Tuesday, 19 September 2017

அடிமைத்தனம் சுகமானது ,

அடிமைத்தனம் சுகமானது ,
முடிவெடுக்க  வேண்டிய  பிரச்சினை  இல்லை ..
முடிவுகளின் விளைவுகளை  பற்றி  சிந்திக்க  வேண்டியதில்லை .
யாருக்கும்   வழிகாட்ட  வேண்டியது  இல்லை .
எதிர்காலத்தை  பற்றி  பற்றி  பெரிதாக யோசிக்க  வேண்டியது  இல்லை.எல்லாவற்றையும் மேலே இருப்பவர் பார்த்து கொள்வார் என்று விட்டு விடலாம்
கட்டளைக்கு  அடிபணிவதே  ஒரே பணி .
பொருளாதார வளர்ச்சிக்கு  வாய்ப்பு இல்லை  என்று தெரிந்தால் ,   வாய்ப்புள்ள தலைமைக்கு விசுவாசத்தை   மாற்றி விடலாம்.
பிறர் நலம் பற்றி சிந்திக்க வேண்டாம் ..
வெற்றி ,தோல்வியின் பெரிய  பாதிப்பு இல்லை ..

தலைவனாக  இருப்பதுதான்   தலைவலி.

இந்த  கட்டுரை இன்றைய  ஆட்சியாளர்களை பற்றியது  அல்ல .. சுய  தொழில் செய்ய  பயந்து பெரும் நிறுவனர்களில் கடை நிலை  வேலையில் பொழுதை கழிப்பவருக்கானது மட்டும் என்று சொன்னால்  நம்ப வேண்டும் .

இப்போது இன்னொரு முறை படியுங்கள் ...

Thursday, 14 September 2017

சுந்தர் பிச்சைக்கு வேற வேலை இல்லையா ?

சுந்தர் பிச்சை  ஒரு  அமெரிக்க தனியார் நிறுவனத்தின்  தலைமை  செயல்  அதிகாரி.   Facebook ல  பாத்தா  அவரு  என்னமோ  தமிழ்நாடு  எதிர்க்கட்சி  தலைவர் மாதிரி தெரிகிறார் .                                               ஜல்லிக்கட்டு ,நீட், ஊழல்  அரசியல் ,எல்லா  கருத்தையும்  போட்டு கீழ சுந்தர்  பிச்சை ன்னு  போட்டர்ரானுங்க .

அவருக்கு  ஆயிரம்  வேலை  இருக்கும் , இத  விட்டுட்டு தமிழ்நாடு நிகழ்வுகளுக்கு  கருத்து  தெரிவிச்சிட்டு  இருப்பாரா..
இதே  மாதிரிதான்  ஒரு க்ரூப்  எதாவது  தத்துவம்  எழுதி அப்துல் காலம் னு போட்டுட்டு இருந்தாங்க ...

தம்பி  கருத்த  நீங்களே  சொல்லுங்க  இதுக்கு  எதுக்கு  சுந்தர் பிச்சை அப்துல்கலாம் ன்னு அவங்கள இழுக்கிறீங்க ..
Tuesday, 12 September 2017

சசிகலா இல்லாத அதிமுக

அவருக்கு  அப்போது  29 வயது .காலம்  இரண்டு  வாய்ப்புகளை  முன்  வைத்தது.

வாய்ப்பு -1,
 ஒரு  அரசு  உயர்  அதிகாரியின் மனைவியாக , கணவருடன், குழந்தை குட்டிகள் பெற்று நிம்மதியான  ஒரு  உயர்  நடுத்தர  வாழ்க்கை ..

வாய்ப்பு -2
இன்னொன்று , உயிர்  தோழிக்காக  போராட்டங்களை  சந்தித்து , எண்ணற்ற துரோகிகளையும் , எதிரிகளையும் எதிர்  கொண்டு , தோழியின் லட்சியங்களையே , தனது  லட்சியமாக  கொண்டு , அவரது  அரசியல்  உயர்வையே தனது உயர்வாக  கொண்டு , உயிர் தோழியின் உடல்  நலம்  மற்றும்  மன  நலத்தையும்  காப்பாற்ற ,கணவர் , குடும்பம் ,குழுந்தைகள் அனைத்தையும்  தோழிக்காக தியாகம்  செய்ய  வேண்டிய  வாழ்க்கை.

இவர்  தேர்ந்து எடுத்தது  இரண்டாவதை.

தேர்ந்தெடுத்தது  மட்டும்  இல்லாமல்  33 ஆண்டுகள் பக்கம் நின்று ,மறைந்த  பிறகு கடைசி காரியங்கள் வரை  செய்தவர்.

எத்தனையோ  வழக்குகள் , சிறை  வாசம் , அப்ரூவர்   ஆகி  இருந்தால் அத்தனையிலும்  தப்பித்து  விடலாம்  என்ற  ஆசை  வார்த்தைகள் அத்தனையும்  தாண்டி  அந்த ஒற்றை  பெண்மணியின்  பக்க  துணையாக  நின்றார்.

எத்தனை   சாதாரண குடும்பத்தில் இருந்தவர்களை , ஜெயலலிதா  முன்  நிறுத்தி  பதவிகளை  வாங்கி  கொடுத்து  இருப்பார் . தவறு செய்த எத்தனை பேர்  ஜெயலலிதாவின்  கோபத்திற்கு  பயந்து , முன்  நிற்க  பயந்து இந்த அம்மாவிடம் சென்று காலில்  விழுந்து  காப்பாற்றுமாறு கெஞ்சி , இவரும் அம்மாவிடம் நல்ல  முறையில் சொல்லி  காப்பாற்றி  இருப்பார்.

கூட்டணி  கட்சி  தலைவர்களை  கேளுங்கள் ,  எத்தனை முறை  ஜெயலலிதாவிடம்  பேசினார்கள், எத்தனை  முறை  சசிகலாவிடம்  பேசினார்கள்  என்று ?  .பெரும்பாலும்  பேசி  முடித்து  , ஜெயலலிதாவிடம்   ஒரு தகவல்  மட்டும்   கூறி  அனுமதி  வாங்குவார்கள் ...

இன்று  வேண்டுமானால்  நீங்கள்  அண்ணா  திமுகவில்  இருந்து  நீக்கலாம் .. ஆனால்  நாளை  அதிமுக  வரலாற்றை  எழுதும்  போது , ஜெயலலிதா  என்ற  ஆளுமையின்  வெற்றியை  இந்த  பெண்மணியின்   தியாகத்தை   ஒதுக்கி எழுத முடியாது .
Thursday, 7 September 2017

நீட் விலக்கு போராட்டங்கள் -நியாயமா ?

பாஜக  நண்பர்  :- ( நக்கலாக)  அனிதா மறைவுக்கு பிறகு, தமிழ்நாட்ல  எங்க பாத்தாலும் நீட் ,நீட் , ஆர்ட்ஸ் ,சயின்ஸ்  படிக்கிற  பசங்க  எல்லாம்   strike  பன்றாங்க , ஆட்டோ  டிரைவர் , பொட்டி கடைக்காரர்  எல்லாம்  நீட்  விலக்கு பத்தி பேசறாங்க ...எல்லாரும்  இனிமே  படிச்சு  டாக்டராக  போறாங்களா  என்ன ?

இன்னொரு  நண்பர்  :- நான்  கூட  முப்படைகளில்  எதிலும்  வேலை  பார்க்கவில்லை , அதுக்குக்காக  இந்தியா  பாகிஸ்தான்  யுத்தம்  வந்தால்  எனக்கு என்ன என்று  இருக்கட்டுமா  இல்லை, இந்தியனாக சப்போர்ட் செய்யணுமா  ?
இது எல்லாம்  தங்களின்  உணர்வையும் ,கோபத்தையும்   வெளிப்படுத்தும்  தருணங்கள் , நீங்கள்  உணர்வுகளை  புரிந்து  கொள்ளுங்கள் , அதை  விடுத்து டாக்டராக போறார்களா என்று  நக்கல்  அடிக்கும்  வரை  தமிழகத்தில்  நீங்கள்   வளர  முடியாது .


Wednesday, 30 August 2017

மும்பை பெருமழை - உணர்த்தும் உண்மைகள்உண்மை -1  :- ஒவ்வரு  பெருமழையும் அது  அமெரிக்காவின்  ஹூஸ்டன்  நகராகட்டும் , இந்தியாவில்  மும்பை , சென்னை  போன்ற  நகரங்களாகட்டும் , என்னத்தான்  அறிவியல் , முன்னேற்றம்  என்று  பெருமை  கொண்டாலும்  இயற்கைக்கு  முன்பு  இன்றும்  மனிதன்  மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை  உணர்த்துகிறது .

உண்மை-2    ஓலா ,உபேர்  போன்ற  நிறுவனங்களில்  நிறைய  பகுதி  நேரம் மற்றும்  தொழில் முறை  இல்லாத  ஓட்டுனர்கள்   உள்ளனர். இது  போன்ற  பேரிடர்  சமயங்களில்  கைவிட்டு  விடுகிறன்றனர். வாடகையும் 3 மடங்கு  முதல்  10 மடங்கு  உயருகிறது . அப்போது  கை கொடுத்தவர்கள் கருப்பு , மஞ்சள் (காலா,பில்லி ) டாக்ஸி  வாகனங்களும் , ஓட்டுநர்களும்தான்..அரசனை  நம்பி  புருஷனை  கை விட்டது  போல் ஓலா , உபேர்  போன்ற  பெரு  நிறுவனங்களை  மட்டும்  நம்பி இவர்களை  முற்றிலும்  புறக்கணிக்காமல்  இவர்களின் (existence ) இருப்பையும்  உறுதி  செய்ய வேண்டும் .

உண்மை-4 :- எப்போதும்  விமர்சிக்கப்படும் மாநகர  பேருந்து  சேவை (BEST ) பெருமழையில் கைவிடவில்லை . கடுமையாக  பணியாற்றி ஓரளவு மக்களை வீட்டை  அடைய  செய்ததும்  இவர்கள் தான் . சில பேரிடர்  தருணங்களில்  அரசு  சேவை என்பது  கைவிடாது என்பதை  மனதில் பதித்தார்கள் .

உண்மை -5 :- கடும்மழையிலும் அசுரத்தனமான  உழைப்பை  நல்கிய  மும்பை  காவல்துறையும் பாராட்டத்தக்கது. இவர்கள் இல்லாவிட்டால் இன்னும் நிலைமை  மோசமாக  ஆகி  இருக்கும்.

உண்மை-6 :- KFC ,PIZAA  HUT ,MCdonalds போன்ற   ஒரு  துளி உணவை கூட தரவில்லை. ஆனால்  தெருவோர  வியாபாரிகள் வடபாவ் , இட்லி போன்றவற்றை இலவசமாக  தந்தனர் ..

உண்மை-7 :- ஹூஸ்டன்  போன்ற  முன்னேறிய  நாடுகளில் பேரிடரை  பயன்படுத்தி  கொள்ளைபடிப்பதை தடுக்க இரவு  நேர  ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது என்ற  செய்தி  வந்தது.
 மும்பையில்  விமான  நிலையத்துக்கு  அருகில்  இருக்கும்  சேரி  பகுதிகள். பெரும்பாலான செல்வந்தர்கள்  மற்றும்  உயர்  நடுத்தர  மக்கள்   இந்த  சேரிகளினால் மும்பை  அழகு குறைகிறது  என்று வருத்தமும்  அடைவார்கள்.
 ஆனால்  மும்பை பெருமழையில் ,  விமான  நிலையம்  அருகில்  இருக்கும்  சாலைகளில் இவர்களின் வாகனங்கள் பல  மணி  நேர போக்குவரத்து  நெரிசலில் சிக்கி நகர முடியாத நிலையில்  இந்த   குடிசைவாசிகள் தான்  பிஸ்கட்  ,டீ போன்றவை  இலவசமாக  வழங்கி பசி ,தாகம்  தீர்த்தனர்.இது  வளர்ந்து  வரும்  நாடுகளின்  ஏழை மக்களின்  மனிதம்  இன்னும்  நீர்த்து  விடவில்லை  உணர்த்திக்கிறது.

இயற்கை பேரிடர்கள்  நம்மில்  உள்ள  மனிதத்தை உணர  வைக்கின்றது.Tuesday, 29 August 2017

என்ன செய்தது திராவிடம் ?


திராவிட கட்சிகள்  என்ன  செய்தது  தமிழகத்துக்கு ? தமிழக  பாஜக  கேள்வி.

திராவிடன் :- உங்கள்  அகில  இந்திய  தலைவர்களின்  சிலரின்  பெயர்களை  கூறுங்கள்  பார்ப்போம் ?

பக்த் :-  நரேந்திர "மோதி ", அமித் "ஷா" , வெங்கையா "நாயுடு ", சுஷ்மா "ஸ்வராஜ் "

திராவிடன் :- உங்கள்  மாநில  தலைவர்கள்  சிலரின்   பெயர்களை  கூறுங்கள்  பார்ப்போம் ?

பக்த் :- தமிழிசை , பொன். ராதாகிருஷ்ணன் , இல.கணேசன் .

இதுதான்  திராவிடத்தின்  சாதனை. தமிழிசை  நாடார் , பொன்ராதாகிருஷ்னன் நாடார், இல  கணேசன்  அய்யர்  ஆகாமல் ..

பொதுவெளியில்  ஜாதி  பெயரை  கூறுவது ஒரு  அநாகரீகம் என்ற            சிந்தனையை  தமிழகத்தில்  உருவாக்கியது  திராவிட கட்சிகளே.

அன்புடன்
 மக்கள்  என்  பக்கம்


Monday, 21 August 2017

இப்ப தெரியுது உங்களை எல்லாம் என் இப்டி நடுத்துனாங்கன்னு?

டிசம்பர் மாதம் ,அம்மா  இறந்து  16 ம் நாள், நீங்கள்  அனைவரும்  இணைந்து  சசிகலாவிடம்  நீங்கள்  , நல்லவரா , கெட்டவரோ ?, அம்மாவுடன்  33 ஆண்டுகள்  இருந்து  கழக  நிர்வாகத்தையும் , அம்மாவையும் கவனித்து  கொண்டு  இருந்திர்கள் ,இப்போது  அம்மா  இறந்து  விட்டார்கள் , நாங்கள்  ஒன்றிணைத்து  கழகத்தை  பார்த்து  கொள்கின்றோம் . எங்களுக்கு  பொது  செயலாளர்  யாரும்  தேவை  இல்லை , நாங்கள்  வழிகாட்டுதல்  குழு  அமைத்து  கட்சியை  பார்த்து  கொள்கிறோம்  என்று  கூறி  விலக்கி  வைத்து  இருந்தால் நீங்களும்  மானஸ்தர்கள் , ஒருவேளை  உங்களின் ஒற்றுமையை  பார்த்து  சசிகலாவே விலகி  இருந்து  இருப்பார் ..

ஆனால்  நீங்கள்  என்ன  செய்திர்கள் , மாவட்டம்  வாரியாக  தீர்மானம்  போட்டு  அம்மா  காப்பாத்துங்க , அம்மா  காப்பாத்துங்க என்று  போயஸ்  வீட்டில் முன்பு  அலறினீர்கள் ..

ஒவ்வருவரும்  கட்சியில் அடுத்தவர்  கை  ஓங்கி  விடக்கூடாது  என்று பொது  செயலாளர்  ஆகுங்கள்  என்று  கூறினீர்கள் . தீர்மானம்  இயற்றி    ஏற்று  கொள்ளுமாறு  கெஞ்சினீர்கள் .

பிறகு  ஒவொரு  அமைச்சராக  ஓபிஸ் டம்  சென்று கட்சி , ஆட்சி  ஒருவரிடம்  இருக்க  வேண்டும் என்று  அவரையும்  பதவி  விலக  வைத்தீர்கள் ..
ஒபிஸ்  பிரிந்த  போது  எல்லாரும்  அவர்கூட  போய்  அவரை  ஆதரித்து  இருக்கலாம் ..அதுவும்  செய்யல . அப்பவும்  அந்த  அம்மா  ஜெயிலுக்கு  போறதுக்கு  முன்னாடி  உங்களை  முதலமைச்சர்  ஆகவும்  ,அமைச்சர்  ஆக்கியும் சென்றார்கள் ..

அப்போது  எல்லாம்  சுய  புத்தி  இல்லாமல்  செய்திர்களா  ? இல்லை  இப்போதுதான்   டெல்லியில்  இருந்து  புத்தி  வாங்கி  வந்திர்களா ?

சும்மா  இருந்த  தேரை  இழுத்து தெருவில்  விட்ட  மாதிரி , வீட்டில் இருந்த  அந்த  அம்மாவை  கூட்டி  வந்து  பொது  செயலாளர் , முதல்வர்  ஆக்குகிறேன்  என்று சொல்லி ஜெயிலுக்கு  அனுப்பி.. இப்ப சசிகலா  யாரு ?தினகரன்  யாரு ன்னு  கேக்குறீங்க ??

உலக  நடிப்புடா  சாமி ? 
அப்ப  கூட  ஜெயலலிதா அம்மா ஏன்  இந்த  மந்திரி , கழக  நிர்வாகிகளை  அடிக்கடி  மாத்ரங்க ? காலிலேயே  விழுந்து  இருக்குமாறு வைத்து   இருந்தார்கள் என்று யோசிச்சேன் .... இப்ப  தெரியுது    உங்களை  எல்லாம்  என் இப்டி  நடுத்துனாங்கன்னு?