வியாழன், 15 டிசம்பர், 2016

அதிமுக அடுத்த பொதுச்செயலாளர் யார்?


ஏறக்குறைய  50 ஆண்டுகள்  தமிழ்  சமூகம் சினிமா பிரபலங்களையோ , வாரிசுகளை மட்டுமே  தலைவர்களாகவும் ,முதல்வர்களாகவும்   ஏற்று  கொண்டு உள்ளது ..இந்நிலையில் முதல்  முறையாக  வாரிசு இல்லாத, திரை  பிரபலங்கள்  இல்லாத முதலமைச்சரையும், மிக  பெரிய  கட்சியின்  பொது  செயலாளரையும்  காண  இருக்கின்றது ..இந்த முயற்சி  வெற்றியோ , தோல்வியோ அதை  மக்கள்  4 ஆண்டுகள்  முடிவில் முடிவு  செய்யட்டும் ..ஆனால்  அப்படி  செய்யவே கூடாது  என்பது  முட்டாள்தனம்  இல்லையா ?

யார்  அண்ணா  திமுகவின்  பொது  செயலாளர்  ஆக  வர வேண்டும்.. குடும்ப  உறுப்பினர்களையே  தலைவர்களாக  ஏற்று கொள்ள  அதிமுக   ஒன்னும்  திமுகவோ , காங்கிரஸோ ,பாமாகவோ அல்ல .
 வாரிசு அரசியலையே  பார்த்து  பழகி போனவர்கள் ,தகுதியே  இல்லாவிட்டாலும் ரத்த  சொந்தம்  என்ற  ஒரே காரணத்திற்க்காக  தீபா அவர்களை  முன்னிறுத்திகிறார்கள் ..யார் செங்கோட்டையன் , யார்  தம்பிதுரை ? என்று கட்சியின்  இரண்டாம் நிலை தலைவர்களை  அடையாளம் கூட  காண முடியாதவர்...மிக  பெரிய சக்தியான  திமுகவை  எதிர்த்து  அரசியல்  செய்ய முடியுமா?.
மேலும் அம்மா  அவர்கள் தீபா  அவர்களை அரசியலுக்கு கொண்டு வர  நினைத்திருந்தால்  யார்  தடுத்திருக்க  முடியும்?  அவருக்கு  இவரை அரசியலுக்கு அழைத்து  வர  விருப்பமும் இல்லை , நம்பிக்கையும்  இல்லை ..

சசிகலா  மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தார் . அவரது  மேல்  உள்ள நம்பிக்கையும் ,பிரியத்தின் பெயரில் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு பல்வேவேறு காலகட்டங்களில் பல்வேறு பதவிகளை  வழங்கினார் .
சசிகலா  அவர்களுக்கு 30 வருடம் கட்சியின் அன்றாட நிகழ்வுகளை நிர்வாகிப்பவராகவும் இருந்தார்  .மேலும்  அந்த  அதிகாரத்தையும் அவருக்கு அம்மா  வழங்கி இருந்தார்.  இதனால்தான் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவரையே  பொது செயலாளர் ஆக  வேண்டும்  என்று வேண்டுகோள்  விடுகின்றனர்.

சிலர் சசிகலா  அவர்கள் கருத்து வேறுபாடு வந்ததை காரணம் காண்பிக்கிறார்கள் . பெற்றவர்கள் , பிள்ளை கிடையே கருத்து வேறுபாடு வருகிறது ,கணவன் மனைவி டையே பிரிவு  வருகிறது . நண்பர்களுக்கு இடையே  கருத்து வேறுபாடு வருகிறது ..35 ஆண்டுகால நட்பில் அரிதாக சில   இடைவேளை எப்போதாவது வந்தது    ..ஆனாலும்   அதுவும் கூட  வெகு சில நாட்களே நீடித்தது.. அவரை அம்மா  அவர்கள்  அன்புடன் ,நட்புடன் , நம்பிக்கையுடன் தனது கூடவே கடைசி வரை வைத்து  இருந்தார்கள் .

இன்னும் சிலர்  MGR  ஆரம்பித்த கட்சிக்கு சசிகலா  தலைவரா? என்று  கேட்கின்றனர் . அமெரிக்கா வில் தாமஸ் ஜெபர்சன் ஆரம்பித்த டெமாகிரடிக் கட்சியின் அதிபராக  ஒபாமா அதிபராக இருக்கிறார் . அவரு  என்ன  தாமஸ் ஜெபர்சன்  பாத்து  இருக்க முடியுமா ?  காந்தி ,போஸ்  இருந்த கட்சியான காங்கிரஸ்க்கு  சோனியா  தலைவராக இருக்க முடியும் போது MGR கட்சிக்கு சசிகலா  தலைவராக ஆனால் என்ன  தவறு ? MGR , அம்மா வின் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல தகுதி உடையவராக இருப்பதுதான் முக்கியம்.


தமிழகத்தின் மிக  பெரிய மக்கள் தொகை கொண்ட ஜாதியான வன்னியர் , தேவர் , கவுண்டர் , தாழ்த்தப்பட்டவர் , யாரும் ஆட்சி ,ஆளும் கட்சி  தலைமை பொறுப்பில் இல்லை . சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே  ஆட்சி  பொறுப்பில் இருந்தனர் .திடிரென ஏதாவது  ஒரு பெரும்பான்மை இனத்தை  சேர்ந்தவர்  வரும் பொழுது மற்றவர் அனைவர்க்கும் ஒரு வித அச்ச உணர்வு வருவது  இயற்கை . ஆனாலும் உயர்ந்த பொறுப்பிற்கு வந்த  பிறகு  அவர்கள்  அனைவருக்கும் பொதுவான வர்கள் , ஒரு  சாதி நிலை எப்போதும் எடுக்க மாட்டார்கள் எடுத்தாலும் அது கொள்ளி கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வது போல.. எனவே  இந்த ஐயம் தேவையற்றது.

அதிமுக  கழகம்  அம்மாவிற்கு  பிறகு   முதல்வர்  பதவிக்கும்,  பொதுச்  செயலாளர்  பதவிக்கும்  அடித்துக்  கொண்டு  சிதறும்  என்று  எதிர்பாபார்த்தவர்கள் வாயை  அடைக்கும்  விதம்  அனைவரையும்   ஒரணியாக  வைத்து  இருப்பபதே  பெரும்  சாதனை தான்..  இதை  பொறுக்க  முடியாதவர்கள் தான்  எதையாவது  வதந்தியை  கிளப்பி   பொழுது   போக்கி  கொண்டு  உள்ளனர்.

. புரட்சி  தலைவியின்  உழைப்பினாலும், அதிமுக  என்னும்  பேரியக்கத்தை  நம்பி  மக்கள்  வழங்கிய  ஆளும்  பொறுப்பை    அதிமுக  அடித்து  கொண்டு  விட்டு   விடும்  என்று  நினைத்தவர்ககள்  வாயில்  மண்  விழுந்தது..  புரட்சித்  தலைவியின்  கனவுகளை  நிறைவேற்றும்  பணியை  தொடங்கி  விட்டனர். வர்தா  புயல்  துயர்  துடைக்கும்  போர் கால  பணியே  ஒரு  சான்று



" Fittest will  survive " என்ற டார்வின் தியரிக்கு  ஏற்ப , இன்று அதிமுக வில் அனைவரும்  ஏற்பவராக சசிகலா  இருக்கிறார்  அவர்  பொது  செயலாளர் ஆவதில்  என்ன தவறு உள்ளது . இன்று  கட்சி தொண்டர்கள் ஏற்கும்  தலைவராக இருப்பவர் , நாளை தனது மக்கள் பணிகள் மூலம் மாநிலம் ஏற்கும் தலைவர் ஆவார்  என்ற  நம்பிக்கை  இருக்கிறது






1 கருத்து: