ஞாயிறு, 18 டிசம்பர், 2016

டெல்டா மாவட்டம் - ஒரு ஜிவ மரண போராட்டம்

டெல்டா ஒரு ஜீவ மரணப் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறது.. மீடியாவில் பெரிய அளவில் செய்தி இல்லை... வரலாற்றில் மிக மோசமான வட கிழக்கு பருவ மழை.. ஏற்கனவே பாதியான சம்பா சாகுபடி , இப்பொழுது நட்ட பயிர்களை காபாற்ற  நிலத்தடி நீரை கொண்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.. இன்னும் 2 வாரத்துக்குள் ஒரு நல்ல மழை பெய்தால் டெல்டா பயிர்கள் தப்பிக்கும்., இல்லாவிட்டால் கடனை வாங்கி நட்ட சம்பா பயிர்கள் அனைத்தும் கருகும்...                

   அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் தகுந்த உதவிகள்  செய்ய வேண்டும்.. முதல்வர் பிரதமரின் சந்திப்பின் போது வலியுறுத்துவார் என்றும் பிரதமர் தகுந்த உதவிகள் செய்வார் என்றும் நினைக்கிறேன்..                                                                                           . தமிழக ஊடகங்கள் அப்பல்லோ, காவிரி மருத்துவமனையை கவர் செய்வதை போல டெல்டா  நிலமையை கவர் செய்து பிரச்சினையின் திவிரத்தை உணர செய்ய வேண்டும்...

அரிசி விளையாவிட்டால் என்ன. பணம் இருக்கிறது ,வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று விவசாயி என்னும் உற்பத்தியாளனை கொன்று விடாதிர்கள்...

உற்பத்தியாளனை கொன்று , பெரு நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலை செய்வது தான் சுகம் என்ற மனநிலைமையை  மேலும் மேலும் ஊக்குவிக்க வேண்டாம்..

வியாழன், 15 டிசம்பர், 2016

அதிமுக அடுத்த பொதுச்செயலாளர் யார்?


ஏறக்குறைய  50 ஆண்டுகள்  தமிழ்  சமூகம் சினிமா பிரபலங்களையோ , வாரிசுகளை மட்டுமே  தலைவர்களாகவும் ,முதல்வர்களாகவும்   ஏற்று  கொண்டு உள்ளது ..இந்நிலையில் முதல்  முறையாக  வாரிசு இல்லாத, திரை  பிரபலங்கள்  இல்லாத முதலமைச்சரையும், மிக  பெரிய  கட்சியின்  பொது  செயலாளரையும்  காண  இருக்கின்றது ..இந்த முயற்சி  வெற்றியோ , தோல்வியோ அதை  மக்கள்  4 ஆண்டுகள்  முடிவில் முடிவு  செய்யட்டும் ..ஆனால்  அப்படி  செய்யவே கூடாது  என்பது  முட்டாள்தனம்  இல்லையா ?

யார்  அண்ணா  திமுகவின்  பொது  செயலாளர்  ஆக  வர வேண்டும்.. குடும்ப  உறுப்பினர்களையே  தலைவர்களாக  ஏற்று கொள்ள  அதிமுக   ஒன்னும்  திமுகவோ , காங்கிரஸோ ,பாமாகவோ அல்ல .
 வாரிசு அரசியலையே  பார்த்து  பழகி போனவர்கள் ,தகுதியே  இல்லாவிட்டாலும் ரத்த  சொந்தம்  என்ற  ஒரே காரணத்திற்க்காக  தீபா அவர்களை  முன்னிறுத்திகிறார்கள் ..யார் செங்கோட்டையன் , யார்  தம்பிதுரை ? என்று கட்சியின்  இரண்டாம் நிலை தலைவர்களை  அடையாளம் கூட  காண முடியாதவர்...மிக  பெரிய சக்தியான  திமுகவை  எதிர்த்து  அரசியல்  செய்ய முடியுமா?.
மேலும் அம்மா  அவர்கள் தீபா  அவர்களை அரசியலுக்கு கொண்டு வர  நினைத்திருந்தால்  யார்  தடுத்திருக்க  முடியும்?  அவருக்கு  இவரை அரசியலுக்கு அழைத்து  வர  விருப்பமும் இல்லை , நம்பிக்கையும்  இல்லை ..

சசிகலா  மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தார் . அவரது  மேல்  உள்ள நம்பிக்கையும் ,பிரியத்தின் பெயரில் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு பல்வேவேறு காலகட்டங்களில் பல்வேறு பதவிகளை  வழங்கினார் .
சசிகலா  அவர்களுக்கு 30 வருடம் கட்சியின் அன்றாட நிகழ்வுகளை நிர்வாகிப்பவராகவும் இருந்தார்  .மேலும்  அந்த  அதிகாரத்தையும் அவருக்கு அம்மா  வழங்கி இருந்தார்.  இதனால்தான் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவரையே  பொது செயலாளர் ஆக  வேண்டும்  என்று வேண்டுகோள்  விடுகின்றனர்.

சிலர் சசிகலா  அவர்கள் கருத்து வேறுபாடு வந்ததை காரணம் காண்பிக்கிறார்கள் . பெற்றவர்கள் , பிள்ளை கிடையே கருத்து வேறுபாடு வருகிறது ,கணவன் மனைவி டையே பிரிவு  வருகிறது . நண்பர்களுக்கு இடையே  கருத்து வேறுபாடு வருகிறது ..35 ஆண்டுகால நட்பில் அரிதாக சில   இடைவேளை எப்போதாவது வந்தது    ..ஆனாலும்   அதுவும் கூட  வெகு சில நாட்களே நீடித்தது.. அவரை அம்மா  அவர்கள்  அன்புடன் ,நட்புடன் , நம்பிக்கையுடன் தனது கூடவே கடைசி வரை வைத்து  இருந்தார்கள் .

இன்னும் சிலர்  MGR  ஆரம்பித்த கட்சிக்கு சசிகலா  தலைவரா? என்று  கேட்கின்றனர் . அமெரிக்கா வில் தாமஸ் ஜெபர்சன் ஆரம்பித்த டெமாகிரடிக் கட்சியின் அதிபராக  ஒபாமா அதிபராக இருக்கிறார் . அவரு  என்ன  தாமஸ் ஜெபர்சன்  பாத்து  இருக்க முடியுமா ?  காந்தி ,போஸ்  இருந்த கட்சியான காங்கிரஸ்க்கு  சோனியா  தலைவராக இருக்க முடியும் போது MGR கட்சிக்கு சசிகலா  தலைவராக ஆனால் என்ன  தவறு ? MGR , அம்மா வின் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல தகுதி உடையவராக இருப்பதுதான் முக்கியம்.


தமிழகத்தின் மிக  பெரிய மக்கள் தொகை கொண்ட ஜாதியான வன்னியர் , தேவர் , கவுண்டர் , தாழ்த்தப்பட்டவர் , யாரும் ஆட்சி ,ஆளும் கட்சி  தலைமை பொறுப்பில் இல்லை . சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே  ஆட்சி  பொறுப்பில் இருந்தனர் .திடிரென ஏதாவது  ஒரு பெரும்பான்மை இனத்தை  சேர்ந்தவர்  வரும் பொழுது மற்றவர் அனைவர்க்கும் ஒரு வித அச்ச உணர்வு வருவது  இயற்கை . ஆனாலும் உயர்ந்த பொறுப்பிற்கு வந்த  பிறகு  அவர்கள்  அனைவருக்கும் பொதுவான வர்கள் , ஒரு  சாதி நிலை எப்போதும் எடுக்க மாட்டார்கள் எடுத்தாலும் அது கொள்ளி கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வது போல.. எனவே  இந்த ஐயம் தேவையற்றது.

