புதன், 26 ஜூலை, 2017

நீட் ..சாதித்து இருக்குமா திமுக ?

நேற்றைய  புதிய  தலை முறை  நிகழ்ச்சியில்  நேர்பட பேசு  நிகழ்ச்சியில்  திமுக  சில  குற்றச்சாட்டுகளை  வைத்தது ..அதற்கான சில  விளக்கங்கள்

குற்றச்சாட்டு 1.  2011 க்கு  பிறகு  தமிழகத்தில்  கல்வி  தரம்  குறைந்து  உள்ளது . ... 2010 திமுக  அரசால்  சமசீர்  பாடதிட்டம்  அறிமுக  படுத்த  பட்டது ..அப்படியானால்  திமுக வால்  கொண்டு  வரப்பட்ட  சமசீர் கல்வி  முறை  தரமற்றது  என்கிறாரா  திமுக  உறுப்பினர் ..எந்த  ஒரு பாட  திட்டத்தையும்  சில  ஆண்டுகள் அமுல் படுத்தி  , அதன்  நன்மை , தீமைகளை  பரிசீலித்து , அதன்  பிறகே  மாற்றம்  கொண்டு  வர  முடியும் ..அதையே  இந்த  அரசு  செய்து  வருகிறது .

குற்றச்சாட்டு 2.  கலைஞர்  முதலமைச்சராக  இருந்தால் நீட்  தேர்வு  போன்ற  மாநில  நலன்  சார்ந்த  விஷயங்களை சாதித்து  இருப்பார் ... திமுகவுக்கு  காங்கிரஸ் கூட்டணி  கட்சி ..அப்போதே  மாநில  நலன் சார்ந்த  காவேரி  நடுவர்  நீதி  மன்ற  தீர்ப்பை  அரசிதழில்  வெளியிட  செய்ய  முடியவில்லை .. பாஜக  அதிமுகவின்  தோழமை  கட்சியோ  , கூட்டணி  கட்சியோ  அல்ல ..இன்று  பாஜக  அதிமுக  MP களின்  ஆதரவை  எதிர்பார்த்தும்  இருக்கவில்லை ..இந்த  நிலையில்  பாஜக வை  அனுசரித்து  நீட் போன்ற விஷயங்களில்  காரியம்  சாதித்து  கொள்வதே  புத்திசாலி  தனமான  அணுகுமுறை  ஆகும் ..


குற்றச்சாட்டு 3.  உச்சநீதிமன்றத்தை   மாநில  உரிமையில்  தலையிடுகிறது  என்று  அணுகவில்லை ..
பள்ளி  கல்வி  மாநிலங்களின்  பட்டியலிலும் , மருத்துவ மற்றும்  உயர்கல்வி பொது பட்டியலிலும்  வருகிறது.. பள்ளி  கல்வியின்  அதிகாரம்  12 ஆம்  வகுப்பு  தேர்ச்சி  முடிவுகளுடன் முடிவடைந்து  விடும் .மருத்துவ மாணவர் சேர்க்கை பொது பட்டியலுக்கான உரிமையில்  வருகிறது ..நாம்  இன்று மருத்துவ கல்விக்கான அனுமதியை  மாநில  பட்டியலில் வரும்  என்று கூறி , அதை  உறுதி  செய்ய  வேண்டும்  என்று  உச்ச  நீதி  மன்றத்தினை  அணுகினால்  எந்த  அளவு பயனளிக்கும் என்பது  கேள்விக்குறியே ..
மத்திய  அரசின் உதவியுடன் ஜல்லிக்கட்டு  போன்று  அவசர  சட்டம்  இயற்றி ஜனாதிபதி அனுமதி பெற்று , உச்ச  நீதி மன்றத்தில் முறையாக  விலக்கு  பெறுவதே  சரியாக  இருக்கும் .

நீட்  நிரந்தர  விலக்கு  பெற   வேண்டும்  என்பதே  புரட்சி  தலைவியின் கோரிக்கை  அதை  நோக்கியே  அதிமுக   அரசு  பயணிக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக