வெள்ளி, 13 மே, 2016

சென்னை விமானநிலையத்தில் ஒரு இரவு... சில பல மனிதர்கள்

விமான நிலையத்தில் மற்றுமொறு தூங்கா இரவு

சென்னை சர்வதேச முனையத்தில் வழக்கம் போல் Air India விமானத்தின் தாமதத்தால் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது

விமான நிலையத்தின் வருகை பிரிவில் பெரும்பாலும் சந்தோஷமான முகங்களை  காண முடிந்தது, ஆனால் புறப்பாடு பிரிவில் அந்த மகிழ்ச்சி காணப்படவில்லை...நிறைய தாத்தா, பாட்டிக்கள் தங்களது மகன், மகளையும், பேரன், பேத்திகளையும் வெளிநாட்டுக்கு வழியனுப்ப வந்திருந்தனர்... அந்த பெரியவர்களை பார்க்கும் பொழுது இவர்கள் தங்களது பிள்ளைகள் அடுத்த முறை வரும்பொழுது இதே அளவு உடல் நலத்துடன்  இருப்பார்களா... இல்லை இவர்களுக்கு எதவாது ஆகி விட்டால் பார்த்து கொள்ள வீட்டில் வேறு பிள்ளை கள் இருப்பார்களோ என்ற சந்தேகம் என் மனதில் எழுந்தது
 வெளிநாடு செல்லும் எல்லா குடும்பத்தினரும் மிக வசதி படைத்தவராகவே தோன்றினர்... மிகப் பெரும்பான்மையினர் ஒரே ஒரு குழநதையுடன் தான் இருந்தனர்.. இந்த ஒரே ஒரு பிள்ளைக்கு தான் இப்படி ஒடி ஒடி சம்பாதிக்கின்றனர் போலும் .. இந்த பெரியவர்கள் தங்களை பிரிந்து சென்று பிள்ளை சம்பாரிக்க தான் படி, படி என்று கூறி படிக்க வைத்தார்களோ என்னவோ ?
தான் பெற்ற பிள்ளைகளை பற்றி அதிகமாக சந்திக்கும் மனிதர்கள் தன்னை பெற்றவர்களை பற்றி சிந்திப்பதில்ல யோ என்றும்  தோன்றியது
அப்பொது
 என்னை போன்று சர்வேதச முனையம் வழியாக திருச்சி செல்லும் தஞ்சை  மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை சந்தித்தேன்'
தன்னுடைய 5 வது படிக்கும் மகன் விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்ற விமானம் மூலம் திருச்சி செல்வதாக கூறினார்
மனிதர் நன்கு பொது அறிவு உள்ளவரா கவும், இடையில் விவசாயத்தில் கஷ்ட பட்டாலும் இப்பொது நன்றாகவே உள்ளதாக கூறினார். மேலும் வருங்காலத்தில் விவசாயம் மேம்படும் என்ற நம்பிக்கையும் கொண்டு இருந்தார்
நவின தொலை பேசி இல்லை, ஆடம்பர உடைகள் அணியவில்லை ஆனாலும்
மனிதர் தனது  குடும்பத்தாருடன் சொந்த கிராமத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக கூறினார்,
இதில் யார் சாதித்த மனிதர்? யார் மகிழ்ச்சியான மனிதர்?
வாழ்க்கை புதிரானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக