Saturday, 30 April 2016

மனிதன் உதய நிதியின் ஊருக்கு உபதேசம்

மனிதன் உதய நிதியின் ஊருக்கு உபதேசம் 

இந்தியில் வெற்றி பெற்ற ஜாலி LLB படத்தின்  தமிழில் மறு ஆக்கம் செய்து உள்ளனர் .முடிந்த வரை நன்றாகவே எடுத்துள்ளனர்.

பலம் :-
வெற்றி பெற்ற மிக சிறந்த திரைக்கதை. ராதா ரவி மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பு அருமை அதுவும் ராதாராவி நீண்ட இடைவேளைக்கு பிறகு பின்றார் .
 பிரகாஷ் ராஜ் கொஞ்சம் எரிச்சல் வருகிற மாதிரி இருந்தாலும் அந்த வேடத்திற்கான தேவையை நிறைவு செய்த்துள்ளார் ,,
உதயநிதி மற்றும் ஹன்சிகா இருவரும் கடைசியாக நடித்து உள்ளனர் 

பலவீனம் :-
மிக  மெதுவான முதல் பாகம் . வசனங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் ..இழுத்து போர்த்தி கொண்டு வரும் ஹன்சிகா ..


திரைக்கதை  மட்டும் நடிபிற்காக பார்க்கலாம் ..


பிளாட்பார  மனிதர்களுக்காக உதயா நிதி நீதி கேட்டு உருக்கமாக பேசும் போது ..நமக்கு தான் தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பு ,தா  கி கொலை வழக்கு எல்லாம் வந்து தொலைகிறது ...
இந்த  வசனங்களை தனது அப்பா ,மற்றும் தாத்தாவிடம் பேசி பார்க்கலாம் ..


Friday, 29 April 2016

இன்றைய வாழ்க்கை.. அரசியல்

வாழ்க்கை இப்பெழுது நெருங்கியவர்களின் சாவு கூட வார இறுதியில் வந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு இயந்திரதனமாக ஆகிவிட்டது...

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக வை பிடித்து வாக்களிப்பவர்களை விட திமுகவை பிடிக்காமல் அதிமுகவுக்கும், அதிமுகவை பிடிக்காமல் திமுகவுக்கும், வாக்களிப்பவர்களே அதிகம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிப்பவர்களுக்கு சிறை தண்டனை
.. கருணாநிதி ... அப்டின்னா
மேடையில் இருப்பவர்களில் பாதி பேர் ஜெயிலில் தான் இருப்பார்கள் தலைவா

Thursday, 14 April 2016

தெறி - தெறிக்க விட்டார்களா ...இல்லை தெறித்து ஒட விட்டார்களா


மொத்தம்  10 கதைகள்  தான் இருக்கிறது, அதையே திரைக்கதையில் மாற்றி மாற்றி சொல்ல வேண்டும் என்பார்கள், அது  போல மௌன ராகத்தை திரை கதையால் மாற்றியமைத்து  வெற்றியடைந்த அட்லீ இந்த படத்தில் சத்ரியன் , என்னை அறிந்தால், படத்தை மாற்றி வெற்றி அடைந்து உள்ளார்.

பலம் :-
விஜய், ராதிகா ,சமந்தா பிளாஷ் பா(ச)க் காட்சிகள் , விஜய் மற்றும் நைநிகா வின் கெமிஸ்ட்ரி,மகேந்திரன் வித்தியாசமான வில்லத்தனம், ஹிட் ஆன பாடல்கள் .

பலவீனம் :-
ரொம்ப  பழைய  கதை, கடைசி 30 நிமிடங்கள், கடைசியில் வில்லன்கள்   பெரிதாக எதுவும் செய்ய முயற்சி கூட செய்யவில்லை .விஜயும் தான்.

தெறிக்க விடா விட்டாலும் , வேதாளம் மற்றும் புலி க்கு எவ்ளோ பரவா இல்லை ..
துப்பாக்கி ,கத்தி யுடன் compare செய்ய முடியாது 

சில கிளாஸ் காட்சிகள் உள்ள சாதாரண படம்.


Wednesday, 13 April 2016

தி மு கா வேட்பாளர் பட்டியல் - மாற்றமா ? ஏமாற்றமா ?

தி மு கா வேட்பாளர்  பட்டியல்  வெளியாகி விட்டது.பெரிய  அளவில்  மாற்றம் இருக்கும்  என எதிர்பார்க்க பட்டது .பல மாவட்ட செயலாளர் களுக்கு சீட் கிடையாது என்று எழுதி வாங்க பட்டதாக கூறினார்கள் ,ஆனால் வேட்பாளர் பட்டியலில் மீண்டும்  குறுநில மன்னர்களான நேரு,பொன் முடி, எ வா வேலு ,துரை  முருகன் , இ பெரிய சாமி மற்றும்  மகன், சுரேஷ்  ராஜன், வீரபாண்டி ராஜா ..அனைவருக்கும் சீட் வழங்க பட்டு உள்ளது ..

தான்  மட்டும்  வாரிசு  அரசியலில் ஈடுபடுவதாக குறை கூறி விட கூடாது என்பதற்காக  கருணாநிதி அனைத்து வாரிசுகளுக்கும்  சீட்  தந்து உள்ளார்.

 89,91,96,2001,2006,2011 வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களில் 30% தொடர்ந்து இடம் பெறுகின்றனர் , மேலும் 20%  அந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் வாரிசுகளாக இருகின்றனர்.தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஒருவரோ  அவரது குடும்பத்தினரோ வேட்பாளராக இருந்தால் மீதி தொண்டர்கள் எதுக்கு கட்சியில் இருக்கிறார்கள்  என்று தெரிய வில்லை ...

மாற்றத்தை தர போகிறோம் , சென்ற முறை  செய்த தவறுக்கு வருந்துகிறோம் என்று  நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலின்  கூறினார் .. வேட்பாளர் பட்டியலை பார்த்தால் தவறுக்கு வருந்திய மாதிரி தெரியவில்லை ..

30 வருடமாக  ஒரு வேட்பாளர்  பட்டியலில் கூட மாற்றத்தை தர முடியாதவர்கள் ..எத்தகைய மாற்றத்தை தர போகிறார்கள் ..

மாற்றம் ஒன்றே மாறாதது  என்று கூறுவார்கள் , தி  மு கா வை   பொருத்தவரை  மக்களின் ஏமாற்றம்   ஒன்றே மாறாதது
மாற்றமா ? ஏமாற்றமா 


2016 மே 19...யார் வெல்வார்கள் .. சதவித அலசல்

2016 மே 19...யார் வெல்வார்கள் ..  சதவித அலசல் ..

2014 பாராளுமன்ற தேர்தலில்  அதிமுக  37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது ..தி  மு கா  ஒரு இடம் கூட கிடைக்காமல் படு தோல்வி அடைந்தது ....முன்றாவது அணி  2 இடங்களை கைப்பற்றியது ...தமிழக மக்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு  ஒரு மாதிரியாகவும் சட்ட மன்ற தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும் வாக்களிப்பார்கள் என்பதால் அதை கருத்தில் கொள்ளாமல்  2011 மற்றும்  2006 தேர்தல்  சதவித வாக்குகளை மற்றும்  நாம் கருத்தில் கொள்வோம் ..
அதிமுக :-
2011 ஆண்டு தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியுடன்  சேர்ந்து ஏறத்தாழ 52% வாக்குகளை பெற்றது ..தேமுதிக வின் 6 சதவித வாக்குகளை கழித்து கம்யூனிஸ்ட் களின் 3 சதவித வாக்குகளை கழித்தாலும் ஏறதாழ 42 சதிவித வாக்குகளை பெற்று  உள்ளது ...திமுகா  ஆட்சியின் அதிருப்தி வாக்கு களையும் சேர்த்து
அதே போல்  2006 ஆண்டு ஏற தாழ 40 சதவித வாக்குகளை பெற்றது ..மதிமுக மற்றும் வி சி  கா வின் 4 முதல்  5 சதவித  வாக்கு வங்கியை கழித்தாலும் 35% வாக்குகளை பெற்று உள்ளது ..ஆட்சிக்கு எதிரான மன நிலைமையயும் மீறி இந்த அளவு  பெற்று  உள்ளது

திமுக :-
2011 தேர்தலில் 40 சதவித வாக்குகளை பெற்றது ...இவற்றில் காங்கிரஸ் ,பாமக மற்றும் வி சி கா  வின் வாக்குகளை  ஏறதாழ  9% முதல்  10% கழித்தால் 30% வாக்குகளை பெற்றுளதாக எடுத்து கொள்ளலாம்.
2006 தேர்தலில் ஏறதாழ 44 % வாக்குகளை பெற்றது , இதில் மீண்டும் காங்கிரஸ் மற்றும் பாமக மற்றும் கம்யூனிஸ்ட் களின் 12%  கழித்தால் 32% சதவித வாக்குகளை பெற்றுள்ளது
இந்த முறை பிரிந்து உள்ள காங்கிரஸ் 2% முதல்  3 %  வரை பெற்றாலும் தி  மு கா வால் 32% முதல் 34%  சத வாக்குகளை பெற முடியும்..

முன்றாவது  அணி :-
விஜயகாந்த் 6% முதல் 8% , வைகோ  2% முதல் 3% வரை , வி  சி கா 1% முதல்  2% , கம்யூனிஸ்ட் 2% , தா மா கா  1% முதல்  3%  வரை , ஆக  மொத்தம்  15% முதல் 18% வரை பெற முடியும் ..

பா மாகா :- 3% முதல் 6%  வரை , ப ஜ க 2% முதல் 3% வரை பெற முடியும் .

இதே நிலை நிடித்தால் அதிமுக  அணி 35%  முதல்  38% சதவிதம் வரையும், தி மு கா அணி 30 முதல்  32% வரையும் , முன்றாவது அணி 15 முதல் 18% வரையும்  பெற முடியும் ,என  தோன்றுகிறது ..
பெரிய  அளவில் அதிருப்தி அலை 2006 தேர்தல் போல் இல்லாமல் இருந்து, 5% முதல் 10%  அதிருப்தி  வாக்குகள் முன்றாக  பிரிந்தால் அ தி மு கா அணி வெற்றி பெற  வாய்பு இருப்பது போல் தோன்றுகிறது ...


Thursday, 7 April 2016

சந்திர குமார் கள் ..ஒன்றுக்கு பக்கத்தில் இருந்த மதிப்பு இல்லா பூஜ்யங்கள்


90 களின்  அதிமுக வின் ஆட்சியில்  கட்சியில்  போது , அப்போதைய  முதல் அமைச்சர் செல்வி  ஜெயலலிதா  மூத்த   அமைச்சர்களான  SDS ,RMV , போன்றவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக  "நான்  தான் ஒன்று... நீங்கள்  அனைவரும் பூஜ்யங்கள் ஒன்று பக்கத்தில் இருக்கும் வரைக்கும் தான் பூஜ்யத்திற்கு மதிப்பு...ஒன்று இல்லாவிட்டால் பூஜ்ஜியதிற்கு  மதிப்பு இல்லை என்று கூறினார்..
அப்பொழுது  கூட ஒன்றின் மதிப்பு கூட இருக்கும் புஜ்யங்களால் உயரும் ,குறையும்...
இப்போது தேமுதிக வில் இருந்து விலகி சென்றவர்கள் அந்த மதிப்பு கூட இல்லாத பூஜ்யங்கள் ..
எந்த வித பின்னணியும் இல்லாமல் விஜயகாந்தால் மட்டும் வெளியே தெரிய வைக்க பட்டவர்கள் .... இன்று  இவர்கள் வெளியேறி  இருப்பதால் எந்த  பாதிப்பும் அடையாது 

காணமல் போன தென்னம் தோப்பு....வடிவேலு காமெடி

காணமல் போகும்  தென்னம் தோப்பு..வடிவேலு  காமெடி
வடிவேலு ஒரு திரை படத்தில் தன்னுடைய கிணற்றை காணாம போனதாக காமெடி செய்வார் , அருமையான  கிணறு சார் , மக்கள் எல்லாம் நேத்து வரைக்கும் தண்ணி  எடுத்துகுட்டு இருந்தாங்க  .. இன்னக்கு காணாம் சார் என்பார் ...

அது மாதிரி  ஆகி விட்டது  திரு  வாசன் அவர்களின் நிலைமை ..

சார், நேத்து வரைக்கும்  ஒரு  தென்னம்  தோப்பு   வெச்ருந்தேன் சார்  ,,, நல்ல  தென்னம் தோப்பு  சார்  அது..  நெறைய  இளனி  கெடைச்சுது  சார் ..
இப்போ  அந்த தென்னம் தோப்பு   ரெட்டை இலைல  காணாம  போச்சு  சார்,
தென்னம் தோப்போட  கட்சியும்  அதிமுக வோட  கரைஞ்சு போச்சு சார்.. என்று சொல்லுவாரோ ....