புதன், 8 நவம்பர், 2017

பணமதிப்பிழப்பு காமெடி விருதுகள்

#பணமதிப்பிழப்புகாமெடிவிருதுகள்

ஓராண்டு  முடிவடைந்த  நிலையில் , சிறந்த  பங்களிப்பிற்காக பணமதிப்பிழப்பு  விருதுகள் அறிவிக்கப்பட்டு  உள்ளன.

சிறந்த வசனகர்த்தா & ஹீரோ  :-  பிரதமர் நரேந்திர மோடி .
 (கெட்டவர்களின்  கையில்  இருக்கும்  பணம்  வெறும்  காகிதம், மூன்று  மாதங்களில் புதிய இந்தியா பிறக்கும்  போன்ற உணர்ச்சிகரமான  வசனங்களுக்காக, அதை அறிமுக  காட்சியில் உணர்ச்சிகரமாக  பேசியதற்காக )

 சிறந்த  துணை நடிகர் :-   உர்ஜிட் படேல், சக்திகாந்த தாஸ்  (ஹீரோவிற்கு  உதவியாக  விளக்கமளித்த  காட்சிக்காக ).

சிறந்த OPENING  சீன்  :-  ஹீரோவின்  அறிமுக காட்சியில்   உணர்ச்சி  பொங்க  பேசி முடித்ததும் , ரஜினி, கமல், அனிருத், RJ பாலாஜி  போன்ற பொருளாதார  நிபுணர்கள்  வாழ்த்தி பாடும் புதிய  இந்தியா ஓப்பனிங்  சாங் ..

சிறந்த திருப்புமுனை  காட்சி :- புதிய  நோட்டுகள்  இதுவரை அச்சடிக்கப்படவில்லை  என்று  மக்களுக்கு  தெரிய  வரும்  காட்சியும், புதிய  நோட்டுக்கள் size  பழைய ATM ல்  வைக்க  முடியாது என்று  தெரியவரும்  காட்சியும் ..

சிறந்த க்ளைமாக்ஸ் :-   இறுதியில் ஒரு  சதவீதம்  கூட  கருப்பு பணம் பிடிபடவில்லை என்ற உண்மை தெரியும்  போது, தொடரும் என்று சொல்லி  "டிஜிட்டல் இந்தியா " என்னும்  இரண்டாம்   பாகத்தை நோக்கி  திசைதிருப்பி  படத்தை முடித்தது .

Best  Cameo ( சிறந்த  கேமியோ ) :- சேகர்  ரெட்டி, சிறு  காட்சி  என்றாலும் , கோடிகணக்கானவர்கள் கையில்  இருக்கும்  ஆயிரம், ஐநூறை மாற்ற வரிசையில் நின்ற போது , கெத்தாக 33 கோடியை  மாற்றிய  காட்சிக்காக .

சிறந்த  வசனம்  :- படம்  முழவுதும் மௌனமாக  இருந்தாலும்  கடைசியில் "monumental  Failure  " என்று முன்னாள்  பிரதமர் பேசும் ஒற்றை  வரி டயலாக்

சிறந்த  இயக்குனர்  விருது : நிதியமைச்சர்  ( படம்  தன்னுடையதாக  இருந்தாலும் , ஹீரோவை  பெர்போர்மன்ஸ் செய்யவிட்டு  பின்னணியில்  இருந்ததற்காக )

சிறந்த நவரச காட்சி :-  ஏராளமான  ATM  வரிசை  மரணங்களை பற்றி  கேள்வி  கேட்ட  பொழுது ,  எல்லையில்  ஏராளமானவர்கள் இறக்கிறார்கள் .ஒரு  சிறு கஷ்டத்தை  கூட தாங்க முடியாதா என்று  கேட்டு,சோகத்தையும்  சந்தோசமாக ஏற்று  கொள்ள  வைக்கும்  காட்சி.

சிறந்த  நகைச்சுவை  நடிகர் :-   திருவாளர்  பொதுஜனம் (பின்னணியில்  உள்ள  அரசியல்  புரியாமல் , தங்களை  ஒரு எல்லையில்  உள்ள  போர்  வீரன்  ரேஞ்சுக்கு  பீல்  பண்ணி  வரிசையில்  நின்று  ஏமாந்த காட்சிக்காக )

ஏதேனும்  விருதுகள்  விடுபட்டு  இருந்தால்  , நீங்களும்  வழங்குங்கள்.

#Demodisaster

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக