வியாழன், 18 ஆகஸ்ட், 2016

கவிஞர் முத்துக்குமார் மறைவு சொல்லும் பாடங்கள்


கவிஞர்  முத்துக்குமார் மறைவு தமிழுக்கு  பேரிழப்பு ,கமலஹாசன்  ஸ்ரீ ராமுனுஜரை  பற்றி  சொல்லும் பொது மிக  நீண்ட  காலம் (120 ஆண்டுகள்)  வாழ்ந்ததன்  முலமாகவே  எதிரிகளை  வென்றவர்  என்று  குறிப்பிடுவார் ..

பல  ஆண்டுகள் தொடர்ந்து  தமிழில்  மிக அதிகமான பாடல்கள்  எழுதிய  சாதனைக்கு  சொந்தக்காரர் முத்து குமார். 1500 க்கும் மேற்பட்ட  பாடல்கள் , பல  புத்தகங்கள் ,இரண்டு  தேசிய  விருதுகள் . அவர்  60 ஆண்டுகள்  வாழ்ந்திருந்தால் கூட  இன்னும்  எத்தனை விருதுகள் , எத்தனை சாதனைகள்  செய்திருப்பார் ..பெரும்  காப்பியமாக  வாழ வேண்டிய வாழ்க்கையை சிறு  ஹைக்கூ கவிதையாக முடித்து  கொண்டார் .

நண்பர்களே , பணம்  சம்பாதிப்பதற்கோ , சாதனை  செய்வதற்கோ , உழையுங்கள் , ஆனல்  உங்கள்  உடல்  நலத்தில்  கவனம்  வையுங்கள் ..மரணம் இயற்கைதான் , ஆனால்  நீங்கள்  உங்கள்  உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் செய்யும்  உழைப்பு  உங்கள் உடலுக்கு  செய்யும்  துரோகம் மட்டும்  அல்ல , உங்கள்  திறமைக்கு  செய்யும் துரோகம்  கூட ..

இறந்தாலும்  உ ங்கள்  சாதனைகளை  உலகம்  பேசி  கொண்டு தான்   இருக்கும் , ஆனால் உங்கள் குடும்பத்திக்கான  இழப்பு  உங்கள்  சாதனையை  விட  மிக  பெரியது .






வியாழன், 11 ஆகஸ்ட், 2016

20 வருடம் பின்னோக்கி ஒரு பயணம்

இந்த  20 வருடங்களில்  மாறிய  பல  விஷயங்கள்  பார்த்தால்  மலைப்பாக  இருக்கிறது.
 20 ஆண்டுகளுக்கு  முன்:-
 இந்தியா :- இந்தியா பொரு ளாதாரத்தில் நோஞ்சான், தேவ  கவுடா  இந்திய பிரதமராக  இருந்தார். பெரும்பாலான  இந்தியர்களுக்கு  அரசுதுறை  வேலைவாய்ப்புகளே  பிரதானம்,

தமிழகம் :-
 இன்ஜினியரிங்  படித்தவர்கள் கள்  என்றால் பெரும்  மரியாதை  இருந்தது. கல்வி , மருத்துவம் பெரும்பாலும்  அரசாங்கம் வசமே  இருந்தது.  கிராமங்களில்  மாடி  வீடும், அம்பாஸடர்  காரும், கலர்டிவியும்   வைத்து  இருப்பவர்கள் பணக்காரர்கள் ஆக  கருதபட்டனர்.மால் கிடையாது  ,Multiplex கிடையாது

பொருளாதாரம் :-
சென்செஸ்  3000 புள்ளிகளில்  இருந்தது.  ரிலையன்ஸ் ,TCS ,இன்போசிஸ் , ICICI , HDFC பேங்க்  போன்ற  பெருநிறுவனங்கள்  அப்போது முன்னணியில்  இல்லை, சில  இல்லவே  இல்லை.அரசு  நிறுவன ங்களே  பிரதானம்,

தொழில்நுட்பம் :-
ஆப்பிள்  என்பது  அப்போது  சாப்பிடும்  ஒரு  உணவு பொருள் மட்டுமே. இன்று GOOGLE லில்  தேடுகிறோம் ,அன்று  கூகுளை யே  தேட முடிந்திருக்காது.
 கம்ப்யூட்டர் என்றால்  AC  ரூமில்  இருந்து   ப்ரோக்ராம்  செய்ய  பயன்படும்   ஒரு   எந்திரம் எங்களுக்கு . டெலிபோன்  ஊருக்கு  சிலரிடம் இருந்த  பொருள்.  தந்தி  இருந்தது. இணையம் புழக்கத்தில்  இல்லை . ஸ்மார்ட் போன் , Facebook ,whatsapp கனவில்  கூட இல்லை . CRT  கலர்  டிவி , நான்கைந்து கேபிள்  சேனல் கள் மட்டும் .தூர்தர்ஷன்  எல்லாம் பார்க்கும்  சேனலாக  இருந்தது. சக்திமான்  சூப்பர் ஹீரோ .
VCR ,டேப் ரெக்கார்டர்  எல்லாம்  இருந்தது . கேமரா  என்றால்  36 பிலிம்  தான் ரொம்ப கவனமாக எடுக்க  வேண்டி இருந்தது.


தமிழ் சினிமா :-
கார்த்திக் ,பிரபு ,விஜயகாந்த்  ,சத்யராஜ்  பாப்புலர் ஹீரோவாக இருந்தனர் ,அஜித்  விஜய்  அறிமுக  நடிகர்கள்.
அரவிந்த்  ஸ்வாமி, பிரபு தேவா , பிரசாந்த்   கனவு கண்ணன்கள்  , ரோஜா,மீனா,ரம்பா,குஸ்பு,நக்மா  கனவு  கன்னிகள்.

உலகம் :-
கிளின்டன்  அமெரிக்க  ஜனாதிபதி. சதாம் ஹுசைன் னை  பார்த்து உலகம்  பயந்து  கிடந்தது . மைக்கேல் ஜாக்சன்  பாடல்கள்,நடனம் பார்த்து  உலகம்  வியந்து  கொண்டு  இருந்தது .

கிரிக்கெட் :-
கபில்தேவ் காலம்  முடிந்து  டெண்டுல்கர்  காலம்  ஆரம்பித்து  இருந்தது.அசாருதீன்  இந்தியா வின் கேப்டன். கங்குலி ,டிராவிட் ,கும்ப்ளே  எல்லாரும்  அப்போதுதான் வந்து  இருந்தார்கள் .அஜய் ஜடேஜா ஒரு  போஸ்டர் பாய்.


மாறியவை  பல,மாறாதவை  சில

ரஜினியே  அன்றும்  சூப்பர்  ஸ்டார் , இன்றும்  அவரே . அன்று  பாஷா  ,முத்து ..இன்று  கபாலி.

கலைஞர்  , ஜெயலலிதா  தமிழக  அரசிலியலின்  ஆளுமைகள் இன்றும் , அன்றும்.

ஒரு  ஒலிம்பிக்  பதக்கமாவது  இந்தியா வெல்லுமா  என்னும்  எதிர்பார்ப்பு.
பில் கேட்ஸ்  அப்போதும்  உலக  முதல்  பணக்காரர்.

 என்றும்  மாறாதது , எங்கு  இருந்தாலும் , எப்படி  இருந்தாலும்  ,எத்தனை  வருடம்  ஆனாலும் ,  பேரை  கேட்டவுடன் ஞாபகம்  வரும் நண்பர்களின் முகம்  மற்றும்  உடனே  வரும்  பள்ளி  நினைவுகள் .காலத்தில் அழியாமல்  நிலைத்து  நிற்கும் நட்பு.


20 வருடம்  பின்னோக்கி ஒரு பயணம் .
பள்ளி நண்பர்களுக்காக   எழுதியது





புதன், 10 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக் பதக்கமும் , ஓட்டை வாய் மக்களும்




பருத்தி  வீரன்  படத்தில்  சரவணன்  ,கார்த்தியை பார்த்து  கூறுவார் , டேய்   பாத்து  பண்ணுடா  ,   இப்ப  கண்ட  நாய் எல்லாம்  அட்வைஸ்  பண்ணுது  பாரு என்பார் , அது போல   ஒலிம்பிக்  வீரர்களே, எப்படியாவது  ஒண்ணு  ரெண்டு  பதக்கம்  வாங்கிடுங்க  இல்லன்னா , கண்ட  பசங்களும் கருத்து சொல்ல  ஆரம்பிச்சிடுவாங்க ..(என்னையும்  சேர்த்து தான் ).



எதுக்கு  எடுத்தாலும்  120 கோடி  பேர்  உள்ள  நாட்ல ஒரு ஒலிம்பிக்  பதக்கம் வாங்க  முடில ன்னு  சொல்றோம்   ..

உண்மை  என்ன என்றால் , இந்த  120 கோடில,ஒரு  40 கோடி பேரு தான் 15 முதல்   35 வயது  வரை  உள்ளவர்கள்,
இந்த  40 கோடில  10 கோடி பொண்ணுங்க,பசங்க  குடும்ப வாழ்க்கைல  இருக்காங்க ,பொண்ணு, பிள்ளைக்கு  கேஜி  சீட் கிடைக்குமா ?  இந்த  மாச  பட்ஜெட்  துண்டு  விழுவாம இருக்குமா? புற நகர்  ரியல்  எஸ்டேட்ல  வீடு  எப்போ வாங்கறதுன்னு யோசிச்சிட்டு  இருக்காங்க. 

ஒரு  10 கோடி  பேர் IT  கம்பெனிலேந்து , பீடி   கம்பெனி  வரைக்கும்  வேலை  செய்ஞ்சுகிட்டு  இருகாங்க.

ஒரு 7 கோடி  கல்லூரி களிலும் , பள்ளிகளிலும்  சீரியசா   படிச்சு  எப்படியாவது  ஒரு  கார்பொரேட் கம்பெனில ப்ளஸ்மெண்ட்   ஆயிடுனும் ன்னு  முயற்சில இருக்காங்க  ,

மீதி  உள்ளதுல பல  லட்சம் பேர் வேலை  தேடி  அலைஞ்சிகிட்டும்  சில  லட்சம்  பேர்  ஜெயிலையும், சில லட்சம்  பேர்  சினிமா  சான்ஸ் தேடியும் ,சில  லட்சம்  பேர் ஏதாவது  பொண்ணு  பின்னாடி  நேரம்  காலம்  பாக்காம   அலைஞ்சிகிட்டு   இருக்காங்க.
இன்னும்  என்ன போல, உங்கள  போல  சில  லட்சம்  பேர் FACEBOOK ளையும் ,Whatsapp ளையும்    புரட்சி  பண்ண  முடியுமா ன்னு  யோசிச்சிட்டு  இருக்கோம் ..

ஆக , விளையாட்டை  சீரியஸ்  கேரியரா   நினைக்கிறவங்க  சில  லட்சம்  பேர்  இருப்பாங்க அதிலும் 70 சதவீதம்  பேர்  கிரிக்கெட்  பின்னாடி  போய்டா மிஞ்சி  உள்ளது சில  ஆயிரம்  பேர் . இந்த  நம்பர்  கண்டிப்பாக  ஆஸ்திரேலியாவை விட , சீனாவை  விட,அமெரிக்கா  வை  விட  மிக  குறைவாக  இருக்கும்.  இதிலிருந்து 100 பேர் தான்  ஒலிம்பிக்  போறாங்க , அங்க  போய் சிறந்த  முயற்சி செய்கிறார்கள் ..
அடுத்த  தடவ  120 கோடி  பேர்  டயலாக்  வேண்டாம் ..

இந்தியாவில  கிரிக்கெட்  தவிர  அடுத்த ஸ்போர்ட்ஸ  கேரியரா  எடுக்குற  புள்ளைங்க மற்றும்  அவங்க பெற்றோர் எல்லாம் உண்மையிலே  தியாகி  மாதிரி ,
அடிப்படை  சரியில்லாம , ஒலிம்பிக் போனவண்ட    தங்கம் வாங்கல ,வெள்ளி வாங்கல, வெண்கலம்   வாங்கல ன்னு  கல்யாண  ஜூவெலேரி விளம்பர  பிரபு  மாதிரி நை நை னுட்டு இருக்காதிங்க,.


இந்த  புள்ளி விவர  நம்பர் எல்லாம்  சும்மானாச்சுக்கும் ...சீரியஸா  எடுத்துக்க  கூடாது  

புதன், 3 ஆகஸ்ட், 2016

அத்தனைக்கும் ஆசைப்படு, அடுத்தவனுக்கு மொட்டையடி



2 பெண்  குழந்தைகள் , எத்தனை ஆசையாய் பெற்று , வளர்த்து , எத்தனை  கனவுகளோடு  இருந்து  இருப்பார்கள்  பெற்றோர்கள் ,  என்னதான்  சுய  விருப்பம்  என்று கூறினாலும் ,மொட்டையடித்து  சன்னியாசம்  பெற்று  விட்டதாய்  நிற்கும் பிள்ளைகளை பார்த்து   பெற்றவர்கள்  எத்தகைய  ஒரு  வலியை   அடைவார்கள் .

 இந்த  சாமியார்கள்  மிகவும் வறுமையில் வாடும்  சோற்றுக்கு  வழியில்லாத  வீட்டு   பிள்ளைகளையோ , மிக பெரும்  கோடீஸ்வர  வீட்டு   பிள்ளைகளையோ  சாமியாராக்காமல்  பெரும்பாலும்   உயர் நடுத்தர  வீட்டு பிள்ளைகளையே  கவர்கின்றனர் . ஏழைன்னா  பைசா  போறாது , பெரும்  பணக்காரர்கள் என்றால்  எதிர்ப்பு  பலமாக  இருக்கும்  என்பதால்  தானோ ?.

மிக  பிரபலங்கள் தொலைக்காட்சியில்   சாமியாரிடம்  கேள்வி  கேட்கும்  போதும், சில  பிரபலங்கள் like  நடிகைகள் , ஆசிரமத்தில்  தியானம்  செய்து புத்துணர்வு பெற்றதாக கூறும்  போது ஆச்சரியமாக இருந்தது . அப்புறம்  தான்  தெரிந்தது  இதுவும்  காசுக்காக  செய்யும்  ஒரு  நடிப்பு  என்று. அத்தகைய  பிரபலங்கள்  யாரும்  மொட்டையடித்  தாக வோ  அவர்களது  பிள்ளைகளை  ஆசிரமத்தில்  சேர்த்ததாகவோ  தெரியவில்லை.

பெரும்பாலும்  எல்லா  சாமியார்களிடமும்  ஒரு  சிறிய  சித்து வேலை /சக்தி     இருக்கும் , எங்கேயாவது  ஒரு  சாமியாரிடம்  இருந்து  கற்று  இருப்பார்கள் . அதை  வைத்து  பெரிய அளவில்  பணம்  சம்பாதித்து  விடுகின்றனர் .

கதவை  சாத்தாமல்  விட்ட  சாமியாரிலிருந்து , இவர்   வரை  எல்லாத்தையும் பிரபல  படுத்திய  மீடியா கள்  ,பொறுப்போடு  நடந்து  கொள்ளாமல் ,  சர்ச்சை  வரும்  பொழுது சிகரெட்  பெட்டியில்  உள்ள warning  போல் , எங்களுக்கு தெரியாது அது  அவர் கருத்து என்று  கூறி வெளியேறி  விடுகிறது.

சாமி , நீங்கள்  அத்தனைக்கும்  ஆசைப்படுங்கள் , ஆனால்  பாவம்  நடுத்தர  குடும்பத்து   மக்கள் அவர்கள் கனவுகளை  பலி யக்காதீர்கள்


செவ்வாய், 26 ஜூலை, 2016

மானை கொல்லலாம்? மாட்டை திண்ண கூடாது

நாய், பூனைக்கு எதாவது அநீதி நடந்தால், ஐல்லி கட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த சினிமா பிரபலங்கள், PETA , இன்று ஒரு மானை கொன்றவரை விடுதலை செய்த பொழுது என் பொங்கவில்லை என்று தெரியவில்லை.
மானை கொன்றது இன்னொரு "மான் "தானே என்று பேசாமல் இருந்து விட்டா'ர்கள் போல.. சினிமாக்காரன் தப்பு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று எந்த கருத்தும் சொல்ல மாட்டார்கள் போல...

இன்று ஐல்லி கட்டை காட்டுமிராண்டிதனம் என்று விமர்சித்த  நீதிமன்றம் தான் நேற்று மானை சுட்டுக் கொன்ற வழக்கில் சல்மான்கானை விடுவித்தது.
இந்த நாட்டில் மானை கொன்றால் தப்பில்லை. ஆனால் மாட்டை தின்றால் ஆளை கொன்று விடுகிறார்கள்... 

வெள்ளி, 22 ஜூலை, 2016

கபாலி.. ஒரு ரஜினி படமா?

பெரும்பாலான நண்பர்கள் கூறினார்கள் பெரிய எதிர்பார்ப்புகளோடு கபாலி படத்துக்கு போகாதிர்கள் என்று,, ரஜினி படம் என்பது எப்பொழதாவது குடும்பத்துடன் சென்று 5 நட்சத்திர ஒட்டலில் விருந்து சாப்பிடுவது போன்றது, எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்யும்... ஆனால் தாஜ் ஒட்டல் சென்று தயிர் சாதம் சாப்பிட்ட வைத்த மாதிரி இருந்தது நண்பர்கள் பலருக்கு..
எனக்கு படம் ரஜினிக்காக கண்டிப்பாக பார்க்கலாம்... முதல் 15 நிமிடம் எனக்கு போதும், வெகு சில கைத்தட்ட வைக்கும் வசனங்கள், சில திணிக்க பட்ட வசனங்களை தவிர்த்து இருக்கலாம்.. ARR இல்லாத குறை தெரிகிறது.. மெட்ராஸ்ல நடிச்ச எல்லாருக்கும் ஒரு Scene ன்னு வாக்கு குடுத்து இருப்பாரு போல.,..
மனைவியை தேடும் காட்சி நீளும் போது குடும்ப படம் நடிக்க ஆயிரம் நடிகர் இருக்க ரஜினிய போட்டு தாக்கனுமா என்று தோன்றியது
வில்லன்... We still miss Basha Antony Kind
இறுதி காட்சி ..லிங்கா போல் திருஷ்டி... ரஜினிக்காக கொஞ்சம் உழைத்து இருக்கலாம்

ஷங்கராவது " ரஜினி " படம்  எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்

புதன், 20 ஜூலை, 2016

கபாலி - பொன் முட்டை யிடும் வாத்து

ஆற அமர விமர்சனம் படிச்சுட்டு சவுகரியமா வார இறுதியில ரிசர்வ் பண்ணி, குடும்பத்தோட பாப்கார்ன் சாப்பிடுகிட்டு பாக்க இது மத்த தமிழ் படம் இல்லடா.... #கபாலிடா... FDFS

ஆயிரம் விமர்சனம் செய்தாலும்,ரஜினியின் திரை ஆளுமையும், தலைமுறைகளை கடந்த வீச்சும் ... பிரமிப்பு

If cinema is for entertainment,, then Rajini is ultimate entertainer for generations

கடவுளே..... படத்த புரமோட் பண்றவங்களட்ட இருந்து ரஜினிய காபாற்று...
விமர்சிக்கிறவர்களை கூட அவரே பார்த்துப் பார்..
கபாலி பொன் முட்டை யிடும் வாத்து , ஒவர் பில்டப் விட்டு பாபா பிரியாணி செய்து விடாதிர்கள்..

இப்போது  தமிழ்நாட்டில்  மக்கள்  இரண்டு  வகை  1, கபாலியை  வைத்து  விளம்பரம்  மற்றும்  வியாபாரம்  செய்ப்பவர்கள்                            2. கபாலி  வியாபார தந்திரத்தால்  பணத்தை இழப்பவர்கள்

காபாலிக்கு ஒரு போஸ்ட் போட்டு  viewers  சேர்ப்பதால் நானும்  முதல்  வகையில்  சேர்ந்து  விட்டேன்