வெள்ளி, 23 செப்டம்பர், 2016

இந்தி எதிர்ப்பு மொழிப் போர் .. சில நினைவுகள்

இந்திய அரசியலமைப்பு மன்றம் திசம்பர் 9, 1946ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மொழிகளைக் குறித்த விவாதம் இம்மன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசியலமைப்பை எந்த மொழியில் எழுதுவது, மன்றத்தின் நடவடிக்கைகள் நடத்தப்படவேண்டிய மொழி, புதிய குடியரசுக்கான “தேசியமொழி” போன்ற விஷயங்கள் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டன. ஒரு பக்கம் இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு ராய் சாஸ்திரி, ஆர்.வி. துலேகர், பாலகிருஷ்ண சர்மா, புருசோத்தம் தாஸ் டாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத் குகா (பீகார்), அரி வினாயக் படஸ்கர் (மும்பை), சேத் கோவிந்த் தாஸ் (மத்திய மாகாணம்) ஆகியோர் பல இந்தி ஆதரவு மசோதாக்களைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.[30][31] 10 திசம்பர் 1946 அன்று துலேகர் "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துஸ்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினார்.

நாம் வேண்டுகின்ற பலமான மைய அரசு, மிகத் தேவையான பலமிக்க மைய அரசு, அவ்வரசு பேசும் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்துவதாகவும் மாறுமோ என்று எங்களை அச்சமடையச் செய்கிறது. ஐயா அவர்களே, தென்னிந்தியாவில் ஏற்கெனவே பிரிவினை நாடும் சில சக்திகள் உள்ளன, அவர்களை எதிர்கொள்ள எனது மதிப்பிற்குரிய உத்திரப் பிரதேச நண்பர்கள் தங்களது கூடுதலான "இந்தி ஏகாதிபத்திய" நடவடிக்கைகளால் எந்த உதவியும் ஆற்றவில்லை என்பதை நான், தெற்கு வாழ் மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஆகவே எனது உத்திரப் பிரதேச நண்பர்கள் ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா, இந்தி-இந்தியா வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளட்டும்; தேர்வு அவர்களுடையது என்று பதிலுரைத்தார் TT கிருஷ்ணமாச்சாரி

நன்றி வீக்கிபிடியா தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக