புதன், 23 மார்ச், 2016

92 ஆண்டு கால உழைப்பும் , இளிச்ச வாய் தமிழனும்


நேத்துலேந்து திமுகா காரர் கள் புரா உணர்ச்சி வசப்பட்டு திரிகிறார்கள் ..
தலைவர் 92 ஆண்டு கால உழைப்பின் பலனை அடைய இந்த தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டுமாம் ..
அட  அப்ரசண்டிகளா ..
5 முறை முதல்வர், 1 முறை அமைச்சர்,10 முறை MLA , மகன் மேயர் மற்றும் துணை முதல்வர், மகள்  MP , மற்றொரு மகன்  மதிய அமைச்சர், அக்காள் மகன் மற்றும் அவரது குடும்பத்தார் மத்திய அமைச்சர்..
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி முறை கலைஞர் மற்றும் குடும்பத்தினர் பயன் அடைந்து விட்டனர் .. இன்னும்  என்ன  வேணுமாம் ..
நீங்க எம்பா உணர்ச்சி வச படறிங்க.

திங்கள், 21 மார்ச், 2016

தொகுதி பங்கீடும் ,கூட்டணி கூத்துகளும் -கற்பனை


மக்கள் நல கூட்டணி  தொகுதி பங்கீடு :-
(கம்யூனிஸ்ட் :-   தமிழகத்தின் வருங்கலாமே, திமுக மற்றும் அதிமுக வின் மாற்று அரசியல் தலைவனே, மதிமுக  சார்பில் நீங்கள் 130 தொகுதிகளில் போட்டி இடுங்கள் , நாங்கள் மீதம் உள்ள தொகுதியில் போட்டி இடுகிறோம் ..

வைகோ :- (அதிர்ச்சியை வெளியில் காட்டாமல் )..அட என் தலைல இத்தனை தொகுதியை  கட்ட பாகுரிங்களா (மனதுக்குள் நினைத்தவாறு ).. சீனாவிலும் ரஷ்யாவிலும் ஏகாதிபத்தியத்தை தகர்த்த கம்யூனிஸ்ட் தோழர்கள் 130 தொகுதிளில் போட்டி இடுங்கள் ..புலம் பெயர்ந்த தமிழர் நலன்களை பார்க்க வேண்டி உள்ளதால் மதிமுக 30 தொகுதிகளில்  மட்டும் போட்டி இடும் ..

கம்யூனிஸ்ட் :- ஆஹா இந்த ஆளு  எஸ்கேப் ஆகிறான் .. திருமா வை புடிச்சு குருமா வைப்போம். 
தாழ்த்தப்பட்ட மக்களின் கையில் அதிகாரம் வர வேண்டும் , நீங்கள் தான் நமது முதலமைச்சர் வேட்பாளர் ..விடுதலை சிறுத்தைகள் 130 தொகுதியில் போட்டி இட வேண்டும் 

திருமா:- ( அதிர்ச்சியை சமாளித்து கொண்டு )...இப்ப எப்டி எஸ்கேப் ஆகுரேன் பாரு ....(மனதுக்குள் நினைத்தவாறு ) சிறுத்தைகள் களத்துக்கு அஞ்ச மாட்டார்கள் , அதுல  ஓரு நம்பரை மட்டும் குறைத்து கொள்ளுங்கள் 

கம்யூனிஸ்ட் :- ஆஹா , அடிமை சிக்கிட்டான் டா ..அப்ப 129 தொகுதி 
திருமா:- நான் சொன்னது முன்னாடி உள்ள ஒன்ன, எனக்கு 30 தொகுதி போதும் ..
கம்யூனிஸ்ட் :- அப்ப நாம விஜயகாந்த்ட மறுபடி பேச்சு வார்த்தைய தொடங்க வேண்டியதுதான்.

திமுக கூட்டணி:-
துரை முருகன்:- அதிமுக தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியை யையும் கூட்டணிக்கு குப்டு பாத்து டேன் .. காங்கிரஸ் மட்டும் தான் சிக்குனிச்சு .மத்தவன் எல்லாம் எஸ்கேப் ஆயிட்டான் ..

EVKS  இளங்கோவன் :- குஷ்பூ ,நக்மா, வருகைக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் எழுட்சி அடைந்துள்ளது ...60 தொகுதிகள் குடுங்கள் ...அப்பத்தான் எல்லா கோஷ்டிக்கும் நான் பிறுச்சு தர முடியும்.

கலைஞர்:-  தம்பி , நாம் தமிழ்நாடுக்கு மட்டும்தான் தொகுதி பிரிகிறோம் ..கேரளா ,கர்நாடகாவுக்கும் சேர்த்து அல்ல ...தம்பிக்கு ஓரு 30 தொகுதி குடுத்து கூட்டணில வச்சி போம்.

துரை முருகன்:​ சைதாபேட்டை தந்திரி ஆட்டோ டிரைவர்கள் சங்கம்,கன்னியாகுமரி பழ வியாபாரிகள் சங்கம் ன்னு , எல்லா சங்க தலைவர்களையும் குப்டு போட்டோ எடுத்தாச்சு,...அவனகலும் சன் டிவி ல காட்டுவாங்க னு  ஆதரவு  க்கு ஓகே  சொல்லிடாங்க ..இன்னும் அறிவாலய வாட்ச்man ட மட்டும்தான் கூட்டணி போட்டோ எடுக்கலை தலைவா .

கலைஞர் :- அபாரம் , நீ ஒரு ராஜ தந்திரி என்பதை நிருபித்து விட்டாய் 

பிஜேபி :​ 

தமிழிசை :- பிரச்சாரத்துக்கு பிரதமர் வருவாரா ?
அமித் ஷா :- அவரு இன்னும் உலகத்துல சுத்தி பாக்காத நாடு எதுவும் இருக்கா ன்னு தேடி கிட்டு இருகார்..  எப்டியும் ரஷ்யா போற வழில சென்னை இருக்குன்னு பொய்  சொல்லி ஏமாத்தி கூட்டி கிட்டு பிரச்சாரத்துக்கு வந்திடுறேன் ..
வேற யார் கூட்டணிக்கு வந்து இருக்காங்களா ..

தமிழிசை :- கூட்டணிக்கு அலைஞ்சு ஜவேடேகர் 2 செருப்பு தேய்ஞ்சு போச்சு..அதான் நான் , இல கணேசன் , பொன்னார் எல்லாம் 3 னா பிறுஞ்சு எங்களுக்குளே யே  தொகுதி பங்கீடு பண்ணிக்கிட்டு இருக்கோம் ...


கூத்து களும் 



வெள்ளி, 18 மார்ச், 2016

அரசியல் ராஜதந்திரம்,உறவுகள் -mixture of the day

அரசியல் ராஜதந்திரம் :-

மகன்:- அப்பா , நம்ம இந்த முறை ஆட்சிக்கு வந்தால் நன்மை செய்வோமா...
அப்பா :- மகனே ,ஒரு பொய்யை பல முறை சொன்னால் உண்மையாகி விடும்...ஆனாலும் நாம சொல்றது பொய்தான் என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் .அதை நாம உண்மை என்று நம்பி விட கூடாது..

உறவுகள் :-
என் பையனையோ / பொண்ணையோ  தான் நீ  கட்டணும்  சொல்லும்  மாமன்களையும், அத்தை களையும் ,
உன்னதான் கட்டுவேன்  என்று சொல்லும்  மாமன் /அத்தை  மகள் /மகன் களையும்  இப்போது  எலலாம் பார்க்க முடிவதில்லை ..
 என்னத்தான் சயின்ஸ் , மனித உரிமை   இதமுட்டாள்  தனம் ன்னு சொன்னாலும் ..
இத்தகைய   உரிமை கொன்டாடும்  உறவுகளை பார்க்கும் போது  வரும் மகிழ்ச்சி  சொல்லி புரியாது

விஜயகாந்த்  கூட்டனி  இல்லைன்னு  சொன்னதுக்கு கலைஞரும் திமுகாவும் வருத்தப்பட்டதை விட அதிகமா விகடன் தான் வருத்தபடுது 

திங்கள், 14 மார்ச், 2016

அன்பே சிவமா?? நானே சிவமா??

நமக்கு எல்லாம் குழந்தைகளிடம் சாமி இருப்பதாக நம்ப வைப்பதே பெரும் பாடாக இருக்கிறது ..தொனுர
இதுல சாமியாருங்க பெரியவங்களிடம் நான் தான் சாமின்னு நம்ப வைக்கிறார் கள் ன்னு தெரியல ...

அன்பே சிவம் னா  எவனும்  கேட்க மாட்டேங்குரான்,  ஆனா நானே சிவம் னா   நம்பி கேட்கறான்.

நூறு ரூபாய   சாமி  கோவில்  உண்டியல்ல போட்டா கம்மியா போட்டோமேனு தொனுர மனசுக்கு 10 ரூபாய் பிச்சைகாரனுக்கு போட்டா அதிகமா போட்டோமோன்னு தோணுது



காதலும் கடந்து போகும் ..

காதலும் கடந்து போகும் ..

பலம்:- சடுதியில் கடக்கும்  ஒற்றை வரி  வசனங்கள்  , விஜய்  சேதுபதி காகவே உருவாகப்பட்ட ஒரு பாத்திரம் , அழகான நடிக்க தெரிந்த ப்ரேமம் மடோனா செபஸ்டியன் , , சில நல்ல பாடல்கள் ..அழகான ஒளிபதிவு ..
பலவிணம் :-
ஒரே  இடத்தை சுற்றி  வருகிற , வேகம் இல்லாத  மாதிரியான திரைக்கதை, சுமாரான கிளைமாக்ஸ் 

மாஸ் படமும் இல்ல , கிளாஸ் படமும் இல்ல ...ஆனாலும் பாக்கலாம் 

நாங்க எல்லாம் கடைசி  சீன் ல  ஹீரோ  கதாநாயகிக்கு தாலி  கட்னாதன் படம் முடிஞ்சதா ஒத்துக்குவோம் .., இந்த பட  கிளைமாக்ஸ் எல்லாம் புரிய மாட்டேங்குது  .

extra :-
2 படம்  நடிச்ச  மடோனா செபஸ்டியன் எல்லாம் நல்லா நடிக்கிறாங்க ..எப்ப நம்ம ஹன்சிகா நடிக்க கத்துக்குவாங்கன்னு  தெரியல  

வெள்ளி, 11 மார்ச், 2016

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட அதிர்ச்சி நிபந்தனைகள்

கிரிக்கெட் விளையாட இந்தியா வர பாகிஸ்தான் சில நிபந்தனைகளை விதிதுள்ளது ..அவற்றுக்கு இந்திய அரசாங்கமும் கிரிக்கெட் வாரியமும் எழுத்து பூர்வமாக ஒப்பு கொண்டால் மட்டுமே வர முடியும்..
அவை
1. இந்த முறை இந்திய அணி முதலில் பந்து விசினால் குறைந்தது 100 ரன்கள் ஆவது தர வேண்டும்.
2.  இந்திய அணி அந்த ஸ்கோரை  குறைந்தது 15 ஓவருக்கு பிறகே எட்ட வேண்டும் ..
3. முதலில் பேட் செய்தால் 200 ரன்களுக்கு மேல் அடிக்க கூடாது
4. எந்த காரணத்தை கொண்டும் விராத் கோலியை முதல் 5 நிலையில் களம் இறக்க கூடாது..
5. எந்த காரணத்தை கொண்டும் பாக் வீரர்களை ரன் அவுட் செய்வது கூடாது..
கடைசியாக
6. தோற்ற பிறகு பரிசளிப்பு விழாவில் பாக் காப்டனிடம் இங்கிலீஷில் கேள்வி கேட்க கூடாது

இவற்றுக்கு ஒப்பு கொண்டால் மட்டுமே பாக் அணியை இந்திய அனுப்ப முடியும்..

வியாழன், 10 மார்ச், 2016

யுவராஜ் சிங் கிற்கு சச்சின் தந்த அறிவுரை .

.
யுவராஜ் சிங் பயிற்சியின் போது ஆட்டம் இழந்தால்  தனது  பேட் டை கோபமாக தூக்கி எறியும் பழக்கம் உடைய வராக இருந்தார்..
இதை கவனித்த சச்சின் " பேட்டை வீசி எறியாதே இதன் மூலமாக தான் உனது வீட்டிற்கு உணவு வந்து கொண்டு இருக்கிறது " என்று கூறினார் ...
அன்று முதல் யுவராஜ் அந்த பழக்கத்தை கை விட்டு விட்டார்...
(நன்றி:- டைம்ஸ் ஓப் இந்தியா )