திங்கள், 14 மார்ச், 2016

அன்பே சிவமா?? நானே சிவமா??

நமக்கு எல்லாம் குழந்தைகளிடம் சாமி இருப்பதாக நம்ப வைப்பதே பெரும் பாடாக இருக்கிறது ..தொனுர
இதுல சாமியாருங்க பெரியவங்களிடம் நான் தான் சாமின்னு நம்ப வைக்கிறார் கள் ன்னு தெரியல ...

அன்பே சிவம் னா  எவனும்  கேட்க மாட்டேங்குரான்,  ஆனா நானே சிவம் னா   நம்பி கேட்கறான்.

நூறு ரூபாய   சாமி  கோவில்  உண்டியல்ல போட்டா கம்மியா போட்டோமேனு தொனுர மனசுக்கு 10 ரூபாய் பிச்சைகாரனுக்கு போட்டா அதிகமா போட்டோமோன்னு தோணுது



காதலும் கடந்து போகும் ..

காதலும் கடந்து போகும் ..

பலம்:- சடுதியில் கடக்கும்  ஒற்றை வரி  வசனங்கள்  , விஜய்  சேதுபதி காகவே உருவாகப்பட்ட ஒரு பாத்திரம் , அழகான நடிக்க தெரிந்த ப்ரேமம் மடோனா செபஸ்டியன் , , சில நல்ல பாடல்கள் ..அழகான ஒளிபதிவு ..
பலவிணம் :-
ஒரே  இடத்தை சுற்றி  வருகிற , வேகம் இல்லாத  மாதிரியான திரைக்கதை, சுமாரான கிளைமாக்ஸ் 

மாஸ் படமும் இல்ல , கிளாஸ் படமும் இல்ல ...ஆனாலும் பாக்கலாம் 

நாங்க எல்லாம் கடைசி  சீன் ல  ஹீரோ  கதாநாயகிக்கு தாலி  கட்னாதன் படம் முடிஞ்சதா ஒத்துக்குவோம் .., இந்த பட  கிளைமாக்ஸ் எல்லாம் புரிய மாட்டேங்குது  .

extra :-
2 படம்  நடிச்ச  மடோனா செபஸ்டியன் எல்லாம் நல்லா நடிக்கிறாங்க ..எப்ப நம்ம ஹன்சிகா நடிக்க கத்துக்குவாங்கன்னு  தெரியல  

வெள்ளி, 11 மார்ச், 2016

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட அதிர்ச்சி நிபந்தனைகள்

கிரிக்கெட் விளையாட இந்தியா வர பாகிஸ்தான் சில நிபந்தனைகளை விதிதுள்ளது ..அவற்றுக்கு இந்திய அரசாங்கமும் கிரிக்கெட் வாரியமும் எழுத்து பூர்வமாக ஒப்பு கொண்டால் மட்டுமே வர முடியும்..
அவை
1. இந்த முறை இந்திய அணி முதலில் பந்து விசினால் குறைந்தது 100 ரன்கள் ஆவது தர வேண்டும்.
2.  இந்திய அணி அந்த ஸ்கோரை  குறைந்தது 15 ஓவருக்கு பிறகே எட்ட வேண்டும் ..
3. முதலில் பேட் செய்தால் 200 ரன்களுக்கு மேல் அடிக்க கூடாது
4. எந்த காரணத்தை கொண்டும் விராத் கோலியை முதல் 5 நிலையில் களம் இறக்க கூடாது..
5. எந்த காரணத்தை கொண்டும் பாக் வீரர்களை ரன் அவுட் செய்வது கூடாது..
கடைசியாக
6. தோற்ற பிறகு பரிசளிப்பு விழாவில் பாக் காப்டனிடம் இங்கிலீஷில் கேள்வி கேட்க கூடாது

இவற்றுக்கு ஒப்பு கொண்டால் மட்டுமே பாக் அணியை இந்திய அனுப்ப முடியும்..

வியாழன், 10 மார்ச், 2016

யுவராஜ் சிங் கிற்கு சச்சின் தந்த அறிவுரை .

.
யுவராஜ் சிங் பயிற்சியின் போது ஆட்டம் இழந்தால்  தனது  பேட் டை கோபமாக தூக்கி எறியும் பழக்கம் உடைய வராக இருந்தார்..
இதை கவனித்த சச்சின் " பேட்டை வீசி எறியாதே இதன் மூலமாக தான் உனது வீட்டிற்கு உணவு வந்து கொண்டு இருக்கிறது " என்று கூறினார் ...
அன்று முதல் யுவராஜ் அந்த பழக்கத்தை கை விட்டு விட்டார்...
(நன்றி:- டைம்ஸ் ஓப் இந்தியா )


சில சிந்தனைகள்

நாம் நமது தேவைக்கு சம்பாதிக்கிறோமா அல்லது அடுத்தவனுடன் கம்பேர் செய்றதுக்கு சம்பாதிக்கிறோமோ என்ற குழப்பம் வந்து விடுகிறது

எல்லா காதலியும் தேவதை தான்,என்ன ஜெயிக்கின்ற காதலில் மனைவியாகி விடுகிறாள்.. தோற்பவனுக்கு தேவதையாகவே தொடர்கிறாள்.

புதன், 9 மார்ச், 2016

விஜய்காந்த் கூட்டணி பேச்சு வார்த்தையா, ஓசி சாப்பாட்டு பிளானா

விஜய்காந்த்  கூட்டணி பேச்சு வார்த்தை..ஒரு நகைச்சுவை கற்பனை...............மனதை புண்படுத்துதற்கு அல்ல ...........
ஒரு நாள் காலையில்
சுதீஷ்:- அக்கா , இன்னிக்கு நம்ம வீடல என்ன சமையல் ...
அண்ணியார் :- டேய் , இன்னைக்கு வீட்ல cylinder தீந்து போச்சு, அடுத்த வாரம் தான் தருவானாம் ...
சுதீஷ் :- அதுவரைக்கும் .......
அண்ணியார் :-   நீ ஏன்டா கவலைபடற ....காலைல breakfast ட்டுக்கு மக்கள் நல கூட்டணி யினரை  சரவண பவன் வர  சொல்லிட்டேன் .... காலையில் அவங்க வாக்கிங் முடிஞ்சு   நேர வந்து கூட்டணி  பேசிட்டு பில்ல குடுத்துடுவாங்க ...

மதியானம் பிரகாஷ் ஜவடேகர்  flight புடிச்சு சென்னை வரார் , அவரோட ITC hotels  LUNCH சாப்பிட்டு கிட்டே கூட்டணி பேசறோம் ......

சாயங்காலம் சபரிசனும் , துரை முருகனும்  கிரீன் பார்க் பார்ல   மாமாவோட  கூட்டணி பேசலாம் நு  சொல்லி இருக்காங்க ...
நாளைக்கு order  மாத்தி , பிரேக் பாஸ்ட் அமித் ஷா கூட , லஞ்ச் திமுக கூட , நைட் மக்கள் நல கூட்டணி  கூட ...

இன்னும்  அரவிந்த் கெஜ்ரிவல் , தேசியவாத congress நு  பல கட்சி இருக்கு ..நீ என் கவலை படற ...
சுதீஷ் :- அக்கா , நீ ராஜ தந்திரத்தில் அத்தானை மிஞ்சி விட்டாய் .. கூட்டணி  அமையுதோ இல்லையோ..Election வரைக்கும் வீட்ல சமையல் இல்லை.

கரகாட்டக்காரன் காமெடியும், வாழும் கலை மாநாடும்

கரகாட்டகாரன் திரைபடத்தில் அண்ணன்  கவுண்டமணி  செந்திலை பார்த்து ஒரு dialogue கூறுவார் ...
அந்த  சினிமா நடிகர்கள் தான் பிறந்த நாள் கொண்டாடு கிறேன் னு தனக்கு தானே போஸ்டர் அடிச்சுகிறான் ,உனக்கு என் இந்த விளம்பரம்

அது போல கட்சிகாரன் தான் மாநாடு  நடத்துறேன் , கூட்டம் நடத்துறேன் ன்னு  இருக்குற ஏரி , குளத்தை துத்து, இலட்ச்ச கணக்குல ஆளுங்கள ,பிரியாணியும் ,quaterum குடுத்து கூட்டி வந்து கூத்தடிகிறான் ...

நீ சாமியார், ஏழை,பாழைக்கு உதவி ஏதாவது செய்யாம , 35 இலட்சம் பேர கூப்புடுற, ஆத்து கரைய துக்குர .... பத்தாதுக்கு எல்லைல வேலை செய்ய வேண்டிய ராணுவத்த  மைக் ,செட் பந்தல் போட சொல்ற ..

ஒண்ணும் நல்லா இல்ல  சாமி 

கரகாட்டக்காரன் காமெடியும், வாழும் கலை மாநாடும்  ,
 ART OF PARTYING..........