வெள்ளி, 8 ஜூலை, 2016

கடுமையாக உழைக்கிறாரா இந்திய பிரதமர் ?

புது டெல்லியில் ஒரு  பிரெஞ்சு பெண்மணியிடம் ஒரு  பிஜேபி  உறுப்பினர் எங்களது  பாரத பிரதமர் கடுமையாக உழைக்கிறார் ,சிறிது  நேரம்  மட்டுமே  உறங்குகிறார் . உதாரணமாக  நேற்று  கூட பாஸ்ப்போர்ட்டை இழந்து  வெளிநாட்டில் தவித்த ஒருவருக்கு உடனடியாக பாஸ்ப்போர்ட் கிடைக்க உறுதி செய்தார் . தனது ஓய்வூதியம் கிடைக்காமல்  அவதி பட்ட ஒரு ஆசிரியருக்கு உதவி  செய்து உடனடியாக கிடைக்க செய்தார் என்று  விளக்கி கொண்டு இருந்தார் .
இதை  கேட்டு  ஆச்சரியம்  அடைந்த அந்த பெண்மணி " ஏன்  உங்கள்  நாட்டில் கடுமையான ஆட் பற்றாகுறை நிலவும்  போல , பிரதமர் பாஸ்ப்போர்ட் அலுவலக மற்றும்  ஓய்வு ஊதிய  துறை  வேலை  எல்லாம்  செய்தால்  எப்படி  தூங்க  நேரம் கிடைக்கும் , அவர் பிரதமர்  வேலையை  கூட பார்க்க வேண்டுமே  " என்றார் .

அதை  கேட்டு  அதிர்ச்சி  அடைந்த பிரமுகர் " இல்லை  பிரதமர்  அலுவலகத்தில்  பலர்  இந்த வேலைகளையும்  செய்கின்றனர் , பிரதமர் அவர்களை  மேற்பார்வை இடுகிறார் " என்றார் .

இந்த முறை  சிறப்பாக  செயல் படும் என்றால் பாஸ்ப்போர்ட் அலுவலகம்  மற்றும்  ஓய்வு  ஊதிய  துறைகளை  பிரதம  மந்திரி  அலுவலகமே பார்த்து கொள்ளலாமே என்று   அந்த  பெண்மணி கூறினார்.
இதை  கேட்ட  பிஜேபி  பிரமுகர் கோபமாக  வெளியேறினார் .

அந்த பெண்மணி சிறிது குழப்பத்துடன் என்னிடம் நானே எதுவும் தவறாக கேட்டு விட்டேனா என்று  கேட்டார் .. நான் அவரிடம்  நீங்கள்  இந்திய திரை படங்களை  பார்த்தது  உண்டா  என்று கேட்டேன் .அவர் இல்லை  என்றார்  அதுதான் உங்கள் பிரச்சினை என்று கூறினேன் .

பெரும்பாலும்  இந்திய  படங்களில்  எல்லா  பிரச்சினைகளையும் ஒரு சூப்பர்  ஹீரோ  தீர்த்து  வைப்பார் . அதையே  பிடித்து  கொண்ட அரசியல் வாதிகளும் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் ஒரு  மனிதர்  தீர்த்து  வைப்பார் என்னும் பிம்பத்தை கட்டமைக்கின்றனர் .அதில்  ஒரு பகுதிதான்  இது என்று  விளக்கினேன் .

ஒரு  நாடு  நன்றாக  இருக்க வேண்டுமானால்  ஒரு  தனி மனிதரால் மாற்றத்தை தர  முடியாது மக்கள் மனது  வைத்தால் தான் முடியும் .

(Courtesy :Mumbai Mirror Article)

"Public/System can make change. super hero cant make the change"

Note:- 

நாங்கள் பெரும்பாலும்  அலுவலக பயணமாக BUSSINESS Class இல் வெளிநாடு  சென்றாலே விமானத்தில் 180Deg  படுக்கையில்  நன்றாக உறங்கி மறுநாள் விழித்தவுடன் வெளிநாட்டில் பணிகளை கவனிப்போம் .. இதில்  தனி  விமானத்தில்  செல்லும்  பிரதமர்  விமானத்தில் தூங்கி  அலுவலகம்  வருகிறார் ன்னு பெருமை வேறு . இதுவும் ஒரு  சூப்பர் ஹீரோ  நாடகங்களில் ஒன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக