புதன், 24 பிப்ரவரி, 2016

முகநூலில் கண்டபடி LIKE வாங்குவது எப்படி

40-50 கோடி போட்டு படம் எடுத்த Producer கூட public response பத்தி அவ்ளோ கவலை பட்டிருக மாட்டார் ... FACEBOOK la 4 வரி status போட்டு நம்மாளுங்க public response பத்தி ரொம்ப கவலை பட்டு கொண்டிருகிறார்கள்
அவர்களுக்காக facebookla likes, comments வாங்க சில எளிய யோசனைகள்
For House wifes
1. சமைச்ச சாப்பாட்டை புருசனுக்கு போடறிங்களோ இல்லையோ போட்டோ எடுத்து facebookla போட்டு விடுங்கள்.
2. நாம சமைச்சு பாத்து வாயில் வைக்க முடியா விட்டாலும் , சமையல் குறிப்பை facebookla போட்டு விடுங்கள் ( அடுத்தவருக்கு workout ஆனாலும் ஆகும்.
3. வீட்டு சமையலுக்கு வைத்து இருக்கிற கடலைமாவு, முட்டை,வெள்ளரி பிஞ்சு, எல்லாத்தையும் முஞ்சில அப்புங்கனு அழகு குறிப்பு குடுங்க ...( நம்ப வீடு மளிகை சமாணா வீணாக போகுது).
4. காலைல புருஷனை கண்டபடி சண்டை போட்டு officeku தொரத்தி விட்டு இருந்தாலும் பரவா இல்லை , Facebookla " I miss him " he is my love nu" பீல் பண்ணி status போடுங்க.
For College girls
1. ரோட்ல போற நாய்குட்டி , பூனைக்குட்டி ,அணில் , இவைகளை எல்லாம் போட்டோ எடுத்து " I Love Animals" nu மேனகா காந்திய மிஞ்சிற மாதிரி பீல் பண்ணி upload பண்ணுங்க.
2. platform கடைல பத்து ரூபாக்கு Hair கிளிப் வாங்கிட்டு , ரோடு கடைல பானி பூரி சாப்பிட்டு விட்டு ," shopping at phoenix mall and dinner at pizza hut " ஒரு status போடுங்க.
3. அடிகடி "Feeling Unwell" Feeling sick" nu Status போடுங்க , மூனு மாசமா அம்மா முட்டு வலின்னு சொல்லி கொண்டு இருப்பதை காதில் வாங்காத பசங்க எல்லாம் "Take care""Get well soon" see the doctor" Pray God for recovery" nu கமெண்ட்ஸ் போட்டு தள்ளி விடுவார்கள்.
For Bachelor boys
1. அஜித் போல கோட் , வேஷ்டி,கண்ணாடி, வெள்ளை தாடி வச்சி, இதெல்லாம் அவுருக்கு நல்லாருக்கும் நமக்கு நல்லா இருகுமானு யோசிச்சு பார்காம அதே மாதிரி ஸ்டில் குடுத்து பீதிய கிளப்புங்க.
2. வெள்ளி கிழமை சாயங்காலம், எவ்ளோ மொக்கையான , புரியாத மொழி படமா இருந்தாலும் முழுசா உட்காந்து பாத்து facebookla கண்டபடி விமர்சனம் செய்யுங்க ( நாம காசு போட்டா படம் எடுத்தோம்).
For MENS
1. ரோட்ல பிச்சை எடுப்பவருக்கு 1 ரூபா போடதவரா இருந்தாலும் பரவா இல்லை , Facebookla ஏழைகளுக்கு இரக்க படுவதில் அன்னை தெரசாவை மிஞ்சி விடுங்கள்
2. corporate officela, private bankla உக்காந்து கல்லா கட்டி கொண்டு இருந்தாலும் பரவா இல்லை, Facebookla முதலாளித்துவம் , புரட்சி , போராட்டம்னு கண்டபடி கண்டனம் தெரிவியுங்க
3. சுதந்திர தினத்தன்று Qaurter அடித்து குப்புற படுத்து கிடப்பவராக இருந்தாலும் பரவா இல்லை, Facebookla பாரத தேசத்துக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிற மாதிரி பீல் பண்ணுங்க.
4. Duplicate Rent receipt, Fuel bill குடுத்து tax savings பண்றவரா இருந்தாலும் பரவா இல்லை, Facebookla லஞ்சம்,ஊழல் , கண்டால் அன்னா ஹசாரே வை தாண்டி பொங்கி வழியுங்கள்.
5. டூர் ku சென்று ஹோட்டல் சாப்பாடு ஒதுக்காம வாந்தி எடுத்து இருந்தாலும் , மொக்கை climate la மண்டை காஞ்சு போனாலும் ,Facebookla " Super trip"nu சொல்லி போட்டோ upload பண்ணிடுங்க.
6. சுதந்திர போராட்ட வீரர்கள் , ராணுவ வீரர்கள் , மாற்று திறனாளிகள், படத்தை போட்டு ,நடிகைக்கு லைக் போடுவிங்க இவருக்கு போடமாட்டிர்கள்ன்னு செண்டிமெண்ட் அட்டாக் பண்ணுங்க.
7. வீட்ல புள்ளைக்கு முதல் மொழியாக தமிழுக்கு பதில் சமஸ்க்ரிதம் அல்லது German எடுக்க சொன்னவராக இருந்தாலும் பரவா இல்லை .... Facebookla . தமிழ் என் மூச்சு..தமிழ் எங்கள் வாட்சுன்னு பீல் பண்ணுங்க..
இவற்றை எல்லா வற்றை விட முக்கியமானது..
1. ஊரார் status கு ஓடி போய் லைக் போட்டால் உன் status கு லைக் தேடி வரும்..
2. நம்மை விட வெட்டியாய் இருக்கும் 50 friends facebookla வைத்து கொள்ளுங்கள்
இது முழுவதும் நகைச்சுவை காக ...யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.
பாதி படிச்சது.. கொஞ்சம் சொந்த சரக்கு..
புடிச்சிருந்தா லைக் போடுங்கள்

தமிழ் பிழைக்கு மன்னிக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக