செவ்வாய், 19 ஜூலை, 2016

நாம் சிறப்பாக வளர்கிறோமா நமது குழந்தைகளை ?

Big indian family on bike



முந்தைய தலைமுறையை  விட  நாம்  நமது  குழந்தைகளை  சிறப்பாக  வளர்ப்பதாக   நினைக்கிறோம்

முன்பு எல்லாம்  பெரும்பாலும் குடும்பத்தில்  யாராவுது ஒருவர் மட்டும்தான் தான்   படித்து நகரத்தில்  வேலை  செய்து  கொண்டு  இருந்தார்கள் ,  குழந்தைகளும்  அதிகம் . அதனால் நகரம் , மற்றும்  சிறு  நகரங்களில்  வசிக்கும்  பெரியப்பா ,சித்தப்பா , மாமா  குடும்பத்தில்  உறவினர்கள்  வீட்டில்  தங்க வைத்து     பிள்ளைகளை  படிக்க  வைக்கும்  வழக்கம் இருந்தது. இது  கூட்டு குடும்பத்தை  விட  மிகவும்  சிக்கலானது ஆனாலும்  பெரியவர்கள் மிக  திறம்பட நிர்வாகம்  செய்தனர் .
பெரியவர்கள்பெரும்பாலும்  தங்களது குழந்தைகளுக்கும்  உடன்  பிறந்தவர்களது  குழந்தைக்கும்    வேறுபாடு காட்ட  மாட்டார்கள் . அனைவரும்  ஒன்றுதான் . 
குழந்தைகள்  இடையே  விட்டு  கொடுக்கும்  வழக்கமும் , எந்த  பிரச்சனையையும்  தங்களுக்குள்  தீர்த்து  கொள்ளும்   மனப்பான்மையும்  இருந்தது. இன்று  கார்பொரேட்  நிறுவனங்கள்  நடத்தும்  குழு கட்டமைப்பு மற்றும்  மேம்பாடு  (team  Building )  போன்றவற்றை இயற்கையாகாவே  கற்று  கொண்டனர்.

மற்ற குழுந்தைகள் பெரியப்பா /சித்தப்பா  என்று  கூப்பிடுவதை  பார்த்து  சொந்த  குழந்தையும் அப்படியே  கூப்பிடுவதும்  நிகழும் .பெரும்பாலான  குழுந்தைகளுக்கு  சற்று விவரம்  தெரிந்த  பின் தான்  யார்  சொந்த சகோதரன்/ சகோதரி  , யார்  உடன் பிறவா சகோதரன் /சகோதரி  என்பதையே  தெரிந்து  கொள்வார்கள் .

அப்போது  இந்த அளவு  பொருளாதார  வசதி  இல்லாவிட்டாலும்  பகிர்ந்து  கொள்ளும்  பழக்கம் இருந்தது.  இவளவு அதிகமான  கல்வி கட்டணம் கிடையாது  என்பதும் உண்மை,

இப்போது அத்தகைய  பழக்கம்  முழுக்க  ஒழிந்து  விட்டது , பெரும்பாலும்  ஒன்று  அல்லது  இரண்டு குழந்தைகள் , யாரும்  யாரையும்  நம்பி தங்களது  குழந்தைகளை  விட தயாராக  இல்லை , அப்படியே  விட்டாலும்  யாருக்கும்  அடுத்தவர்  குழுந்தையை  பார்த்து  வளர்க்கும்  அளவுக்கு பொறுமை  இல்லை .
மிக  அதிகமான  கல்வி  கட்டணம் ஒரு காரணம்  கூட , 
குழுந்தைகளும் எந்த  ஒரு  பிரச்சினைக்கும்  பெற்றோர் களிடம் தான்  செல்கிறது . பகிர்ந்து  கொள்ளும்  பழக்கும்  அறவே  குறைந்து  உள்ளது, தோல்வியை  தாங்கும்  மனப்பாண்மை யும் குறைந்து விட்டது.

இத்தகைய  சூழலில்  படித்து    வளர்ந்தவர் கள்  தங்களது  அனுபவங்களை  சொல்லுங்கள் .. அது சிறந்ததா  , இது  சிறந்ததா என்று..




வெள்ளி, 8 ஜூலை, 2016

கடுமையாக உழைக்கிறாரா இந்திய பிரதமர் ?

புது டெல்லியில் ஒரு  பிரெஞ்சு பெண்மணியிடம் ஒரு  பிஜேபி  உறுப்பினர் எங்களது  பாரத பிரதமர் கடுமையாக உழைக்கிறார் ,சிறிது  நேரம்  மட்டுமே  உறங்குகிறார் . உதாரணமாக  நேற்று  கூட பாஸ்ப்போர்ட்டை இழந்து  வெளிநாட்டில் தவித்த ஒருவருக்கு உடனடியாக பாஸ்ப்போர்ட் கிடைக்க உறுதி செய்தார் . தனது ஓய்வூதியம் கிடைக்காமல்  அவதி பட்ட ஒரு ஆசிரியருக்கு உதவி  செய்து உடனடியாக கிடைக்க செய்தார் என்று  விளக்கி கொண்டு இருந்தார் .
இதை  கேட்டு  ஆச்சரியம்  அடைந்த அந்த பெண்மணி " ஏன்  உங்கள்  நாட்டில் கடுமையான ஆட் பற்றாகுறை நிலவும்  போல , பிரதமர் பாஸ்ப்போர்ட் அலுவலக மற்றும்  ஓய்வு ஊதிய  துறை  வேலை  எல்லாம்  செய்தால்  எப்படி  தூங்க  நேரம் கிடைக்கும் , அவர் பிரதமர்  வேலையை  கூட பார்க்க வேண்டுமே  " என்றார் .

அதை  கேட்டு  அதிர்ச்சி  அடைந்த பிரமுகர் " இல்லை  பிரதமர்  அலுவலகத்தில்  பலர்  இந்த வேலைகளையும்  செய்கின்றனர் , பிரதமர் அவர்களை  மேற்பார்வை இடுகிறார் " என்றார் .

இந்த முறை  சிறப்பாக  செயல் படும் என்றால் பாஸ்ப்போர்ட் அலுவலகம்  மற்றும்  ஓய்வு  ஊதிய  துறைகளை  பிரதம  மந்திரி  அலுவலகமே பார்த்து கொள்ளலாமே என்று   அந்த  பெண்மணி கூறினார்.
இதை  கேட்ட  பிஜேபி  பிரமுகர் கோபமாக  வெளியேறினார் .

அந்த பெண்மணி சிறிது குழப்பத்துடன் என்னிடம் நானே எதுவும் தவறாக கேட்டு விட்டேனா என்று  கேட்டார் .. நான் அவரிடம்  நீங்கள்  இந்திய திரை படங்களை  பார்த்தது  உண்டா  என்று கேட்டேன் .அவர் இல்லை  என்றார்  அதுதான் உங்கள் பிரச்சினை என்று கூறினேன் .

பெரும்பாலும்  இந்திய  படங்களில்  எல்லா  பிரச்சினைகளையும் ஒரு சூப்பர்  ஹீரோ  தீர்த்து  வைப்பார் . அதையே  பிடித்து  கொண்ட அரசியல் வாதிகளும் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் ஒரு  மனிதர்  தீர்த்து  வைப்பார் என்னும் பிம்பத்தை கட்டமைக்கின்றனர் .அதில்  ஒரு பகுதிதான்  இது என்று  விளக்கினேன் .

ஒரு  நாடு  நன்றாக  இருக்க வேண்டுமானால்  ஒரு  தனி மனிதரால் மாற்றத்தை தர  முடியாது மக்கள் மனது  வைத்தால் தான் முடியும் .

(Courtesy :Mumbai Mirror Article)

"Public/System can make change. super hero cant make the change"

Note:- 

நாங்கள் பெரும்பாலும்  அலுவலக பயணமாக BUSSINESS Class இல் வெளிநாடு  சென்றாலே விமானத்தில் 180Deg  படுக்கையில்  நன்றாக உறங்கி மறுநாள் விழித்தவுடன் வெளிநாட்டில் பணிகளை கவனிப்போம் .. இதில்  தனி  விமானத்தில்  செல்லும்  பிரதமர்  விமானத்தில் தூங்கி  அலுவலகம்  வருகிறார் ன்னு பெருமை வேறு . இதுவும் ஒரு  சூப்பர் ஹீரோ  நாடகங்களில் ஒன்று

சொந்த ஊரில் வாழறோமோ இல்லையோ சொந்த ஊர்லதான் சாவணும்

எங்களது  தஞ்சை மாவட்ட கிராமங்களில்  ஒரு  இறப்பு   என்றால் குறைந்தது 500 பேர் கலந்து கொள்வார்கள் சில சமயம்  பல ஆயிர கணக்கிலும்  இருக்கும்..பெரும்பாலும் ஊரே  கூடி விடும்  . பெரும்பாலும் ஓரமுறையார் (மாமா விடு) வீடுகளில் இருந்து  சமைத்து   துக்கம்  விசாரிக்க  வந்தவர்களுக்கு  சாப்பாடு தந்து  விடுவார்கள்.

எனது கிராமத்தில் பொது சுடுகாடு என்ற  பழக்கமே கிடையாது , அவரவர்கள் தங்களுக்கு சொந்தமான காவிரி கரையில் இருக்கும்கொல்லையில்  தான் எரித்து  விடுவார்கள். 

அதுவும்  மிக  வயதானவர்கள் இறப்பு ஒரு திருவிழாதான் . குறவன் ,குறத்தி டான்ஸ் , அருமையான பல்லாக்கு , ஆட்டம் ,பாட்டம் , தட புடல் சாப்பாடு  கூட... 16 நாள் கறி விருந்து , வேட்டி கட்டுதல்னு சும்மா தூள்  பறக்கும் ...பெருமபாலான வயதானவர்களை பேர பிள்ளைகள் இருக்கும் போதே தாத்தா  நீ செத்தா ஊரே அசந்து போற மாதிரி தூக்கி போடுவேன் என்று கிண்டல் செய்வதும்  உண்டு ..

இத்தகைய சாவு நிகழ்ச்சிகளை கண்டு  பழகிய  நான்  ,  வட  நாட்டில் பெரு  நகரில்  வேலை  காரணமாக வசிக்கும் எனக்கு  நேற்று  ஒரு  அலுவலக முத்த அதிகாரி  ஒருவரின்  மரணத்திற்கு செல்ல  நேரிட்டது.  அடுக்கு  மாடி  குடியிருப்பில் அவரது  வீட்டில்  விரல்  விட்டு  எண்ண    கூடிய  அளவு குடும்ப  உறுப்பினர்கள் , 20 முதல்  25 அலுவலக  நண்பர்கள்  அவ்வளவுதான் . அடுக்கு  மாடி  குடியிருப்பிற்கு  மாறி   சில ஆண்டுகள்  ஆணது  நாளோ  என்னோவோ  பெரும்பாலோனோர்  வந்து  எட்டி  பார்க்க கூட  இல்லை ..எப்படியோ  அலுவலக நண்பர்கள்  காரியத்தை  முடித்து  விட்டு வந்தோம் .

 சொந்த  ஊரில்  வாழறோமோ இல்லையோ  சொந்த ஊர்லதான்டா சாவணும் 
செத்ததுக்கு  அப்றம் எந்திரிச்சு பாக்க  போறிங்களா னு கேட்டாலும்.
மரணம்  கூட  நமக்காக  கண்ணீர் விடும் மனிதர்களிடேயே நிகழ்ந்தால் தான் சிறப்பு.

வெள்ளி, 24 ஜூன், 2016

கந்தசாமியும் , ஐரோப்பிய ஒன்றிய பிரிட்டன் பிரிவும்- நிகழ்வுகள்


இன்று  கிராமத்தில் இருந்து மகள்  திருமணத்திற்கு  நகை வாங்க டவுனுக்கு வந்த கந்தசாமிக்கு , ஐரோப்பிய  ஒன்றியத்தில்  இருந்து  பிரிட்டன்  விலகினால் பவுனுக்கு  1000 ரூ.பாய்  அதிகமாகும் என்று தெரிந்திருக்குமா என்று  தெரிய வில்லை ?

இப்பொது  எல்லாம்  உள்ளூர்  பஞ்சாயத்தில்  என்ன  நடக்குது ன்னு  தெரிஞ்சிக்கணுமோ இல்லையோ , உலகத்துல  என்ன  நடக்குதுன்னு  தெரிஞ்சுக்கணும்  போல ...

தனி ஒருவன் ஜெயம்  ரவி சொல்வது  போல , 2 பக்க பொருளாதார செய்திகள் தான் , பேப்பரில்  உள்ள  மற்ற 14 பக்க  செய்திகளையும் தீர்மானிக்கின்றது போல ..

புது யுக  ந(டி)ட்பு 

சில  அலுவலக நண்பர்களுக்கு எனது போனில் எத்தனை GB RAM இருக்கிறது என்று  தெரியும் , ஆனால் எனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறது என்று  தெரியாது 


அணில் கும்ப்ளே :-
 புதிய  பயிற்சியாளராக  அணில் கும்ப்ளே  நியமனம் :-  மீடியா  மகிழ்ச்சி , இருக்காதா  இன்னும் ஒரு வருசத்துக்கு விராட் கோஹ்லி ,கும்ப்ளே  மோதல் ,மனக்கசப்பு ன்னு போட்டு பொழுதை ஓட்டலாம் இல்ல,.

புதன், 22 ஜூன், 2016

பிரதமரை பார்த்து உலகம் வியக்கிறதா ?

எத்தகைய நாடு இது என்று
 ..
 20 செயற்கை கோள்களுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தி  வெற்றி  அடைகிறது , மறுபக்கம் இந்தியாவின் பொருளாதார  தலைநகரமான மும்பையில்   2 சென்டி மீட்டர் மழை  பெய்ததால் 300 ரயில்கள் ரத்து  செயப்பட்டு , அன்றாட வாழ்க்கை  ஸ்தம்பிகிறது.
இவ்ளோ  திறைமைசாலிகள் இருந்தும் அடிப்படை வசதிகள்  பெரு நகரங்களிலும் இன்றும் பூர்த்தி  அடைய  வில்லை.

உலக  அரங்கில் இந்தியாவை தலை நிமிர  செய்வேன் என்ற மனிதர் எதாவுது செய்வார் பார்த்தால்  2000 கோடி க்கு அமெரிக்க அதிபரை போல் விமானம் வாங்குகிறார் .10 லட்சம்  ரூபாய்க்கு  சட்டை  போடுகிறார் ..இனிமேல்  இந்தியாவை பார்த்து  உலக  நாடுகள்  வியக்கும்  என்கிறார் .
 நீங்கள் அமெரிக்க  அதிபரை போல் வசதிகளை அனுபவியுங்கள்  ஆனால்  நீங்கள்  இந்திய குடிமகன்களுக்கு அமெரிக்க  குடிமகன் கள் போல் அல்ல  சாதாரண  அடிப்படை  வசதிகளை  பூர்த்தி  செய்து  விட்டு  அனுபவியுங்கள்.

கோடிக்கணக்கில்  செலவு  செய்து  யோகா  தினம்  கொண்டாடுகிறார். யோகா  நல்லது  தான் அதை சொல்ல எல்லா  அரசாங்க  நிகழ்ச்சி  தேவையா ?  பத்தாததுக்கு  சாமியார்க்கு  எல்லாம்  free  புபிளிசிட்டி  வேற ?

முன்னேறிய  நாடுகளின்  பிரதமர்கள்இன்றும்   சைக்கிளில் கூட  அலுவலகம்  செல்கிறார்கள் .  இந்திய  பிரதமரை பார்த்து  உலகம்   30 கோடி  மக்கள்  வறுமை  கோட்டில்  வாழும்  தேசத்தின்  தலைவர் இப்படி  எப்படி வீண்  செலவு  செய்கிறார்  என்றுதான்  வியக்கிறது  .

பிரதமரை  பார்த்து  உலகம்  வியக்கிறதா ?

செவ்வாய், 7 ஜூன், 2016

நாமும் தோனியல்ல .. வாழ்க்கையும் கிரிக்கட் போட்டியுமல்ல.

                               

    திரு கபில்தேவ் 2011 உலக கோப்பை   இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது தோனியை பற்றி கூறியது
தோனி பல தவறான முடிவுகளை போட்டியின் போது எடுக்கிறார். (யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக களமிறங்கியது, அஸ்வினை இறுதி போட்டியில் நீக்கியது போன்றவை) ஆனால் கடுமையாக போராடி தனது தவறான முடிவுகள் சரியானதுதான்  என நிருபித்து விடுகிறார்

நாமும்  வாழ்வில்  நாம் எடுத்த பெரும்பாலான தவறான முடிவுகளை சரி என நிருபிக்கும் போராட்டத்திலேயே  விணடித்துவிடுகிறோம்...
 நாமும் தோனியல்ல .. வாழ்க்கையும் கிரிக்கட் போட்டியுமல்ல.

..
தவறை ஒப்பு கொண்டு , ஒவ்வொரு தருணங்களையும் ரசிப்பதே  வாழ்க்கை

சனி, 4 ஜூன், 2016

மலையாள படம் பார்த்த அனுபவங்கள்



 எனது மலையாள பட அனுபவங்கள்' என்றவுடன்  ஷகிலா படங்கள் என நினைத்து படிக்க வந்தால் நான் பொறுப்பல்ல.  கல்லூரி காலங்களில் தேவைக்கு அதிகமாக அந்த படங்களை பார்த்து விட்டதால்   பதிவு அதை  பற்றியதல்ல.
எனக்கு மலையாளம் ஒரளவு புரியும் என்றாலும் மலையாள திரைப்படங்கள் அதிகம் பார்பதில்லை... இணையத்தில் மலையாள படங்கள் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது முதல் 15 நிமிடங்கள் மிகவும் கடினமாக இருக்கும், மொழியும், அவர்களது மெதுவான கதை சொல்லும் பாணியும் சிறிது அயர்ச்சியை தந்து நிறுத்த தோன்றும்... பெரும்பாலும் நிறுத்தியும் விடுவேன்
 15 நிமிடங்களை தாண்டி விட்டால் கதையோடு ஒன்றி, மொழியும், கதை சொல்லும் பாணியும் பிடிபடும் பிறகு அது ஒரு சுவையான அனுபவமாக தோன்றும்... மிகவும் தாமதமாக நான் பார்த்தாலும் சார்லி படம் ஒரு அனுபவமாகவே இருந்தது.. வண்ணமயமான ஒளிப்பதிவு,   பின்னணி பாடல்கள்,அழகான பார்வதி, எப்பொழதும்  துடிப்பான துல்கர்.. சில பல மேஜிக்கல் மொமன்ட்ஸ்...try to watch it..
 தமிழில் ஆர்யாவோ, Sri திவ்யாவோ நடித்து ( கெடுத்து) வெளிவரும் முன் மலையாளத்தில் பார்த்து விடுங்கள்