Tuesday, 25 October 2016

கடவுளின் FACEBOOK ப்ரொபைல் பிக்ச்சரும் , இளைஞனின் வருத்தமும்

இன்றைய  தலைமுறை இளைஞன்  ஒருவன் கடவுளின்  பெயரால்  நடக்கும்  வன்முறை  மற்றும்  உயிர் பலிகளால்   கடவுள்  மீது  மிகுந்த  வருத்தத்தில்  இருந்தான். கடவுள் உலகத்தை  இன்னும் நனறாக வைத்து  இருக்கலாமே  என்றும்  தோன்றியது.

ஒருநாள் அவனுக்கு  முன்பு  கடவுள் தோன்றினார் . உடனே கடவுளிடம் " என் உங்களது   பெயரால்  இவ்வளவு வன்முறை , உயிர்பலி .   மனிதர்களுக்கு உங்களால் நன்மையை  போதித்து நல்வழிப்படுத்த முடியவில்லையா" என்று  கேட்டான்.

கடவுள்  அதற்கு " மகனே  ." நீ  உனது  FACEBOOK  ப்ரொபைல் பிக்ச்சரை  மாற்றினால் அதற்கு  எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ்  கிடைக்கிறது  என்று  கேட்டார்  . அதற்கு  இளைஞன்  " பல   நூறு லைக்ஸ்   மற்றும்  கமெண்ட்ஸ் " .
கடவுள் " அதுவே நீ  ஒரு  கருத்து  பதிவு  செய்தால்  எத்தனை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கிடைக்கிறது  என்று  கேட்டார் . அதற்கு  இளைஞன்  " பத்து ,பதினைந்து லைக்ஸ் மற்றும்  கமெண்ட்ஸ் .

கடவுள்  " இதையேதான் உனது முன்னோர்களும்  செய்தனர். நான்  சொன்ன  கருத்துக்களை  எல்லாம்  விட்டு   விட்டு , எனது பெயரையும் , ப்ரொபைல் பிட்ச்சரையும் மட்டும்  வைத்து இருக்கிறார்கள் இதற்கு நான்  எவ்வாறு  பொறுப்பேற்க  முடியும் என்று கேட்டார்.

இளைஞன்  அதற்கு  பிறகு  கடவுள் மீது  வருத்த படுவதை  விட்டு விட்டான் .

கடவுள் நம்மளை  காப்பாற்றுவார் , கடவுளை  நாம்  காப்பற்ற வேண்டாம் . அவருக்காக நாம் வன்முறையில்  ஈடுபட வேண்டுமா?


Wednesday, 19 October 2016

திரைப்படங்களை எதிர்க்கும் போராட்டங்கள் -நகைச்சுவை பதிவு


நீண்ட  காலமாக நீங்கள்  அரசியலில்  இருக்கிறீர்கள் , சிறு  இயக்கமோ ,  சிறு சாதி  சங்கமோ   நடத்தி  வருகிறீர்கள் ஆனாலும்  உங்களை உங்கள்  வட்டாரத்தை  தாண்டி  வெளியே தெரிய வில்லையா ?
உங்களுக்கு   திரைப்பட  எதிர்ப்பு  போராட்டங்கள்  கை  கொடுக்கும். 

1 . முதலில்  மீடியா , நீங்கள்  உங்கள்  ஊரின்  குடிநீருக்கோ , சாலை  வசதிக்கோ  போராடினால் , நான்காம்  பக்கத்தில்  2 பத்தியில்  செய்தி வெளி வரும்  திரைப்படத்திற்கு  எதிராக  போராடினால்  4 தொலைக்காட்சி  கேமரா  நேரடி  ஒளிபரப்பு.4 தொலைக்காட்சி  விவாதங்களில்   பங்கேற்க அழைப்பு , முதல்  பக்கத்தில்  செய்தி. இதை  விட வேற  என்ன  வேண்டும்?  சும்மா  காவேரி  போராட்டத்துக்கு  நீங்க  கூப்பிட்டால்   கூட  வராதவன்  எல்லாம்  சினிமா  போராட்டத்துக்கு  வந்து  விடுவான் .

2.. எப்படி  எல்லாம்  சினிமாவை  வம்புக்கு   இழுக்கலாம் .
    1.  இந்த  நாட்டுகாரன் நடித்து  உள்ளான் .அந்த  மாநில  நடிகன், நடிகை  நடித்து  உள்ளார்கள். 
    2. இந்த  மாநில  மொழி படம் , அந்த  மாநிலத்தோட  நமக்கு  வாய்க்கால் தகராறு 
    3.  எனது ஜாதிக்கு எதிரான படம் , எனது  சாமி யை  தவறாக  காண்பிக்கிறார்கள் 
   4. பெண்களுக்கு  எதிரான  படம். 
   5. அந்த நடிகர்  போன மாதம் தப்பா  பேசினார் . அவருக்காக  படத்தை எதிர்ப்போம் .
சென்சார்  என்று  ஒன்று  இருப்பதை  மறந்து  விட்டு  நாம  கத்திரி கோலை எடுத்து கொண்டு கிளம்ப  வேண்டும்.

3, எங்களுக்கு  காட்டி  விட்டுத்தான்  படத்தை  வெளியிட  வேண்டும் என்று சொல்லுங்கள் . எதுவம்  கிடைக்காட்டி அடலீஸ்ட்  பத்து  ஓசி  டிக்கெட்  படம்  வெளி வரும் முன்  கிடைக்கிறது என்று  சந்தோச பட்டு  கொள்ளலாமே.

4. பூஜை  ஆரம்பிக்கும்  போதோ , பட பிடிப்பு நடக்கும் போதோ  போராட்டம்  நடத்தி  விடாதீர்கள் . அப்போது  ஒரு  அறிக்கை மட்டும்  வெளியிட்டு அமைதியாய்  இருங்கள்.

5. இப்போ  எல்லாம்  ட்ரெயின் , பஸ் நிறுத்தி  போராடறது  அவுட் ஒப்பி பேஷன்  , சினிமா  தியேட்டர் முன்னாடயோ   அல்லது  flexboard , கட் அவுட் டையோ  கிழித்தால்  அதிகம்   விளம்பரம் பெறலாம் .

6. ஓரளவு  பிரபலமான  நடிகர்  படத்தையே  எதிர்க்க  வேண்டும் , சும்மா அறிமுக  நடிகர்  படத்தை  எதிர்த்தால் ஒருத்தனும்  சீண்ட மாட்டான்.

6. டிவி விவாதத்துக்கு  கூப்பிட்டால்  உணர்ச்சி  வசப்பட்டு  கெட்ட  வார்த்தையில்  திட்டி  விடுங்கள்  அப்றம் மன்னிப்பு கேட்டுக்கலாம்.

7. முடிந்தால்  திரைப்பட  தயாரிப்பாளர்களோட விளம்பரத்திற்காக  மறைமுக  ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். ஆனால்  இதில்  படம்  வெளியிடுவதற்கு  முன்  சமாதானம்  அடைந்து  விடுங்கள்.

8.  ரொம்ப  முக்கியமானது , யாரு  படத்துடைய  தயாரிப்பாளர் , விநியோக  உரிமை , ஒளிபரப்பு  உரிமை எல்லாம்  யாரு  வாங்கி  உள்ளார்கள் என்று  பார்த்து  போராடுங்கள் இல்லாவிட்டால் டின் கட்டி  விடுவார்கள் .
Tuesday, 18 October 2016

நகைச்சுவை:- மனைவியை சமாளிக்க முயன்றவரின் கதை?

பழங்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த, புகழ் பெற்ற  முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடம் மிகப் பெரிய மன்னர்களும் அறிவுரை கேட்டு செல்வார்கள். அப்பேர்பட்ட முனிவருக்கு ஒரு சிறிய கவலை இருந்தது. என்ன தான் செயற்கரிய செயலை செய்தாலும் அவரது மனைவி சிறு சிறு குறைகளை கண்டு பிடித்து விடுவார். சின்ன சின்ன சண்டைகளும் அதனால் வந்து கொண்டு இருந்தது. அவரது சக்திகள் அனைத்தும் மனைவி 2 சொட்டு கண்ணீர் முன்பு செயல் இழந்து விடும்.
ஒரு நாள் சரி கடவுளிடமே கேட்டு விடலாம் என்று முடிவெடுத்து கடவுளிடம் சென்று அவரிடம் ஆலோசனை கேட்பதற்கு வந்ததாக கூறினார்.  கடவுளும் இவரை வரவேற்று வரவேற்பரையில் அமர செய்து விட்டு அடுப்படி சென்று மனைவியிடம் உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்ல சென்றார்.
முனிவருக்கு கடவுளும், கடவுளின் மனைவியும் என்ன தான் பேசுகிறார்கள் என்று ஆர்வம் கொண்டு தன் சக்தியை பயன் படுத்தி கேட்க ஆரம்பித்தார்
கடவுளின் மனைவி " நீங்க இப்ப என்ன சாதிச்சுடிங்கன்னு உங்கள் ட இந்த முனிவர் ஆலோசனை கேட்க வந்து இருக்கிறார்"
இதை கேட்ட முனிவர் கடவுளுக்கே இப்படின்னா நாம எம்மாத்திரம்?  என்று முற்றும் தெளிந்தவராக நடையை கட்டினார்.

பின் குறிப்பு:-
இந்த கதை முழுவதும் கற்பனையே.. இது என்னுடைய, மற்றும் நமது நண்பர்கள் யாருடைய  வாழ்க்கை சம்பவங்களுக்கும் தொடர்பு கிடையாது.அப்படி எதுவும் உங்களுக்கு தோன்றினால் அதுக்கு யாரும் பொறுப்பல்ல.

Tuesday, 4 October 2016

காவிரி நீரும், கையாலாகாத மத்திய அரசும்

...

 கிராமத்தில் பரம்பரை சொத்தை  பங்கு பிரிக்கும் பொழுது வீம்பு பிடித்த  போக்கிரி சகோதரன் "உரிமைன்னு கேட்டின்னா ஒன்னும் தர முடியாது, வேனும்னா  என்னுட்ட வந்து கெஞ்சி கேளு நானா பாத்து போனா போகுதுன்னு எதாவது தருவேன்ன்னு " சொல்றான் .. பஞ்சாயத்துக்கு ஊர் பெரிய மனிதர்களிடம் சாதுவான மற்றொரு சகோதரன் போனா, ஊர் பெரியவர்கள் போக்கிரி சகோதரனுக்கு பயந்து " அவன் தான் நீ கெஞ்சி கேட்டா பரிதாபபட்டு எதாவது தருகிறேன்னு  சொல்றான்ல பேசாம நீ அவனிடமே போய் கெஞ்சு என்று அறிவுரை வழங்கினார்கள்... அதுதான் காவிரி பிரச்சனையில் தற்பொழது நடத்து கொண்டு இருக்கிறது கர்நாடக அரசியல்வாதிகளின் போக்கிரி தனத்திற்கு கையாலாகாத மத்திய அரசும் துணை போய் மீண்டும் தமிழகத்தை பேச்சு வார்த்தை பிச்சை எடுக்க சொல்கிறது  . . பேச்சுவார்த்தைக்கு  திரும்ப போனா மைசூர் பாக்கும்,மைசூர் போண்டாவும் வேணா கிடைக்கும் காவிரி நீர் கிடைக்காது...