வியாழன், 23 நவம்பர், 2017

அதிமுகவின் பி டீம் -பாஜக புலம்பல்

நமது  பாஜக  நண்பர்  ஒருவரை  நீண்ட  இடைவேளைக்கு  பிறகு  சந்தித்தோம் ..
என்னங்க  தமிழக ஆட்சி  உங்கள்  தயவில்தான் நடக்கிறது  என்கிறார்கள் , சந்தோஷம்தானே என்றதற்கு ..

மனிதர் பொங்கி தீர்த்து  விட்டார் ..

2014 தேர்தலில் திமுக , அதிமுக  இல்லாத  கூட்டணி  18 % சதவீத  வாக்குகள்  பெற்றது .. இது  ஒரு பெரிய  விஷயம் .. பாஜக  மட்டும்  5 முதல்  7% வாக்குகளை  பெரும்  கட்சியாக  உருவெடுத்தது. நடுத்தர மற்றும்   உயர்நடுத்தர  குடும்பத்தினர்  நன்மதிப்பை  பாஜக  பெற்றிருந்தது .

ஜெயலலிதா  மறைவுக்கு  பின்  அதிமுக  உள்கட்சி  விவகாரங்களில்  தலையிடாமல்  இருந்தால் , அதிருப்தி உருவாகி பலர்  பாஜக விற்கு  வந்து  இருப்பார்கள்  + திமுக  எதிர்ப்பு  வாக்குகள்  பாஜகவை  நோக்கி  வந்து  இருக்கும் , படிப்படியாக  15 முதல்  20 சதவீதம்  பெற்று  பெரிய  இயக்கமாக  வலுபெறுவதற்கான  வாய்ப்பும்  இருந்தது ..

ஆனால்  தேவை இல்லாமல்  அதிமுக உட்கட்சி  பஞ்சாயத்தில் இறங்கி ,   இப்போ  தீர்ப்பு  வர போகுது , தேர்தலை  தள்ளி  வைக்க  போகிறார்கள் , தகுதி நீக்கம்  செய்ய போறார்கள் என்று  எல்லாத்தையும் தமிழக  பாஜக  தலைவர்கள்  சொல்லி, OPS யை   அடிக்கடி  பிரதமரை  சந்திக்க  வைத்து  எல்லாவற்றிற்கும்  பின்னால்  பாஜக  இருக்கிறது  என்பதை  மக்களிடம்  கொண்டு சேர்த்தனர்.

இப்போ  இந்த  அரசு  செய்யும்  தவறுகளுக்கு , அதிமுக  அமைச்சருக்கு  முந்தி  முட்டு  கொடுக்கிறார்கள்  சில தமிழக பாஜக  தலைவர்கள்.  அதுவும்  சிலருக்கு  தமிழகத்தில் பாஜக  ஆட்சியை  விட  இந்த  ஆட்சியே  நீடித்தால்  வசதி  அதிகம்  என்று  நினைக்கிறார்கள். எனக்கு  என்னமோ  அவர்கள்  பிஜேபி -பி டீம்  மாதிரி  தெரியவில்லை , தமிழக பாஜக  தான் ஆள்வோரின் பி டீம்  ஆகி  விட்டது.

ஆள்பவரிடம்  இரட்டை  இலையை   கொடுத்தாலும் , இவர்களை நம்பி  கூட்டணி வைக்க முடியுமா ,பாஜக  சிறிது அதிகாரம் இழந்தால் சசிகலாவையே கை கழுவியவர்கள் , பாஜக வை எளிதில்  தூக்கி  எறிந்து விடுவார்கள்,

சொந்தமாக கட்சிக்கு  என்று   இருந்த  5% வாக்கு வங்கியையும்  நாங்கள்  இழந்து  கொண்டு  இருக்கிறோம்  என்பது  தான்  உண்மை.


அட  இவுரு  சொல்றதும்  சரிதான்  போல ... ..

அதிமுகவின் பி டீம் -பாஜக  புலம்பல்






புதன், 15 நவம்பர், 2017

மாநில உரிமை - மிரட்டி பணிய வைக்க முடியுமா ?

18ம் நூற்றாண்டு,  வெள்ளையர்களின்  ஆட்சிக்கு  எதிராக முதன் முதலாக வாள் உயர்த்திய  இனம்,

19 ம் நூற்றாண்டு,  குற்ற பரம்பரை சட்டத்தை கொண்டு அடக்கிய போது எதிர்த்து போராடிய இனம்,

20 ம் நூற்றாண்டு,  நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்துக்கு அழைத்த போது, "வெற்றி வேல், வீர வேல்  என்று முதலில் களத்தில்  நின்ற இனம்...

அவர்கள் ஒரு சாதிக்காக நிற்கவில்லை , தமிழுருக்காகவும் , ஒட்டு மொத்த இந்தியாவுக்காகவும  நின்றனர்.

அதே இன்றும்
 மாநில உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ,  அந்த  மண்ணில்    தோன்றிய   மாவீரர்கள் தோள் உயர்த்தினால்,  பொய் வழக்கு, வருமான வரித்துறை, சிறைச்சாலையை  காட்டி  பணிய வைக்க முடியுமா என்ன ?


அன்றும் , எட்டப்பர்கள்  அதிகாரத்திற்காகவும் , பணத்திற்காகவும்  காட்டி கொடுத்தனர் , வெள்ளையருக்கு  துணை நின்றனர் .

ஆனால் வரலாறு  அவர்களை  எல்லாம்  மறந்து  விட்டது. போராடியவரையே  நினைவில்  வைத்து  கொண்டது

அதே  போல்  நாளைய  வரலாறும்... எட்டப்பர்களை  புறம் தள்ளி , மாவீரர்களை  நினைவில்  கொள்ளும்.


புதன், 8 நவம்பர், 2017

பணமதிப்பிழப்பு காமெடி விருதுகள்

#பணமதிப்பிழப்புகாமெடிவிருதுகள்

ஓராண்டு  முடிவடைந்த  நிலையில் , சிறந்த  பங்களிப்பிற்காக பணமதிப்பிழப்பு  விருதுகள் அறிவிக்கப்பட்டு  உள்ளன.

சிறந்த வசனகர்த்தா & ஹீரோ  :-  பிரதமர் நரேந்திர மோடி .
 (கெட்டவர்களின்  கையில்  இருக்கும்  பணம்  வெறும்  காகிதம், மூன்று  மாதங்களில் புதிய இந்தியா பிறக்கும்  போன்ற உணர்ச்சிகரமான  வசனங்களுக்காக, அதை அறிமுக  காட்சியில் உணர்ச்சிகரமாக  பேசியதற்காக )

 சிறந்த  துணை நடிகர் :-   உர்ஜிட் படேல், சக்திகாந்த தாஸ்  (ஹீரோவிற்கு  உதவியாக  விளக்கமளித்த  காட்சிக்காக ).

சிறந்த OPENING  சீன்  :-  ஹீரோவின்  அறிமுக காட்சியில்   உணர்ச்சி  பொங்க  பேசி முடித்ததும் , ரஜினி, கமல், அனிருத், RJ பாலாஜி  போன்ற பொருளாதார  நிபுணர்கள்  வாழ்த்தி பாடும் புதிய  இந்தியா ஓப்பனிங்  சாங் ..

சிறந்த திருப்புமுனை  காட்சி :- புதிய  நோட்டுகள்  இதுவரை அச்சடிக்கப்படவில்லை  என்று  மக்களுக்கு  தெரிய  வரும்  காட்சியும், புதிய  நோட்டுக்கள் size  பழைய ATM ல்  வைக்க  முடியாது என்று  தெரியவரும்  காட்சியும் ..

சிறந்த க்ளைமாக்ஸ் :-   இறுதியில் ஒரு  சதவீதம்  கூட  கருப்பு பணம் பிடிபடவில்லை என்ற உண்மை தெரியும்  போது, தொடரும் என்று சொல்லி  "டிஜிட்டல் இந்தியா " என்னும்  இரண்டாம்   பாகத்தை நோக்கி  திசைதிருப்பி  படத்தை முடித்தது .

Best  Cameo ( சிறந்த  கேமியோ ) :- சேகர்  ரெட்டி, சிறு  காட்சி  என்றாலும் , கோடிகணக்கானவர்கள் கையில்  இருக்கும்  ஆயிரம், ஐநூறை மாற்ற வரிசையில் நின்ற போது , கெத்தாக 33 கோடியை  மாற்றிய  காட்சிக்காக .

சிறந்த  வசனம்  :- படம்  முழவுதும் மௌனமாக  இருந்தாலும்  கடைசியில் "monumental  Failure  " என்று முன்னாள்  பிரதமர் பேசும் ஒற்றை  வரி டயலாக்

சிறந்த  இயக்குனர்  விருது : நிதியமைச்சர்  ( படம்  தன்னுடையதாக  இருந்தாலும் , ஹீரோவை  பெர்போர்மன்ஸ் செய்யவிட்டு  பின்னணியில்  இருந்ததற்காக )

சிறந்த நவரச காட்சி :-  ஏராளமான  ATM  வரிசை  மரணங்களை பற்றி  கேள்வி  கேட்ட  பொழுது ,  எல்லையில்  ஏராளமானவர்கள் இறக்கிறார்கள் .ஒரு  சிறு கஷ்டத்தை  கூட தாங்க முடியாதா என்று  கேட்டு,சோகத்தையும்  சந்தோசமாக ஏற்று  கொள்ள  வைக்கும்  காட்சி.

சிறந்த  நகைச்சுவை  நடிகர் :-   திருவாளர்  பொதுஜனம் (பின்னணியில்  உள்ள  அரசியல்  புரியாமல் , தங்களை  ஒரு எல்லையில்  உள்ள  போர்  வீரன்  ரேஞ்சுக்கு  பீல்  பண்ணி  வரிசையில்  நின்று  ஏமாந்த காட்சிக்காக )

ஏதேனும்  விருதுகள்  விடுபட்டு  இருந்தால்  , நீங்களும்  வழங்குங்கள்.

#Demodisaster

திங்கள், 6 நவம்பர், 2017

ஒரு தலைவன் உருவாகிறான்


   கடந்த  வாரம், திரு  TTV  தினகரன்  பசும்பொன்  சென்ற பொழுதும், தஞ்சாவூர்  வருகையின்போதும் , மிக பிரமாண்டமான   கூட்டம்  கூடியது .அதிலும்  மிக  பெரும்பாலும் இளைஞர்கள்  18 முதல்  35 வயதுக்கு  உட்பட்டவர்கள். 40 வயதிற்கு  மேற்பட்டவர்களை  எண்ணி  விடலாம் . அப்படி  ஒரு ஆர்ப்பரிப்பு , ஒவ்வரு  இடத்தையும்  கடக்க  சில மணி நேரம் ஆனது.

காசு குடுத்து  கூட்டி  வந்தார்கள்  என்று  எளிதில் புறந்தள்ளி   விட முடியாது . காசு  கொடுத்து  வந்தவர்கள்  யாரும்  தங்களது  சொந்த  இரு  சக்கர  வாகனங்களில்  வந்து  ரோட்டின்  இருபுறமும் நின்று   ஆர்ப்பரிக்க  மாட்டார்கள்.  TTV  அருகில்  சென்று  புகைப்படம்  எடுக்க  துடிக்க மாட்டார்கள் ..

 TTV யையும்   சும்மா  சொல்ல  கூடாது, சளைக்காமல்  மனிதர்களை சந்திக்கிறார் . ஆயிரக்கணக்கில் இளைஞர்களுடன்   புகைப்படம்  எடுத்து கொள்கிறார் . 60-70 களில்  இருந்த புரட்சி  தலைவர்  போல்  எளியவர்கள் TTV யை  எளிதில்  அணுக  முடிகிறது . இரண்டு , மூன்று முறை  பார்த்தவர்களை  பெயர் சொல்லி  அழைக்கும் பழம்பெறும் தலைவர்களின் குணமும்  TTV  தினகரனிடம் உள்ளது.  துண்டு  சீட்டு , குறிப்புகள்  இல்லாமல்  மிக  பெரிய  கூட்டங்களில்  உரையாற்றுகிறார்.  பத்திரிகையாளர்களை  பதட்டம்  இல்லாமல்  வெகு  எளிதாக  கை  ஆளுகிறார் .



TTV க்கு  என  ஒரு கூட்டம்  உருவாகி  விட்டது .  டெல்டா மற்றும்  தென்  மாவட்டங்களில்  குறிப்பாக மிக  பெரிய  இளைஞர்  படை உருவாகி  விட்டது,   மேலும் ஒரு  மாற்றத்திற்கான வேகம் (momentum for  change  ) தெரிகிறது .

இனி இவர்கள்  முன்  இருக்கும்  சவால்கள்.

1, இந்த வேகத்தை  தேர்தல்  வரும்  வரை  தக்க  வைத்து  கொள்ள  வேண்டும் .
'
2, இந்த  ஆட்சியை  எவ்வளவு  விரைவில்  கலைக்க  முடியுமோ  அவ்வளவு  விரைவில்  கலைக்க  வேண்டும் .

3, எதிர்கொண்டு இருக்கும்  பொய் வழக்குகளை  முறியடிக்க  வேண்டும் .

4, ஒரு  ஜாதி  என்ற முத்திரை  விழுவதை எந்த  காலத்திலும்  அனுமதிக்க  கூடாது

5, ஜெயலலிதாவுக்கு என   விழும்  பெண்  வாக்காளர்களின்  வாக்குகளை   கவர  வேண்டும் .

6, இந்த  இளைஞர்  கூட்டம்   மக்களின்  பிரச்சனை  சார்ந்து  களப் பணி  ஆற்றிட  வேண்டும் .

இவற்றையெல்லாம்  செய்து  முடித்தால் , TTV ..என்னும்  தலைவனின்  பெயர்  அதிமுக  வரலாற்றில்  பொன்  எழுத்துக்களால் எழுதப்படும்.