செவ்வாய், 15 நவம்பர், 2016

மூட்டை பூச்சிக்காக வீட்டை கொழுத்திய மத்திய அரசு



ஹிட்லர் அவர்கள்  எதை செய்தாலும் நாட்டுபற்று  என்ற பெயரால் மக்களிடம்  திணித்து  விடுவார் . அது தான்  இன்று  இந்த  நாட்டிலும்  நடந்து  கொண்டு இருக்கிறது .

பெரும்பாலோர்  நினைப்பது  போல்  பெரும்  கோடீஸ்வரர்கள்  யாரும்  கருப்பு பணத்தை  பணமாக  வைத்து  கொண்டு அலைவதில்லை  பெரும்பாலும்  ரியல்  எஸ்டேட் முதலீடுகளும், போலி நிறுவனங்கள் , பினாமி , தங்கம் ,வெளி நாட்டு  வங்கி , இது போக  10% பணமாக  வேண்டுமானால்  வைத்து  இருக்கலாம் . 

கோடி கணக்கில்  வராத கடனை   வைத்து  இருக்கும்  நிறுவனங்களிடம்  வசூலிக்க  வக்கில்லாத  அரசு , சிறு  வணிகர்கள் , அன்றாடம்  காய்ச்சிகள் , விவசாயிகள் , கூலி  தொழிலாளிகளை வேலையை  விட்டு  வாங்கி  வாசலில்  காத்து  இருக்க  வைத்துள்ளது.

 தண்ணீரில்  தத்தளிப்பவனை  பார்த்து  கரையில்  இருப்பவன்  எனக்கும்  தான்  நீச்சல்  தெரியாது  நான்  கவலை படுகிறேனா என்று  கேட்பதை  போல்  உள்ளது  பெரு  நகரங்களில் எலக்டீரானிக் பணத்தை உபோயோகிக்கும் மக்கள் சமூக  வலைத்தளங்களில்   தினசரி 1000,500 பண பரிமாற்றம் செய்வபர்கள் ,வங்கி  வாசலில் வரிசையில்  நிற்பதை பார்த்து  கேட்பது .
 நாட்களில்  சரியாகி  வீடும்  என்றார்கள் , இன்றும் வரிசைகள் அதிகரித்து கொண்டு தான்  உள்ளது, வரிசையில் நின்று கடைசியில் 2000 ரூபாய்  நோட்டை  தருவதை  போன்ற  முட்டாள் தனம்  எதுவும்  இருப்பதாக  தெரியவில்லை . 2000 நோட்டை வைத்து கொண்டு  100 200 கு பொருள்  வாங்க வழியில்லை . 500 ,1000 நோட்டுகள்  இல்லாத  நிலையில்  2000 நோட்டுகள் இருந்தும்  இல்லாதது  போன்றுதான்.

 வாரம்  20 ஆயிரம்  ரூபாய் மட்டுமே  எடுக்க  முடியும்  ,4 ஆயிரம்  வரை மட்டுமே மாற்ற  முடியும் என்கிற  போது திரும்ப திரும்ப கூட்டம்  இருந்து  கொண்டுதான் இருக்கிறது 

பெரும் பணக்காரர்கள்  யாரும் மாட்டியதாக தகவல் இல்லை , தாங்கள  5000 கோடி  சூரத் தில் சிக்கியது , 500 கோடி  மதுரையில்  சிக்கியது என்று தான் வதந்தி  கிளப்பி கொண்டு இருக்கிறார்கள் .


இதன்  மூலம்  சில  லட்சங்கள்முதல்  1 முதல் 2 கோடி கருப்பு பணம்   வைத்து  இருக்கும் சில சின்ன  மீன்கள்  அகப்படும் , பெரிய திமிங்கிலங்கள் எதுவும்  அகப்படாது.


முட்டை  பூச்சிக்காக  வீட்டை  கொழுத்தியதை போல் , ஒரு தேசத்தை வார கணக்கில் முடக்கி போட்டு , கோடி களில் உற்பத்தியை தடுத்து , சில  கோடி , கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் கைப்பற்றி பெருமை பட்டு கொள்ள வேண்டியது  தான்.

சிபிஐ ,ரா , போலீஸ் , இன்டெலிஜென்ஸ் என்று பல அரசாங்க நிறுவனங்களை வைத்து  கொண்டு  கள்ள  நோட்டை  தடுக்க முடியவில்லை என்று தாங்கள்  அடித்த  பணத்தை  தாங்களே செல்லாது என்று  அறிவிப்பதை பெருமையாக அரசாங்கம் கருதுவது  ஒரு  வெட்க கேடு. 

நாமும்  பாரத் மாதா கி ஜே  என்று  சொல்லி   தினமும் வங்கி வாசலில் வரிசையில்  நிற்பதை  அன்றாட வழக்கமாகி கொள்ளவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக