செவ்வாய், 10 ஜனவரி, 2017

பொங்கல் விடுமுறை.. அசால்ட் சேது (Bjp) வின் அடுத்த அட்டாக்

ஜல்லிகட்டு தடை,பொங்கல் விடுமுறை ரத்து... "டெல்லி, பம்பாய் போக வேண்டும் என்றால் தமிழர்களுக்கு பாஸ்போர்ட்  வேண்டும் "மத்திய பிஜேபி அரசின் அடுத்த அறிவிப்பாக இருக்க கூடும்...

இந்தி படித்து கொள்ளுங்கள்,
பொங்கல், ஜல்லிகட்டு எல்லாம் மறந்து சாட் பூஜை செய்யுங்கள்,
இட்லி, தயிர் சாதம் மறந்து சாப்பாத்தி சாப்பிட பழகி விடுங்கள்.
 கறி, கோழி சாப்பிடாம தால் சாப்பிட பழகிங்கள்,
வேட்டி, சட்டைக்கு பதிலா ரெண்டு செட் பைஜாமா, ஜிப்பா தைத்து விடுங்கள்,
கெடா வெட்டி கும்பிடற  கருப்பண்ண சாமி, ஐயனார் எல்லாம் விட்டு ராமர், கிருஷ்னர கும்பிடுங்கள்
தேசிய நீரோட்டத்தில் பழைய தமிழர்  கலாச்சாரத்தை எல்லாம் தலை முழ்கி எந்திரிச்சா நீங்கள் முழுமையான  "இந்தி"யன் ஆகி விடுவிர்.
 கஷ்டம்னு சொன்னா எல்லையில் உள்ள ராணுவ வீரன் பொங்கல் கொண்டாடுறானா? இல்ல  இட்லி தான் சாப்ட்றானா என்று கேட்பார்கள்
சீக்கிரம் தேச பக்தி உடைய இந்தியன் என்பதை நிருபித்து விடுங்கள்.

1 கருத்து:

  1. இது எல்லாம் அவனுக அஜெண்டாவில் உள்ளதுதான் என்ன ஒன்னு ஒண்ணுதான் விடுவார்கள் . இதற்க்கும் ஒரு விளக்கம் சொல்ல பிஜேபி ஆள் வருவாங்க பாருங்களேன் அந்த கொடுமையும் நடக்கும் .

    M.செய்யது
    Dubai

    பதிலளிநீக்கு