புதன், 13 ஏப்ரல், 2016

தி மு கா வேட்பாளர் பட்டியல் - மாற்றமா ? ஏமாற்றமா ?

தி மு கா வேட்பாளர்  பட்டியல்  வெளியாகி விட்டது.பெரிய  அளவில்  மாற்றம் இருக்கும்  என எதிர்பார்க்க பட்டது .பல மாவட்ட செயலாளர் களுக்கு சீட் கிடையாது என்று எழுதி வாங்க பட்டதாக கூறினார்கள் ,ஆனால் வேட்பாளர் பட்டியலில் மீண்டும்  குறுநில மன்னர்களான நேரு,பொன் முடி, எ வா வேலு ,துரை  முருகன் , இ பெரிய சாமி மற்றும்  மகன், சுரேஷ்  ராஜன், வீரபாண்டி ராஜா ..அனைவருக்கும் சீட் வழங்க பட்டு உள்ளது ..

தான்  மட்டும்  வாரிசு  அரசியலில் ஈடுபடுவதாக குறை கூறி விட கூடாது என்பதற்காக  கருணாநிதி அனைத்து வாரிசுகளுக்கும்  சீட்  தந்து உள்ளார்.

 89,91,96,2001,2006,2011 வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களில் 30% தொடர்ந்து இடம் பெறுகின்றனர் , மேலும் 20%  அந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் வாரிசுகளாக இருகின்றனர்.தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஒருவரோ  அவரது குடும்பத்தினரோ வேட்பாளராக இருந்தால் மீதி தொண்டர்கள் எதுக்கு கட்சியில் இருக்கிறார்கள்  என்று தெரிய வில்லை ...

மாற்றத்தை தர போகிறோம் , சென்ற முறை  செய்த தவறுக்கு வருந்துகிறோம் என்று  நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலின்  கூறினார் .. வேட்பாளர் பட்டியலை பார்த்தால் தவறுக்கு வருந்திய மாதிரி தெரியவில்லை ..

30 வருடமாக  ஒரு வேட்பாளர்  பட்டியலில் கூட மாற்றத்தை தர முடியாதவர்கள் ..எத்தகைய மாற்றத்தை தர போகிறார்கள் ..

மாற்றம் ஒன்றே மாறாதது  என்று கூறுவார்கள் , தி  மு கா வை   பொருத்தவரை  மக்களின் ஏமாற்றம்   ஒன்றே மாறாதது
மாற்றமா ? ஏமாற்றமா 


2016 மே 19...யார் வெல்வார்கள் .. சதவித அலசல்

2016 மே 19...யார் வெல்வார்கள் ..  சதவித அலசல் ..

2014 பாராளுமன்ற தேர்தலில்  அதிமுக  37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது ..தி  மு கா  ஒரு இடம் கூட கிடைக்காமல் படு தோல்வி அடைந்தது ....முன்றாவது அணி  2 இடங்களை கைப்பற்றியது ...தமிழக மக்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு  ஒரு மாதிரியாகவும் சட்ட மன்ற தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும் வாக்களிப்பார்கள் என்பதால் அதை கருத்தில் கொள்ளாமல்  2011 மற்றும்  2006 தேர்தல்  சதவித வாக்குகளை மற்றும்  நாம் கருத்தில் கொள்வோம் ..
அதிமுக :-
2011 ஆண்டு தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியுடன்  சேர்ந்து ஏறத்தாழ 52% வாக்குகளை பெற்றது ..தேமுதிக வின் 6 சதவித வாக்குகளை கழித்து கம்யூனிஸ்ட் களின் 3 சதவித வாக்குகளை கழித்தாலும் ஏறதாழ 42 சதிவித வாக்குகளை பெற்று  உள்ளது ...திமுகா  ஆட்சியின் அதிருப்தி வாக்கு களையும் சேர்த்து
அதே போல்  2006 ஆண்டு ஏற தாழ 40 சதவித வாக்குகளை பெற்றது ..மதிமுக மற்றும் வி சி  கா வின் 4 முதல்  5 சதவித  வாக்கு வங்கியை கழித்தாலும் 35% வாக்குகளை பெற்று உள்ளது ..ஆட்சிக்கு எதிரான மன நிலைமையயும் மீறி இந்த அளவு  பெற்று  உள்ளது

திமுக :-
2011 தேர்தலில் 40 சதவித வாக்குகளை பெற்றது ...இவற்றில் காங்கிரஸ் ,பாமக மற்றும் வி சி கா  வின் வாக்குகளை  ஏறதாழ  9% முதல்  10% கழித்தால் 30% வாக்குகளை பெற்றுளதாக எடுத்து கொள்ளலாம்.
2006 தேர்தலில் ஏறதாழ 44 % வாக்குகளை பெற்றது , இதில் மீண்டும் காங்கிரஸ் மற்றும் பாமக மற்றும் கம்யூனிஸ்ட் களின் 12%  கழித்தால் 32% சதவித வாக்குகளை பெற்றுள்ளது
இந்த முறை பிரிந்து உள்ள காங்கிரஸ் 2% முதல்  3 %  வரை பெற்றாலும் தி  மு கா வால் 32% முதல் 34%  சத வாக்குகளை பெற முடியும்..

முன்றாவது  அணி :-
விஜயகாந்த் 6% முதல் 8% , வைகோ  2% முதல் 3% வரை , வி  சி கா 1% முதல்  2% , கம்யூனிஸ்ட் 2% , தா மா கா  1% முதல்  3%  வரை , ஆக  மொத்தம்  15% முதல் 18% வரை பெற முடியும் ..

பா மாகா :- 3% முதல் 6%  வரை , ப ஜ க 2% முதல் 3% வரை பெற முடியும் .

இதே நிலை நிடித்தால் அதிமுக  அணி 35%  முதல்  38% சதவிதம் வரையும், தி மு கா அணி 30 முதல்  32% வரையும் , முன்றாவது அணி 15 முதல் 18% வரையும்  பெற முடியும் ,என  தோன்றுகிறது ..
பெரிய  அளவில் அதிருப்தி அலை 2006 தேர்தல் போல் இல்லாமல் இருந்து, 5% முதல் 10%  அதிருப்தி  வாக்குகள் முன்றாக  பிரிந்தால் அ தி மு கா அணி வெற்றி பெற  வாய்பு இருப்பது போல் தோன்றுகிறது ...


வியாழன், 7 ஏப்ரல், 2016

சந்திர குமார் கள் ..ஒன்றுக்கு பக்கத்தில் இருந்த மதிப்பு இல்லா பூஜ்யங்கள்


90 களின்  அதிமுக வின் ஆட்சியில்  கட்சியில்  போது , அப்போதைய  முதல் அமைச்சர் செல்வி  ஜெயலலிதா  மூத்த   அமைச்சர்களான  SDS ,RMV , போன்றவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக  "நான்  தான் ஒன்று... நீங்கள்  அனைவரும் பூஜ்யங்கள் ஒன்று பக்கத்தில் இருக்கும் வரைக்கும் தான் பூஜ்யத்திற்கு மதிப்பு...ஒன்று இல்லாவிட்டால் பூஜ்ஜியதிற்கு  மதிப்பு இல்லை என்று கூறினார்..
அப்பொழுது  கூட ஒன்றின் மதிப்பு கூட இருக்கும் புஜ்யங்களால் உயரும் ,குறையும்...
இப்போது தேமுதிக வில் இருந்து விலகி சென்றவர்கள் அந்த மதிப்பு கூட இல்லாத பூஜ்யங்கள் ..
எந்த வித பின்னணியும் இல்லாமல் விஜயகாந்தால் மட்டும் வெளியே தெரிய வைக்க பட்டவர்கள் .... இன்று  இவர்கள் வெளியேறி  இருப்பதால் எந்த  பாதிப்பும் அடையாது 

காணமல் போன தென்னம் தோப்பு....வடிவேலு காமெடி

காணமல் போகும்  தென்னம் தோப்பு..வடிவேலு  காமெடி
வடிவேலு ஒரு திரை படத்தில் தன்னுடைய கிணற்றை காணாம போனதாக காமெடி செய்வார் , அருமையான  கிணறு சார் , மக்கள் எல்லாம் நேத்து வரைக்கும் தண்ணி  எடுத்துகுட்டு இருந்தாங்க  .. இன்னக்கு காணாம் சார் என்பார் ...

அது மாதிரி  ஆகி விட்டது  திரு  வாசன் அவர்களின் நிலைமை ..

சார், நேத்து வரைக்கும்  ஒரு  தென்னம்  தோப்பு   வெச்ருந்தேன் சார்  ,,, நல்ல  தென்னம் தோப்பு  சார்  அது..  நெறைய  இளனி  கெடைச்சுது  சார் ..
இப்போ  அந்த தென்னம் தோப்பு   ரெட்டை இலைல  காணாம  போச்சு  சார்,
தென்னம் தோப்போட  கட்சியும்  அதிமுக வோட  கரைஞ்சு போச்சு சார்.. என்று சொல்லுவாரோ ....

செவ்வாய், 29 மார்ச், 2016

இதயத்தில் இடம் ஒதுக்கும் தலைவரும் , தப்பி ஓடும் தலைவர்களும்


இதயத்தில் இடம் ஒதுக்கும் தலைவரும் , தப்பி ஓடும்  தலைவர்களும் -கற்பனை பேச்சு வார்தை :-

ஸ்டாலின் :- அப்பா , நீ பாட்டுக்கு கொத்தனார் சங்கம், சித்தாள் சங்கம் , கட்சின்னு  பேர் போட்டு லெட்டெர் pad அடிச்சி எடுத்து வர்றவனுக்கு எல்லாம் சீட் கொடுத்து கையெழுத்து போட்டு   குடுக்குற....இப்டியே போனா நாம 30 தொகுதில கூட நிக்க மாட்டோம் போல ...
கருணாநிதி :- கவலை படாத ,எல்லா பயலும்  உதய சூரியன் சின்னத்துல தான் நிப்பாங்க...அது இல்லாம நமக்கு வேனுமுனா உங்க எல்லாத்துக்கும் இதயத்துல இடம் கொடுபதற்கு  தான் கை எழுத்து போட்டோம் , சட்ட மன்ற தேர்தல்க்கு இல்லைன்னு சொல்லிடலாம் ..
தமாகா வை நம்ம  கூட்டணிக்கு  அழைக்க சொன்னனே .என்ன  ஆச்சு ..

ஸ்டாலின்:- வேண்டாம்பா , காங்கிரஸ் நிக்கிற தொகுதில தமாகா காரன் வேலை செய்ய மாட்டான் , தமாகா நிக்கிற தொகுதில காங்கிரஸ் காரன் வேலை செய்ய மாட்டான்.
கருணாநிதி :- அப்ப  திமுகா நிக்கிற தொகுதில
ஸ்டாலின் :- ரெண்டு பேரும் வேலை செய்ய மாட்டான் ...அது  இல்லாம வாசன் எனக்கு இதயத்துல இடம் வேணாம் ,காங்கிரஸ் விட ரெண்டு சீட் கூட வேணும்னு சொல்றார் ..

குலாம் நபி ஆசாத் என்ட்டர் :-
கலைஞர்ஜி , போன தடவை மாதிரி நம்பள்கி 60 தொகுதி குடுத்துடுங்க ...

கருணாநிதி:-  நான் மேற்கு வங்காளத்தில் ,கேரளாவில் எல்லாம் உங்கள்ட சீட் கேட்டு தொந்தரவு பண்றனா ..நீங்க மட்டும் ஏன் இப்டி பண்றீங்க..போன தடவை  நம்ப கூ ட்டணில  சிபிஐ ( மத்திய புலானாய்வு துறை )  இருந்தது ...அதுக்கு பயந்து நான் அத்தனை சீட் குடுத்தேன் ..இப்போ சிபிஐ பிஜேபி கூட  இருக்கு ...அதனால் 25 சீட்டே  அதிகம் ..

குலாம் நபி :- நான் ராகுல் ட்ட பேசி முடிவ சொல்றேன் ..

பிஜேபி :​-
 பொன்னார் :- என்  அலுவுலக மெயின் கேட் பூட்டி வச்சு இருக்கீங்க .
 தமிழிசை :- கூ ட்டணிக்கு வந்த விஜயகாந்த் மநகூ  க்கு போய்ட்டார் ..சரத் குமார் திரும்ப அதிமுக கிட்ட போய்ட்டார் ..இருக்குற காயத்ரி ரகுராம், விஜயகுமார் ,கங்கை அமரன் ,விசு எல்லாம் ஓடி போகாம இருக்க தான் கதவை சாத்தி இருகேன் ...







திங்கள், 28 மார்ச், 2016

யார் ஆக சிறந்தவர் ?? விராடா - சச்சினா


சச்சின் அவர்களுடன் விராத் கோஹ்லி யை ஒப்பிடு செய்வது ஆப்பிள் உடன் ஆரஞ்சு பழத்தை ஓப்பிடு செய்வது போல் ஆகும். இரு வேறு தலைமுறை சாதனை யாளர்களை ஓப்பிடக் கூடாது என்றாலும் MGR கூட ரஜினி யையும் , ரஜினியுடன் விஜய் யையும் ஓப்பிடும் தமிழர்கள் நாம் என்பதால் ...

சச்சின் :-
மிக  சிறந்த பந்து  வேக விச்சாளர்களான  இம்ரான் கான் ,வாசிம் அக்ரம் ,அமப்ரோஸ் ,வால்ஷ் ,ரிச்சர்ட் ஹட்லி போன்றவர்களையும் , ஷேன் வார்னே ,முத்தையா முரளிதரன் போன்ற சுழற் பந்து விச்சாளர் களையும் எதிர்த்து ரன் குவித்தவர் .

விராட் :-
இந்த  தலைமுறையில்   ஸ்டெய்ன் ,ஆமிர்  போன்ற வெகு  சில குறிப்பிட்ட வேக பந்து விச்சாளர் களே உள்ளனர் ..சுழற்பந்து இன்னும் குறைந்த சிலரே உள்ளனர் .

சச்சின் :-
பந்து விச்சு ஆட்சி செய்த காலத்தில் ஆரம்பித்து , மட்டை மற்றும்  பந்து சம நிலை காலம் வரை தொடர்ந்தவர்

விராட் :-
மட்டை  ஆட்சி செய்யும் காலத்தில் வந்தவ ர்  ...ஆனாலும்  அவ்வபொது பந்து வீச்சு ஆட்சி செய்யும் சில ஆட்டங்களில் தனது முத்திரையை பதிக்கிறார்

சச்சின் :-
தனது  முதல் 10 ஆண்டுகளில் ,ராகுல் டிராவிட் ,கங்குலி வரும் வரை பெரும் பாலும் அவரது  மட்டை  போராட்டம்  அணியின் தோல்வியில்  தான் முடியம் .. பிற்காலத்தில் தான் அணியின் வெற்றி யாக மாற்ற முடிந்தது ..
2000தின் பாதி  வரை , பெரும் பாலும் batting அவரை நம்பி இருந்தால் பெரும் சுமை அவரை துரத்தியது.
அன்றைய  ஆஸ்திரேலியா ,பாகிஸ்தான் அணிகளின் வலிமையுடன் இன்றைய அணிகளை ஒப்பிடவும்  முடியாது.

விராத்:-
ஒரு சில ஆட்டங்களை தவிர அனைத்து ஆட்டங்களிலும் ரோஹித் ,தோனி , ரைனா போன்ற நல்ல ஆட்ட காரர்களின்  துணை  இருக்கிறது ..

சச்சின் :-
டெஸ்ட் போட்டிகளில்  சச்சின் கையே ஓங்கி இருக்கிறது ..அனைத்து நாடுகளிளும்  மிக  சிறந்த சராசரியை வைத்துள்ளார்.

விராத்;
நன்றாக விளையா டினாலும் சச்சின் னை விட சராசரி குறைவு..இங்கிலாந்து மண்ணில் இன்னும் சாதிக்க வில்லை.


சச்சின் :-
அணியின்  நலனை  விட தனது சாதனைக்களுக்காக விளையாடுகிறார் என்ற குற்ற சாட்டு எப்போதும் உண்டு
விராட் :-
இன்று வரை அத்தகைய குற்றச்சாட்டு இல்லை.

சச்சின் :-
உடற் தகுதி  சராசரி ... பிற் பகுதியில் காயம் அதிகம் அடைந்தார்

விராத்:-
மிக  சிறந்த உடற் தகுதியை தொடர்கிறார் ,நீண்ட காலம் தொடர்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது .

விஞ்ஞான வளர்ச்சியும், நவீனமாகும்  மட்டைகளும் , மட்டையாளர்களுக்கு உதவும் விதிகளும் விராத் கொஹ்லி க்கு  சச்சினை காட்டிலும் சிறந்தவராக தொற்றம் அளிக்க   உதவி செய்கிறது

ஆனாலும் ஒருநாள்  மற்றும் 20 ஓவர் போட்டியில்  chase செய்யும் பொழுது விராட் கொஹ்லி சச்சினை விட சிறந்த வராக தோன்றுகிறார் .
ரன்களை துரத்தும் பொழுது சச்சின் பெரும் பாலும் வெற்றி கோட்டை எட்டும் முன் சொதப்புவார் ..

நிங்களே முடிவு  செய்து கொள்ளுங்கள் ...


வெள்ளி, 25 மார்ச், 2016

நமக்கு நாமே திமுகா வும் , உடைக்கப்படும் பிம்பங்களும்


PK திரைபடத்தில் வேற்று கிரகத்திலிருந்து வரும் ஆமிர் கானுக்கு பூமியில் காணும் எல்லா விஷயங்களும் ஆச்சர்யமாக இருக்கும் ..
அது போல 2 முறை மேயர் , துணை முதல்வர்,மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஆக இருந்த ஸ்டாலின் நமக்கு நாமே என்று பயணம் செய்தார்..
அவருக்கு ஆட்டோவில் செல்வது , ரோட்டு கடையில் டீ குடிப்பது , tractor ஓட்டுவது என்று PK  அமீர் கானை விட சிறந்த நடிப்பை வெளிபடுத்தினார் ..
அதிகாரத்தில் இருந்த பொழுது மிக சிலரால் மட்டும்  அணுக முடிந்த ஸ்டாலின் இன்று எல்லா வித்தைகளையும் செய்து பார்த்தார்..

மிக பெரிய எழுச்சியை அது உருவாகியதாக திமுக ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது ...அந்த பொய்யை அனைத்து கட்சிக்காரர் களும் நம்ப ஆரம்பித்தனர்.
ஆனால் கலைஞர் மட்டும் நம்ப வில்லை ..அவருக்கு தெரியும் இதை விட பெரிய வித்தைகளை தான் செய்த போதும் நம்பாத  மக்கள் இதை நம்ப போறார்களா  என்ற சந்தேகம் வந்தது..
அவரும்  கூட்டணி கணக்கு தான் உதவும் என்ற நம்பிக்கையில் விஜயகாந்த் எண்ணும் பிம்பத்தை நம்பினார்..அதையும் திமுக ஊடகங்களின் உதவியில் விஜயகாந்த்,காங்கிரஸ் ,தி மு கா  சேர்ந்தால் வெற்றி  பெறும் எண்ணும் பிம்பத்தை கட்டமைத்தனர்..
அதுவும் இப்போது விஜயகாந்த்தால் உடைக்கப்பட்டு விட்டது.

இபொழுது சோர்ந்து கிடக்கும் கட்சியினருக்கு நம்பிக்கை உட்ட பாமக வை இழுக்க முயற்சி செய்கின்றனர் ..அதுவும் முடியாவிட்டால்  என்ன செய்வது ..
அழகிரி மீண்டும் வந்தால் கட்சி எழுட்சி பெறும் எனும் பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்..