வெள்ளி, 8 ஜூலை, 2016

சொந்த ஊரில் வாழறோமோ இல்லையோ சொந்த ஊர்லதான் சாவணும்

எங்களது  தஞ்சை மாவட்ட கிராமங்களில்  ஒரு  இறப்பு   என்றால் குறைந்தது 500 பேர் கலந்து கொள்வார்கள் சில சமயம்  பல ஆயிர கணக்கிலும்  இருக்கும்..பெரும்பாலும் ஊரே  கூடி விடும்  . பெரும்பாலும் ஓரமுறையார் (மாமா விடு) வீடுகளில் இருந்து  சமைத்து   துக்கம்  விசாரிக்க  வந்தவர்களுக்கு  சாப்பாடு தந்து  விடுவார்கள்.

எனது கிராமத்தில் பொது சுடுகாடு என்ற  பழக்கமே கிடையாது , அவரவர்கள் தங்களுக்கு சொந்தமான காவிரி கரையில் இருக்கும்கொல்லையில்  தான் எரித்து  விடுவார்கள். 

அதுவும்  மிக  வயதானவர்கள் இறப்பு ஒரு திருவிழாதான் . குறவன் ,குறத்தி டான்ஸ் , அருமையான பல்லாக்கு , ஆட்டம் ,பாட்டம் , தட புடல் சாப்பாடு  கூட... 16 நாள் கறி விருந்து , வேட்டி கட்டுதல்னு சும்மா தூள்  பறக்கும் ...பெருமபாலான வயதானவர்களை பேர பிள்ளைகள் இருக்கும் போதே தாத்தா  நீ செத்தா ஊரே அசந்து போற மாதிரி தூக்கி போடுவேன் என்று கிண்டல் செய்வதும்  உண்டு ..

இத்தகைய சாவு நிகழ்ச்சிகளை கண்டு  பழகிய  நான்  ,  வட  நாட்டில் பெரு  நகரில்  வேலை  காரணமாக வசிக்கும் எனக்கு  நேற்று  ஒரு  அலுவலக முத்த அதிகாரி  ஒருவரின்  மரணத்திற்கு செல்ல  நேரிட்டது.  அடுக்கு  மாடி  குடியிருப்பில் அவரது  வீட்டில்  விரல்  விட்டு  எண்ண    கூடிய  அளவு குடும்ப  உறுப்பினர்கள் , 20 முதல்  25 அலுவலக  நண்பர்கள்  அவ்வளவுதான் . அடுக்கு  மாடி  குடியிருப்பிற்கு  மாறி   சில ஆண்டுகள்  ஆணது  நாளோ  என்னோவோ  பெரும்பாலோனோர்  வந்து  எட்டி  பார்க்க கூட  இல்லை ..எப்படியோ  அலுவலக நண்பர்கள்  காரியத்தை  முடித்து  விட்டு வந்தோம் .

 சொந்த  ஊரில்  வாழறோமோ இல்லையோ  சொந்த ஊர்லதான்டா சாவணும் 
செத்ததுக்கு  அப்றம் எந்திரிச்சு பாக்க  போறிங்களா னு கேட்டாலும்.
மரணம்  கூட  நமக்காக  கண்ணீர் விடும் மனிதர்களிடேயே நிகழ்ந்தால் தான் சிறப்பு.

4 கருத்துகள்:

  1. நண்பரே,

    உங்கள் பதிவு உள்ளத்தில் சோகத்தையும் ஒரு ஞாயமான ஆதங்கத்தையும் விதைத்துவிட்டது.

    கோ

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. பெரும்பாலும் வெளியூரில் வசிப்பவர்ககள் நிலைமை இதுதான் நன்றி

    பதிலளிநீக்கு
  4. உள்ளுருலிம் அந்தக்கதை வந்துவிட்டது. சாவு என்றால் முன்னேமாதிரி கூட்டமாக வருவதில்லை.. அவர் அவர் ஜோலி அவருக்குன்னு ., மாறிப்போச்சு

    பதிலளிநீக்கு