புதன், 22 ஜூன், 2016

பிரதமரை பார்த்து உலகம் வியக்கிறதா ?

எத்தகைய நாடு இது என்று
 ..
 20 செயற்கை கோள்களுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தி  வெற்றி  அடைகிறது , மறுபக்கம் இந்தியாவின் பொருளாதார  தலைநகரமான மும்பையில்   2 சென்டி மீட்டர் மழை  பெய்ததால் 300 ரயில்கள் ரத்து  செயப்பட்டு , அன்றாட வாழ்க்கை  ஸ்தம்பிகிறது.
இவ்ளோ  திறைமைசாலிகள் இருந்தும் அடிப்படை வசதிகள்  பெரு நகரங்களிலும் இன்றும் பூர்த்தி  அடைய  வில்லை.

உலக  அரங்கில் இந்தியாவை தலை நிமிர  செய்வேன் என்ற மனிதர் எதாவுது செய்வார் பார்த்தால்  2000 கோடி க்கு அமெரிக்க அதிபரை போல் விமானம் வாங்குகிறார் .10 லட்சம்  ரூபாய்க்கு  சட்டை  போடுகிறார் ..இனிமேல்  இந்தியாவை பார்த்து  உலக  நாடுகள்  வியக்கும்  என்கிறார் .
 நீங்கள் அமெரிக்க  அதிபரை போல் வசதிகளை அனுபவியுங்கள்  ஆனால்  நீங்கள்  இந்திய குடிமகன்களுக்கு அமெரிக்க  குடிமகன் கள் போல் அல்ல  சாதாரண  அடிப்படை  வசதிகளை  பூர்த்தி  செய்து  விட்டு  அனுபவியுங்கள்.

கோடிக்கணக்கில்  செலவு  செய்து  யோகா  தினம்  கொண்டாடுகிறார். யோகா  நல்லது  தான் அதை சொல்ல எல்லா  அரசாங்க  நிகழ்ச்சி  தேவையா ?  பத்தாததுக்கு  சாமியார்க்கு  எல்லாம்  free  புபிளிசிட்டி  வேற ?

முன்னேறிய  நாடுகளின்  பிரதமர்கள்இன்றும்   சைக்கிளில் கூட  அலுவலகம்  செல்கிறார்கள் .  இந்திய  பிரதமரை பார்த்து  உலகம்   30 கோடி  மக்கள்  வறுமை  கோட்டில்  வாழும்  தேசத்தின்  தலைவர் இப்படி  எப்படி வீண்  செலவு  செய்கிறார்  என்றுதான்  வியக்கிறது  .

பிரதமரை  பார்த்து  உலகம்  வியக்கிறதா ?

4 கருத்துகள்:

  1. // முன்னேறிய நாடுகளின் பிரதமர்கள்இன்றும் சைக்கிளில் கூட அலுவலகம் செல்கிறார்கள் . //

    அப்படியா ! அது எந்த நாடு சார்?
    சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
  2. பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் சாதாரணமாக ரயிலில் பயணம் செய்கிறார் . சாதாரணமாக மக்களோடு மக்களாக கடை தெருவில் நடந்து சென்று பொருட்கள் வாங்கி வருகிறார். நம்ம பிரதமர் 2000 கோடி க்கு விமானம் வாங்குகிறார் .10 லட்சம் ரூபாய்க்கு சட்டை போடுகிறார். சூப்பர்!!! இந்தியா வல்லரசு ஆகிவிட்டது நம்புங்கப்பா !!!!

    M. செய்யது
    Dubai

    பதிலளிநீக்கு