புதன், 13 ஏப்ரல், 2016

2016 மே 19...யார் வெல்வார்கள் .. சதவித அலசல்

2016 மே 19...யார் வெல்வார்கள் ..  சதவித அலசல் ..

2014 பாராளுமன்ற தேர்தலில்  அதிமுக  37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது ..தி  மு கா  ஒரு இடம் கூட கிடைக்காமல் படு தோல்வி அடைந்தது ....முன்றாவது அணி  2 இடங்களை கைப்பற்றியது ...தமிழக மக்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு  ஒரு மாதிரியாகவும் சட்ட மன்ற தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும் வாக்களிப்பார்கள் என்பதால் அதை கருத்தில் கொள்ளாமல்  2011 மற்றும்  2006 தேர்தல்  சதவித வாக்குகளை மற்றும்  நாம் கருத்தில் கொள்வோம் ..
அதிமுக :-
2011 ஆண்டு தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியுடன்  சேர்ந்து ஏறத்தாழ 52% வாக்குகளை பெற்றது ..தேமுதிக வின் 6 சதவித வாக்குகளை கழித்து கம்யூனிஸ்ட் களின் 3 சதவித வாக்குகளை கழித்தாலும் ஏறதாழ 42 சதிவித வாக்குகளை பெற்று  உள்ளது ...திமுகா  ஆட்சியின் அதிருப்தி வாக்கு களையும் சேர்த்து
அதே போல்  2006 ஆண்டு ஏற தாழ 40 சதவித வாக்குகளை பெற்றது ..மதிமுக மற்றும் வி சி  கா வின் 4 முதல்  5 சதவித  வாக்கு வங்கியை கழித்தாலும் 35% வாக்குகளை பெற்று உள்ளது ..ஆட்சிக்கு எதிரான மன நிலைமையயும் மீறி இந்த அளவு  பெற்று  உள்ளது

திமுக :-
2011 தேர்தலில் 40 சதவித வாக்குகளை பெற்றது ...இவற்றில் காங்கிரஸ் ,பாமக மற்றும் வி சி கா  வின் வாக்குகளை  ஏறதாழ  9% முதல்  10% கழித்தால் 30% வாக்குகளை பெற்றுளதாக எடுத்து கொள்ளலாம்.
2006 தேர்தலில் ஏறதாழ 44 % வாக்குகளை பெற்றது , இதில் மீண்டும் காங்கிரஸ் மற்றும் பாமக மற்றும் கம்யூனிஸ்ட் களின் 12%  கழித்தால் 32% சதவித வாக்குகளை பெற்றுள்ளது
இந்த முறை பிரிந்து உள்ள காங்கிரஸ் 2% முதல்  3 %  வரை பெற்றாலும் தி  மு கா வால் 32% முதல் 34%  சத வாக்குகளை பெற முடியும்..

முன்றாவது  அணி :-
விஜயகாந்த் 6% முதல் 8% , வைகோ  2% முதல் 3% வரை , வி  சி கா 1% முதல்  2% , கம்யூனிஸ்ட் 2% , தா மா கா  1% முதல்  3%  வரை , ஆக  மொத்தம்  15% முதல் 18% வரை பெற முடியும் ..

பா மாகா :- 3% முதல் 6%  வரை , ப ஜ க 2% முதல் 3% வரை பெற முடியும் .

இதே நிலை நிடித்தால் அதிமுக  அணி 35%  முதல்  38% சதவிதம் வரையும், தி மு கா அணி 30 முதல்  32% வரையும் , முன்றாவது அணி 15 முதல் 18% வரையும்  பெற முடியும் ,என  தோன்றுகிறது ..
பெரிய  அளவில் அதிருப்தி அலை 2006 தேர்தல் போல் இல்லாமல் இருந்து, 5% முதல் 10%  அதிருப்தி  வாக்குகள் முன்றாக  பிரிந்தால் அ தி மு கா அணி வெற்றி பெற  வாய்பு இருப்பது போல் தோன்றுகிறது ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக