வியாழன், 5 மே, 2016

தனி ஒருவன் வசனமும், தமிழக அரசியல் உதாரணமும்

ஜெயம் ரவி தனி ஒருவன் ல ஒரு வசனம் பேசுவார்.. திடீர்ன்னு முதல் பக்கத்துல உள்ள செய்திக்கும் மூணாம் பக்கத்துல உள்ள செய்திக்கும் உள்ள சம்பந்தம் புரிய ஆரம்பித்து விட்டது என்பார்
அது போல நீயூஸ் 7 கருத்து கணிப்புக்கும் அது நடுவுல வர்ற மனிதன் பட விளம்பரத்துக்கும்,
சன் டீவில விகடன் வழங்கும் தெய்வமகள் பாத்துக்கிட்டு ஜுனியர் விகடன் வர்ர செய்திக்கும்,
தமிழ் Oneindia Editor 1 வருடம் முன்பு கலைஞரை நேரில் பார்த்ததுக்கும் அதற்கு பிறகு வர்ர செய்திக்கும்
உள்ள சம்பந்தம் புரிய ஆரம்பிக்குது

புதன், 4 மே, 2016

உலகின் சக்தி வாய்ந்த பதவியில் ஒரு விஜயகாந்த் .. திரு டொனால்ட் டிரம்ப்

உலகின் சக்தி வாய்ந்த பதவியில் ஒரு விஜயகாந்த் .. திரு டொனால்ட் டிரம்ப்
உள்ளுர் கவுன்சிலர் தேர்தல் பத்தியே கவலை  படாத நாம்  ஏன் அமெரிக்க அதிபர் தேர்தல் பத்தி கவலை பட வேனும் நினைச்சாலும்  நம்ம கவுன் சிலர் நல்லா இல்லாட்டி நம்ம தெரு தான் நாறும்.. அமெரிக்க அதிபர் சரியா இல் லாட்டி உலகமே நாறிடும்...
அது  இல்லாம இன்னைக்கு நாம பாக்குற வேலை   நாளைக்கு நிலைக்குமா இல்லையாங்குறதும் இந்த பதவியில் இருப்பவரின் செயல்பாடுகளும் முடிவு செய்யும்.

டொனல்ட் trump பெரும் பணக்காரர்.. அவரது  கட்சியின் சார்பில் அவரது வேட்பு மனு ஏறதாழ உறுதியாகி விட்டது .
இவரது பேச்சுகள் மிகவும் அதிரடியாக விஜயகாந்தை விட மோசமாக சீமான்  போல் உள்ளது .
ஒரு நாள் இந்திய மென்பொருள் நிறுவனங்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என்றும், மறுநாள் முஸ்லிம்களை உள்ளே விட கூடாது என்றும், இன்னொரு நாள்  சீனாவின் வர்தகத்கத்தை அழிக்க வேண்டும் என்று கூறி பயம் ஏற்படுத்துகிறார் .

இவரு கடைசியில் ஜெயிப்பாரா?   ஜெயித்து அதிபர் பதவியில் அமர்ந்தால் பெரிதாக எதுவும் செய்யாமல் சும்மா விடுவாரா ?   எதாவது ஒரு நாட்டோட சண்டை போடுவாரா ? IT  ஆளுங்கள ஊருக்கு அனுப்பு வாரா?     எல்லாம் கடவுள் தான் அறிவார்

திங்கள், 2 மே, 2016

வளர்ச்சி கதையின் முடிவு சோகமா? இல்லை சந்தோஷமா

வளர்ச்சி

நண்பர் ஒருவர் கூறியது

எனது தாத்தா கிராமத்தில் நிலம் வைத்து மிராசுதாராக இருந்தார்... என் தந்தை அரசு வேலை தேடி கொண்டு தனது சம்பாத்தியத்தை கொண்டு தஞ்சை நகரில் வீடு கட்டி குடியேறினார்.. என்னை படிக்க வைத்தார்.. நான் தகவல் தொழில் நுட்பத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு சென்னையில் வீடு கட்டி குடியேறி விட்டேன்.. எனது மகன் நாளை வெளிநாட்டில் வேலை தேடி கொண்டு வெளிநாட்டில் குடியேறுவான்.. வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொரு கட்டமாக கிராமத்தில் இருந்து சிறு நகரம், பிறகு பெருநகரம், வெளிநாடு என்று குடியேறுகிறோம்....
நமது வருமானத்தில் பெரும் பகுதியை நாம் வாழும் இடத்தில் வீடு வாங்குவதற்கே செலவிடுகிறோம்.
இந்த  பொருளதார வளர்ச்சி என்னும் சக்கரத்தில் சிக்கி என் தந்தை என் தாத்தாவையும், நான் என் தந்தையையும் பிரிந்து தனியாக வாழ்ந்தார்கள், நாளை எனது மகன் என்னையும் விட்டு பிரிவான். ..
இத்தனைக்கும் காரணம் வேலை, சூழல் என்று சொன்னாலும் விவசாயம் லாபம் இல்லாத தொழிலாக மாறியது தான்.

கடைசியாக சாப்பிடுவதற்கு மனிதன் இருக்கும் வரை, விவசாயம் அழியாது ஆனால் விவசாயி அழிந்து விடுவான்..
லாபம் வரும் எந்த தொழிலையும் செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்கள் கையில் விவசாயம் செல்லும்...
மிராசுதார்  என்று சொந்தமாக விவசாயம் செய்த இடத்தில் நாமே பெரிய நிறுவனத்தின் கூலி பணியாளராக வேலை செய்வோம்.. இது தான் இந்த வளர்ச்சி கதையின் முடிவு


இந்த வளர்ச்சி  கதையின் முடிவு சோகமா? இல்லை  சந்தோஷமா? குழப்பத்துடன் நான்

சனி, 30 ஏப்ரல், 2016

மனிதன் உதய நிதியின் ஊருக்கு உபதேசம்

மனிதன் உதய நிதியின் ஊருக்கு உபதேசம் 

இந்தியில் வெற்றி பெற்ற ஜாலி LLB படத்தின்  தமிழில் மறு ஆக்கம் செய்து உள்ளனர் .முடிந்த வரை நன்றாகவே எடுத்துள்ளனர்.

பலம் :-
வெற்றி பெற்ற மிக சிறந்த திரைக்கதை. ராதா ரவி மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பு அருமை அதுவும் ராதாராவி நீண்ட இடைவேளைக்கு பிறகு பின்றார் .
 பிரகாஷ் ராஜ் கொஞ்சம் எரிச்சல் வருகிற மாதிரி இருந்தாலும் அந்த வேடத்திற்கான தேவையை நிறைவு செய்த்துள்ளார் ,,
உதயநிதி மற்றும் ஹன்சிகா இருவரும் கடைசியாக நடித்து உள்ளனர் 

பலவீனம் :-
மிக  மெதுவான முதல் பாகம் . வசனங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் ..இழுத்து போர்த்தி கொண்டு வரும் ஹன்சிகா ..


திரைக்கதை  மட்டும் நடிபிற்காக பார்க்கலாம் ..


பிளாட்பார  மனிதர்களுக்காக உதயா நிதி நீதி கேட்டு உருக்கமாக பேசும் போது ..நமக்கு தான் தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பு ,தா  கி கொலை வழக்கு எல்லாம் வந்து தொலைகிறது ...
இந்த  வசனங்களை தனது அப்பா ,மற்றும் தாத்தாவிடம் பேசி பார்க்கலாம் ..


வெள்ளி, 29 ஏப்ரல், 2016

இன்றைய வாழ்க்கை.. அரசியல்

வாழ்க்கை இப்பெழுது நெருங்கியவர்களின் சாவு கூட வார இறுதியில் வந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு இயந்திரதனமாக ஆகிவிட்டது...

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக வை பிடித்து வாக்களிப்பவர்களை விட திமுகவை பிடிக்காமல் அதிமுகவுக்கும், அதிமுகவை பிடிக்காமல் திமுகவுக்கும், வாக்களிப்பவர்களே அதிகம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிப்பவர்களுக்கு சிறை தண்டனை
.. கருணாநிதி ... அப்டின்னா
மேடையில் இருப்பவர்களில் பாதி பேர் ஜெயிலில் தான் இருப்பார்கள் தலைவா

வியாழன், 14 ஏப்ரல், 2016

தெறி - தெறிக்க விட்டார்களா ...இல்லை தெறித்து ஒட விட்டார்களா


மொத்தம்  10 கதைகள்  தான் இருக்கிறது, அதையே திரைக்கதையில் மாற்றி மாற்றி சொல்ல வேண்டும் என்பார்கள், அது  போல மௌன ராகத்தை திரை கதையால் மாற்றியமைத்து  வெற்றியடைந்த அட்லீ இந்த படத்தில் சத்ரியன் , என்னை அறிந்தால், படத்தை மாற்றி வெற்றி அடைந்து உள்ளார்.

பலம் :-
விஜய், ராதிகா ,சமந்தா பிளாஷ் பா(ச)க் காட்சிகள் , விஜய் மற்றும் நைநிகா வின் கெமிஸ்ட்ரி,மகேந்திரன் வித்தியாசமான வில்லத்தனம், ஹிட் ஆன பாடல்கள் .

பலவீனம் :-
ரொம்ப  பழைய  கதை, கடைசி 30 நிமிடங்கள், கடைசியில் வில்லன்கள்   பெரிதாக எதுவும் செய்ய முயற்சி கூட செய்யவில்லை .விஜயும் தான்.

தெறிக்க விடா விட்டாலும் , வேதாளம் மற்றும் புலி க்கு எவ்ளோ பரவா இல்லை ..
துப்பாக்கி ,கத்தி யுடன் compare செய்ய முடியாது 

சில கிளாஸ் காட்சிகள் உள்ள சாதாரண படம்.


புதன், 13 ஏப்ரல், 2016

தி மு கா வேட்பாளர் பட்டியல் - மாற்றமா ? ஏமாற்றமா ?

தி மு கா வேட்பாளர்  பட்டியல்  வெளியாகி விட்டது.பெரிய  அளவில்  மாற்றம் இருக்கும்  என எதிர்பார்க்க பட்டது .பல மாவட்ட செயலாளர் களுக்கு சீட் கிடையாது என்று எழுதி வாங்க பட்டதாக கூறினார்கள் ,ஆனால் வேட்பாளர் பட்டியலில் மீண்டும்  குறுநில மன்னர்களான நேரு,பொன் முடி, எ வா வேலு ,துரை  முருகன் , இ பெரிய சாமி மற்றும்  மகன், சுரேஷ்  ராஜன், வீரபாண்டி ராஜா ..அனைவருக்கும் சீட் வழங்க பட்டு உள்ளது ..

தான்  மட்டும்  வாரிசு  அரசியலில் ஈடுபடுவதாக குறை கூறி விட கூடாது என்பதற்காக  கருணாநிதி அனைத்து வாரிசுகளுக்கும்  சீட்  தந்து உள்ளார்.

 89,91,96,2001,2006,2011 வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களில் 30% தொடர்ந்து இடம் பெறுகின்றனர் , மேலும் 20%  அந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் வாரிசுகளாக இருகின்றனர்.தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஒருவரோ  அவரது குடும்பத்தினரோ வேட்பாளராக இருந்தால் மீதி தொண்டர்கள் எதுக்கு கட்சியில் இருக்கிறார்கள்  என்று தெரிய வில்லை ...

மாற்றத்தை தர போகிறோம் , சென்ற முறை  செய்த தவறுக்கு வருந்துகிறோம் என்று  நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலின்  கூறினார் .. வேட்பாளர் பட்டியலை பார்த்தால் தவறுக்கு வருந்திய மாதிரி தெரியவில்லை ..

30 வருடமாக  ஒரு வேட்பாளர்  பட்டியலில் கூட மாற்றத்தை தர முடியாதவர்கள் ..எத்தகைய மாற்றத்தை தர போகிறார்கள் ..

மாற்றம் ஒன்றே மாறாதது  என்று கூறுவார்கள் , தி  மு கா வை   பொருத்தவரை  மக்களின் ஏமாற்றம்   ஒன்றே மாறாதது
மாற்றமா ? ஏமாற்றமா