செவ்வாய், 12 செப்டம்பர், 2017

சசிகலா இல்லாத அதிமுக

அவருக்கு  அப்போது  29 வயது .காலம்  இரண்டு  வாய்ப்புகளை  முன்  வைத்தது.

வாய்ப்பு -1,
 ஒரு  அரசு  உயர்  அதிகாரியின் மனைவியாக , கணவருடன், குழந்தை குட்டிகள் பெற்று நிம்மதியான  ஒரு  உயர்  நடுத்தர  வாழ்க்கை ..

வாய்ப்பு -2
இன்னொன்று , உயிர்  தோழிக்காக  போராட்டங்களை  சந்தித்து , எண்ணற்ற துரோகிகளையும் , எதிரிகளையும் எதிர்  கொண்டு , தோழியின் லட்சியங்களையே , தனது  லட்சியமாக  கொண்டு , அவரது  அரசியல்  உயர்வையே தனது உயர்வாக  கொண்டு , உயிர் தோழியின் உடல்  நலம்  மற்றும்  மன  நலத்தையும்  காப்பாற்ற ,கணவர் , குடும்பம் ,குழுந்தைகள் அனைத்தையும்  தோழிக்காக தியாகம்  செய்ய  வேண்டிய  வாழ்க்கை.

இவர்  தேர்ந்து எடுத்தது  இரண்டாவதை.

தேர்ந்தெடுத்தது  மட்டும்  இல்லாமல்  33 ஆண்டுகள் பக்கம் நின்று ,மறைந்த  பிறகு கடைசி காரியங்கள் வரை  செய்தவர்.

எத்தனையோ  வழக்குகள் , சிறை  வாசம் , அப்ரூவர்   ஆகி  இருந்தால் அத்தனையிலும்  தப்பித்து  விடலாம்  என்ற  ஆசை  வார்த்தைகள் அத்தனையும்  தாண்டி  அந்த ஒற்றை  பெண்மணியின்  பக்க  துணையாக  நின்றார்.

எத்தனை   சாதாரண குடும்பத்தில் இருந்தவர்களை , ஜெயலலிதா  முன்  நிறுத்தி  பதவிகளை  வாங்கி  கொடுத்து  இருப்பார் . தவறு செய்த எத்தனை பேர்  ஜெயலலிதாவின்  கோபத்திற்கு  பயந்து , முன்  நிற்க  பயந்து இந்த அம்மாவிடம் சென்று காலில்  விழுந்து  காப்பாற்றுமாறு கெஞ்சி , இவரும் அம்மாவிடம் நல்ல  முறையில் சொல்லி  காப்பாற்றி  இருப்பார்.

கூட்டணி  கட்சி  தலைவர்களை  கேளுங்கள் ,  எத்தனை முறை  ஜெயலலிதாவிடம்  பேசினார்கள், எத்தனை  முறை  சசிகலாவிடம்  பேசினார்கள்  என்று ?  .பெரும்பாலும்  பேசி  முடித்து  , ஜெயலலிதாவிடம்   ஒரு தகவல்  மட்டும்   கூறி  அனுமதி  வாங்குவார்கள் ...

இன்று  வேண்டுமானால்  நீங்கள்  அண்ணா  திமுகவில்  இருந்து  நீக்கலாம் .. ஆனால்  நாளை  அதிமுக  வரலாற்றை  எழுதும்  போது , ஜெயலலிதா  என்ற  ஆளுமையின்  வெற்றியை  இந்த  பெண்மணியின்   தியாகத்தை   ஒதுக்கி எழுத முடியாது .








2 கருத்துகள்:

  1. the huge wealth accumulated by the so called pen mani ???
    I have never seen such a rubbish article , may god bless TN and it's people

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கட்டுரையின்படி, சசிகலா நல்லவராக இருக்கலாம்; ஆனால், ஜெயலலிதா என்ற 'வெத்துவேட்டை' தமிழக அரசியல் களத்தில் இறக்கி, தமிழகத்தை 30 ஆண்டுகள் படுபாதாளதில் தள்ளிய பாவத்தின் பலனைத்தான் சசிகலா இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு