வெள்ளி, 9 டிசம்பர், 2016

கௌதமி அவர்களுக்கு ஒரு கடிதம்


வணக்கம் ,

மொதல்ல   நீங்க இத்தனை  நாள் எங்கே  இருந்திர்கள் ? 

 நாட்டு   மக்கள் பிரச்சினை,  பாதுகாப்பு பற்றி  எல்லாம்  திடீரென கவலை  பட  ஆரம்பித்து  விட்டீர்கள் ?   

இதுற்கு முன்  சுவாதி  கொலை  செய்ய  பட்ட போது  எல்லாம்  பெண்கள்  பாதுகாப்பு  பற்றி ஏன்   பேசவில்லை ?  

இந்திய  குடிமகன் கவலை பட்ட  செல்லாத நோட்டு , பதான் கோட் தாக்குதல் பற்றியெல்லாம் நீங்கள்  ஏன் பிரதமரிடம் கேட்கவில்லை ?
'
தமிழக மக்கள் கவலை பட்ட காவேரி  பிரச்சினை , ஈழ தமிழர் , முல்லை பெரியார் இதற்கு எல்லாம் ஏன் கடிதம் எழுத வில்லை? 

உடுங்க  நம்ப ஏன்  உங்க கடந்த  காலத்தை  பற்றி  எல்லாம்  கேட்டு கொண்டு

நீங்கள்  விளக்கம்  கேட்டது  யாரை  இந்திய பிரதமரை 

1. AIMS மருத்துவ குழு  யார்  அனுப்பியது ?

2. AIMS  மருதுவர்கள்  யாருக்கு  கட்டுப்பட்டவர்கள் ?  மாநில  அமைச்சர் விஜய்  பாஸ்கருக்கா  இல்லை  ஜே பி  நட்ட விற்கா ?

3, AIMS  குழு  கடைசி  நாள் வரை  பணியாற்றியது உங்களுக்கு  தெரியாதா ?

3, எப்போதில்  இருந்து  ஜெயலலிதா  உங்களுக்கு  பிடித்த  தலைவியானர் ? சிறை  சென்ற  போது  வருந்தினீர்களா ? இல்லை  முதலமைச்சரான போது  பாராட்டு  தெரிவித்தீர்களா ?

4. நீங்கள் அப்பல்லோ  சென்று  பார்க்க  முயற்சித்தீர்களா ? இல்லை  உங்களை  விட  மறுத்தார்களா ? அதற்காக  உங்களது  எதிர்ப்பை பதிவு செய்திர்களா ?

திரும்ப  மத்திய  அரசிற்கு  வருவோம் .

5. அப்பல்லோ  மருத்துவ  மனைக்கு  சென்ற வர்களில் மத்திய  அரசு  பிரதிநிதியான  கவர்னர் ? கவர்னர்  அவர்களை  தடுக்கும்  அளவுக்கு  சசிகலா  அம்மையாரோ , டாக்டர்  ரெட்டி யோ  வலிமை யானவர்களா இல்லை  அதிகாரம்  படைத்தவர்களா ? இல்லை டாக்டர் பார்க்க  கூடாது   என்று  சொல்வதை  நம்பி  வர கூடியவர்களா ? 

6. இன்னொருவர்  வெங்கையா நாயுடு , முதல்வரை  நண்பர்  என்று  அழைக்க  கூடியவர் . சில  முறை  அப்போலோ வந்த  அவருக்கு நண்பர் சிகிச்சையை  கேட்க அக்கறை மற்றும்  பொறுப்பு  இல்லாதவரா ? 

7. இந்தியா  பிரதமரிடம்  ஐபி,சிபிஐ , போன்ற  வலிமையான  திறமையான  ஏஜென்சிகள்  உள்ளன .. நாட்டில் நடக்கும் சிறு  சிறு  சம்பவங்களுக்கு உளவு  துறை  அறிக்கை  பிரதமரிடம்  அளிக்கும் ..75 நாட்களாக  ஒரு  மாநில முதல்வர் மருத்துவமனையில்  உள்ளார் , அவரது உடல்  நிலை  பற்றி  அறிக்கை கேட்காதவரா  நமது  பிரதமர்? அல்லது   அப்பலோ  கேட் வாசலை  எட்டி கூட பாக்க  முடியாததா நமது  உளவுத்துறை ?\


8)  12 முறை  அப்போலோ  அறிக்கை  அளித்ததே, நீங்கள் அதை படித்தது உண்டா ?   அதை ஒரு முறையாவது பார்த்து  அதிருப்தி  நீங்கள்  தெரிவித்தது உண்டா ?

9)  2014  கர்நாடக  சிறைச்சாலை க்கு  பிறகு , முதல்வர்  உடல்நிலை பற்றி பல  செய்தி தாள்களிலும் , ஊடகங்களிம் செய்திகள் வந்ததே , நீங்கள் படிக்கவில்லையா ?  

10) முதல்வர்  அவர்கள் பொதுவானவர்தான் ,ஆனால்  அவர்  அனுமதி இல்லாமல் அவரது  சிகிச்சை  பெறும் புகை படங்களையும் வெளியிடுவது எப்படி உரிமையாகும்?

11, நீங்கள்  கேட்கும்  அத்தனை  கேள்விகளுக்கும்  இந்திய பிரதமருக்கு விடை  தெரியும் , அத்தனை  சர்வ  வல்லமை  மற்றும்  அதிகாரம்  உடையவர் .  எதுவும்  தெரியாமல்  விமானம்  ஏறி  வந்து தோள் தட்டி ஆறுதல்  சொல்லி செல்லும் அப்பாவியும் அல்ல பிரதமர்?

ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் , கோடம்பாக்கத்தில் இருந்து கிளம்பும் எல்லாரும் ஜெயலலிதா ஆகி விட  முடியாது ?

நட்புடன் 
தமிழன் 

குறிப்பு :- ஊர் பெயரை மறக்காமல் வைத்திருக்கும் உங்களிடம் மாநிலத்தை பற்றியோ ,ஜாதி பற்றியோ நான்  கேட்க மாட்டேன் .





9 கருத்துகள்:

  1. நீங்கள் ஒரு அப்பாவி.

    இது மோடி சசிகலாவுக்கு வைத்த செக். கௌதமி சில நாட்களுக்கு முன் மோடி அவர்களை சந்தித்ததை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். சரி. இவர் பின்னால் உதவுவார் என மோடி நினைத்திருக்கலாம். இப்போது இந்த அஸைன்மெண்ட்!

    அவர் பன்னீருக்கு வைத்த செக் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு!

    மோடி நன்றாக அடித்து ஆடுகிறார். பார்க்கலாம் எப்படிப் போகிறது என்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I didn't told modi it's good. Read my previous post on modi.. If gautami felt any conspiracy in appolo.modi and central government also part of that

      நீக்கு
  2. கௌதமி கையழுத்து மட்டும் போட்ருப்பார் .பின் புலம் டெல்லியில்

    பதிலளிநீக்கு
  3. மோடி ஜி யின் தமிழக அரசியல் சதுரங்கத்தை யாரும் விரிவாக எழுத முடியாது. தமிழ் நாட்டுக்காரங்க எப்போ விழிக்கப்போறாங்க...?

    பதிலளிநீக்கு