அதிமுக  கழகம்  அம்மாவிற்கு  பிறகு   முதல்வர்  பதவிக்கும்,  பொதுச்  செயலாளர்  பதவிக்கும்  அடித்துக்  கொண்டு  சிதறும்  என்று  எதிர்பாபார்த்தவர்கள் வாயை  அடைக்கும்  விதம்  அனைவரையும்   ஒரணியாக  வைத்து  இருப்பபதே  பெரும்  சாதனை தான்..  இதை  பொறுக்க  முடியாதவர்கள் தான்  எதையாவது  வதந்தியை  கிளப்பி   பொழுது   போக்கி  கொண்டு  உள்ளனர்.

. புரட்சி  தலைவியின்  உழைப்பினாலும், அதிமுக  என்னும்  பேரியக்கத்தை  நம்பி  மக்கள்  வழங்கிய  ஆளும்  பொறுப்பை    அதிமுக  அடித்து  கொண்டு  விட்டு   விடும்  என்று  நினைத்தவர்ககள்  வாயில்  மண்  விழுந்தது..  புரட்சித்  தலைவியின்  கனவுகளை  நிறைவேற்றும்  பணியை  தொடங்கி  விட்டனர். வர்தா  புயல்  துயர்  துடைக்கும்  போர் கால  பணியே  ஒரு  சான்று



" Fittest will  survive " என்ற டார்வின் தியரிக்கு  ஏற்ப , இன்று அதிமுக வில் அனைவரும்  ஏற்பவராக சசிகலா  இருக்கிறார்  அவர்  பொது  செயலாளர் ஆவதில்  என்ன தவறு உள்ளது . இன்று  கட்சி தொண்டர்கள் ஏற்கும்  தலைவராக இருப்பவர் , நாளை தனது மக்கள் பணிகள் மூலம் மாநிலம் ஏற்கும் தலைவர் ஆவார்  என்ற  நம்பிக்கை  இருக்கிறது






சனி, 10 டிசம்பர், 2016

அஇஅதிமுக இனி ?

எத்தனை வதந்திகள் அதிமுகவை முடக்கி போட
எப்படியாவது அதிமுகவிற்கு  ஜாதி வர்ணம் பூசி முடக்கி விட...

இஸ்லாமியர்களிடம் "அதிமுகவை பிரதமர் மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள் "

பிராமனர்களிடம் "   வீரமணி மீண்டும் அதிமுகவை ஆதரிக்க ஆரம்பித்து விட்டார், இனி பிராமனர்க்கு இடமில்லை"

கவுண்டர்களிடம் " அ தி மு க தேவர் கட்சி, நமக்கு இனி அங்கிகாரம் கிடைக்காது"

தேவர்களிடம் "  பன்னீர்செல்வம் நம்ம ஆள் என்றாலும் அதிமுக கவுண்டர்களுக்கு தான் செய்வார்கள் நமக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள்"

வன்னியர்களிடம் , இதர பிரிவினரிடம்" நமக்கு ஒன்னும் செய்ய மாட்டார்கள்"
'
இதிலிருந்தே தெரிகிறது,  அ இ அ தி மு க  ஜாதிக்கான கட்சியல்ல... அனைவருக்குமான    கட்சி .. அனைத்து சமுதாயத்தை ஒன்றரை கோடி  தொண்டர்கள் கொண்ட  இயக்கம்.. இன்று மட்டுமல்ல, என்றும் இது தொடரும்
இது புரட்சித் தலைவர் கண்ட இயக்கம்,  புரட்சித் தலைவியால் வலுப்பெற்ற இயக்கம் , இதை ஜாதி என்னும் ஜாடியில் அடைக்க செய்யும் முயற்சி பலிக்காது...

வெள்ளி, 9 டிசம்பர், 2016

கௌதமி அவர்களுக்கு ஒரு கடிதம்


வணக்கம் ,

மொதல்ல   நீங்க இத்தனை  நாள் எங்கே  இருந்திர்கள் ? 

 நாட்டு   மக்கள் பிரச்சினை,  பாதுகாப்பு பற்றி  எல்லாம்  திடீரென கவலை  பட  ஆரம்பித்து  விட்டீர்கள் ?   

இதுற்கு முன்  சுவாதி  கொலை  செய்ய  பட்ட போது  எல்லாம்  பெண்கள்  பாதுகாப்பு  பற்றி ஏன்   பேசவில்லை ?  

இந்திய  குடிமகன் கவலை பட்ட  செல்லாத நோட்டு , பதான் கோட் தாக்குதல் பற்றியெல்லாம் நீங்கள்  ஏன் பிரதமரிடம் கேட்கவில்லை ?
'
தமிழக மக்கள் கவலை பட்ட காவேரி  பிரச்சினை , ஈழ தமிழர் , முல்லை பெரியார் இதற்கு எல்லாம் ஏன் கடிதம் எழுத வில்லை? 

உடுங்க  நம்ப ஏன்  உங்க கடந்த  காலத்தை  பற்றி  எல்லாம்  கேட்டு கொண்டு

நீங்கள்  விளக்கம்  கேட்டது  யாரை  இந்திய பிரதமரை 

1. AIMS மருத்துவ குழு  யார்  அனுப்பியது ?

2. AIMS  மருதுவர்கள்  யாருக்கு  கட்டுப்பட்டவர்கள் ?  மாநில  அமைச்சர் விஜய்  பாஸ்கருக்கா  இல்லை  ஜே பி  நட்ட விற்கா ?

3, AIMS  குழு  கடைசி  நாள் வரை  பணியாற்றியது உங்களுக்கு  தெரியாதா ?

3, எப்போதில்  இருந்து  ஜெயலலிதா  உங்களுக்கு  பிடித்த  தலைவியானர் ? சிறை  சென்ற  போது  வருந்தினீர்களா ? இல்லை  முதலமைச்சரான போது  பாராட்டு  தெரிவித்தீர்களா ?

4. நீங்கள் அப்பல்லோ  சென்று  பார்க்க  முயற்சித்தீர்களா ? இல்லை  உங்களை  விட  மறுத்தார்களா ? அதற்காக  உங்களது  எதிர்ப்பை பதிவு செய்திர்களா ?

திரும்ப  மத்திய  அரசிற்கு  வருவோம் .

5. அப்பல்லோ  மருத்துவ  மனைக்கு  சென்ற வர்களில் மத்திய  அரசு  பிரதிநிதியான  கவர்னர் ? கவர்னர்  அவர்களை  தடுக்கும்  அளவுக்கு  சசிகலா  அம்மையாரோ , டாக்டர்  ரெட்டி யோ  வலிமை யானவர்களா இல்லை  அதிகாரம்  படைத்தவர்களா ? இல்லை டாக்டர் பார்க்க  கூடாது   என்று  சொல்வதை  நம்பி  வர கூடியவர்களா ? 

6. இன்னொருவர்  வெங்கையா நாயுடு , முதல்வரை  நண்பர்  என்று  அழைக்க  கூடியவர் . சில  முறை  அப்போலோ வந்த  அவருக்கு நண்பர் சிகிச்சையை  கேட்க அக்கறை மற்றும்  பொறுப்பு  இல்லாதவரா ? 

7. இந்தியா  பிரதமரிடம்  ஐபி,சிபிஐ , போன்ற  வலிமையான  திறமையான  ஏஜென்சிகள்  உள்ளன .. நாட்டில் நடக்கும் சிறு  சிறு  சம்பவங்களுக்கு உளவு  துறை  அறிக்கை  பிரதமரிடம்  அளிக்கும் ..75 நாட்களாக  ஒரு  மாநில முதல்வர் மருத்துவமனையில்  உள்ளார் , அவரது உடல்  நிலை  பற்றி  அறிக்கை கேட்காதவரா  நமது  பிரதமர்? அல்லது   அப்பலோ  கேட் வாசலை  எட்டி கூட பாக்க  முடியாததா நமது  உளவுத்துறை ?\


8)  12 முறை  அப்போலோ  அறிக்கை  அளித்ததே, நீங்கள் அதை படித்தது உண்டா ?   அதை ஒரு முறையாவது பார்த்து  அதிருப்தி  நீங்கள்  தெரிவித்தது உண்டா ?

9)  2014  கர்நாடக  சிறைச்சாலை க்கு  பிறகு , முதல்வர்  உடல்நிலை பற்றி பல  செய்தி தாள்களிலும் , ஊடகங்களிம் செய்திகள் வந்ததே , நீங்கள் படிக்கவில்லையா ?  

10) முதல்வர்  அவர்கள் பொதுவானவர்தான் ,ஆனால்  அவர்  அனுமதி இல்லாமல் அவரது  சிகிச்சை  பெறும் புகை படங்களையும் வெளியிடுவது எப்படி உரிமையாகும்?

11, நீங்கள்  கேட்கும்  அத்தனை  கேள்விகளுக்கும்  இந்திய பிரதமருக்கு விடை  தெரியும் , அத்தனை  சர்வ  வல்லமை  மற்றும்  அதிகாரம்  உடையவர் .  எதுவும்  தெரியாமல்  விமானம்  ஏறி  வந்து தோள் தட்டி ஆறுதல்  சொல்லி செல்லும் அப்பாவியும் அல்ல பிரதமர்?

ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் , கோடம்பாக்கத்தில் இருந்து கிளம்பும் எல்லாரும் ஜெயலலிதா ஆகி விட  முடியாது ?

நட்புடன் 
தமிழன் 

குறிப்பு :- ஊர் பெயரை மறக்காமல் வைத்திருக்கும் உங்களிடம் மாநிலத்தை பற்றியோ ,ஜாதி பற்றியோ நான்  கேட்க மாட்டேன் .





வியாழன், 8 டிசம்பர், 2016

அம்மாவிற்கு பிறகு ? தலைவர்கள் உண்டா அதிமுக வில் ?


அதிமுக  மக்களுக்கான  இயக்கம் , மக்கள்  நலனுக்காக  சிந்திக்கும்  தலைவியை  கொண்ட  இயக்கம் , எனக்கு  பின்னாலும்  இந்த  இயக்கம்  நூறு  ஆண்டுகள்  நிலை  பெற்றிருக்கும் .. புரட்சி  தலைவி  அம்மாவின்  ஜனவரி  2016 சட்டமன்ற  உரை ... உத்தமர்  வாக்கு  வேதம்  ஆகும் , வேதா நிலைய உத்தம  தலைவியின்  வாக்கும்  வேதம் ஆகும் . நாளைய  சரித்திரம்  அதை நிரூபிக்கும் .

 புரட்சி தலைவி , புரட்சி  தலைவர்  போன்றவர்கள்  இயற்கையான  ஆளுமை  திறன்  கொண்டவர்கள். அத்தகைய  தலைவர்களின்  இடத்தை  நிரப்புவது இமய மலையில்  ஏறுவது  போல கடுமையானது அல்ல  அதை விட  கடுமையாக  இமைய மலையை  முதுகில்  வைத்து மலை  ஏறுவது  போன்றது,.

ஆனாலும் , சில  தலைவர்கள்  பிறப்பால்  ஆளுமை  திறன்  இல்லாவிட்டாலும் , தங்களது உழைப்பாலும் , அனுபவத்தாலும்  மற்றும்  நிர்வாக  திறன் மூலமாகவும் மிக சிறந்த  தலைவர்களாகி  உள்ளனர் ...
உதாரணமாக  நமது  அண்டை  மாநிலமான  ஆந்திரா , அதுவும் தமிழகத்தை  போல   சம உணர்வுகளை  பிரதிபலிக்க  கூடியது  .. NTR  என்னும்  மிக பெரிய பிம்பத்தின் அரசாங்கத்தை குறுக்கு  வழியில் கைப்பற்றினாலும் தனது  நிர்வாக திறமையினால் சந்திர பாபு  நாயுடு மிக  பெரிய  தலைவராக  உருவெடுத்தார். காங்கிரஸ், காந்தி குடும்பம்  என்னும்  துணையோடு  முன் வைக்கப்பட்ட ராஜ சேகர ரெட்டி  தனது நிர்வாக திறன் மூலம் மிக பெரிய தலைவராக வாழந்த பிறகும்  நேசிக்கப்படும்  தலைவரானார் .



அது  போல  புரட்சி  தலைவி அம்மாவிடமும் , புரட்சி  தலைவியிடமும்  நிர்வாகம் பயின்றவர்கள்  நமது  கழகத்தில்  உள்ளனர் . இப்போது நமக்கு  தேவை  பொறுமை . ஒரே நாளில்  மிக  பெரிய  தலைவர்கள் உருவெடுத்து  விட  மாட்டார்கள் . சில  குறைகள் இருக்கும் , அனுபவத்தில்  குறை  களைந்து  நிறைவடைவார்கள். நமக்கு  இன்னும்  4 1/2 ஆண்டு  காலம்  இருக்கிறது , மிக  சிறந்த நிர்வாகம் , ஆட்சியை தருவதன் மூலம்  மக்களை  சந்திக்கலாம் அதுற்கும் மேலாக  நமது  புரட்சி  தலைவி மற்றும்  தலைவரின்  ஆசி  இருக்கிறது.

நம்முடைய  எதிரிகள் நம்மை வீழ்த்தும்  அளவுக்கு   விட வலிமையானவர்கள் அல்ல நம்மை நம்மை  நாமே  வீழ்த்தி கொண்டால்  தான்  உண்டு .

  அரசாங்கம்  இல்லாத  போதே , ஆண்டவன்  எங்ககிட்ட  இருக்கான்  என்று  வேலை பார்த்த  இயக்கம் இது  . இன்று  அரசாங்கமும்  இருக்கிறது ,ஆண்டவனும்  இருக்கிறான் .. இப்போதைய  நம்முடைய ஒரே   தேவை  பொறுமை , புதிய  தலைமை  மீது  நம்பிக்கை .

நமது  வெற்றியை  நாளை  சரித்திரம்  சொல்லும் , இப்படை  தோற்கின்  எப்படை  வெல்லும்  என்னும்  புரட்சி தலைவரின் வார்த்தைகளை  உண்மையாக்குவோம்

புதன், 7 டிசம்பர், 2016

அம்மாவிற்கு பின் ? என்ன செய்ய வேண்டும் அதிமுக ?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு , இல்லையனில்   அனைவருக்கும் தாழ்வு.

காட்டில் ஒரு பசு கன்றுகுட்டிகளுடன் வசித்து வந்தது. தாய் பசு பல ஒநாய்கள் , காட்டு மிருகங்களிடம் இருந்து கன்று குட்டிகளை காத்து வளர்த்தது.. கன்று குட்டிகள் அச்சம், கவலையின்றி, எதிர்காலத்தை பற்றி எந்த பயமும் இல்லாமல் விளையாடின... ஒரு நாள் அந்த தாய் பசு  திடிரென இயற்க்கை எய்தியது. இனிமேல் தான் கன்று குட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டி வரும்.. இனி பல்வேறு ஒநாய்கள் வரும்.. கன்று குட்டிகள் ஒன்றாக இருந்தால் வேட்டையாட முடியாது என்று ஒவ்வொன்றாக ஆசை காட்டி , கருத்து வேறுபாடுகளை உருவாக்கி வேட்டையாட முயற்ச்சிக்கும்... ஒன்றாம் வகுப்பு கதை தான்.. ஆனாலும் இன்றைய சூழ்நிலைக்கு தேவையான கதை.....

 வலுவான தமிழிகத்திற்கு வலுவான அதிமுக தேவை... நாளை மதவாத, குடும்ப கட்சி,சாதிய கட்சிகளிடம் இருந்தும், கோடம்பாக்கத்தில் இருந்து நாட்டை ஆள கனவு காணுபவர்களிடம் இருந்தும்  இந்த மண்ணை காபாற்ற வேண்டும்...   அதற்கு இந்த இயக்கம் இன்றி அமையாதது.

அதிமுக தேவர், கவுண்டர், வன்னியர், தாழ்த்தபட்டவர் என எந்த ஒரு ஜாதிக்கான இயக்கம் அல்ல.. சமானியனையும் அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக அழுகு பார்த்த இயக்கம்.... புரட்சி தலைவரால் உருவாக்க பட்டு, புரட்சி தலைவியால் வலு பெற்ற இயக்கம்.
இரட்டை இலை சின்னம் மகத்தான பல வெற்றிகளை கண்ட சின்னம்... வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் , இன்னும்  ஒரு 1989 நமக்கு தேவையில்லை....
இன்று நீ பெரியவனா? நான் பெரியவனா? என்பதை விட அம்மா  மற்றும் புரட்சித் தலைவர் அவர்களின் லட்சியம் மற்றும் கனவுகள் பெரியவை..
நல்லதே நடக்கும் என நம்புங்கள்.. உங்களை தேடி வாய்ப்புக்கள் வரும்..

அம்மா நம்மிடம் விட்டு சென்றவை
- 4  1/2 ஆண்டு ஆட்சி காலம்
-  136 சட்டமன்ற உறுப்பினர்கள்
- 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
– 1.5 கோடி உறுப்பினர்கள் உள்ள இயக்கம்
- 8 கோடி தமிழர்களுக்கு இயக்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று அவரது கனவுகளையும், லட்சியங்களையும்  நிறைவேற்ற  பாடுபட உறுதி ஏற்போம்.

புதன், 30 நவம்பர், 2016

மகளதிகாரம் & எதிர்பார்ப்பு இல்லாத நட்பு

பார்த்து பார்த்து என்ன தான் மனைவி செய்தாலும் அம்மாவுக்கு மாற்றாக  முடிவதில்லை.... நமக்கு சிறிது உடல் நிலை சரி இல்லை என்றால் சிறிது புருவம் சுருக்கி கவலையுடன்  என்னாச்சுப்பா உஙகளுக்கு?ன்னு கேட்கும் சில நொடிகள் மகள் அம்மாவுக்கு மாற்றாகிறாள்- மகளதிகாரம் - 1

 மனைவி சிறிது  தாமதமானாலும் கோபப்படுவார்கள், அவசரமாக விமானத்தை பிடிக்க கிளம்பினாலும் எனக்கு இந்த பொட்டு, இந்த செருப்பு தான் வேணும் என்று அடம் பிடிக்கும் மகளிடம் செல்லுப்படியாகாது கோபம்-  மகளதிகாரம் -2

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த வீட்டுக்கு வரும் பொழுது கூட, அப்பா பேத்தியை கொஞ்சும் போது மகளுக்கு வரும் ஒரு சின்ன பொறாமை- மகளதிகாரம் - 3

 இந்த உலகத்தில் கிடைப்பதற்கு அரியது எது?

 எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத நட்பும், உறவுகளும்...
உங்களுக்கு அத்தகைய நட்பும் , உறவுகளும் உங்களுக்கு  இருந்தால் எப்பொழுதும்  இழந்து விடாதிர்கள்....
நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்தும் நபராக நீங்கள் இருந்தால்  எப்பொழதும் மாறி விடாதிர்கள்.உங்களை போன்ற சிலரால் தான் கொஞ்ச மழையும் பெய்கிறது.