செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சசிகலா யார் ?

அவரே  ஆளுநர் ,
அவரே   மத்திய  சுகாதார  துறை  அமைச்சர் ,
அவரே  மத்திய உள்துறை  அமைச்சர் ,
அவரே  மாநில  தலைமை  செயலர் ,
அவரே  பொறுப்பு முதல்வர் ,
அவரே மாநில  சுகாதார துறை  அமைச்சர் ,
அவரே  மத்திய குற்றப்பிரிவு போலீஸ்,
 அவரே  இன்டெலிஜென்ஸ் ,
அவரே  மத்திய அமைச்சர் ,
அவரே  மாநில  சுகாதார  துறை  செயலர் .
அவரே  எய்ம்ஸ்  மருத்துவர் .
அவரே  அப்பலோ  நிர்வாகம் ,
அவரே  இந்திய  தேசம்  முழுதும் நிர்வகிக்கும் பிரதமர் .
அவரே  தமிழக அமைச்சரவை ,
 அவரே  z + பாதுகாப்பிற்கும் பொறுப்பு?
அவரே  சிங்கப்பூர் மற்றும் லண்டன்மருத்துவர்களின் பொறுப்பாளர் ?  

யார் இவர் ?


அவர்தான்   முன்னாள்  முதலமைச்சரின்  தோழி ,   சசிகலா  அம்மையார்.

அவர்  இத்தனை  அமைப்பிற்கும் பொறுப்பாக  இருந்தால் மட்டும் தான் அவரை  முதல்வரின் மரணத்திற்கு காரணம் என்று  சொல்ல  முடியும் . இவரிடம்  இத்தனை  அமைப்புகளும்  மண்டியிடுமா என்று  யோசிக்க  வேண்டும்?   அதனால்  அவருக்கு  என்ன  லாபம்? 

அவர்  செய்த  ஒரே  பாவம்  தன்னுடைய  உயிர்  தோழியின் (privacy )  அந்தரங்க  உரிமை  காப்பற்றபட  வேண்டும்  என்று  நினைத்துதான். மீடியாவிற்கு முதல்வர் உடல் நிலையை   லைவ் ரிலே மற்றும்  வீடியோ ,புகை படங்களை தந்து    TRP   ஏற்றமால் விட்டது தான் .







புதிய இந்தியாவின் பெற்றவர் யார் ?

இன்று மாதம்  ஒருமுறை  ஏகப்பட்ட  விளம்பரங்களுடன் "புதிய இந்தியா " பிறந்து விட்டது  என்று  கூறும்  பிரதமருக்கு  முன்னாள் , உண்மையில்  சத்தம்  இல்லாமல்  புதிய  இந்தியாவை உருவாக்க காரணமாக  இருந்தவர் மறைந்த  பாரத  பிரதமர் திரு நரசிம்மராவ்... அன்னிய  செலாவணி  பற்றாக்குறைக்கு   தங்கத்தை  அடகு வைத்த  தேசத்தில்  இருந்து , ஒரு  வலுவான பொருளாதார தேசமாக  உருவாக  காரணம் ஆனவர்.
இன்று அசுர  பலத்துடன் இருந்து  கொண்டு  பாஜக  சாதிக்க  முடியாததை , ஒரு  மைனாரிட்டி  அரசாங்கத்தை வைத்து  கொண்டு  சாதித்தவர். ஒரு சில  குற்றசாட்டுகள்   இருந்தாலும்  உண்மையில் புதிய  இந்தியாவின்  சிற்பி  இவர்தான் ..இன்றும்  சத்தம்  இல்லாமல்  சாதிக்க  முடியும்  என்பவர்களுக்கு உதாரணம் .

வரலாறில் இவருக்கான  சரியான அங்கீகாரம்   அளிக்கப்படவில்லை . மேலும்   காங்கிரஸ்  இயக்கமும்  இவருக்கான அங்கீகாரத்தை  அளிக்கவில்லை . இவர்  5.5 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி  பெற்ற  நந்தியால்   தொகுதியில் இன்று காங்கிரஸ்  சில  நூறு  ஓட்டுக்கள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்ததே   காங்கிரசின்  பாவத்திற்கான  தண்டனை ..


வியாழன், 21 செப்டம்பர், 2017

தரமான வழக்கறிஞர்கள் இல்லை தமிழ்நாட்டில்

தரமான வழக்கறிஞர்கள் இல்லை தமிழ்நாட்டில் , ஏன் தினகரன் ,ஸ்டாலின் போன்ற திராவிட இயக்க  தலைவர்கள் MLA  தகுதி  இழப்பு  வழக்குகளுக்கு வட இந்திய  வழக்கறிஞர்களை வைத்து வாதாடுகிறார்கள்.தமிழக  சட்ட கல்லூரிகள் சரியில்லை, தமிழகத்தில் கல்வி  தரம்  இல்லை. நவோதயா பள்ளி வேண்டும், etc ,etc  -  எதிர் தரப்பு

தமிழக வழக்கறிஞர்கள் இந்திய  அளவில் எந்த  மாநில வழக்கறிஞர்களுக்கும்  குறைவானவர்கள் அல்ல ..தகுதி இழப்பு , சபாநாயகரின் அதிகாரம் போன்றவை அரசியலமைப்பு சட்டங்களின்  அடிப்படையை  கேள்வி கேட்கும்  வழக்குகளில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிறப்பாக கையாள்வதால் அவர்களை அணுக வேண்டியுள்ளது. சுப்ரீம் கோர்டடில் தமிழக வழக்கறிஞர்கள் ஓரளவு  இருந்தாலும்,  மிக பெரிய அளவில் இல்லாதது , நமது வழக்கறிஞர்கள் டெல்லியில் வசித்து , அங்கு பணிபுரிவதை சௌகரிய குறைவாக நினைப்பது தானே ஒளிய , திறமை குறைவு காரணம் இல்லை  என்று நினைக்கிறேன் .

எல்லா  பிரச்சனைக்கும் இறுதி முடிவு எடுக்க டெல்லி வந்து உச்ச நீதி மன்றத்தை அணுக வேண்டும்  என்ப பெரிய அநீதி . உச்ச நீதி மன்ற தென்னிந்திய கிளை சென்னையில் அமைப்பது தான் சரியான தீர்வாக  இருக்குமோ ஒழிய , கல்வி தரம் காரணம் இல்லை என்பது  எனது வாதம் .



செவ்வாய், 19 செப்டம்பர், 2017

அடிமைத்தனம் சுகமானது ,

அடிமைத்தனம் சுகமானது ,
முடிவெடுக்க  வேண்டிய  பிரச்சினை  இல்லை ..
முடிவுகளின் விளைவுகளை  பற்றி  சிந்திக்க  வேண்டியதில்லை .
யாருக்கும்   வழிகாட்ட  வேண்டியது  இல்லை .
எதிர்காலத்தை  பற்றி  பற்றி  பெரிதாக யோசிக்க  வேண்டியது  இல்லை.எல்லாவற்றையும் மேலே இருப்பவர் பார்த்து கொள்வார் என்று விட்டு விடலாம்
கட்டளைக்கு  அடிபணிவதே  ஒரே பணி .
பொருளாதார வளர்ச்சிக்கு  வாய்ப்பு இல்லை  என்று தெரிந்தால் ,   வாய்ப்புள்ள தலைமைக்கு விசுவாசத்தை   மாற்றி விடலாம்.
பிறர் நலம் பற்றி சிந்திக்க வேண்டாம் ..
வெற்றி ,தோல்வியின் பெரிய  பாதிப்பு இல்லை ..

தலைவனாக  இருப்பதுதான்   தலைவலி.

இந்த  கட்டுரை இன்றைய  ஆட்சியாளர்களை பற்றியது  அல்ல .. சுய  தொழில் செய்ய  பயந்து பெரும் நிறுவனர்களில் கடை நிலை  வேலையில் பொழுதை கழிப்பவருக்கானது மட்டும் என்று சொன்னால்  நம்ப வேண்டும் .

இப்போது இன்னொரு முறை படியுங்கள் ...

வியாழன், 14 செப்டம்பர், 2017

சுந்தர் பிச்சைக்கு வேற வேலை இல்லையா ?

சுந்தர் பிச்சை  ஒரு  அமெரிக்க தனியார் நிறுவனத்தின்  தலைமை  செயல்  அதிகாரி.   Facebook ல  பாத்தா  அவரு  என்னமோ  தமிழ்நாடு  எதிர்க்கட்சி  தலைவர் மாதிரி தெரிகிறார் .                                               ஜல்லிக்கட்டு ,நீட், ஊழல்  அரசியல் ,எல்லா  கருத்தையும்  போட்டு கீழ சுந்தர்  பிச்சை ன்னு  போட்டர்ரானுங்க .

அவருக்கு  ஆயிரம்  வேலை  இருக்கும் , இத  விட்டுட்டு தமிழ்நாடு நிகழ்வுகளுக்கு  கருத்து  தெரிவிச்சிட்டு  இருப்பாரா..
இதே  மாதிரிதான்  ஒரு க்ரூப்  எதாவது  தத்துவம்  எழுதி அப்துல் காலம் னு போட்டுட்டு இருந்தாங்க ...

தம்பி  கருத்த  நீங்களே  சொல்லுங்க  இதுக்கு  எதுக்கு  சுந்தர் பிச்சை அப்துல்கலாம் ன்னு அவங்கள இழுக்கிறீங்க ..




செவ்வாய், 12 செப்டம்பர், 2017

சசிகலா இல்லாத அதிமுக

அவருக்கு  அப்போது  29 வயது .காலம்  இரண்டு  வாய்ப்புகளை  முன்  வைத்தது.

வாய்ப்பு -1,
 ஒரு  அரசு  உயர்  அதிகாரியின் மனைவியாக , கணவருடன், குழந்தை குட்டிகள் பெற்று நிம்மதியான  ஒரு  உயர்  நடுத்தர  வாழ்க்கை ..

வாய்ப்பு -2
இன்னொன்று , உயிர்  தோழிக்காக  போராட்டங்களை  சந்தித்து , எண்ணற்ற துரோகிகளையும் , எதிரிகளையும் எதிர்  கொண்டு , தோழியின் லட்சியங்களையே , தனது  லட்சியமாக  கொண்டு , அவரது  அரசியல்  உயர்வையே தனது உயர்வாக  கொண்டு , உயிர் தோழியின் உடல்  நலம்  மற்றும்  மன  நலத்தையும்  காப்பாற்ற ,கணவர் , குடும்பம் ,குழுந்தைகள் அனைத்தையும்  தோழிக்காக தியாகம்  செய்ய  வேண்டிய  வாழ்க்கை.

இவர்  தேர்ந்து எடுத்தது  இரண்டாவதை.

தேர்ந்தெடுத்தது  மட்டும்  இல்லாமல்  33 ஆண்டுகள் பக்கம் நின்று ,மறைந்த  பிறகு கடைசி காரியங்கள் வரை  செய்தவர்.

எத்தனையோ  வழக்குகள் , சிறை  வாசம் , அப்ரூவர்   ஆகி  இருந்தால் அத்தனையிலும்  தப்பித்து  விடலாம்  என்ற  ஆசை  வார்த்தைகள் அத்தனையும்  தாண்டி  அந்த ஒற்றை  பெண்மணியின்  பக்க  துணையாக  நின்றார்.

எத்தனை   சாதாரண குடும்பத்தில் இருந்தவர்களை , ஜெயலலிதா  முன்  நிறுத்தி  பதவிகளை  வாங்கி  கொடுத்து  இருப்பார் . தவறு செய்த எத்தனை பேர்  ஜெயலலிதாவின்  கோபத்திற்கு  பயந்து , முன்  நிற்க  பயந்து இந்த அம்மாவிடம் சென்று காலில்  விழுந்து  காப்பாற்றுமாறு கெஞ்சி , இவரும் அம்மாவிடம் நல்ல  முறையில் சொல்லி  காப்பாற்றி  இருப்பார்.

கூட்டணி  கட்சி  தலைவர்களை  கேளுங்கள் ,  எத்தனை முறை  ஜெயலலிதாவிடம்  பேசினார்கள், எத்தனை  முறை  சசிகலாவிடம்  பேசினார்கள்  என்று ?  .பெரும்பாலும்  பேசி  முடித்து  , ஜெயலலிதாவிடம்   ஒரு தகவல்  மட்டும்   கூறி  அனுமதி  வாங்குவார்கள் ...

இன்று  வேண்டுமானால்  நீங்கள்  அண்ணா  திமுகவில்  இருந்து  நீக்கலாம் .. ஆனால்  நாளை  அதிமுக  வரலாற்றை  எழுதும்  போது , ஜெயலலிதா  என்ற  ஆளுமையின்  வெற்றியை  இந்த  பெண்மணியின்   தியாகத்தை   ஒதுக்கி எழுத முடியாது .








வியாழன், 7 செப்டம்பர், 2017

நீட் விலக்கு போராட்டங்கள் -நியாயமா ?

பாஜக  நண்பர்  :- ( நக்கலாக)  அனிதா மறைவுக்கு பிறகு, தமிழ்நாட்ல  எங்க பாத்தாலும் நீட் ,நீட் , ஆர்ட்ஸ் ,சயின்ஸ்  படிக்கிற  பசங்க  எல்லாம்   strike  பன்றாங்க , ஆட்டோ  டிரைவர் , பொட்டி கடைக்காரர்  எல்லாம்  நீட்  விலக்கு பத்தி பேசறாங்க ...எல்லாரும்  இனிமே  படிச்சு  டாக்டராக  போறாங்களா  என்ன ?

இன்னொரு  நண்பர்  :- நான்  கூட  முப்படைகளில்  எதிலும்  வேலை  பார்க்கவில்லை , அதுக்குக்காக  இந்தியா  பாகிஸ்தான்  யுத்தம்  வந்தால்  எனக்கு என்ன என்று  இருக்கட்டுமா  இல்லை, இந்தியனாக சப்போர்ட் செய்யணுமா  ?
இது எல்லாம்  தங்களின்  உணர்வையும் ,கோபத்தையும்   வெளிப்படுத்தும்  தருணங்கள் , நீங்கள்  உணர்வுகளை  புரிந்து  கொள்ளுங்கள் , அதை  விடுத்து டாக்டராக போறார்களா என்று  நக்கல்  அடிக்கும்  வரை  தமிழகத்தில்  நீங்கள்   வளர  முடியாது .