செவ்வாய், 10 ஜனவரி, 2017

பொங்கல் விடுமுறை.. அசால்ட் சேது (Bjp) வின் அடுத்த அட்டாக்

ஜல்லிகட்டு தடை,பொங்கல் விடுமுறை ரத்து... "டெல்லி, பம்பாய் போக வேண்டும் என்றால் தமிழர்களுக்கு பாஸ்போர்ட்  வேண்டும் "மத்திய பிஜேபி அரசின் அடுத்த அறிவிப்பாக இருக்க கூடும்...

இந்தி படித்து கொள்ளுங்கள்,
பொங்கல், ஜல்லிகட்டு எல்லாம் மறந்து சாட் பூஜை செய்யுங்கள்,
இட்லி, தயிர் சாதம் மறந்து சாப்பாத்தி சாப்பிட பழகி விடுங்கள்.
 கறி, கோழி சாப்பிடாம தால் சாப்பிட பழகிங்கள்,
வேட்டி, சட்டைக்கு பதிலா ரெண்டு செட் பைஜாமா, ஜிப்பா தைத்து விடுங்கள்,
கெடா வெட்டி கும்பிடற  கருப்பண்ண சாமி, ஐயனார் எல்லாம் விட்டு ராமர், கிருஷ்னர கும்பிடுங்கள்
தேசிய நீரோட்டத்தில் பழைய தமிழர்  கலாச்சாரத்தை எல்லாம் தலை முழ்கி எந்திரிச்சா நீங்கள் முழுமையான  "இந்தி"யன் ஆகி விடுவிர்.
 கஷ்டம்னு சொன்னா எல்லையில் உள்ள ராணுவ வீரன் பொங்கல் கொண்டாடுறானா? இல்ல  இட்லி தான் சாப்ட்றானா என்று கேட்பார்கள்
சீக்கிரம் தேச பக்தி உடைய இந்தியன் என்பதை நிருபித்து விடுங்கள்.

வியாழன், 5 ஜனவரி, 2017

தகவல் தொழில் நுட்ப துறை - பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மண்ட் வீக்


சாப்ட்வேர், ஐடி ,90 களின் தொடக்கத்தில் இருந்து  கடந்த  25 ஆண்டுகாலமாக  தமிழகத்தின் மத்திய தர வர்க்கத்தின் மந்திர சொல்லாக  மாறி  விட்ட வார்த்தைகள்.பக்கத்து  வீட்டு மாமா   தனது  மகன்கள் சாப்ட்வேர்ல  செட்டில்  ஆகி விட்டார்கள்  என்று  சொல்லும் போதே  அவருக்கு  ஒரு பெருமிதம்.

சென்னையின்  LIC  கட்டிடத்தையே  பெரும்  ஆச்சரியமாக  பார்த்து  வளர்ந்த  தலைமுறைக்கு ,சென்னை  புறநகரங்களில்  திடீரென  ராட்சதனாக  முளைத்த  கண்ணாடி  கட்டிடங்களில்  தனது  மகன்/மகள்  அலுவலகம்  இருக்கிறது  என்பது  ஒரு பெருமிதமாக தானே இருக்கும்.

 ஊருக்கு  ஒரு  ஜாவா  சுந்தரசேன்கள் உருவானார்கள் .  வேலைக்கு  சேந்த  வருஷம்  பைக், 3 வது  வருஷம்  கார்  , 4 வது வருஷம்  புறநகரில் பிளாட் ,கல்யாணம் என்று  முன்னேற்றம் , ரிட்டையர் மென்ட்  ஆக  4 வருஷம்  முன்னாடி  வீடு  வாங்கிய அப்பாக்கள்  ,வேலைக்கு  சேர்ந்த  4 வருஷத்தில்  வீடு  வாங்கிய மகனை  பார்த்து  மிரண்டார்கள்.

ஜாவா  சுந்தரேசனை பார்த்து, வீட்டுக்கு  ஒரு மரம்  வளர்கிறோமோ  இல்லையோ  வீட்டுக்கு  ஒரு  சாப்ட்வேர்  என்ஜினீயர் வளர்ப்போம் ன்னு  தமிழரகள்  கிளம்பினர் .   நீங்க  வீட்டுக்கு  ஒரு  என்ஜினீயர்னா நாங்க  தெருவுக்கு  ஒரு  இன்ஜினியரிங்  காலேஜ்   திறப்போம் ன்னு  கல்வி  வள்ளல்களும்  தயாராகினர்.

பையனுக்கு  எந்த  எந்த  கெட்ட பழக்கமும்   கிடையாது ,  மெக்கானிக்கல்  படிச்சிருக்கான் ,நல்ல சம்பாதிக்கிறான்னு
பொண்ணு  கேட்டு போனா , பொண்ணோட  அப்பா  " இல்லைங்க பொண்ணு  CS புடிச்சிருக்கு ,  IT க்கும் IT  க்கும் தான்  செட்டாகும்னு சொல்லி  , IOS போன்ல ல  anderiod  இன்ஸ்டால்  பண்ண  சொன்ன  மாதிரி   பார்த்து ஆச்சரியபட்டார் .  பிறதுறை  பட்டதாரிகள்  பொண்ணு  கிடைக்கவே  கஷ்டப்பட ஆரம்பித்தார்கள்

மேட்டூர்  நீர்மட்டத்த  பத்தி  கவலைபடும்  நம்ம  ஊர்  பண்னையார்  திடிர்னு ஒருநாள்  அரிக்கன்ன்னு  கவலைப்பட  ஆரம்பித்தார்.   அரிக்கன்  இல்லாட்டி  என்ன  டார்ச்  லைட்  இருக்கு பண்னைன்னு  சொன்னவனை  பார்த்து ,  அமெரிக்கால  தம்பி வேலை செய்ற ஊரில் புயலாம்  அப்டினு  சொல்றார்.

IT  நண்பர்களை  தெருவில்  பார்த்தால், நாம  ஒரத்தநாடுலருந்து  தஞ்சாவூர்  போனத  சொல்ற மாதிரி  போன மாசம்தான் நியூ யார்க்  on site  போய்ட்டு வந்தேன்  சொல்லி  நமக்கு  ஒரு  US  மேட் ஜவ்வு  மிட்டாய்  கொடுத்து ஆச்சரியபடுத்தினர்.

டெல்ட்டாவில்  இருந்து  பெங்களூரு  ல்  IT  வேலையில்   செட்டில்  ஆகிய  நண்பன் ,  சென்ற  ஆண்டு காவிரி பிரச்சசனையின் போது   யாரு ஊர்ல  விவசாயம்  பாக்குறாங்கன்னு நம்ப  ஊர்ல பிரச்சனை  பன்றாங்கனு கேட்டு  அதிர வைத்தான் .அவர்களின்  உலகம்  மொபைல்  /லேப்டாப்  ஸ்க்ரீன்   அளவு  சுருங்கி  விட்டது .

நம்ப  தஞ்சாவூர்  பெரிய  கோவில், மணி மண்டபம் , கல்லணை ன்னு  பொண்டாட்டி  புள்ளைகளை   கூட்டிகிட்டு போனா , நம்ப  ஆளுங்க  ஈபில்  டவர், சுதந்திர  தேவி  சிலை  முன்னாடி  குடும்ப போட்டோ  எடுத்து  சமூக  வலைதளத்தில்  போட்டு நம்ம   பேமிலி   நம்மள  டம்மி  பீஸா  பார்க்க   வைத்தனர்.

 நண்பர்  வீட்டுக்கு  போனா, நண்பர் மற்றும் மனைவி  தங்கள் குழந்தைகளிடம்  ஆங்கிலத்தில்  தான் உரையாடினார்கள் . என்னடா  தமிழுக்கு  வந்த  சோதனைன்னு  கேட்டப்போ , இவருக்கு onsite கிடைச்சா USல  பிள்ளைகளுக்கு  எளிதாக  இருக்கும்னு  இங்கேயே ஒரு   USA   உருவாக்கி  கொண்டு  இருந்தார்கள் .  நல்ல  வேலை  நம்ப  ஜனாதிபதி   டொனால்ட்  டிரம்ப்ன்னு  சொல்லி கொடுக்காமல் விட்டு வைத்துள்ளனர். இவர்களுக்காகதான்   தெரு  முனையில்  MCDONALDS ,KFC  திறந்து  வைத்து  இருக்கிறான் போல.

கூட்டுறவு  வங்கி கடனுக்கு  நாலு  ஜாமின் காரர்களுடன்  நாலு முறை  நடந்த  குப்புசாமி மகன் இன்று  நாலு கிரெடிட் கார்டு வைத்து  கொண்டு  அலைகிறான்.இது  உண்மையான வளர்ச்சியா ன்னு  தெரியவில்லை

விலை வாசி  ஏறிடுச்சு , ரியல் எஸ்டேட்  ஏறிடுச்சு , கலாச்சாரம்  சீரழியுது ன்னு  ஆயிரம் குற்றம்  சொன்னாலும் .

இன்று  வறட்சியில் 100 கணக்கில் நடக்கும் தற்கொலைகள்  ஆயிர கணக்கில்   இருந்து  இருக்கும் தொழில் நுட்ப துறையின்  வளர்ச்சி இல்லாமல்,  புதிய  தலைமுறை  சம்பாதித்து  தந்தையின்  விவசாயத்தையும் ,பொருளாதாரத்தையும்  காப்பாற்றுகிறார்கள் . குடும்பத்தை வறுமையில்  இருந்து  வளர்ச்சிக்கு  மாற்றி  காட்டிய  ஆயிரம்  இளைஞர்கள்/  பெண்கள்  உள்ளனர்.

 நமது  மாநிலம்  மற்ற  மாநிலத்தை வளர்ச்சியில்  பின்  தங்காமல்  பார்த்து  கொண்டதிலும்  பங்கு  உள்ளது .

அரசு  அலுவலகங்களிலும், பள்ளிகளிலும்  கூட  ஒழிக்க  முடியாத  சாதி  ஓரளவு  இங்கு ஒழிந்துள்ளது.

ஆயிரம்  மேடைகளில்  பேசினாலும் வாங்கி  தர  முடியாத பெண்  சுதந்திரத்தை வாங்கி  தந்து உள்ளது .  சம  வேலைவாய்ப்பு , சம ஊதியம் , சம  பணி  உயர்வு  இங்கு  பெண்களுக்கு  சாத்திய பட்டுள்ளது.

கல்யாணம்   ஆகாத  பொண்ணும் , பையனும்  பேசினால்  காதல்  தவிர  வேற  இல்லை  என்கிற  தமிழ் சினிமா  பார்த்து  வளர்ந்த  தலைமுறைக்கு  ஆண் பெண்  தோழமை   சாதாரனம்   என்னும்  உண்மையை   உணர்த்தியது.

 எனினும் வெளிநாட்டை  விட  ஊதியம்  குறைவு  என  இந்தியா  வரும்  நிறுவனங்கள் நம்மை  விட  குறைவான  ஊதியத்திற்கு  ஆள்  கிடைத்தால்   அடுத்த  நாட்டுக்கு செல்லும்  வாய்ப்புகள்  உள்ளது . அரசுகள் ,மற்றும்  கல்லூரிகள்  கூலி  ஆட்களை  தயாரிக்கும்  நிறுவனமாக  இருக்காமல்  இந்திய தொழில்  முனைவர்களையும் , ஆராய்ச்சி  மற்றும்  மேம்பாடு முலமாக  இந்திய  தொழில் நுட்பங்களை  உருவாக்குவதன்  மூலம்  தான்  இந்த  வளர்ச்சியை  தக்க  வைக்க  முடியும்.

இல்லா விட்டால் தொழில் நுட்ப துறை - பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மண்ட் வீக் கதை யாகி விடும்

(நான்  ஒரு  தகவல் தொழில் நுட்ப  துறையை சேராத   ஆள்  என்பதால்  எனது புரிதலில்  குறைபாடு  இருந்தால்  வருந்துகிறேன் )









வெள்ளி, 30 டிசம்பர், 2016

பிஜேபி அரசு -ஒரு அசால்ட் சேதுவா , இருபத்து மூன்றாம் புலிகேசியா ?






ஆவலுடன்  எதிர்பார்த்து இருந்த  டிசம்பர்  31 வந்து விட்டது . கருப்பு  பணம்  எல்லாம்  ஒளிந்து  விட்டதா .  குறைந்த பட்ச  எதிர்பார்ப்பான  ஆறு  சதவித கருப்பு  பணம்  கூட திரும்ப வராமல் இல்லை . 15.5 லட்சம்  ஒழிக்கப்பட்ட  பணத்தில்  ஏறத்தாழ  14 லட்சம்  கோடி  கடந்த  வாரம்  வரை  திரும்ப  வந்து  விட்டது .மீதம் வங்கிகளில் செல்லாது  என்று அறிவித்த அன்று  வங்கிகளின் கையிருப்பாக இருந்து  இருக்கும் . கள்ள  நோட்டுகள்  ஏறத்தாழ 4 கோடி மட்டும்தான் பிடி பட்டது

இப்போது  கருப்பு  பண தியரி  போய்  cashless தியரி வந்து  விட்டது .cashles க்கு demonitisation அவசியமா  என்றால்  தேச  துரோகி என்பார்கள் .

எனக்கு இப்பொது  உள்ள  ஒரே சந்தேகம் , நம்ம  மத்திய  அரசாங்கம்   அம்பு விட தெரியாமல்  சம்பந்தம்  இல்லாதவரை  தாக்கி  கொன்ற  புலிகேசியா இல்லை ,  ஸ்கெட்ச்  கருப்பு  பணம்  வச்சிருக்குற பணக்காரனுக்குன்னு நினைச்சியா  இல்ல ,சேகரு , இந்த  ஸ்கெட்ச்  உன்  பாக்கெட்ல  இருக்குற  பணத்துக்கத்தான்ன்னு  சொல்ற  அசால்ட்  சேதுவா  அதுதான்  புரிய வில்லை 

வியாழன், 29 டிசம்பர், 2016

அழிந்து விடுமா அதிமுக ?



தமிழக அரசியல் இயக்கங்கள் ஒரு  தலைவரை முன்னிறுத்தி  களம் கண்டாலும், அரசியல் இயக்கம் என்பது  ஒரு தலைவர் மட்டும்  அல்ல .
எப்படி  ஒரு அரசு  செயல்படுகிறதோ  அதே போல அரசியல் இயக்கமும்  செயல்படுகிறது . கிளை கழகம் , ஒன்றிய ,நகர கழகம், மாநில  நிர்வாகிகள், அது போல  சார்ந்த அமைப்புகள் ஆன மாணவர் அணி, இளைஞர் அணி,வழக்கறிஞர்  அணி  என்று பல்வேறு  பிரிவுகளை  உள்ளடக்கியது . தலைவர்கள் முன்னிறுத்தபட்டாலும் ஒவ்வரு கிளை கழகம் முதல் அணைத்து  நிர்வாகிகள் முன்னெடுத்து செல்வதன் மூலம் மட்டுமே ஆதரவு நிலை வாக்குகளாக  மாற்றபடுகிறது. தொண்டர்கள் தான்  இயக்கம் .

தமிழகத்தில்  திமுக ,அதிமுக வை  தவிர  எந்த கட்சிக்கும்  தமிழகம் முழுவதும் உள்ள  அனைத்து வாக்கு சாவடியில் முகவர் ஆக  கூட ஆள் கிடையாது. அதனால் தான் தலைவர் தோன்றினாலும்  வாக்கு வாங்க முடிவதில்லை.

அதிமுக ,திமுக வும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது போல்  தோன்றினாலும் 1977 முதல்  சட்ட பேரவை  தேர்தல்களை கணக்கில் எடுத்தால் 7-2 என்ற  நிலையில்  அதிமுக  முன்னணி வகிக்கின்றது.இன்றும்  இந்தியா வின்  மூன்றாவது பெரிய கட்சி.

அம்மா  அவர்கள்  மறைந்து விட்டார்கள்?

  கட்சி உடைய வேண்டும்  என்று எதிர்பார்த்தார்கள், உடையவில்லை ,இப்போது அதிகாரத்திற்காகவும் , பணத்திற்காகவும் ஒன்றாக உள்ளனர் என்று குற்றம் சுமத்துகிறார்கள் .
இவர்களு பயந்து 
குடும்பம்  , இளமை , கனவு , எதிர்காலம் எல்லாவற்றையும்  இரண்டாம் பட்ச்சமாக்கி  இயக்கமே பிரதானம் என்னும் லட்சியத்துடன் வாழும் லட்சக்கணக்கான தொண்டர்கள்           இருக்கிறார்கள் அவர்கள்  கனவை சிதைக்க முடியுமா ? 
இல்லை தங்களுக்கு பிறகு நூறாண்டுகள் இயக்கம் நிலைக்க வேண்டும் என்று நினைத்த அம்மா மற்றும் தலைவரின் கனவைதான் சிதைக்க வேண்டுமா?

அம்மா உடல்நிலையை பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து பெற்று தந்த  ஆட்சியை , அவரது  லட்சியங்களையும் ,வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பயன்படுத்தாமல் தூக்கி ஏறியத்தான் முடியுமா ? 

ஒற்றுமையுடன்  நின்று,வாழ்க்கையை  அம்மாவிற்காக  தியாகம்  செய்தவரை  கழகத்தின் புதிய   பொது செயலாளர் ஆக  தேர்தெடுத்து விட்டார்கள். கழகத்தின்  கடைசி கட்ட தொண்டன் வரை கட்டுக்கோப்புடன் தான்  இருக்கிறான்.  போன தேர்தலில் கடைசி வரை அதிமுக வை  தோற்கடிக்க நினைத்த ஊடகங்கள் தான் எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

1 தொண்டர்களுக்கு   கிடைக்க கூடிய உயர்வு. திமுகவில்  நான்  ஆறாம் வகுப்பு படித்த போது  சட்ட மன்ற  உறுப்பினராக இருந்தவரே எனது மகன் ஆறாம் வகுப்பும்  படிக்கும் இப்போதும் சட்ட மன்ற உறுப்பினர் ,மற்றும் மாவட்ட கழக செயலாளர். ஆனால்  அதிமுக வில்  தொண்டனும்  தலைவன்  ஆகும் சாத்தியம் .

2. திமுக வை யும்  இதர  மதவாத , சாதிய  இயக்கங்களையும்  தடுக்கும் சக்தி  அதிமுக விற்கு மட்டும் உள்ளது என்னும் மக்கள்  நம்பிக்கை .

3. எத்தனை வழக்குகள் ,அச்சுறுதல்கள் இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் காவேரி பிரச்சினை ,முல்லை பெரியார் , ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்/மாநில நலனை அதிமுக தலைமை  விட்டு கொடுக்காது   என்ற நம்பிக்கை.

4. அடித்தட்டு மக்களை  சென்றடையும்  மக்கள் நல திட்டங்கள் .

5. அதிமுக  ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் கட்சி உறுப்பினர்கள் தலையிட மாட்டார்கள் , சிறப்பான  சட்ட ஒழுங்கு இருக்கும்  என்னும் நம்பிக்கை 

6,  தவறு செய்தால் பாராபட்சம் இல்லாமல் தண்டிக்கும் தலைமை 

7. மற்றும்  தேர்தல் வாக்குறுதிகள் , விஷன்  2023. 

இவற்றை எல்லாம் முன்னெடுத்து புதிய பொது செயலாளரும் , தமிழக முதல்வரும் செயல்படுவார்கள் .அப்படி செயல்பட்டால்  அதிமுக. என்னும்  இயக்கம்  இன்னும்  நூறாண்டுகள் வாழும் .

தலைவர்கள் மறையலாம் , ஆனால் கொள்கைகள்,செயல்  திட்டங்கள் முன்னெடுக்கபடும் போது புதிய  தலைவர்கள்  தோன்றுவார்கள்.





புதன், 28 டிசம்பர், 2016

விஜய் யின் சினிமா வெற்றியும் ,அதிமுகவின் அரசியல் வெற்றியும்

1992ம் வருடம், அரவிந்த் ஸ்வாமி,பிரசாந்த்,போன்ற ஆணழகர்கள்   தான் தமிழகத்தின் எதிர்கால  ஸ்டார்கள் என்று எதிர்பார்த்து  இருந்த  நேரம் , ஒரு  பிரபல  இயக்குனர்  தனது மகனை  நடிகராக  அறிமுக படுத்துகிறார்.
 மாநிறமான  முகம் ,மக்களிடம்  எந்த  எதிர்பார்ப்பும்  இல்லை .பிரபல வார பத்திரிக்கை இவரை எல்லாம் யார் நடிக்க சொன்னார்கள் என்று எழுதியது. சிலருக்கு  காரணம் இல்லாமல்  அவர் மீது  வெறுப்பு. மனம் தளராத அந்த  இளைஞர் தனது  முயற்சியை தொடர்ந்தார்  ஏறத்தாழ  3 ஆண்டுகள்  அவருக்கான  நேரம் அமைந்தது.இரண்டு  படங்கள்அவரது வாழக்கையை  புரட்டி  போட்டது .20 ஆண்டுகளுக்கு பிறகு  அவர் தமிழ்  சினிமாவின் வசூல்  சாதனையாளராகவும்,லட்சக்கணக்கான ரசிகர்களின் நாயகனாகவும் விளங்குகிறார்.அன்று விமர்சித்தவர்கள் இன்று வாயே திறக்க முடியவில்லை.




அந்த  நாயகன்  தான் திரு  விஜய் அவர்கள், அந்த  இரண்டு  படங்கள் பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை .எந்த  வித எதிர்பார்ப்பும் இல்லாமல் , தேவையற்ற வெறுப்பையும் பொருட்படுத்தாமல் , முயற்சியில் மனம் தளராதால் அவர் இன்று திரைத்துறையில்   உயரத்தை  அடைந்துள்ளார்.

அதே போல் அண்ணா  திமுகவின் எதிர்கால தலைமை யார் ஏற்றாலும் , கட்சி அழிந்து விட வில்லையே என்ற   எரிச்சலையும்  , வெறுப்பையும் எதிரிகள் காட்டுவார்கள். ஒரு  திரை பிரபலம் இல்லாத ஒருவரிடம் மக்களின்   பெரிய  எதிர்பார்பும்  இல்லை ஆனாலும் 4.5 ஆண்டுகள் ஒரு சிறந்த ஆட்சியை  கொடுப்பதன்  மூலம் மக்கள் சக்தியை  எளிதில் பெற  முடியும்.

பிறப்பால்  ஆன  தலைவர்களை  விட உழைப்பால் ஆன  தலைவர்கள் சாதித்தது  அதிகம்.


திங்கள், 26 டிசம்பர், 2016

2016 A முதல் Z வரை ஒரு பார்வை

2016 முடியப் போகிறது.. A முதல் Z வரை
A- Amma RIP,  Ashwin all-rounder ,Apollo.
B-Banglore Violence, Brathwhite six, BMK Rip.
C-Chinnama Raised , Cyrus mystry ouster, Cho
D- Donald trump win, Demonetisation, Dangal
E- Exit of Britain, Emphalming.
F- Fidel castro died
G-George Michael died, Google pixel phone
H-Hilary lost,  Helicopter scam
I-  Income Tax raids, ISIS,
J-JIO,  Jallikattu ban, Junglebook
K-kalaignar returns,  kabadi worldcup, karunnair. Kabali
L-Lionel messi reentry
M-Mohammed Ali , Martin crowe, Mamta back
N- Note-7 fire, Nayanthara no1.
O-OPS CM Again,  Olympics
P- Pokemon go,  PV sindhu, pathankot
Q-Que in ATM
R- Raghuram rajan exit, Rammohan rao,
S- Surgical strike,Syria unrest, sultan
T- tamilnadu assembly election,  Tata troubles
U- Uri attack,Urjit patel.
V- Vardah cyclone,  Virat kohli sucess
W- Womens glory in Olympics
X- XXX3 Deepika padukone
Y-Yahoo sold
Z- Zsazsa gobar died, Zakir naik      நீங்களும் இதில் விட்டதை பதிவு செய்யலாம்

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

டெல்டா மாவட்டம் - ஒரு ஜிவ மரண போராட்டம்

டெல்டா ஒரு ஜீவ மரணப் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறது.. மீடியாவில் பெரிய அளவில் செய்தி இல்லை... வரலாற்றில் மிக மோசமான வட கிழக்கு பருவ மழை.. ஏற்கனவே பாதியான சம்பா சாகுபடி , இப்பொழுது நட்ட பயிர்களை காபாற்ற  நிலத்தடி நீரை கொண்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.. இன்னும் 2 வாரத்துக்குள் ஒரு நல்ல மழை பெய்தால் டெல்டா பயிர்கள் தப்பிக்கும்., இல்லாவிட்டால் கடனை வாங்கி நட்ட சம்பா பயிர்கள் அனைத்தும் கருகும்...                

   அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் தகுந்த உதவிகள்  செய்ய வேண்டும்.. முதல்வர் பிரதமரின் சந்திப்பின் போது வலியுறுத்துவார் என்றும் பிரதமர் தகுந்த உதவிகள் செய்வார் என்றும் நினைக்கிறேன்..                                                                                           . தமிழக ஊடகங்கள் அப்பல்லோ, காவிரி மருத்துவமனையை கவர் செய்வதை போல டெல்டா  நிலமையை கவர் செய்து பிரச்சினையின் திவிரத்தை உணர செய்ய வேண்டும்...

அரிசி விளையாவிட்டால் என்ன. பணம் இருக்கிறது ,வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று விவசாயி என்னும் உற்பத்தியாளனை கொன்று விடாதிர்கள்...

உற்பத்தியாளனை கொன்று , பெரு நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலை செய்வது தான் சுகம் என்ற மனநிலைமையை  மேலும் மேலும் ஊக்குவிக்க வேண்டாம்..