வெள்ளி, 5 மே, 2017

மோடிஜி தந்த அதிர்ச்சி ? - நகைச்சுவை கற்பனை

காலையில் எழுந்து பார்த்தால், எப்போதும்  வெளியில்  கிடக்கும்  பால் , மற்றும்  பேப்பர்ஐ  காணவில்லை ... பால்  மற்றும்  பேப்பர் போடுபவர்  வேலைக்கு  வரவில்லை .... சரி  நடந்து  போய் பால்  கடைக்கு  போனால்    பால்  விலை  நாளை  முதல்  லிட்டர் 500 ரூபாய்  என்று  அறிவிப்பு  வைத்து இருந்தார்கள் .

வீட்டுக்கு  திருப்பினால்  அபார்ட்மெண்ட்  வாசலில்  இருந்த  செக்யூரிட்டி யை  காணவில்லை . வீட்டில்  மனைவி  வீடு துடைக்க வரும்  அம்மா நாளை  வேலைக்கு  வர மாட்டார்களாம் அப்டியே  வரணும்னா  மாதம் 8000 ரூபாய்  வேண்டும்  என்று  கூறியதாக சொன்னாள் .

சரி  காரை  எடுத்து  ஆபீஸ் செல்வதற்கு  பெட்ரோல்  போட்டால்  லிட்டர் 750 ரூபாய்  என்று  10 லிட்டர்க்கு  7500 ரூபாய்  வாங்கினார்கள் .
காலையில் வீட்டில்  காபி   சாப்பிட்டவில்லை என்று  ஆபீஸ் கேன்டீனில்  காபி ஆர்டர் செய்தால்  500 ரூபாய்  பில் வந்தது .
வீட்டு  உரிமையாளர்  இந்த  மாதம்  முதல் வீட்டு  வாடகை 70,000 ரூபாய்  என்று  அதிர்ச்சி  அளித்தார் .

என்னடா  காலைலேந்து  அதிர்ச்சி  மேல் அதிர்ச்சியாக இருக்கிறதுன்னு   இணையதளத்தில் செய்திகளை   பாத்தா ..

நேற்றிரவு  வெளிநாட்டில்  உள்ள  கருப்பு  பணம்  முழுவதும் மீட்கப்பட்டு ஒவ்வரு இந்தியரின்  வங்கி  கணக்கிலும் 15 லட்சம் நமது இந்திய  பிரதமரால்  டெபாசிட் செய்யபட்டுள்ளது

என்று  தலைப்பு  செய்தி  வந்து  இருந்தது ....என்னடா  நமக்கு  வரலையேன்னு  பாத்தா
"  ஏற்கனவே  வருமான  வரி  செலுத்துபவர்களுக்கு  15 லட்சம்  கிடையாது  என்று  பெட்டி  செய்தி

என்ன  கொடுமை  இது ?  என்று  கத்திய  என்னை  பார்த்து மனைவி "  எப்ப  பாத்தாலும்  நியூஸ்  சேனல்  பாத்துட்டு , நடுராத்திரி  எதாவுது கனவு  கண்டு  கத்த  வேண்டியது " என்று  சொன்னாள் .

நல்லவேளை  கனவு  தானா  என்று  சந்தோச  பட்டேன் ....

புழக்கத்தில்  திடீரென  சில லட்சம்  கோடிகள்   வந்தால்,  விலைவாசி  எப்படி  உயரும் , திடீரென  இலவசமாக  கிடைக்கும்  பணம் மக்களை   எந்த  அளவு  சோம்பேறியாக்கும் ...இது  தெரியாம  வாக்குறுதி  அளிப்பவர்களையும் ,அதை  நம்பி வாக்களிப்பவர்களையும் என்ன  செய்வது?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக