வியாழன், 23 நவம்பர், 2017

அதிமுகவின் பி டீம் -பாஜக புலம்பல்

நமது  பாஜக  நண்பர்  ஒருவரை  நீண்ட  இடைவேளைக்கு  பிறகு  சந்தித்தோம் ..
என்னங்க  தமிழக ஆட்சி  உங்கள்  தயவில்தான் நடக்கிறது  என்கிறார்கள் , சந்தோஷம்தானே என்றதற்கு ..

மனிதர் பொங்கி தீர்த்து  விட்டார் ..

2014 தேர்தலில் திமுக , அதிமுக  இல்லாத  கூட்டணி  18 % சதவீத  வாக்குகள்  பெற்றது .. இது  ஒரு பெரிய  விஷயம் .. பாஜக  மட்டும்  5 முதல்  7% வாக்குகளை  பெரும்  கட்சியாக  உருவெடுத்தது. நடுத்தர மற்றும்   உயர்நடுத்தர  குடும்பத்தினர்  நன்மதிப்பை  பாஜக  பெற்றிருந்தது .

ஜெயலலிதா  மறைவுக்கு  பின்  அதிமுக  உள்கட்சி  விவகாரங்களில்  தலையிடாமல்  இருந்தால் , அதிருப்தி உருவாகி பலர்  பாஜக விற்கு  வந்து  இருப்பார்கள்  + திமுக  எதிர்ப்பு  வாக்குகள்  பாஜகவை  நோக்கி  வந்து  இருக்கும் , படிப்படியாக  15 முதல்  20 சதவீதம்  பெற்று  பெரிய  இயக்கமாக  வலுபெறுவதற்கான  வாய்ப்பும்  இருந்தது ..

ஆனால்  தேவை இல்லாமல்  அதிமுக உட்கட்சி  பஞ்சாயத்தில் இறங்கி ,   இப்போ  தீர்ப்பு  வர போகுது , தேர்தலை  தள்ளி  வைக்க  போகிறார்கள் , தகுதி நீக்கம்  செய்ய போறார்கள் என்று  எல்லாத்தையும் தமிழக  பாஜக  தலைவர்கள்  சொல்லி, OPS யை   அடிக்கடி  பிரதமரை  சந்திக்க  வைத்து  எல்லாவற்றிற்கும்  பின்னால்  பாஜக  இருக்கிறது  என்பதை  மக்களிடம்  கொண்டு சேர்த்தனர்.

இப்போ  இந்த  அரசு  செய்யும்  தவறுகளுக்கு , அதிமுக  அமைச்சருக்கு  முந்தி  முட்டு  கொடுக்கிறார்கள்  சில தமிழக பாஜக  தலைவர்கள்.  அதுவும்  சிலருக்கு  தமிழகத்தில் பாஜக  ஆட்சியை  விட  இந்த  ஆட்சியே  நீடித்தால்  வசதி  அதிகம்  என்று  நினைக்கிறார்கள். எனக்கு  என்னமோ  அவர்கள்  பிஜேபி -பி டீம்  மாதிரி  தெரியவில்லை , தமிழக பாஜக  தான் ஆள்வோரின் பி டீம்  ஆகி  விட்டது.

ஆள்பவரிடம்  இரட்டை  இலையை   கொடுத்தாலும் , இவர்களை நம்பி  கூட்டணி வைக்க முடியுமா ,பாஜக  சிறிது அதிகாரம் இழந்தால் சசிகலாவையே கை கழுவியவர்கள் , பாஜக வை எளிதில்  தூக்கி  எறிந்து விடுவார்கள்,

சொந்தமாக கட்சிக்கு  என்று   இருந்த  5% வாக்கு வங்கியையும்  நாங்கள்  இழந்து  கொண்டு  இருக்கிறோம்  என்பது  தான்  உண்மை.


அட  இவுரு  சொல்றதும்  சரிதான்  போல ... ..

அதிமுகவின் பி டீம் -பாஜக  புலம்பல்






2 கருத்துகள்:


  1. மிக சரியான கணிப்பு நான் நினைத்தை உங்கள் பாஜக நண்பர் அழகாக சொல்லி இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் தளத்தில் follower gadge யை இணையுங்கள் அப்போதுதான் உங்கள் பதிவுகளை தொடர எளிதாக இருக்கும். இணைத்த பின் எனக்கு தகவ தாருங்கள்

    பதிலளிநீக்கு