புதன், 28 செப்டம்பர், 2016

டிவியும்,நானும் - 30 ஆண்டு கால பயணம்


இப்போது  ஜியோ மொபைல் 4ஜியில் 200க்கும் மேற்பட்ட  சேனல் களை பார்க்கும் பொழுது, 30 ஆண்டுகளுக்கு முன்பு டிவி நமக்கு  எவ்வளவு  ஒரு பெரிய விஷயமாக இருந்தது என்று யோசித்தபோது,


                                        Image result for 80s tv
                                                     


இந்தியாவில் டிவி  65களில் தொடங்கியதாக  சொல்லப்பட்டாலும், எங்கள் ஊருக்கு எல்லாம்  டிவி வர ஆரம்பித்தது 80களின்                            முற்பகுதியில் தான். முதன்  முதலாக நான் டிவியை  பார்த்தது  இந்திரா  காந்தி  சுட்டு  கொல்லபட்ட போது,  அவரது  இறுதி  சடங்கு  நிகழ்ச்சியை ஒளிபரப்பிய போது , ஊரில் உள்ள டாக்டர் ஒருவர் வீட்டில்  கண்ணீரும்  கம்பலையுமாக பார்த்தேன்.
 அப்போது  பெரும்பாலும்  கருப்பு  வெள்ளை  டிவிகள்தான்  இன்று  ஐ  போன்7 வைத்து  இருப்பது  போல  கலர் டிவி வைத்து  இருப்பவர்கள்  கருதபட்டனர். பள்ளிகளில்  டிவி  உள்ள வீட்டு  பிள்ளைகள்  பணக்கார வீட்டுபிள்ளைகள் ,டிவி இல்லாத வீட்டு பிள்ளைகள்  ஏழை இதுதான் 80களின் இறுதி வரை. டிவி ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்  .

டிவி கள் மின்சாரத்தை மிகஅதிகமாக இழுக்கும்  என்று கிராமத்து  வீடுகளில்இருந்தவர்கள் நம்பினார்கள்.  அதற்காகவே வெள்ளி  ஒளியும்,ஒலியும் நிகழ்ச்சிக்கு 50 காசும் , ஞாயிறு திரை படத்துக்கு  ஒரு  ரூபாயும்  பக்கத்து  வீட்டு குழந்தைகளிடம் வாங்கும் பழக்கமும்  ஒரு  சிலர் வீட்டில்  இருந்தது.அதே போல்  தொடர்ந்து  டிவி ஓடினால் ரிப்பேர் ஆகி விடும்  இன்று  2 மணி நேரத்துக்கு ஒரு முறை  நிறுத்தி  விசிறி  விட்டவர்களும்  இருந்தனர்.

அப்பறம்  அந்த  டிவி யை  பூட்ட  ஒரு  பெட்டி , இருந்தது ஒரு சேனல் , அதிலும்  முக்கால் வாசி  நேரம் ஹிந்தி  தான் . ஆனாலும் புள்ளைங்க டிவி நெறைய பாக்குது என்று  சொல்லி  பூட்டி  வைத்தனர் .  உண்மையில் அந்த பெட்டியும்   ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் போல.


BCCI இன்று  உலகின்பணக்கார விளையாட்டு அமைப்பாக  இருக்க  காரணம்  இந்த  டிவி பெட்டிதான் ..தூர்தர்ஷன்ல் நேரடி  ஒளிபரப்பு  பார்க்க  மன தைரியமும், கடவுள் அருளும்   வேண்டும் கடைசி ஓவர்  இருக்கும் போது தடங்கலுக்கு வருந்துவார்கள், அதுவும் இல்லாட்டி ,  இவர்கள்  செய்தி  வாசிக்காவிட்டால்  உலகம்  அழிந்து  விடுவது  மாதிரி போட்டியை ஒளிபரப்பாமல் வரதராஜனும், பாத்திமா பாபுவும் வந்து உயிரை  எடுப்பார்கள்.

டிவி பார்பதற்க்காகவே ஹிந்தி  கற்று  கொண்ட பெண்கள்  எங்கள்  உறவுகளில்  இருந்தனர். அவர்கள்தான்  சனி கிழமை  ஹிந்தி படங்களுக்கும் ,ராமாயணம் ,மஹாபாரதம் தொடருக்கும்  எங்களது மொழி  பெயர்ப்பாளர்கள். எனக்கு  அமிதாப்பச்சனை  தவிர  ராஜேஷ்  கண்ணா ,சசி கபூர்,ஷம்மி  போன்ற   ஹிந்தி  ஹீரோக்களும் ஒரே  மாதிரிதான்  தெரிந்தார்கள்.  ஞாயிறு மதியம்  விருது பெற்ற மாநில  மொழி  திரைப்படங்களில் தமிழ் மொழி வருவது ஜாக்பாட்  அடித்த  சந்தோஷம் .

Solidaire ,Dynora ,Onida போன்றவைதான்  மிக சிறந்த  டிவி பிராண்ட் . அதிலும்  மைக்ரோசாப்ட் மாதிரி solidaire   தான் .  ஒனிடா  மொட்டை  தலையன் கொஞ்சம்   ரொம்ப  பிரபலம்  ஆனான் . அப்றம்  கலர்  டிவி நிறைய  வர ஆரம்பித்த போது BPL,Videocon போன்றவையும்  பிரபலம்  ஆனது .

வாங்குனா கலர்  டிவி தான் வாங்கணும்  சொன்ன எங்க அப்பாவும் கடைசியில் 92இல்  ஒரு  கலர்  டிவி வாங்கி தந்தார்.  அன்றைக்கு  நாங்கள் அடைந்த  சந்தோசத்தின் அளவு, இன்றைக்கு எனக்கு  ஒரு கோடி  ரூபாயை  கையில் குடுத்தால் வருமா என்று  தெரியவில்லை. அந்த  டிவியும்  சச்சின்  டெண்டுல்கர் போல்  20 ஆண்டுகள் வேலை செய்து 2012ல்  தான் ரிட்டையர் ஆனது ஆனா போன வருஷம் வாங்குன ஸ்மார்ட் டிவி  இப்போ டிஸ்பிலே சரியா தெரிய மாட்டேங்குது.

அப்றம்  கேபிள் டிவி , சன் டிவி என பல  ஆச்சரியங்கள்  அப்றம்  ஆச்சர்யங்கள்  எல்லாம்   பழகி விட்டது  .

ஆனாலும் சின்ன  வயதில்  ஆச்சர்யத்தை  தந்ததாலோ என்னவோ இப்போதும் சில சமயம்  டிவி  நம்மை  மெய் மறந்து   பார்க்க வைத்து  மனைவியிடம் திட்டு  வாங்க  வைத்து விடுகிறது.










3 கருத்துகள்: