திங்கள், 9 மே, 2016

NDTV கருத்து கணிப்பு... யாருக்கு சாதகம்.. அலசல்

NDTV கருத்து கணிப்பு அல்லாமல் வெறும் வாக்கு சதவிதத்தை வைத்து ஒரு அலசல் வெளியுட்டுள்ளது.. கடந்த தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை வைத்து 42% வாக்குகள் அதிமுகவுக்கும் , 33 % வாக்கு கள் தி மு க கூட்டணிக்கும் உள்ளது  என்று கூறியுள்ளது

1.முதல் சாத்தியகூறு
.இதே நிலைமை நீடித்தால் அதிமுக அணி 195 இடங்களில் வெற்றி பெறும் திமுக 30க்கும் குறைவான இடங்களை யே பெறும்

2வது சாத்தியகூறு
இதில் அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் 3 %  திமுக அணிக்கு சென்றால், அதிமுக 165 க்கும் மேற்பட்ட இடங்களை பெறும், திமுக அணி 45 இடங்களை பெறக் கூடும்

3வது சாத்தியகூறு
இதில்  5 % அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு சென்றால் அதிமுக' 135 இடங்களையும் , தி மு க அணி 85 முதல் 90 இடங்களை பெறும்.

4 வது சாத்தியகூறு
இதில் 7.5 % அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு சென்றால் மட்டும் திமுக அணி 140 முதல் 160 இடங்களையும் பெறும்.. அதிமுக 70 முதல் 90 இடங்களைப் பெறும்

இந்த தேர்தலில்   5 எதிர்கட்சிகள் போட்டியிடுவதால் 2 வது மற்றும் 3வது நிலையே  பெரும்பாலும் சாத்தியம்.. அதுவும் கிராமப்புறங்களில் 5%  அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு போவது என்பது மிகவும் கடினம்

4 வது சாத்திய கூறு கிடைக்கும் என்ற திமுக தொண்டர்களின் எண்ணம் சிறிது கடினமாகும்
 எனினும் நகர்புறங்களில் மக்கள் எளிதில் அதிருப்தி அடையும் சாத்தியம் இருப்பதால், நகர்புற வேட்பாளர் களுக்கு கடுமையாக இருக்கும்

1 கருத்து:

  1. எப்படி இருந்தாலும் அதிமுக தான் வெல்லும். ஜெயலலிதாவிற்கு உள்ள ஆளுமையை இந்த தேர்தல் உணர்த்தும்!

    பதிலளிநீக்கு