வெள்ளி, 13 மே, 2016

சென்னை விமானநிலையத்தில் ஒரு இரவு... சில பல மனிதர்கள்

விமான நிலையத்தில் மற்றுமொறு தூங்கா இரவு

சென்னை சர்வதேச முனையத்தில் வழக்கம் போல் Air India விமானத்தின் தாமதத்தால் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது

விமான நிலையத்தின் வருகை பிரிவில் பெரும்பாலும் சந்தோஷமான முகங்களை  காண முடிந்தது, ஆனால் புறப்பாடு பிரிவில் அந்த மகிழ்ச்சி காணப்படவில்லை...நிறைய தாத்தா, பாட்டிக்கள் தங்களது மகன், மகளையும், பேரன், பேத்திகளையும் வெளிநாட்டுக்கு வழியனுப்ப வந்திருந்தனர்... அந்த பெரியவர்களை பார்க்கும் பொழுது இவர்கள் தங்களது பிள்ளைகள் அடுத்த முறை வரும்பொழுது இதே அளவு உடல் நலத்துடன்  இருப்பார்களா... இல்லை இவர்களுக்கு எதவாது ஆகி விட்டால் பார்த்து கொள்ள வீட்டில் வேறு பிள்ளை கள் இருப்பார்களோ என்ற சந்தேகம் என் மனதில் எழுந்தது
 வெளிநாடு செல்லும் எல்லா குடும்பத்தினரும் மிக வசதி படைத்தவராகவே தோன்றினர்... மிகப் பெரும்பான்மையினர் ஒரே ஒரு குழநதையுடன் தான் இருந்தனர்.. இந்த ஒரே ஒரு பிள்ளைக்கு தான் இப்படி ஒடி ஒடி சம்பாதிக்கின்றனர் போலும் .. இந்த பெரியவர்கள் தங்களை பிரிந்து சென்று பிள்ளை சம்பாரிக்க தான் படி, படி என்று கூறி படிக்க வைத்தார்களோ என்னவோ ?
தான் பெற்ற பிள்ளைகளை பற்றி அதிகமாக சந்திக்கும் மனிதர்கள் தன்னை பெற்றவர்களை பற்றி சிந்திப்பதில்ல யோ என்றும்  தோன்றியது
அப்பொது
 என்னை போன்று சர்வேதச முனையம் வழியாக திருச்சி செல்லும் தஞ்சை  மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை சந்தித்தேன்'
தன்னுடைய 5 வது படிக்கும் மகன் விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்ற விமானம் மூலம் திருச்சி செல்வதாக கூறினார்
மனிதர் நன்கு பொது அறிவு உள்ளவரா கவும், இடையில் விவசாயத்தில் கஷ்ட பட்டாலும் இப்பொது நன்றாகவே உள்ளதாக கூறினார். மேலும் வருங்காலத்தில் விவசாயம் மேம்படும் என்ற நம்பிக்கையும் கொண்டு இருந்தார்
நவின தொலை பேசி இல்லை, ஆடம்பர உடைகள் அணியவில்லை ஆனாலும்
மனிதர் தனது  குடும்பத்தாருடன் சொந்த கிராமத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக கூறினார்,
இதில் யார் சாதித்த மனிதர்? யார் மகிழ்ச்சியான மனிதர்?
வாழ்க்கை புதிரானது

வியாழன், 12 மே, 2016

தளபதி பெர்பான்மஸ் பத்தாது போல

கடந்த தேர்தலில் நக்கிரனும் விகடனும் கருத்து கணிப்பில் அறுதி பெரும்பாண்மை குடுத்தாங்க அப்பவே திமுக 27 தொகுதி தான் ஜெயிச்சுச்சு.. இப்போ அவங்களே கம்மியா தான் கூடுத்துறுக்காங்க... அப்போ திமுக போன தடவை விட இன்னும் கம்மியா தான் ஜெயிக்குமா... நானும் கொஞ்சம் அதிகமா Expect பண்ணிட்டேன்
நக்கீரனும்,  விகடனுமே திமுகவுக்கு தனி மெஜாரிட்டி தராட்டி மக்கள் எப்டி பாஸ் தருவாங்க

தளபதி பெர்மான்ஸ் பத்தாது போல .... கலைஞரே ஐ வான்ட் மோர் எமோஷ்ன்ஸ்......

புதன், 11 மே, 2016

திருந்தி விட்டதா தி மு க? பாவமன்னிப்பு தந்த ஊடகங்கள்

திருந்தி விட்டதா திமுக?

சில நாட்கள் முன்பு ஒரு நகைச்சுவை படித்தேன்
ஒரு குடிகாரன் ஒருவனை திருத்த நினைத்த பாதிரியார் அவனுக்கு பாவ மன்னிப்பு அளித்து தண்ணீர் தெளித்து " இன்று முதல் நீ புதிய மனிதன், பழைய பெயர் கந்தசாமி கிடையாது, உன் புதிய பெயர் சைமன், இனிமேல் சாராயம் குடிக்க கூடாது என்று சத்தியம் வாங்கினார். டீ குடிக்கலாமா பாதர் என்று கேட்ட குடிகாரனுக்கு பாதர் தாராளமாக குடிக்கலாம் என்று பாதிரியார் கூறினார்.
கடவுள் முன்பு சத்தியம் செய்து விட்டு
சென்ற குடிகாரன் மறுநாள் பாதிரியாரிடம் சாராய பாட்டிலுடன் வந்து சாராய பாட்டிலை எடுத்து தண்ணீர் தெளித்து இன்று முதல் நீ சாராயம் கிடையாது உன் பெயர் டீ என்று குடிக்க தொடங்கினான்

திமுகவும் அந்த குடிகாரனை போலத்தான் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது நாங்கள் திருந்தி விட்டோம், எங்கள் பாவத்தை மன்னித்து விடுங்கள் இனிமேல் ஊழல், அராஜகம், சட்ட ஒழுங்கு சீர்கேடு  என்று எதுவும் செய்ய மாட்டோம் என்று கூறுவார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் முன்னை விட அதிகமாக ஊழல், அராஜகம் , சட்ட ஒழுங்கு சீர்கேடு. செய்து விடுவார்கள்
89,96, 2006 இதையே சொல்லி ஏமாற்றினர்.. சில ஊடகங்களும் வாங்கிய பணத்திற்கு விசுவசமாக கருணாநிதி பரிசுத்தம் அடைந்து hவிட்டார் என்று சத்தியம் செய்கின்றனர் .உங்கள் வேட்பாளர் பட்டியலை பார்த்தால் திருந்திய மாதிரி தெரியவில்லை.. அதே முகங்கள் ,மற்றும் குடும்ப வேட்பாளர்கள்.. இவிகள எல்லாம் பார்த்தா திருத்துன மாதிரியா தெரியுது மக்களே?
இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்
(சிறுபாண்மையிைனர் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் )

திங்கள், 9 மே, 2016

மூடர் கூடமும்,... திமுகவின் நமக்கு நாமே 2 ம் பாகமும்


ஒரு வாரமாக தந்தை மகனையும், மகன் தந்தையையும் மாறி மாறி புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அய்யா நீங்கள் 5 முறை தமிழக முதல்வராக இருந்து உள்ளிர்கள், மகன் மேயர், துனை முதல்வர், அமைச்சர், பதவிகளை வகித்து உள்ளார்கள்.பற்றாகுறைக்கு குடும்ப உறுப்பினர்கள் மத்திய அமைச்சர். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து உள்ளார்.. இதை பயன் படுத்தி மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து இருந்தால் மக்கள் புகழ்ந்து இருப்பார்கள், இன்று உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளும் நிலை வந்து இருக்காது..இது தான் நமக்கு நாமே பாகம் 2 போல.. -

இதை பார்த்தால்  நமக்கு மூடர் கூடம் படத்தின் வசனம் தான் ஞாபகம் வருகிறது

இதுக்கு வருத்தபடனும் சென்றாயன் ,, பெருமை படக் கூடாது

NDTV கருத்து கணிப்பு... யாருக்கு சாதகம்.. அலசல்

NDTV கருத்து கணிப்பு அல்லாமல் வெறும் வாக்கு சதவிதத்தை வைத்து ஒரு அலசல் வெளியுட்டுள்ளது.. கடந்த தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை வைத்து 42% வாக்குகள் அதிமுகவுக்கும் , 33 % வாக்கு கள் தி மு க கூட்டணிக்கும் உள்ளது  என்று கூறியுள்ளது

1.முதல் சாத்தியகூறு
.இதே நிலைமை நீடித்தால் அதிமுக அணி 195 இடங்களில் வெற்றி பெறும் திமுக 30க்கும் குறைவான இடங்களை யே பெறும்

2வது சாத்தியகூறு
இதில் அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் 3 %  திமுக அணிக்கு சென்றால், அதிமுக 165 க்கும் மேற்பட்ட இடங்களை பெறும், திமுக அணி 45 இடங்களை பெறக் கூடும்

3வது சாத்தியகூறு
இதில்  5 % அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு சென்றால் அதிமுக' 135 இடங்களையும் , தி மு க அணி 85 முதல் 90 இடங்களை பெறும்.

4 வது சாத்தியகூறு
இதில் 7.5 % அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு சென்றால் மட்டும் திமுக அணி 140 முதல் 160 இடங்களையும் பெறும்.. அதிமுக 70 முதல் 90 இடங்களைப் பெறும்

இந்த தேர்தலில்   5 எதிர்கட்சிகள் போட்டியிடுவதால் 2 வது மற்றும் 3வது நிலையே  பெரும்பாலும் சாத்தியம்.. அதுவும் கிராமப்புறங்களில் 5%  அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு போவது என்பது மிகவும் கடினம்

4 வது சாத்திய கூறு கிடைக்கும் என்ற திமுக தொண்டர்களின் எண்ணம் சிறிது கடினமாகும்
 எனினும் நகர்புறங்களில் மக்கள் எளிதில் அதிருப்தி அடையும் சாத்தியம் இருப்பதால், நகர்புற வேட்பாளர் களுக்கு கடுமையாக இருக்கும்

ஞாயிறு, 8 மே, 2016

24 ... காலப் பயணம் வெற்றி யா?

24 திரைப்படம்

சூர்யாவும், தமிழில்  யாவரும் நலம், தெலுங் கில் மனம்  படங்களை இயக்கிய விக்ரம்குமார்   இனைந்த படம்
தமிழ் சினிமாவுக்கு புதிய களமான கால பயணம் (time travel) எடுத்து உள்ளார்

பலம்
 தமிழுக்கு புதுமையான கதை' களம், மூன்று கதாபாத்திரத்திற்கும் நடிப்பில் வேறுபாடு தரும் சூர்யா அதுவும் வில்லனாக வரும் சூர்யா, ரகுமான் பின்னனி இசை மற்றும் பாடல்கள்,
ஒளிப்பதிவு


பலவினம்
திரும்ப  திரும்ப வரும் காட்சிகள், மிகவும் மெதுவாக செல்லும் படத்தின் வேகம், விணடிக்கபட்ட ரேணுகா  மேனன், ஒரே வசனம் பல முறை வருவது

மெய் நிகரா பாடல் பலமுறை கேட்க தூண்டும் ரகுமான், கவிப்பேரரசுவின்   மாயாஜாலம்

 கிடைத்த கால பயண கடிகாரத்தை வைத்து விமான வேகத்தில்  செல்லாமல் டவுன் பஸ் வேகத்தில் செல்லலாமா ?

புதிய முயற்ச்சிக்காக பார்க்கலாம்.
பி கு
படத்தில் சூர்யா கால பயண கடிகாரத்தை வைத்து  பின்னோக்கி சென்று தனது அப்பாவின் மரணத்தை தடுப்பார் ... அது போல  திருவாருரார் திருட்டு  ரயில் ஏறியதை தடுத்தால்  50 வருடத்தில் நமது மாநிலமும் சிறப்பாக ஆகி  இருக்கும்


விலை இல்லா பொருட்கள் உண்மையில் அவசியமற்றதா?



நானும்  விலை  இல்லா பொருட்கள் மக்கள் வரி பணத்தை வீணடிகிறார்கள் என்று நினைத்தேன்.. எனது நண்பர்  ஒருவர் மிகவும் பொருளாதார பின்னடைந்த பகுதியில் ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருக்கிறார்..அவர் எங்கள் பகுதியில் மாணவ,மாணவிகள் பெரும்பாலும் விலையில்லா சைக்கிள் மிகவும் பயனுள்ள தாக உள்ளதாகவும் , மாணவர்களுக்கு தரும் லேப் டாப் , தங்கள் பகுதி மாணவர்களும் நகரத்தின் மாணவர்களுக்கு இணையாக போட்டி  இட  முடிகிறது என்றும் கூறினார்..

GRINDER ,mixie  போன்றவை  மிகவும் வாங்க  இயலாத விட்டு பெண்கள் தங்களது வேலை பளுவை குறைக்க உதவு கிறது என்று  சொல்லு கிறார்கள்  ..இதை குறை கூறுபவர்கள் ஒரு  நாள்  தங்களுது மனைவியை  இவற்றை உபயோகிகாமல் இருந்து பார்க்க  சொல்லவும் ..

நாம்  லேப்டாப்  கேட்டால்  25,000 சொல்லும் கடைகள் , ஆனால்  அரசாங்கம்  மொத்தமாக  வாங்கும்  பொழுது  10,000 ரூபாய்க்கு  வாங்க  முடிகிறது ..இதனால்  பெரும்  பயன்  இல்லாதவர்கள் அடைகிறார்கள் .

மதிய தர மக்கள்  மன  நிலை நமக்கு மேல் உள்ளவர்கள் எவ்ளோ கொள்ளை யடித்து  சென்றாலும் கோபம் வருவதிலை ஆனால்  நமக்கு கீழ் உள்ளவர்கள் சிறிது இலவசமாக பெற்றால் கடும் கோபம் அடைகிறோம்... உதாரணமாக மொத்தமாக  இலவசமாக கொடுத்த பொருட்களின் மதிப்பு 10,000 கோடி ஆனால் பெரும் பணக்காரர்கள்  தள்ளுபடி செய்யபட்ட கடன் தொகை மட்டும் 2 லட்சம் கோடிக்கும் மேல்.. இலவசத்தில் பலன் பெற்றவர்கள் உண்மையில் வழியில்லாத பல லட்சம்  பேர் , ஆனால்  தள்ளுபடி செய்ய பட்ட கடனில் பயன்  பெற்றவர்கள் சில நூறு பேர் மட்டும்

அரசாங்கம் சிறிது முயற்சி செய்து உண்மையில் பயன் உள்ளவர்களுக்கு மட்டுமே  தர வேண்டும்,
சமுக பொறுப்புள்ள வசதி படைத்தவர்கள் தங்களுக்கு இலவசம் வேண்டாம் என்றும் சொல்லலாம் எனவே
 நியாயமானவர்க ளுக்கு சென்றடையும்..
 இன்று இலவசமே  வேண்டாம் என்று கூப்பாடு போடும் பத்திரிக்கைகள் தான் தங்களது பத்திரிக்கையோடு சோப்பு இலவசம், சாம்பு இலவசம் என்று ஆரம்பித்து வைத்தது என்பதையும் மறந்து விட வேண்டாம்