திங்கள், 2 மே, 2016

வளர்ச்சி கதையின் முடிவு சோகமா? இல்லை சந்தோஷமா

வளர்ச்சி

நண்பர் ஒருவர் கூறியது

எனது தாத்தா கிராமத்தில் நிலம் வைத்து மிராசுதாராக இருந்தார்... என் தந்தை அரசு வேலை தேடி கொண்டு தனது சம்பாத்தியத்தை கொண்டு தஞ்சை நகரில் வீடு கட்டி குடியேறினார்.. என்னை படிக்க வைத்தார்.. நான் தகவல் தொழில் நுட்பத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு சென்னையில் வீடு கட்டி குடியேறி விட்டேன்.. எனது மகன் நாளை வெளிநாட்டில் வேலை தேடி கொண்டு வெளிநாட்டில் குடியேறுவான்.. வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொரு கட்டமாக கிராமத்தில் இருந்து சிறு நகரம், பிறகு பெருநகரம், வெளிநாடு என்று குடியேறுகிறோம்....
நமது வருமானத்தில் பெரும் பகுதியை நாம் வாழும் இடத்தில் வீடு வாங்குவதற்கே செலவிடுகிறோம்.
இந்த  பொருளதார வளர்ச்சி என்னும் சக்கரத்தில் சிக்கி என் தந்தை என் தாத்தாவையும், நான் என் தந்தையையும் பிரிந்து தனியாக வாழ்ந்தார்கள், நாளை எனது மகன் என்னையும் விட்டு பிரிவான். ..
இத்தனைக்கும் காரணம் வேலை, சூழல் என்று சொன்னாலும் விவசாயம் லாபம் இல்லாத தொழிலாக மாறியது தான்.

கடைசியாக சாப்பிடுவதற்கு மனிதன் இருக்கும் வரை, விவசாயம் அழியாது ஆனால் விவசாயி அழிந்து விடுவான்..
லாபம் வரும் எந்த தொழிலையும் செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்கள் கையில் விவசாயம் செல்லும்...
மிராசுதார்  என்று சொந்தமாக விவசாயம் செய்த இடத்தில் நாமே பெரிய நிறுவனத்தின் கூலி பணியாளராக வேலை செய்வோம்.. இது தான் இந்த வளர்ச்சி கதையின் முடிவு


இந்த வளர்ச்சி  கதையின் முடிவு சோகமா? இல்லை  சந்தோஷமா? குழப்பத்துடன் நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக