செவ்வாய், 12 டிசம்பர், 2017

80, 90 களில் வளர்ந்தவர்களின் நினைவுகளில் மட்டும்


நீண்ட இடைவேளைக்கு  பிறகு  ஒரு அரசியல் இல்லாத பதிவு..

இன்று கிட்டத்தட்ட  30 % மேற்பட்ட  திரைப்படங்கள்  திரைஅரங்கிலோ , தொலைக்காட்சியிலோ  பார்க்காமல் , மொபைல்  போன்  திரையில்  பார்க்கப்படுகிறது ...

YOU TUBE ,Hot star, Sun next, Amzon prime, Netflix..Tamilrockers ...ஏகப்பட்ட  வழிகள்  திரைப்படங்களை  பார்க்க...

80, 90 களில் திரை அரங்கின் நெரிசல்  இல்லாமல் வீட்டில்  அமர்ந்து  பார்க்க VCR ,VCP  வந்த  தருணங்களை  நினைத்து  பார்த்தால் ..

VCR  பெரும்பாலும்  வெளிநாட்டில்  இருந்து  இறக்குமதி  செய்யப்பட்டது.நடுத்தர  வர்க்கம் வாங்கும்  விலையும் அல்ல ..
கிட்டத்தட்ட  3 முதல்  4 மாத  சம்பளம்  அல்லது 40 முதல்  50 முட்டை  நெல்  விலை . எனவே  வாடகை  தான்  பெரும்பாலானவருக்கு ..

ஒரு  வார  இறுதியில் 12 மணி  நேர  வாடகை 200 வரை , கேசட்  வாடகை  தனி ,  வாடகைக்கு  வாங்கி வந்தால்  முரட்டுத்தனமாக 4 படங்களை  விடிய  விடிய தூங்காமல்  கடுமையாக பார்த்த  தருணங்களும்  உண்டு. டெக் (VCR  ) வாடகைக்கு  விடுதல்  ஒரு  தொழில் ..அதை  தூக்கி  கொண்டு  வந்து  போட்டு  காண்பித்து  செல்வதற்கு  ஒரு  ஆபரேட்டர்.அவருக்கு  போற  இடத்தில சாப்பாட்டு , ராஜ உபச்சாரம் தான் .. இவ்ளோ  கஷ்டப்பட்டு  எடுத்து  வந்து  பார்க்கும் படத்தின்  காஸெட்  சிக்கி கொண்டு  சிவராத்திரியான கதையும்  உண்டு.
  நல்லது , கெட்டது  நடக்கும்  வீடுகளில் , உறவினர்கள்   கூடி  பார்க்க  வாடகை  வீடியோ  என்பது  கலாச்சாரமாகவே  இருந்தது ..

அதே  போல் , இன்று  ஆயிரம்  ஆடியோ  பாடல்கள்  ஒரு  மொபைலில் .அன்று  ஒரு  காஸெட்  அதிக  பச்சம் 12 பாடல்கள் .. கம்பெனி காஸெட்  ரொம்ப  சிலரிடம் , பெரும்பாலும் பல  படத்தின் பாடல்களை ஒரு  காஸெட்டில்  பதிவு  செய்ய  ரெகார்டிங்  சென்டரே துணை. 
என்னென்ன பாடல்   என்பதை செலக்ட்  செய்ய  குடும்பத்தில்  விவாதம்  எல்லாம்  நடக்கும். இன்று  I Phone -8   என்ன  அன்று நல்ல  டேப்  ரெக்கார்டர்  ஸ்பீக்கர்  சிஸ்டம் +100 காஸெட்  வைத்து  இருக்கும்  நன்பர்கள்  எல்லாம்  செம்ம  கெத்து.

 வீடியோ  வாடகை , ஆடியோ ரெகார்டிங்  சென்டர் ,STD  பூத் ,வாடகை  சைக்கிள்   கடை , பொங்கல்  வாழ்த்து  கடை ,  போன்ற பல  தொழில்கள் இன்று காணவில்லை.ஆனாலும்  80, 90 களில்  வளர்ந்தவர்களின்   நினைவுகளில்  மட்டும் ...

தொழில்நூட்பத்தின் காரணமாக  வாழ்க்கை  இன்று  எளிதாகி  விட்டது ஆனாலும்  எதையோ  தொலைத்த  பீலிங் .....



1 கருத்து: