திங்கள், 21 மார்ச், 2016

தொகுதி பங்கீடும் ,கூட்டணி கூத்துகளும் -கற்பனை


மக்கள் நல கூட்டணி  தொகுதி பங்கீடு :-
(கம்யூனிஸ்ட் :-   தமிழகத்தின் வருங்கலாமே, திமுக மற்றும் அதிமுக வின் மாற்று அரசியல் தலைவனே, மதிமுக  சார்பில் நீங்கள் 130 தொகுதிகளில் போட்டி இடுங்கள் , நாங்கள் மீதம் உள்ள தொகுதியில் போட்டி இடுகிறோம் ..

வைகோ :- (அதிர்ச்சியை வெளியில் காட்டாமல் )..அட என் தலைல இத்தனை தொகுதியை  கட்ட பாகுரிங்களா (மனதுக்குள் நினைத்தவாறு ).. சீனாவிலும் ரஷ்யாவிலும் ஏகாதிபத்தியத்தை தகர்த்த கம்யூனிஸ்ட் தோழர்கள் 130 தொகுதிளில் போட்டி இடுங்கள் ..புலம் பெயர்ந்த தமிழர் நலன்களை பார்க்க வேண்டி உள்ளதால் மதிமுக 30 தொகுதிகளில்  மட்டும் போட்டி இடும் ..

கம்யூனிஸ்ட் :- ஆஹா இந்த ஆளு  எஸ்கேப் ஆகிறான் .. திருமா வை புடிச்சு குருமா வைப்போம். 
தாழ்த்தப்பட்ட மக்களின் கையில் அதிகாரம் வர வேண்டும் , நீங்கள் தான் நமது முதலமைச்சர் வேட்பாளர் ..விடுதலை சிறுத்தைகள் 130 தொகுதியில் போட்டி இட வேண்டும் 

திருமா:- ( அதிர்ச்சியை சமாளித்து கொண்டு )...இப்ப எப்டி எஸ்கேப் ஆகுரேன் பாரு ....(மனதுக்குள் நினைத்தவாறு ) சிறுத்தைகள் களத்துக்கு அஞ்ச மாட்டார்கள் , அதுல  ஓரு நம்பரை மட்டும் குறைத்து கொள்ளுங்கள் 

கம்யூனிஸ்ட் :- ஆஹா , அடிமை சிக்கிட்டான் டா ..அப்ப 129 தொகுதி 
திருமா:- நான் சொன்னது முன்னாடி உள்ள ஒன்ன, எனக்கு 30 தொகுதி போதும் ..
கம்யூனிஸ்ட் :- அப்ப நாம விஜயகாந்த்ட மறுபடி பேச்சு வார்த்தைய தொடங்க வேண்டியதுதான்.

திமுக கூட்டணி:-
துரை முருகன்:- அதிமுக தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியை யையும் கூட்டணிக்கு குப்டு பாத்து டேன் .. காங்கிரஸ் மட்டும் தான் சிக்குனிச்சு .மத்தவன் எல்லாம் எஸ்கேப் ஆயிட்டான் ..

EVKS  இளங்கோவன் :- குஷ்பூ ,நக்மா, வருகைக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் எழுட்சி அடைந்துள்ளது ...60 தொகுதிகள் குடுங்கள் ...அப்பத்தான் எல்லா கோஷ்டிக்கும் நான் பிறுச்சு தர முடியும்.

கலைஞர்:-  தம்பி , நாம் தமிழ்நாடுக்கு மட்டும்தான் தொகுதி பிரிகிறோம் ..கேரளா ,கர்நாடகாவுக்கும் சேர்த்து அல்ல ...தம்பிக்கு ஓரு 30 தொகுதி குடுத்து கூட்டணில வச்சி போம்.

துரை முருகன்:​ சைதாபேட்டை தந்திரி ஆட்டோ டிரைவர்கள் சங்கம்,கன்னியாகுமரி பழ வியாபாரிகள் சங்கம் ன்னு , எல்லா சங்க தலைவர்களையும் குப்டு போட்டோ எடுத்தாச்சு,...அவனகலும் சன் டிவி ல காட்டுவாங்க னு  ஆதரவு  க்கு ஓகே  சொல்லிடாங்க ..இன்னும் அறிவாலய வாட்ச்man ட மட்டும்தான் கூட்டணி போட்டோ எடுக்கலை தலைவா .

கலைஞர் :- அபாரம் , நீ ஒரு ராஜ தந்திரி என்பதை நிருபித்து விட்டாய் 

பிஜேபி :​ 

தமிழிசை :- பிரச்சாரத்துக்கு பிரதமர் வருவாரா ?
அமித் ஷா :- அவரு இன்னும் உலகத்துல சுத்தி பாக்காத நாடு எதுவும் இருக்கா ன்னு தேடி கிட்டு இருகார்..  எப்டியும் ரஷ்யா போற வழில சென்னை இருக்குன்னு பொய்  சொல்லி ஏமாத்தி கூட்டி கிட்டு பிரச்சாரத்துக்கு வந்திடுறேன் ..
வேற யார் கூட்டணிக்கு வந்து இருக்காங்களா ..

தமிழிசை :- கூட்டணிக்கு அலைஞ்சு ஜவேடேகர் 2 செருப்பு தேய்ஞ்சு போச்சு..அதான் நான் , இல கணேசன் , பொன்னார் எல்லாம் 3 னா பிறுஞ்சு எங்களுக்குளே யே  தொகுதி பங்கீடு பண்ணிக்கிட்டு இருக்கோம் ...


கூத்து களும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக