திராவிட கட்சிகள் என்ன செய்தது தமிழகத்துக்கு ? தமிழக பாஜக கேள்வி.
திராவிடன் :- உங்கள் அகில இந்திய தலைவர்களின் சிலரின் பெயர்களை கூறுங்கள் பார்ப்போம் ?
பக்த் :- நரேந்திர "மோதி ", அமித் "ஷா" , வெங்கையா "நாயுடு ", சுஷ்மா "ஸ்வராஜ் "
திராவிடன் :- உங்கள் மாநில தலைவர்கள் சிலரின் பெயர்களை கூறுங்கள் பார்ப்போம் ?
பக்த் :- தமிழிசை , பொன். ராதாகிருஷ்ணன் , இல.கணேசன் .
இதுதான் திராவிடத்தின் சாதனை. தமிழிசை நாடார் , பொன்ராதாகிருஷ்னன் நாடார், இல கணேசன் அய்யர் ஆகாமல் ..
பொதுவெளியில் ஜாதி பெயரை கூறுவது ஒரு அநாகரீகம் என்ற சிந்தனையை தமிழகத்தில் உருவாக்கியது திராவிட கட்சிகளே.
அன்புடன்
மக்கள் என் பக்கம்
சென்னையில் எத்தனை ‘வன்னியர் தெரு’க்கள் உள்ளன என்று தெரியுமா? எத்தனை ‘நாடார் மெஸ்’ இன்னும் இயங்கி வருகின்றன தெரியுமா? பாண்டிபஜாரில் இன்னும் ஒரு கடை ‘ நாயுடு ஹால்’ என்ற பெயரில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறதே அது தெரியுமா?இன்னும் தமிழகம் முழுக்க ஒரு வலம் வந்தால் இன்னும் எத்தனை எத்தனை என்று புரியும். குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் தமிழகத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்று அவ்வப்போது தகவல்களைப் படித்தறிக! அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவில் சல்மான்கான், ஷாரூக்கான் எல்லாரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறார்கள். பெரியார் என்ற கோணங்கி பிறந்த தமிழ் நாட்டில் பிள்ளையார் ஊர்வலம் போவதற்கே ஆயிரம் கட்டுப்பாடுகள்! ஜல்லியடித்தது போதுமய்யா! உங்கள் திராவிடம் என்ன கிழித்தது என்பதற்குத்தான் இப்போது தமிழகத்தில் நடக்கிற கூத்துக்களே சாட்சியாக இருக்கிறதே! இந்தியாவே கைகொட்டிச் சிரிக்கிறது! உங்கள் பெரியார் பெருமையைத் தள்ளிவைத்துவிட்டு, உருப்படுகிற வழியைப் பாருங்கள்.
பதிலளிநீக்கு