தரமான வழக்கறிஞர்கள் இல்லை தமிழ்நாட்டில் , ஏன் தினகரன் ,ஸ்டாலின் போன்ற திராவிட இயக்க தலைவர்கள் MLA தகுதி இழப்பு வழக்குகளுக்கு வட இந்திய வழக்கறிஞர்களை வைத்து வாதாடுகிறார்கள்.தமிழக சட்ட கல்லூரிகள் சரியில்லை, தமிழகத்தில் கல்வி தரம் இல்லை. நவோதயா பள்ளி வேண்டும், etc ,etc - எதிர் தரப்பு
தமிழக வழக்கறிஞர்கள் இந்திய அளவில் எந்த மாநில வழக்கறிஞர்களுக்கும் குறைவானவர்கள் அல்ல ..தகுதி இழப்பு , சபாநாயகரின் அதிகாரம் போன்றவை அரசியலமைப்பு சட்டங்களின் அடிப்படையை கேள்வி கேட்கும் வழக்குகளில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிறப்பாக கையாள்வதால் அவர்களை அணுக வேண்டியுள்ளது. சுப்ரீம் கோர்டடில் தமிழக வழக்கறிஞர்கள் ஓரளவு இருந்தாலும், மிக பெரிய அளவில் இல்லாதது , நமது வழக்கறிஞர்கள் டெல்லியில் வசித்து , அங்கு பணிபுரிவதை சௌகரிய குறைவாக நினைப்பது தானே ஒளிய , திறமை குறைவு காரணம் இல்லை என்று நினைக்கிறேன் .
எல்லா பிரச்சனைக்கும் இறுதி முடிவு எடுக்க டெல்லி வந்து உச்ச நீதி மன்றத்தை அணுக வேண்டும் என்ப பெரிய அநீதி . உச்ச நீதி மன்ற தென்னிந்திய கிளை சென்னையில் அமைப்பது தான் சரியான தீர்வாக இருக்குமோ ஒழிய , கல்வி தரம் காரணம் இல்லை என்பது எனது வாதம் .