வியாழன், 11 ஆகஸ்ட், 2016

20 வருடம் பின்னோக்கி ஒரு பயணம்

இந்த  20 வருடங்களில்  மாறிய  பல  விஷயங்கள்  பார்த்தால்  மலைப்பாக  இருக்கிறது.
 20 ஆண்டுகளுக்கு  முன்:-
 இந்தியா :- இந்தியா பொரு ளாதாரத்தில் நோஞ்சான், தேவ  கவுடா  இந்திய பிரதமராக  இருந்தார். பெரும்பாலான  இந்தியர்களுக்கு  அரசுதுறை  வேலைவாய்ப்புகளே  பிரதானம்,

தமிழகம் :-
 இன்ஜினியரிங்  படித்தவர்கள் கள்  என்றால் பெரும்  மரியாதை  இருந்தது. கல்வி , மருத்துவம் பெரும்பாலும்  அரசாங்கம் வசமே  இருந்தது.  கிராமங்களில்  மாடி  வீடும், அம்பாஸடர்  காரும், கலர்டிவியும்   வைத்து  இருப்பவர்கள் பணக்காரர்கள் ஆக  கருதபட்டனர்.மால் கிடையாது  ,Multiplex கிடையாது

பொருளாதாரம் :-
சென்செஸ்  3000 புள்ளிகளில்  இருந்தது.  ரிலையன்ஸ் ,TCS ,இன்போசிஸ் , ICICI , HDFC பேங்க்  போன்ற  பெருநிறுவனங்கள்  அப்போது முன்னணியில்  இல்லை, சில  இல்லவே  இல்லை.அரசு  நிறுவன ங்களே  பிரதானம்,

தொழில்நுட்பம் :-
ஆப்பிள்  என்பது  அப்போது  சாப்பிடும்  ஒரு  உணவு பொருள் மட்டுமே. இன்று GOOGLE லில்  தேடுகிறோம் ,அன்று  கூகுளை யே  தேட முடிந்திருக்காது.
 கம்ப்யூட்டர் என்றால்  AC  ரூமில்  இருந்து   ப்ரோக்ராம்  செய்ய  பயன்படும்   ஒரு   எந்திரம் எங்களுக்கு . டெலிபோன்  ஊருக்கு  சிலரிடம் இருந்த  பொருள்.  தந்தி  இருந்தது. இணையம் புழக்கத்தில்  இல்லை . ஸ்மார்ட் போன் , Facebook ,whatsapp கனவில்  கூட இல்லை . CRT  கலர்  டிவி , நான்கைந்து கேபிள்  சேனல் கள் மட்டும் .தூர்தர்ஷன்  எல்லாம் பார்க்கும்  சேனலாக  இருந்தது. சக்திமான்  சூப்பர் ஹீரோ .
VCR ,டேப் ரெக்கார்டர்  எல்லாம்  இருந்தது . கேமரா  என்றால்  36 பிலிம்  தான் ரொம்ப கவனமாக எடுக்க  வேண்டி இருந்தது.


தமிழ் சினிமா :-
கார்த்திக் ,பிரபு ,விஜயகாந்த்  ,சத்யராஜ்  பாப்புலர் ஹீரோவாக இருந்தனர் ,அஜித்  விஜய்  அறிமுக  நடிகர்கள்.
அரவிந்த்  ஸ்வாமி, பிரபு தேவா , பிரசாந்த்   கனவு கண்ணன்கள்  , ரோஜா,மீனா,ரம்பா,குஸ்பு,நக்மா  கனவு  கன்னிகள்.

உலகம் :-
கிளின்டன்  அமெரிக்க  ஜனாதிபதி. சதாம் ஹுசைன் னை  பார்த்து உலகம்  பயந்து  கிடந்தது . மைக்கேல் ஜாக்சன்  பாடல்கள்,நடனம் பார்த்து  உலகம்  வியந்து  கொண்டு  இருந்தது .

கிரிக்கெட் :-
கபில்தேவ் காலம்  முடிந்து  டெண்டுல்கர்  காலம்  ஆரம்பித்து  இருந்தது.அசாருதீன்  இந்தியா வின் கேப்டன். கங்குலி ,டிராவிட் ,கும்ப்ளே  எல்லாரும்  அப்போதுதான் வந்து  இருந்தார்கள் .அஜய் ஜடேஜா ஒரு  போஸ்டர் பாய்.


மாறியவை  பல,மாறாதவை  சில

ரஜினியே  அன்றும்  சூப்பர்  ஸ்டார் , இன்றும்  அவரே . அன்று  பாஷா  ,முத்து ..இன்று  கபாலி.

கலைஞர்  , ஜெயலலிதா  தமிழக  அரசிலியலின்  ஆளுமைகள் இன்றும் , அன்றும்.

ஒரு  ஒலிம்பிக்  பதக்கமாவது  இந்தியா வெல்லுமா  என்னும்  எதிர்பார்ப்பு.
பில் கேட்ஸ்  அப்போதும்  உலக  முதல்  பணக்காரர்.

 என்றும்  மாறாதது , எங்கு  இருந்தாலும் , எப்படி  இருந்தாலும்  ,எத்தனை  வருடம்  ஆனாலும் ,  பேரை  கேட்டவுடன் ஞாபகம்  வரும் நண்பர்களின் முகம்  மற்றும்  உடனே  வரும்  பள்ளி  நினைவுகள் .காலத்தில் அழியாமல்  நிலைத்து  நிற்கும் நட்பு.


20 வருடம்  பின்னோக்கி ஒரு பயணம் .
பள்ளி நண்பர்களுக்காக   எழுதியது





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக