வியாழன், 8 டிசம்பர், 2016

அம்மாவிற்கு பிறகு ? தலைவர்கள் உண்டா அதிமுக வில் ?


அதிமுக  மக்களுக்கான  இயக்கம் , மக்கள்  நலனுக்காக  சிந்திக்கும்  தலைவியை  கொண்ட  இயக்கம் , எனக்கு  பின்னாலும்  இந்த  இயக்கம்  நூறு  ஆண்டுகள்  நிலை  பெற்றிருக்கும் .. புரட்சி  தலைவி  அம்மாவின்  ஜனவரி  2016 சட்டமன்ற  உரை ... உத்தமர்  வாக்கு  வேதம்  ஆகும் , வேதா நிலைய உத்தம  தலைவியின்  வாக்கும்  வேதம் ஆகும் . நாளைய  சரித்திரம்  அதை நிரூபிக்கும் .

 புரட்சி தலைவி , புரட்சி  தலைவர்  போன்றவர்கள்  இயற்கையான  ஆளுமை  திறன்  கொண்டவர்கள். அத்தகைய  தலைவர்களின்  இடத்தை  நிரப்புவது இமய மலையில்  ஏறுவது  போல கடுமையானது அல்ல  அதை விட  கடுமையாக  இமைய மலையை  முதுகில்  வைத்து மலை  ஏறுவது  போன்றது,.

ஆனாலும் , சில  தலைவர்கள்  பிறப்பால்  ஆளுமை  திறன்  இல்லாவிட்டாலும் , தங்களது உழைப்பாலும் , அனுபவத்தாலும்  மற்றும்  நிர்வாக  திறன் மூலமாகவும் மிக சிறந்த  தலைவர்களாகி  உள்ளனர் ...
உதாரணமாக  நமது  அண்டை  மாநிலமான  ஆந்திரா , அதுவும் தமிழகத்தை  போல   சம உணர்வுகளை  பிரதிபலிக்க  கூடியது  .. NTR  என்னும்  மிக பெரிய பிம்பத்தின் அரசாங்கத்தை குறுக்கு  வழியில் கைப்பற்றினாலும் தனது  நிர்வாக திறமையினால் சந்திர பாபு  நாயுடு மிக  பெரிய  தலைவராக  உருவெடுத்தார். காங்கிரஸ், காந்தி குடும்பம்  என்னும்  துணையோடு  முன் வைக்கப்பட்ட ராஜ சேகர ரெட்டி  தனது நிர்வாக திறன் மூலம் மிக பெரிய தலைவராக வாழந்த பிறகும்  நேசிக்கப்படும்  தலைவரானார் .



அது  போல  புரட்சி  தலைவி அம்மாவிடமும் , புரட்சி  தலைவியிடமும்  நிர்வாகம் பயின்றவர்கள்  நமது  கழகத்தில்  உள்ளனர் . இப்போது நமக்கு  தேவை  பொறுமை . ஒரே நாளில்  மிக  பெரிய  தலைவர்கள் உருவெடுத்து  விட  மாட்டார்கள் . சில  குறைகள் இருக்கும் , அனுபவத்தில்  குறை  களைந்து  நிறைவடைவார்கள். நமக்கு  இன்னும்  4 1/2 ஆண்டு  காலம்  இருக்கிறது , மிக  சிறந்த நிர்வாகம் , ஆட்சியை தருவதன் மூலம்  மக்களை  சந்திக்கலாம் அதுற்கும் மேலாக  நமது  புரட்சி  தலைவி மற்றும்  தலைவரின்  ஆசி  இருக்கிறது.

நம்முடைய  எதிரிகள் நம்மை வீழ்த்தும்  அளவுக்கு   விட வலிமையானவர்கள் அல்ல நம்மை நம்மை  நாமே  வீழ்த்தி கொண்டால்  தான்  உண்டு .

  அரசாங்கம்  இல்லாத  போதே , ஆண்டவன்  எங்ககிட்ட  இருக்கான்  என்று  வேலை பார்த்த  இயக்கம் இது  . இன்று  அரசாங்கமும்  இருக்கிறது ,ஆண்டவனும்  இருக்கிறான் .. இப்போதைய  நம்முடைய ஒரே   தேவை  பொறுமை , புதிய  தலைமை  மீது  நம்பிக்கை .

நமது  வெற்றியை  நாளை  சரித்திரம்  சொல்லும் , இப்படை  தோற்கின்  எப்படை  வெல்லும்  என்னும்  புரட்சி தலைவரின் வார்த்தைகளை  உண்மையாக்குவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக