புதன், 11 மே, 2016

திருந்தி விட்டதா தி மு க? பாவமன்னிப்பு தந்த ஊடகங்கள்

திருந்தி விட்டதா திமுக?

சில நாட்கள் முன்பு ஒரு நகைச்சுவை படித்தேன்
ஒரு குடிகாரன் ஒருவனை திருத்த நினைத்த பாதிரியார் அவனுக்கு பாவ மன்னிப்பு அளித்து தண்ணீர் தெளித்து " இன்று முதல் நீ புதிய மனிதன், பழைய பெயர் கந்தசாமி கிடையாது, உன் புதிய பெயர் சைமன், இனிமேல் சாராயம் குடிக்க கூடாது என்று சத்தியம் வாங்கினார். டீ குடிக்கலாமா பாதர் என்று கேட்ட குடிகாரனுக்கு பாதர் தாராளமாக குடிக்கலாம் என்று பாதிரியார் கூறினார்.
கடவுள் முன்பு சத்தியம் செய்து விட்டு
சென்ற குடிகாரன் மறுநாள் பாதிரியாரிடம் சாராய பாட்டிலுடன் வந்து சாராய பாட்டிலை எடுத்து தண்ணீர் தெளித்து இன்று முதல் நீ சாராயம் கிடையாது உன் பெயர் டீ என்று குடிக்க தொடங்கினான்

திமுகவும் அந்த குடிகாரனை போலத்தான் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது நாங்கள் திருந்தி விட்டோம், எங்கள் பாவத்தை மன்னித்து விடுங்கள் இனிமேல் ஊழல், அராஜகம், சட்ட ஒழுங்கு சீர்கேடு  என்று எதுவும் செய்ய மாட்டோம் என்று கூறுவார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் முன்னை விட அதிகமாக ஊழல், அராஜகம் , சட்ட ஒழுங்கு சீர்கேடு. செய்து விடுவார்கள்
89,96, 2006 இதையே சொல்லி ஏமாற்றினர்.. சில ஊடகங்களும் வாங்கிய பணத்திற்கு விசுவசமாக கருணாநிதி பரிசுத்தம் அடைந்து hவிட்டார் என்று சத்தியம் செய்கின்றனர் .உங்கள் வேட்பாளர் பட்டியலை பார்த்தால் திருந்திய மாதிரி தெரியவில்லை.. அதே முகங்கள் ,மற்றும் குடும்ப வேட்பாளர்கள்.. இவிகள எல்லாம் பார்த்தா திருத்துன மாதிரியா தெரியுது மக்களே?
இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்
(சிறுபாண்மையிைனர் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் )

1 கருத்து: