வெள்ளி, 10 மார்ச், 2017

வாழ்க்கையின் ஆச்சரியங்கள்.

.எனது சின்ன வயதில்தான் எத்தனை  ஆச்சரியங்கள் மற்றும் சந்தோசங்கள்.

 ஊருக்கு மேல்  எப்போதாவது பறக்கும் விமானங்கள்,
 தொட்டால் சிணுங்கி செடி,
 ஒளியும்  ஒலியும் வரும்  திடீர் புதிய பாடல்கள்,
 இரண்டாம் வகுப்பு  ரயில்பயணதில்  பின்னோக்கி ஓடும் மரங்கள்,
பிரச்சாரத்துக்கு வந்த ராஜிவ் காந்தியை அருகில் பார்த்தது ,
உலக தமிழ்மாநாட்டின் போது பார்த்த மிதவை பாலம் ,
திடீரென வரும்  கோடைமழை ,
முஸ்லீம் நண்பர்  வீட்டு திருமண  கறி   பிரியாணி .
தினமலர்  தீபாவளி மலர் ஆளுயுர  ரஜினி கமல் போஸ்டர் ,
கொள்ளிடம்  ஆற்றின் அகலம் ,
ஏப்போதாவுது பார்க்கும்  சென்னை நகரத்தின் உயரமான  கட்டிடங்கள்,
 5 தியேட்டர்கள்  ஒரே இடத்தில் இருந்த   மாரீஸ் தியேட்டர்.
ரஜினி படத்தின் முதல் நாள் டிக்கெட்,
உள்ளூரில்  நடந்தால் மட்டும்  கண்டிப்பாக ஜெயிக்கும் எங்க  ஊரு கபடி டீமின்  வெற்றி.

 ஜூன் மாதத்தில் இருகரையையும் தொட்டு கொண்டு நுரையுடன் வரும் காவிரி  தண்ணீர் ,
 எப்பதாவது  நம்மிடம் நேரடியாக  பேசும் பள்ளியின் தாவணி பெண்கள் ,
 முதல் 3 ரேங்கில்  வரும்பொழுது தரும்   ரேங்க் கார்டு,
எப்போதாவது   இருக்கை  காலியாக  வரும்  அரசு பேருந்து.
இப்படி எல்லாமே ஆச்சரியம்...

ஆனால் எனது மகனுடைய தலைமுறைக்கு ஆச்சரியங்கள்  எதுவும் மிச்சம் உள்ளதா   என்று தெரியவில்லை ?

உலக  அதிசயத்தையே நேரில் காட்டினாலும், அப்படியானு பார்த்து அடுத்த வினாடி  மொபைல் கேம் விளையாட  ஆரம்பித்து  விடுகிறார்கள்..

5 கருத்துகள்:

  1. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    பதிலளிநீக்கு
  2. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    பதிலளிநீக்கு
  3. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    பதிலளிநீக்கு
  4. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    பதிலளிநீக்கு
  5. ஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=oaQUWzIbZpo

    பதிலளிநீக்கு