வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மறக்கபடும் மனிதர்கள்



நீண்ட உறக்கத்தில் இருந்து  தீடிரென எழுந்தேன்.மணி 7:00 ,உறக்கத்தில் இருந்த மனைவி, குழந்தைகளை எழுப்பாமல் அலுவலகம் கிளம்ப தீர்மானித்தேன்.காலண்டர் டிசம்பர் 23 ,2019 காட்டியது .குழந்தைகள் யாரோ மூன்று மாத தேதியை  கிழித்து  விட்டனர் போல.

அலுவலகத்தை அடைந்தேன் . எனது  இருக்கையில் யாரோ ஒரு  கண்ணாடி அணிந்த  என்னை  விட  5 வயது  சிறிய  இளைஞன் அமர்ந்திருந்தான். நண்பர்கள் யாரும்  என்னோடு பேச முற்படவில்லை.நானும் அமைதியாக இருந்து  என்ன  வித்தியாசமாக நடக்கிறது என்று கவனிக்க  ஆரம்பித்தேன்.

எனது பாஸ் வந்தார், அவனிடம்  நேற்றைய பணிகளை  கேட்டறிந்தார். நான் இல்லாமல் பணிகள் எதுவும் நடக்காது என்று கூறும் பாஸ் , அவனிடம் முன்பை விட பணிகள் சிறப்பாக நடப்பதாக கூறியது ஆச்சரியமாக இருந்தது.அலுவலகத்தில்  என்னோடு உணவருந்தும் எனது நெருங்கிய நண்பர்கள் பலர் அவனோடு எப்போதும் போல அதே மகிழ்ச்சியுடன் உணவருந்தினர்.

சரி  மாலையில் என்னோடு கிரிக்கெட் விளையாடும் நண்பர்களை சந்திக்கலாம்  என்று போனால், அங்கு நான் விளையாடும் ஓப்பனிங் பொசிஸனில் கருப்பாக என்னை  விட உயரம் குறைவான ஒருவன் விளையாடினான், என்னை விட அவன் நன்றாக விளையாடியது எனக்கே தெரிந்தது. நான் இல்லாமல் எனது அணி எளிதில் வெற்றி பெற்றது. எப்போதும் போல் வெற்றி மகிழ்ச்சியில் நண்பர்கள்.

முகநூல்  பக்கம் சென்று பார்த்தால் புதிதாக ஒரு சின்ன பையன் கதை , ஜோக்  எல்லாம் எழுதி இருந்தான் .எனக்கு வழக்கமாக லைக்  போட்டு பாராட்டும் முகநூல் நண்பர்கள் அனைவரும் அவனுக்கும்  லைக் போட்டு  பாராட்டி இருந்தனர்.. உறவினர், நண்பர் whatsapp குரூப்களில் எப்போதும் போல் அரட்டை , வாக்குவாதங்கள் நீண்டு கொண்டு இருந்தது

நான்  சில நிமிடங்கள் " Every Where Iam  completely replaced , How ? என்று யோசித்து கொண்டு இருந்து பிறகு இரவாகி விட்டது என்று வீட்டை நோக்கி சென்றேன் ..கதவு திறந்து இருந்தது .

என்னுடைய  மகள் " அப்பா இன்னைக்கும்  ஊர்லேந்து வர மாட்டாரா?  கேட்கிறாள். கண்ணீரை துடைத்து கொண்டு " இல்லம்மா, அடுத்த வாரம்  வருவார் " என்று சொல்கிறாள் மனைவி.

எனது புகைப்படத்துக்கு முன்பு விளக்கேற்றி வைக்கப்பட்டு இருந்தது . புகைப்படத்தின் கீழ் " தோற்றம்..10.10.1982..மறைவு 18.09.2019 என்று எழுதபட்டு இருந்தது..

என்னது  நான்  இறந்து மூன்று மாதம் ஆகி விட்டதா என்று திடுக்கிட்டு கத்தினேன்...
என்னங்க நடுராத்திரில கத்துறீங்க ? என்று மனைவி கேட்ட போது அனந்த கண்ணீருடன் கனவா ?என்று  கட்டியணைத்து " Now I know the priorities in life? என்றவாறு மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தேன்.
(Inspired by stories &  events)