திங்கள், 6 நவம்பர், 2017

ஒரு தலைவன் உருவாகிறான்


   கடந்த  வாரம், திரு  TTV  தினகரன்  பசும்பொன்  சென்ற பொழுதும், தஞ்சாவூர்  வருகையின்போதும் , மிக பிரமாண்டமான   கூட்டம்  கூடியது .அதிலும்  மிக  பெரும்பாலும் இளைஞர்கள்  18 முதல்  35 வயதுக்கு  உட்பட்டவர்கள். 40 வயதிற்கு  மேற்பட்டவர்களை  எண்ணி  விடலாம் . அப்படி  ஒரு ஆர்ப்பரிப்பு , ஒவ்வரு  இடத்தையும்  கடக்க  சில மணி நேரம் ஆனது.

காசு குடுத்து  கூட்டி  வந்தார்கள்  என்று  எளிதில் புறந்தள்ளி   விட முடியாது . காசு  கொடுத்து  வந்தவர்கள்  யாரும்  தங்களது  சொந்த  இரு  சக்கர  வாகனங்களில்  வந்து  ரோட்டின்  இருபுறமும் நின்று   ஆர்ப்பரிக்க  மாட்டார்கள்.  TTV  அருகில்  சென்று  புகைப்படம்  எடுக்க  துடிக்க மாட்டார்கள் ..

 TTV யையும்   சும்மா  சொல்ல  கூடாது, சளைக்காமல்  மனிதர்களை சந்திக்கிறார் . ஆயிரக்கணக்கில் இளைஞர்களுடன்   புகைப்படம்  எடுத்து கொள்கிறார் . 60-70 களில்  இருந்த புரட்சி  தலைவர்  போல்  எளியவர்கள் TTV யை  எளிதில்  அணுக  முடிகிறது . இரண்டு , மூன்று முறை  பார்த்தவர்களை  பெயர் சொல்லி  அழைக்கும் பழம்பெறும் தலைவர்களின் குணமும்  TTV  தினகரனிடம் உள்ளது.  துண்டு  சீட்டு , குறிப்புகள்  இல்லாமல்  மிக  பெரிய  கூட்டங்களில்  உரையாற்றுகிறார்.  பத்திரிகையாளர்களை  பதட்டம்  இல்லாமல்  வெகு  எளிதாக  கை  ஆளுகிறார் .



TTV க்கு  என  ஒரு கூட்டம்  உருவாகி  விட்டது .  டெல்டா மற்றும்  தென்  மாவட்டங்களில்  குறிப்பாக மிக  பெரிய  இளைஞர்  படை உருவாகி  விட்டது,   மேலும் ஒரு  மாற்றத்திற்கான வேகம் (momentum for  change  ) தெரிகிறது .

இனி இவர்கள்  முன்  இருக்கும்  சவால்கள்.

1, இந்த வேகத்தை  தேர்தல்  வரும்  வரை  தக்க  வைத்து  கொள்ள  வேண்டும் .
'
2, இந்த  ஆட்சியை  எவ்வளவு  விரைவில்  கலைக்க  முடியுமோ  அவ்வளவு  விரைவில்  கலைக்க  வேண்டும் .

3, எதிர்கொண்டு இருக்கும்  பொய் வழக்குகளை  முறியடிக்க  வேண்டும் .

4, ஒரு  ஜாதி  என்ற முத்திரை  விழுவதை எந்த  காலத்திலும்  அனுமதிக்க  கூடாது

5, ஜெயலலிதாவுக்கு என   விழும்  பெண்  வாக்காளர்களின்  வாக்குகளை   கவர  வேண்டும் .

6, இந்த  இளைஞர்  கூட்டம்   மக்களின்  பிரச்சனை  சார்ந்து  களப் பணி  ஆற்றிட  வேண்டும் .

இவற்றையெல்லாம்  செய்து  முடித்தால் , TTV ..என்னும்  தலைவனின்  பெயர்  அதிமுக  வரலாற்றில்  பொன்  எழுத்துக்களால் எழுதப்படும். 




2 கருத்துகள்:

  1. அது நிச்சயம் நடக்கும்.
    ஆனால் தினகரன் தற்போது தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளை பேச வேண்டும். அதற்காக தொண்டர்களை கூட்டி போராட வேண்டும்.

    பதிலளிநீக்கு