வியாழன், 30 மார்ச், 2017

பொது வாழ்வில் நேர்மை எவ்வாறு இருக்க வேண்டும்

பொது வாழ்வில்  நேர்மை  எவ்வாறு  இருக்க வேண்டும் ?

சாணக்கியர்  தனது  அறையில்  உட்க்கார்ந்து  படித்து மற்றும் எழுதி  கொண்டு இருந்தார்  , அப்பொது  ஒரு  விளக்கு  எரிந்து கொண்டு  இருந்தது  , சிறிது  நேரம் கழித்து  அந்த  விளக்கை  அணைத்து  விட்டு  இன்னொரு  விளக்கை  பற்ற  வைத்து  எழுத ஆரம்பித்தார்.
அதை  கவனித்த  அவர் மகள்  அப்பா , என்  நீங்கள்  அந்த  விளக்கை  அணைத்து  விட்டு  மற்றொரு   விளக்கை பற்ற  வைத்து கொண்டு எழுதுகிறீர்கள்  என்று  கேட்டாள்.

அதற்கு  சாணக்கியர் , முதலில்  நான் அரசாங்க  பணி   செய்து  கொண்டு  இருந்தேன் , அதனால்  அரசாங்கம்  தந்த எண்ணையில்  எரிந்த விளக்கை  பயன்படுத்தினேன், இப்போது  எனது  தனிப்பட்ட  பணியை  செய்கிறேன் , அதற்கு அரசாங்கம்  தந்த  எண்ணையில்  எரியும்  விளக்கை  பயன்படுத்துவது  தவறு , அதனால்  எனது சொந்த பணத்தில் வாங்கிய  எண்ணையில்  எரியும் விளக்கை  பயன்படுத்துகிறேன்.

  சிறிய  தவறு  தானே  என்று  நான் இன்று செய்தால்  ,  நாளை அந்த  பழக்கம்  பெரிய  தவறு  செய்யவும்  தூண்டும்  என்று கூறினார்.

பொது வாழ்க்கையில்  இருக்கும்   அனைவரும்   இந்த  சாணக்கிய  நீதியை கடை பிடித்தால் இந்த நாடு கண்டிப்பாக முன்னேறும்.

2 கருத்துகள்:

  1. சுருக்கமாக எனினும்
    அற்புதமான கருத்துடன் கூடிய பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. டாக்டர் விஸ்வேஸ்வரையா அவர்களைப்பற்றிச் சொல்லும்போது, "தனது சொந்த வேலை செய்யும் போது தன்னுடைய காசில்வாங்கிய மெழுகுவர்த்தியையும் அரசு வேலை செய்யும்போது அரசுப்பனத்தில் வாங்கிய மெழுகுவர்த்தியையும் பயன்படுத்துவார்" என்று சொல்வார்கள். நல்லதொரு பதிவு!

    பதிலளிநீக்கு