ஞாயிறு, 8 மே, 2016

விலை இல்லா பொருட்கள் உண்மையில் அவசியமற்றதா?



நானும்  விலை  இல்லா பொருட்கள் மக்கள் வரி பணத்தை வீணடிகிறார்கள் என்று நினைத்தேன்.. எனது நண்பர்  ஒருவர் மிகவும் பொருளாதார பின்னடைந்த பகுதியில் ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருக்கிறார்..அவர் எங்கள் பகுதியில் மாணவ,மாணவிகள் பெரும்பாலும் விலையில்லா சைக்கிள் மிகவும் பயனுள்ள தாக உள்ளதாகவும் , மாணவர்களுக்கு தரும் லேப் டாப் , தங்கள் பகுதி மாணவர்களும் நகரத்தின் மாணவர்களுக்கு இணையாக போட்டி  இட  முடிகிறது என்றும் கூறினார்..

GRINDER ,mixie  போன்றவை  மிகவும் வாங்க  இயலாத விட்டு பெண்கள் தங்களது வேலை பளுவை குறைக்க உதவு கிறது என்று  சொல்லு கிறார்கள்  ..இதை குறை கூறுபவர்கள் ஒரு  நாள்  தங்களுது மனைவியை  இவற்றை உபயோகிகாமல் இருந்து பார்க்க  சொல்லவும் ..

நாம்  லேப்டாப்  கேட்டால்  25,000 சொல்லும் கடைகள் , ஆனால்  அரசாங்கம்  மொத்தமாக  வாங்கும்  பொழுது  10,000 ரூபாய்க்கு  வாங்க  முடிகிறது ..இதனால்  பெரும்  பயன்  இல்லாதவர்கள் அடைகிறார்கள் .

மதிய தர மக்கள்  மன  நிலை நமக்கு மேல் உள்ளவர்கள் எவ்ளோ கொள்ளை யடித்து  சென்றாலும் கோபம் வருவதிலை ஆனால்  நமக்கு கீழ் உள்ளவர்கள் சிறிது இலவசமாக பெற்றால் கடும் கோபம் அடைகிறோம்... உதாரணமாக மொத்தமாக  இலவசமாக கொடுத்த பொருட்களின் மதிப்பு 10,000 கோடி ஆனால் பெரும் பணக்காரர்கள்  தள்ளுபடி செய்யபட்ட கடன் தொகை மட்டும் 2 லட்சம் கோடிக்கும் மேல்.. இலவசத்தில் பலன் பெற்றவர்கள் உண்மையில் வழியில்லாத பல லட்சம்  பேர் , ஆனால்  தள்ளுபடி செய்ய பட்ட கடனில் பயன்  பெற்றவர்கள் சில நூறு பேர் மட்டும்

அரசாங்கம் சிறிது முயற்சி செய்து உண்மையில் பயன் உள்ளவர்களுக்கு மட்டுமே  தர வேண்டும்,
சமுக பொறுப்புள்ள வசதி படைத்தவர்கள் தங்களுக்கு இலவசம் வேண்டாம் என்றும் சொல்லலாம் எனவே
 நியாயமானவர்க ளுக்கு சென்றடையும்..
 இன்று இலவசமே  வேண்டாம் என்று கூப்பாடு போடும் பத்திரிக்கைகள் தான் தங்களது பத்திரிக்கையோடு சோப்பு இலவசம், சாம்பு இலவசம் என்று ஆரம்பித்து வைத்தது என்பதையும் மறந்து விட வேண்டாம்



1 கருத்து:

  1. நாம் அனைவருமே பெரும்பாலும் கிரைண்டர் மிக்சி இல்லாமல் வளர்ந்தவர்கள் தான். பொருளாதார வளர்ச்சி அடைந்தவுடன் எல்லாவற்றையும் வாங்கி விட்டோம். எனவே மக்களை பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிநடத்துவதுதான் அரசாங்கத்தின் கடமையே தவிர அவற்றை இலவசமாகக் கொடுத்து மக்களை சோம்பேறியாக்குவது அல்ல. பசிக்கு ஒரு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் ஒருவேளை பசியாறுவதர்க்குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் பசியாறலாம் என்று ஒரு ஆங்கிலப்பழமொழி உண்டு.

    இலவச லேப்டாப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். இலவசமாக வரும் எந்தப் பொருளுக்கும் அதற்குண்டான மரியாதை இருக்காது. அநேகம் பிள்ளைகள் குறைந்த விலைக்கு அதை விற்றுவிடுகிறார்கள். பலர் அதை வைத்து படங்கள் தான் பார்க்கின்றார்கள் (ஆபாசப்படம் உள்பட). ஒழுங்கான வழியில் அதை பயன் படுத்துபவர்கள் மிகவும் சொற்பமே. அதற்கு பதிலாக அந்தப் பணத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தனியாக இன்டர்நெட் வசதியுடன் கணினிலேபை நிறுவி பள்ளி நேரம் கழித்து ஆசிரியர் ஒருவரின் மேற்பார்வையில் பாடம் படிக்க வைக்கலாம். இது மாணவர்கள் கெட்டுப்போவதைத் தவிர்க்கும். மேற்பார்வை இல்லாமல் பள்ளி மாணவர் கையில் லேப்டாப் போன்ற நவீனக் கருவி கிடைத்தால் தவறான பயன்பாட்டுக்குத்தான் வழிவகுக்கும். இலவச லேப்டாப் பெற்றுக்கொண்ட பல மாணவர்களின் கணினி அறிவினை நான் சோதித்துப்பார்த்தேன். சொந்தத்தில் அவர்கள் கணினி வைத்து இருந்தும் அதன் பயன்பாட்டில் அவர்களுக்கு சரியான புரிதல் இல்லை. இது தான் நிதரிசனமான உண்மை. இதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. மேம்போக்காக இலவச லேப்டாப்பைப் புகழுகிறார்கள். அவர்கள் இதை ஆராய்ந்து பார்ப்பதில்லையா அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கின்ற பயத்தில் உண்மையை வெளியே சொல்லுவதில்லையோ தெரியவில்லை!!!

    பதிலளிநீக்கு