத்து  கொண்டு  கள்ள  நோட்டை  தடுக்க முடியவில்லை என்று தாங்கள்  அடித்த  பணத்தை  தாங்களே செல்லாது என்று  அறிவிப்பதை பெருமையாக அரசாங்கம் கருதுவது  ஒரு  வெட்க கேடு. 

நாமும்  பாரத் மாதா கி ஜே  என்று  சொல்லி   தினமும் வங்கி வாசலில் வரிசையில்  நிற்பதை  அன்றாட வழக்கமாகி கொள்ளவோம்.


செவ்வாய், 25 அக்டோபர், 2016

கடவுளின் FACEBOOK ப்ரொபைல் பிக்ச்சரும் , இளைஞனின் வருத்தமும்

இன்றைய  தலைமுறை இளைஞன்  ஒருவன் கடவுளின்  பெயரால்  நடக்கும்  வன்முறை  மற்றும்  உயிர் பலிகளால்   கடவுள்  மீது  மிகுந்த  வருத்தத்தில்  இருந்தான். கடவுள் உலகத்தை  இன்னும் நனறாக வைத்து  இருக்கலாமே  என்றும்  தோன்றியது.

ஒருநாள் அவனுக்கு  முன்பு  கடவுள் தோன்றினார் . உடனே கடவுளிடம் " என் உங்களது   பெயரால்  இவ்வளவு வன்முறை , உயிர்பலி .   மனிதர்களுக்கு உங்களால் நன்மையை  போதித்து நல்வழிப்படுத்த முடியவில்லையா" என்று  கேட்டான்.

கடவுள்  அதற்கு " மகனே  ." நீ  உனது  FACEBOOK  ப்ரொபைல் பிக்ச்சரை  மாற்றினால் அதற்கு  எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ்  கிடைக்கிறது  என்று  கேட்டார்  . அதற்கு  இளைஞன்  " பல   நூறு லைக்ஸ்   மற்றும்  கமெண்ட்ஸ் " .
கடவுள் " அதுவே நீ  ஒரு  கருத்து  பதிவு  செய்தால்  எத்தனை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கிடைக்கிறது  என்று  கேட்டார் . அதற்கு  இளைஞன்  " பத்து ,பதினைந்து லைக்ஸ் மற்றும்  கமெண்ட்ஸ் .

கடவுள்  " இதையேதான் உனது முன்னோர்களும்  செய்தனர். நான்  சொன்ன  கருத்துக்களை  எல்லாம்  விட்டு   விட்டு , எனது பெயரையும் , ப்ரொபைல் பிட்ச்சரையும் மட்டும்  வைத்து இருக்கிறார்கள் இதற்கு நான்  எவ்வாறு  பொறுப்பேற்க  முடியும் என்று கேட்டார்.

இளைஞன்  அதற்கு  பிறகு  கடவுள் மீது  வருத்த படுவதை  விட்டு விட்டான் .

கடவுள் நம்மளை  காப்பாற்றுவார் , கடவுளை  நாம்  காப்பற்ற வேண்டாம் . அவருக்காக நாம் வன்முறையில்  ஈடுபட வேண்டுமா?


புதன், 19 அக்டோபர், 2016

திரைப்படங்களை எதிர்க்கும் போராட்டங்கள் -நகைச்சுவை பதிவு


நீண்ட  காலமாக நீங்கள்  அரசியலில்  இருக்கிறீர்கள் , சிறு  இயக்கமோ ,  சிறு சாதி  சங்கமோ   நடத்தி  வருகிறீர்கள் ஆனாலும்  உங்களை உங்கள்  வட்டாரத்தை  தாண்டி  வெளியே தெரிய வில்லையா ?
உங்களுக்கு   திரைப்பட  எதிர்ப்பு  போராட்டங்கள்  கை  கொடுக்கும். 

1 . முதலில்  மீடியா , நீங்கள்  உங்கள்  ஊரின்  குடிநீருக்கோ , சாலை  வசதிக்கோ  போராடினால் , நான்காம்  பக்கத்தில்  2 பத்தியில்  செய்தி வெளி வரும்  திரைப்படத்திற்கு  எதிராக  போராடினால்  4 தொலைக்காட்சி  கேமரா  நேரடி  ஒளிபரப்பு.4 தொலைக்காட்சி  விவாதங்களில்   பங்கேற்க அழைப்பு , முதல்  பக்கத்தில்  செய்தி. இதை  விட வேற  என்ன  வேண்டும்?  சும்மா  காவேரி  போராட்டத்துக்கு  நீங்க  கூப்பிட்டால்   கூட  வராதவன்  எல்லாம்  சினிமா  போராட்டத்துக்கு  வந்து  விடுவான் .

2.. எப்படி  எல்லாம்  சினிமாவை  வம்புக்கு   இழுக்கலாம் .
    1.  இந்த  நாட்டுகாரன் நடித்து  உள்ளான் .அந்த  மாநில  நடிகன், நடிகை  நடித்து  உள்ளார்கள். 
    2. இந்த  மாநில  மொழி படம் , அந்த  மாநிலத்தோட  நமக்கு  வாய்க்கால் தகராறு 
    3.  எனது ஜாதிக்கு எதிரான படம் , எனது  சாமி யை  தவறாக  காண்பிக்கிறார்கள் 
   4. பெண்களுக்கு  எதிரான  படம். 
   5. அந்த நடிகர்  போன மாதம் தப்பா  பேசினார் . அவருக்காக  படத்தை எதிர்ப்போம் .
சென்சார்  என்று  ஒன்று  இருப்பதை  மறந்து  விட்டு  நாம  கத்திரி கோலை எடுத்து கொண்டு கிளம்ப  வேண்டும்.

3, எங்களுக்கு  காட்டி  விட்டுத்தான்  படத்தை  வெளியிட  வேண்டும் என்று சொல்லுங்கள் . எதுவம்  கிடைக்காட்டி அடலீஸ்ட்  பத்து  ஓசி  டிக்கெட்  படம்  வெளி வரும் முன்  கிடைக்கிறது என்று  சந்தோச பட்டு  கொள்ளலாமே.

4. பூஜை  ஆரம்பிக்கும்  போதோ , பட பிடிப்பு நடக்கும் போதோ  போராட்டம்  நடத்தி  விடாதீர்கள் . அப்போது  ஒரு  அறிக்கை மட்டும்  வெளியிட்டு அமைதியாய்  இருங்கள்.

5. இப்போ  எல்லாம்  ட்ரெயின் , பஸ் நிறுத்தி  போராடறது  அவுட் ஒப்பி பேஷன்  , சினிமா  தியேட்டர் முன்னாடயோ   அல்லது  flexboard , கட் அவுட் டையோ  கிழித்தால்  அதிகம்   விளம்பரம் பெறலாம் .

6. ஓரளவு  பிரபலமான  நடிகர்  படத்தையே  எதிர்க்க  வேண்டும் , சும்மா அறிமுக  நடிகர்  படத்தை  எதிர்த்தால் ஒருத்தனும்  சீண்ட மாட்டான்.

6. டிவி விவாதத்துக்கு  கூப்பிட்டால்  உணர்ச்சி  வசப்பட்டு  கெட்ட  வார்த்தையில்  திட்டி  விடுங்கள்  அப்றம் மன்னிப்பு கேட்டுக்கலாம்.

7. முடிந்தால்  திரைப்பட  தயாரிப்பாளர்களோட விளம்பரத்திற்காக  மறைமுக  ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். ஆனால்  இதில்  படம்  வெளியிடுவதற்கு  முன்  சமாதானம்  அடைந்து  விடுங்கள்.

8.  ரொம்ப  முக்கியமானது , யாரு  படத்துடைய  தயாரிப்பாளர் , விநியோக  உரிமை , ஒளிபரப்பு  உரிமை எல்லாம்  யாரு  வாங்கி  உள்ளார்கள் என்று  பார்த்து  போராடுங்கள் இல்லாவிட்டால் டின் கட்டி  விடுவார்கள் .








செவ்வாய், 18 அக்டோபர், 2016

நகைச்சுவை:- மனைவியை சமாளிக்க முயன்றவரின் கதை?

பழங்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த, புகழ் பெற்ற  முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடம் மிகப் பெரிய மன்னர்களும் அறிவுரை கேட்டு செல்வார்கள். அப்பேர்பட்ட முனிவருக்கு ஒரு சிறிய கவலை இருந்தது. என்ன தான் செயற்கரிய செயலை செய்தாலும் அவரது மனைவி சிறு சிறு குறைகளை கண்டு பிடித்து விடுவார். சின்ன சின்ன சண்டைகளும் அதனால் வந்து கொண்டு இருந்தது. அவரது சக்திகள் அனைத்தும் மனைவி 2 சொட்டு கண்ணீர் முன்பு செயல் இழந்து விடும்.
ஒரு நாள் சரி கடவுளிடமே கேட்டு விடலாம் என்று முடிவெடுத்து கடவுளிடம் சென்று அவரிடம் ஆலோசனை கேட்பதற்கு வந்ததாக கூறினார்.  கடவுளும் இவரை வரவேற்று வரவேற்பரையில் அமர செய்து விட்டு அடுப்படி சென்று மனைவியிடம் உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்ல சென்றார்.
முனிவருக்கு கடவுளும், கடவுளின் மனைவியும் என்ன தான் பேசுகிறார்கள் என்று ஆர்வம் கொண்டு தன் சக்தியை பயன் படுத்தி கேட்க ஆரம்பித்தார்
கடவுளின் மனைவி " நீங்க இப்ப என்ன சாதிச்சுடிங்கன்னு உங்கள் ட இந்த முனிவர் ஆலோசனை கேட்க வந்து இருக்கிறார்"
இதை கேட்ட முனிவர் கடவுளுக்கே இப்படின்னா நாம எம்மாத்திரம்?  என்று முற்றும் தெளிந்தவராக நடையை கட்டினார்.

பின் குறிப்பு:-
இந்த கதை முழுவதும் கற்பனையே.. இது என்னுடைய, மற்றும் நமது நண்பர்கள் யாருடைய  வாழ்க்கை சம்பவங்களுக்கும் தொடர்பு கிடையாது.அப்படி எதுவும் உங்களுக்கு தோன்றினால் அதுக்கு யாரும் பொறுப்பல்ல.